ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பிரதேசத்து மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 4 குளங்களைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கருவேப்பமுறிப்பு, செம்பிகுளம், பனையமுறிப்பு, மற்றும் தணிக்கல்லு ஆகிய குளங்களைப் புனரமைத்துத் தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தாம் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற ஒதியமலைப் படுகொலைக்குப் பின்னர் தாம் தமது சொந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்ததாகவும், மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். தமது கிராமம் காட்டினால் சூழப்பட்டிருப்பதால் தமக்கு இன்னமும் மின்சார வசதி செய்து தரப்படவில்லையெனவும், தாம் காட்டு யானைகள் மற்றும் விஷப்…
-
- 0 replies
- 230 views
-
-
தேவையேற்படின் வாய் திறப்பேன்: எமில் காந்தன் ஏ.பி.மதன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எனக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்று நம்புகின்றனர். இந்தத் தகவல்களினால் எவருக்கு சாதகம், எவருக்குப் பாதகம் போன்ற விவரங்களே இங்கு பேசுபொருளாகின்றன. குறிப்பாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் வேளையில், அதனைப் பாதிக்கக்கூடிய விவரங்களைக் கூறுவது பொருத்தமற்றது. எனினும் அதற்கான நேரமும் தேவையும் கூடிவரும்போது அவற்றை வெளியிடத் தயங்கப்போவதில்லை என்பதை மட்டுமே தற்போதைக்கு என்னால் கூறமுடியும்' என, எமில் காந்தன் தெரிவித்தார். …
-
- 1 reply
- 507 views
-
-
“பிற மொழியையும் தெரிந்து வைத்திருங்கள். அது பிறரோடு பழக உதவும். அடுத்தவரை அணுக உதவும். வெறும் மொழிப்பித்து என்பது உங்களைக் கிணற்றுத் தவளையாக்கிவிடும். கிணற்றுத் தவளையும் நீந்தும் உயிர்வாழும். ஆனால், உலகத்தின் அனுபவமும் அளவும் அதற்குச் சிறியதாகத் தெரியும்” என முகம் கொள்ளாத சிரிப்புடன் எம்மோடு பேசத் தொடங்கினார் வணக்கத்துக்குரிய குட்டிக்குளமே விமலசார தேரர். “இந்த இனிப்பான தருணத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என இலக்கணத் தமிழில் தேன் சுவையாக கூறினார் 32 வயதான தேரர். “மொழிப்பற்று என்பது மரத்தின் வேரைப் போன்றது. வேர் மண்ணை ஊன்றியிருப்பதே எமக்குத் தேவை. அம்மரத்தின் கிளைகள் எண்ணிக்கை …
-
- 12 replies
- 807 views
-
-
ஐ.நா.விற்கு அளித்த வாக்குறுதிகளில் 11 வீதமே நிறைவேற்றம்.-அரசை சாடுகிறது “வெரிட்டே” ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அளித்திருந்த வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரம் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட, வெரிட்டே என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் பொதுவாக மந்தநிலை காணப்படு…
-
- 0 replies
- 205 views
-
-
சங்குப்பிட்டிக்கு பாதுகாப்பு வேண்டும் நடராசா கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலப்பகுதியில் பெருமளவு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் சுற்றுலா மையமாக சங்குப்பிட்டிப் பாலப்பகுதி வளர்ந்து வருகின்றது. பொழுதுபோக்கு, புகைப்படங்கள் எடுப்பது, கடலில் நீந்துதல் ஆகிய செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்குப் பாதுகாப்பற்ற தன்மை அங்கு காணப்படுகின்றது. பாலத்தின் மேலாகப் பயணிக்கும் ஊர்திகள் வேகமாகப் பயணிப்பதன் காரணமாக, வி…
-
- 0 replies
- 212 views
-
-
கழிவகற்றலில் அக்கறையில்லை சுப்பிரமணியம் பாஸ்கரன் 'கிளிநொச்சி நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சேரும் கழிவுகள் உரிய முறைகளில் அகற்;றப்படாமல் காணப்படுவதுடன், கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையினர் அக்கறை செலுத்துவதில்லை' என்றும் பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள கிளிநொச்சி பொதுச்சந்தை, பஸ் தரிப்பிடம், இரணைமடு பொதுச்சந்தை, இரணைமடுச்சந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேர்கின்ற கழிவுகளை அகற்றுவதற்கான முகாமைத்துவம் பின்தங்கிக் காணப்படுவதாக, வர்த்தகர்கள், பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் செல்வநாயகம் கபிலன் 'யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தற்போது நிலவும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை வெகு விரைவில் நிவர்த்தி செய்யப்படும்' என்று யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண, தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'கடந்த மாதம் மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையேற்ற பின்னர், தற்போது அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வருகிறேன். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை தொடர்…
-
- 0 replies
- 205 views
-
-
