Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உத்தியோகபூர்வ இல்லம், குண்டு துளைக்காத வாகனம் எதுவும் வழங்கப்படவில்லை – மஹிந்த: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட எதுவும் தமக்கு வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ அதிருப்தி வெளியிட்டுள்ளார். வாகனங்கள் வழங்குவதனை விடுத்து வாகனங்களுக்கான டயர்கள் கூட வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜீப் வண்டி பழுதடைந்துள்ளதாகவும் அதனை பழுதுபார்த்துக் கொடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும் எதற்…

  2. 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் பதவிக்காலம் முடிவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார். மேலும்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8366

  3. வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானங்களை எடுக்கவும் : ஜனாதிபதி, பிரதமரிடம் முதலமைச்சர் சி.வி.கோரிக்கை ( மயூரன் ) வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா சிதம்பரபுரம் குடியேற்ற கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் வைபவமும் , தற்காலிக வீட்டுத்திட்டம் வழங்கும் வைபவமும் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பலவருடப் போராட்டம் இன்று பயன் அளித்துள்ளது. எல்லைக் கிராம எம்மக்களின் ஏக்கங்கள் சில இன்று நீக்கங் கண்டுள்ளன. இந்நிலையை…

  4. கதிர்காம யாத்திரிகர் குழுவினரை யானை தாக்கியதில் ஐவர் காயம் -எஸ்.கார்த்திகேசு கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு குமண காட்டுப்பாதை ஊடாக பாதயாத்திரை சென்ற அடியார் குழுவினர் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் தாக்கியதில் 02 பெண்கள் உட்பட 05 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 03 பேர் பாணமை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர்; மேலதிக சிகிச்சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வண்ணாத்தி கிணற்றடி என்ற இடத்தில் உறங்கிக்கொண்டிருந்த இவர்களை திடீரென அங்கு வந்த காட்டு யானைகள் தாக்கியுள்ளன. இதன்போது, யாத்திரிகர் குழுவினர் கத்தி கூச்…

  5. இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றுக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆகையினால், அனைத்துலக விசாரணை பொறிமுறையையே, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவையின் வெளிவிவகார அலுவலர் டி. திருக்குலசிங்கம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி…

    • 0 replies
    • 287 views
  6. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் வாகனங்களைப் பயன்படுத்திக் தலைநகர் கொழும்பில் டாக்ஸி சேவையை பொலிஸ் உயரதியாரியொருவர் நடத்தியுள்ளார். கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு விட்டு குறித்த உயர் பொலிஸ் அதிகாரி பணம் சம்பாதித்துள்ளார். கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் வாகனங்களை சட்டவிரோதமான முறையில் வழங்கி இவர் பணம் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த உயர் பொலிஸ் அதிகாரி தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். இந்த அதிகாரி கடமையில் இருந்த காலத்தில் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் பற்றிய விபரங்கள் த…

    • 0 replies
    • 352 views
  7. இலங்கை விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு குறித்தான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பு, கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குறித்த விடயம் தொடர்பில், ஆணையாளர் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டினை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் ஊடான பரிகார நீதியே அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான பொறிமுறையாக அமையும் என்பதனை ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் அரசியல் தீர்வுத்திட்டம் தொட…

    • 0 replies
    • 332 views
  8. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாகக் கையாண்டது. அதனூடாகவே திருப்திகரமான வெற்றி எமக்குக்கிடைக்கப் பெற்றிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் உறுப்பு நாடுகளும்வலியுறுத்திய விடயங்களை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமானஇரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடுஎன்ன என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தமிழ்ப் பத்திரிகை வினவியது. அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும், இலங்கை தொடர்…

    • 0 replies
    • 220 views
  9. கொழும்பு மாவட்டத்தில் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இருப்போர் சுமார் 75,000 பேர் இதுவரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த வீடுகளில் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வசிப்போர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டியது வீட்டு உரிமையாளர்களின் கடமை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த வருடம் முதல் தேர்தல் இடாப்புகளில் பதிவு செய்தல் கட்டாயம் என்றும், இதுவரை நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் நடவடிக்கை …

    • 0 replies
    • 546 views
  10. தொழில்களுக்காக மனிதக்கடத்தல் அமெரிக்கப்பட்டியலில் இலங்கை, நான்காவது ஆண்டாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கும் உள்நாட்டிலும் மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன. இலங்கையின் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் மத்திய கிழக்குக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணப் பணிகளுக்காகவும் …

    • 0 replies
    • 137 views
  11. இலங்கையில் ஜனநாயகம் அல்ல! நல்லாட்சி என்பது போலி நாடகம்!- ஜெனிவாவில் அனந்தி இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் என்ற தேசிய இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு வருகின்ற இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. இந்த இன அழிப்புச் சித்தாந்தம் இலங்கை அரச இயந்திரத்தினுள் பல அடுக்குகளில் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், இதை நியாயப்படுத்தும் வகையில் இலங்கையில் அரசியல் பெரும்பான்மை சிறுபான்மை என்ற வகைப்படுத்தல் இன ரீதியாகவே…

    • 2 replies
    • 533 views
  12. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து காங்கேசன்துறை பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர் விடுவிக்காமல் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். விடுவிக்காமல் இராணுவம் தம்வசம் வைத்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் மட்டும் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது. குறித்த காணிகளுக்குள் காங்கேசன்துற…