கொக்கிளாய் பௌத்த விகாரை கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் புத்தபிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப் பெற்றுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்த பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். குறித்த காணியானது முல்லைத்தீவிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் கொக்குளாய் வைத்தியசாலைக்கு அருக்கில் அமைந்துள்ளது. சோமசுந்தரம் திருஞானசம்பந்தருக்குச் சொந்தமான குறித்த காணியில் அரை ஏக்கர் காணியானது விகாரைக்காக அடாத்தாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக காணியின் உரிமையாளரின் மூத்த மகனான திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ் தெரிவ…
-
- 0 replies
- 473 views
-
-
ஓமந்தையில் ஆலய விக்கிரகங்கள் சேதம் -க. அகரன் வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (03) முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். புராதன ஆலயமான இவ் ஆலயத்தில் மிக அண்மைக்காலத்தில் தான் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வேல்களும் அகற்றி எறியப்பட்டுள்ளன. இதேவேளை, ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த கட்டடம் ஒன்றும் இடிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmi…
-
- 6 replies
- 527 views
-
-
புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/109663
-
- 11 replies
- 972 views
-
-
நீதியை மறுக்கும் இலங்கை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர், நீதியை எதிர்பார்த்த தமிழினத்திற்கு வழமைபோன்றதொரு கூட்டத் தொடராகவே நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐநா வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்தி என்பது தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்க தயங்கும் செயற்பாடுகளின் பெறுபேறே. இலங்கை அரசு, நீதி, ஜனநாயகம், சமத்துவம், வெளிப்படைதன்மை, பொறுப்புக்கூறுதல் முதலியவற்றில் தன்னை புதுப்பிக்க மறுக்கும் செயற்பாடே. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் பலவற்றிலும் இலங்கையின் புதிய அரசு, பழைய அரசின் மனநிலையிலிருந்து வில மறுத்துள்ளமையும் இங்கு புலப்படுகிறது. ஈழ…
-
- 0 replies
- 317 views
-
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் தீ கணினிகள் எரிந்து நாசம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பபாய்வாளர்களை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் விஜேபால தெரிவித்துள்ளார். மின் ஒழுக்கினால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தினால…
-
- 0 replies
- 203 views
-
-
மனித கடத்தல் வியாபாரம்; இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் பதிவு மனித கடத்தல் வியாபாரத்துக்கு எதிராக முறையிடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பிரிவுக்கு கடந்த இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் மனித கடத்தல் வியாபாரத்தை முற்றாக கட்டுப்படுத்த முடியுமான நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித வியாபாரத்துக்கு எதிராக முறையிடுவதற்காக விசேட பிரிவொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.…
-
- 0 replies
- 400 views
-
-
மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கியின் புதிய ஆளுநரின் நியமனக்கடிதம் சற்றுமுன் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8472
-
- 0 replies
- 285 views
-
-
நல்லது செய்தாலும் தூற்றுகின்றார்கள், செய்யாவிட்டாலும் தூற்றுகின்றார்கள். - சி.வி: நல்லது செய்தாலும் தூற்றுகின்றார்கள், எதுவுஞ் செய்யாவிட்டாலும் தூற்றுகின்றார்கள், அனைத்தையுந் தூற்றுவதற்கே தமது பொன்னான நேரத்தைப் பாவிக்கின்றார்கள். நான் வாழும் சூழல் வித்தியாசமானது. அன்பைச் செலுத்தினால் அதை அழகான நடிப்பென்றே கைதட்டுகின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் வேலணை வேணியனுக்கு பணி நலன் பாராட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , என்னைப் ப…
-
- 2 replies
- 319 views
-
-
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. அதன் அடிப்படையில் வடமாகாணத்திற்கு என பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைப்பது எனவும் முடிவாகியது. ஆனால் இன்று 6 மாதங்கள் கடந்த நிலையில் கூட பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவு தொடர்பில் குழப்பான நிலை இருக்கின்றது. யுத்தத்தால் வெகுவாக பாதிப்படைந்து மீளத் துடிக்கும் எமது விவசாயிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையம் வர்த்தகர்களுக்கு சிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. இவ்வாறான நிலையில் இந்த பொருளாதார மத்திய நிலைய விவகாரம் இன்று உற்பத்தியாளர்களான விவசாயிகளையும், வியாபாரிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்குமளவுக்குச் சென்றுள்ளது. இ…
-
- 2 replies
- 259 views
-
-
இந்திய மீனவர்கள் தொடர்பில் : இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்விடயம் இன்னமும் பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இது தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மைத் தன்மை இல்லாமலும் இல்லை” என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு வரையறுக்கப்பட்ட விதத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென்றும் இதன் மூலம் இந்திய மீனவர்களின் பாரியளவிலான அத்துமீறலை தடுக்கலாம்…