  13. அஞ்­ச­வில்­லை :ஜெனி­வாவில் மங்­க­ள (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­ வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால் அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும்…

    • 2 replies
    • 574 views
  14. இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றபட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தற்போதும் பலர் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையினை ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார். இலங்கை தொடர்பான ஆணையாளரின் வாய்மூல அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்ப…

  15. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 201.3 ஏக்கர் நிலம் 26 வருடங்களுக்கு பின்னர் கடந்த 25.06.2016ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 62 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் பொலிஸாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். கடந்த 26 வருடங்களாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 201.3 ஏக்கர் வரையிலான மக்களுடைய நிலம் கடந்த 25ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு அமைச்சினால் யாழ்.மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்து படையினருடைய …

  16. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பரவிப்பாஞ்சான், இரணைதீவு பகுதிகளில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து கடற்படையினர் மற்றும் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதிகளை சொந்த வாழ் விடமாக கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிலத்தை பார்பதற்கும் கூட கடற்படை மற்றும் படையினர் அனுமதி மறுப்பதாக மேற்படி பகுதிகளை சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், தமது சொந்த நிலங்களை பார்வையிட அனுமதியுங்கள் என மக்கள் விடுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைமைகள் விடுக்கும் கோரிக்கையினையும் கடற்படையினர் நிராகரித்திருக்கின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்து வந்திருக்கும் சிங்கள மீனவர்களுக்கு…

  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 2586 ஏக்கர் நிலம் காணப்படுவதாக புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ் ஆகிய தரப்புகளிடமே மேற்படி பரப்பளவு காணிகள் உள்ளன. இதில் பொலிஸாரிடம் அரச காணி இருபது ஏக்கர் மாத்திரமே உண்டு. ஏனையவை முப்படையினரிடம் காணப்படுகிறது. அந்த வகையில் அரச காணிகள் தரைப்படையினரிடம் 959 ஏக்கரும், கடற்படையினரிடம் 313 ஏக்கரும், விமானப்டையினரிடம் 14 ஏக்கரும், பொலிஸாரிடம் 20 ஏக்கரும் காணப்படுகிறது.மேலும் மக்களுடைய காணி அனுமதிபத்திரம் உள்ள காணிகளில் தரைப்படையினரிடம் 164 ஏக்கர் காணப்படுகிறது. இதனை தவிர தனியார் உறுதிக் காணிகளில் தரைப்படையினரிடம் 737 ஏக்கர் காணியும், கடற்படையினரிடம் 379 ஏக்கர் காணியும் க…

  18. ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா.! முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற யாப்பில் …

  19.  இலங்கை தொடர்பில் ஐ.நாவில் ஒலித்தவை ஐக்கிய அமெரிக்கா நம்பத்தகுந்த நீதி, பொறுப்புக்கூறல் பொறிமுகளை நோக்கிய பயன்தரக்கூடிய படிகளைத் தொடர்ந்தும் எடுத்து வைக்க, இலங்கைக்கு ஊக்கமளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக் கூறலில் சர்வதேசப் பங்கெடுப்பு அவசியம். Pவுயு, இராணுவத்தை நீக்கி, வடக்கு - கிழக்கில் நீக்குக, நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். ஐக்கிய இராச்சியம் இராணுவம் வைத்திருக்கும் காணிகளைத் திரும்ப வழங்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகியன தொடர்பில் இன்னும் செய்ய வேண்டியுள்ளது. …

  20.  மல்லாவியிலும் மாணவி துஷ்பிரயோகம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்வ…

  21. 'கல்வீச்சு காட்டுமிராண்டித்தனமானது' -சண்முகம் தவசீலன் யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவுக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய் சந்நிதியிலும், மற்றய பேரூந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலும் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை எமது மாகாணத்தில் உள்ள ஒருசிலரே செய்கின்றார்கள் என்றால் எமது …

  22. 24 வருட முகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! வவுனியா சிதம்பரபுரத்தில் கடந்த 24 வருடங்களாக முகாம் வாழ்க்கைக்கு உட்பட்டிருந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக கடந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிதம்பரபுரத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். சுமார் 193 குடும்பங்கள் குறித்த முகாமிலேயே தொடர்ந்தும் வசித்து வந்த நிலையில், தங்களுக்கு குறித்த பகுதியிலேயே காணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் …

  23. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பை நிராகரிக்கும் அரசு, உள்நாட்டு நீதிக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும், இது தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டது. இலங்கை மீது குற்றச்சாட்டுக்களைச் முன்வைக்கலாம். ஆனால், இலங்கையின் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் சட்டரீதியான முறைமை சர்வதேசத்திற்கு இல்லை என்றும் அரசு தெரிவித்தது. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் மேற்படிக் கருத்துக்களை முன்வை…

  24. அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபையுடன் இணைந்து முன்னெடுங்கள்- மத்திக்கு கூறுகிறார் விக்கி வட மாகாண அபிவிருத்தியை வடமாகாண சபையுடன் இணைந்தே மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரமேதாசவின் வழிகாட்டலின் கீழ், தற்காலிக சமாதானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம…

  25.  புலிகளின் முகாமில் ஆயுதங்கள் இல்லாமையால் அகழ்வுப் பணி தோல்வி -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, இன்று வியாழக்கிழமை (30) காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர், சமாதான நீதிவான் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவ் இடங்களில் எவ்வித ஆயுதங்களும் கிடைக்காமையால் அகழ்வுப் பணிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.