-
- 1 reply
- 203 views
-
-
ஆசிரியர் மீது கல்வீச்சு இழப்பீடு வழங்க உத்தரவு. யாழ் - பருத்தித்துறை, அல்வாய்ப் பகுதியில் ஆசிரியர் ஒருவரை கல்லால் எறிந்து காயப்படுத்திய இருவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். அல்வாய் பாரதிதாசன் சனசமூக நிலையப் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரை அப்பகுதியில் வசிக்கும் இருவர் கல்லால் எறிந்து காயப்படுத்தியதாக நெல்லியடிப்பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினை பொலிஸார் இணக்க சபைக்குவிட்டனர், குறித்த சந்தேக நபர்கள் இணக்க சபையினை மதிக்காது ச…
-
- 1 reply
- 834 views
-
-
வடக்கில் பொருளாதார மத்திய நிலையம்; கருத்துக் கணிப்பின் பின்னரே இறுதித் தீர்மானம்! வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்விடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கணிப்பொன்றை நடத்திய பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்…
-
- 1 reply
- 274 views
-
-
பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை எழுத்து மூல அறிக்கை பெறப்பட்டு முடிவு - சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் அவர்களது கருத்துக்களை எழுத்து மூலமாக கேட்டறிந்த பிறகு ஒரு வாரத்திற்குள் பொருளாதார மத்திய நிலையம் குறித்து தீர்வு எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சரினூடாக வடமாகாண சபை உறுப்பினர்களிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் ப…
-
- 1 reply
- 263 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் வெற்றிடத்துக்கு சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரட்ணம் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்க மடலொன்றை அனுப்பியுள்ளார். மத்திய அரசுக்கு பகிரங்க வேண்டுகோள் என்ற தலைப்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 150 சிற்றூழியர்கள் வெற்றிடங்கள் இருந்த நிலையில் அவ்விடங்களில் 125 வெற்றிடங்களுக்கு இடமாற்ற அடிப்படையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 150 சிற்றூழியர் வெற்றிடங்களானது 2 தொடக்கம் 3 வருடங்கள் வரை நிலவி வர…
-
- 1 reply
- 263 views
-
-
மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமை ஒரு இணக்கமுள்ள தெரிவு என்று இந்திய நாளிதழ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பட்ட கருத்துக்களின் பின்னர் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவேதான் இந்த தெரிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்று ஜனாதிபதி தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் கடந்த 30ஆம் திகதியுடன் பதவிவிலகிய நிலையில் ஜனாதிபதியை பொறுத்தவரையில் அரசியலற்ற சுயாதீனமான ஒருவர் அல்லது மத்திய வங்கியில் கடமையாற்றிய ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்படவேண்டும் என் நோக்கம் இருந்தது. பிரதமரை பொறுத்தவரையில் ஆளுநர் ஒருவர், அரசாங்…
-
- 2 replies
- 259 views
-
-
800 பயனாளிகளுக்கு யாழில் வீடமைப்புக் கடன். யாழில் 800 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. ‘2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தமது வீடுகளை அமைப்பதற்காகவும், ப…
-
- 1 reply
- 260 views
-
-
சிறிலங்காவின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் அனைத்துலக அபிவிருத்தி அமைப்பால் (International Development Association- (IDA) சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ள 125 மில்லியன் டொலர் கடனுதவிக்கு உலகவங்கி அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது நாட்டின் விவசாயத் துறையை மேலும் வினைத்திறனுடனும் கவர்ச்சிகரமானதாகவும், நுகர்வோரின் தேவைகளை மேலும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் சூழலில் நிலைத்து நிற்கத்தக்க வகையிலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க வகையிலும் முன்னேற்ற முடியும். இத்திட்டமானது ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பங்களிப்புடன் அமுல்பட…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. யுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவேன் : பிரதமர் திருமலை துறைமுகத்தை அண்மித்து பொருளாதார வலயம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்களால் நிரப்புபோம் மத்தல விமான நிலையத்துக்கு 50 விமானங்கள் வரும் இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என அனைவரிடமும் இணைந்து நாட்டை முன்னேற்றவே நான் முயற்சிக்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த காலத்தில் சர்வதேசம் எம்மை பார்க்கவில்லை. கொலைகார நாடாகவே பார்த்தது. இன்று எமது வெளிவிவகார அமைச்சர் உலகம் முழுவதும் சென்று சர்வதேச நாடுகளை எமது பக்கம் திருப்பியுள்ளார். இப்பொழுது உலகம் எம்மை ஏற…
-
- 0 replies
- 182 views
-