ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு எதிராக யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக கடந்த ஜூன் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் புதல்வியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், விடுவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் ஜனாதிபதி அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட …
-
- 0 replies
- 337 views
-
-
பேரழிவு ஆயுதப்பரம்பலை தடுப்பது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா அரசாங்கம் பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இந்த பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சிப்பட்டறையில் இலங்கையின் சுங்க அதிகாரசபையினர், சுங்கப்பிரிவினர்,பொலிஸ், கடற்படை, கரையோர காவல்படையினர் ஆகியோர் பங்கேற்றனர். சர்வதேச பேரழிவு ஆயுதப்பரம்பலுக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டத்தின் அமெரிக்காவின் இராணுவ நிபுணர்கள் தலைமையில் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதன்போது கரையோர பாதுகாப்பு, தொழிநுட்பம், அச்சுறுத்தல் மதிப்பீடு போன்றவை தொடர்பில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குறித்த நிகழ்ச்சித்திட்டம், இந்து சமுத்திர பிராந்தியத…
-
- 0 replies
- 288 views
-
-
ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இன்னும் சில தினங்களில், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று செயற்பட்டு வருவதோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலிலேயே பொன்சேகாவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இந்தநிலையில் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று பிரதமர் தலைமையில் இது குறித்து முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. http://www.seithy.com/breifNews.…
-
- 0 replies
- 343 views
-
-
மீண்டும் ஆரம்பமாகியது மூதூர் படுகொலை தொடர்பான விசாரணை திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தற்போது ஜூரி சபை முன்னிலையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. யுத்த காலத்தில் குமாரபுரம் கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இந்த படுகொலைச் சம்பவம், இடம்பெற்றுள்ளது. 1996-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இரவில் இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள் , குழந்தைகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 39 பேர் காயமடைந்தனர். …
-
- 0 replies
- 234 views
-
-
"வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் வடமாகாண முதலமைச்சர்தான்' என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார அமையம் ஒன்றை அமைப்பதற்கு 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கின்றது. இருந்தபோதிலும், இதனை ஓமந்தையில், அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பதில் முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன. இந்த நிலையில், இதனை வவுனியாவுக்கு அப்பால் மதவாச்சிக்…
-
- 0 replies
- 299 views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் அல்ஹுசைன் நாளை புதன்கிழமை முன்வைக்கவுள்ள வாய்மூல அறிக்கை இலங்கையை விமர்சிக்காத வகையிலேயே அமையுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவாவில் பல்வேறு சந்திப்புக்களை நடத்தி வரும் கஜேந்திரகுமாரிடம் மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கை எவ்வாறு அமையுமெனக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; நாளை புதன்கிழமை மனித உரிமை பேரவை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார். கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விடயங்களை ஆணையாளரின் அறிக்கை கொண்டிருக்கும். இந்நிலையில் கடந்த கூட்டத் தொடரில் …
-
- 0 replies
- 248 views
-
-
அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 9 இலங்கையர் கைது சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லத் திட்மிட்டிருந்த 09 இலங்கையர்கள், தமிழ்நாடு, திருச்செந்தூர் தூத்துக்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசாவில் தமிழ்நாடு வந்துள்ள இந்த இலங்கையர்கள், அவுஸ்திரேலியா செல்ல முடியுமென நம்பவைக்கப்பட்டுள்ளனர் என ஓர் உயர் பொலிஸ் அதிகாரி, இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இவர்களை, திருச்செந்தூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கியூ பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். எனினும், இவர்கள் எவ்வாறு அவுஸ்திரேலியா செல்லவிருந்தனர் என்பது உட்பட விரிவான தகவல்களைத் தர அவர்கள் மற…
-
- 0 replies
- 252 views
-
-
மஸ்தான் எம்.பியின் மனிதாபிமானம் -ஏ.எம்.ஏ.பரீத் ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்திய கிராமத்துக்கு, குடிநீரை தான் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிஹிடியா பாம் பழைய குடியேற்ற கிராம மக்கள் இதுவரை காலமும் குடிநீருக்காக ஆற்று நீரைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கிராம மக்களால் பல அரசியல் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாரும் அங்கு செல்லாத நிலையில் அண்மையில் அப்பகுதிக்கு …
-
- 0 replies
- 283 views
-
-
ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக சென்றுகொண்டிருந்த போது, வவுனியா-செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதிலில், தன்னுடைய வாகனத்தை 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று மோதியமையால், பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலியானார். இதுதொடர்பில், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பும் வழக்கப்பட்டது. இந்த கொலை வழக்குக்கு, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர…
-
- 0 replies
- 230 views
-
-
இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவில் இராணுவம் கோரும் காணி விபரம் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள பல காணிகளை, இராணுவத்தின் பண்ணை மற்றும் இலவச கல்வி நிலையம் அமைப்பதற்காக என தெரிவிக்கப்பட்டு இராணுவத் தரப்பால் கோரப்பட்டுள்ளது. விசுவமடு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, தேவிபுரம், சுதந்திரபுரம், வள்ளிபுனம், வேணாவில் முதலிய இறுதி யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களை இராணுவத்தினர் தமக்கு வழங்குமாறு முல்லைத்தீவு அரச அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதேவேளை குறித்த பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் பல பண்ணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக பண்ணை அமைப்பதற்கும் காணிகளை கோரிய…
-
- 0 replies
- 453 views
-
-
அனைத்து சக்திகளின் ஒன்றிணைவு மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் காரணமாகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவினால் வெற்றி கொள்ளப்பட்டது என்றும், இவ்வாறானதொரு சூழல் உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெற முடியாது எனவும் இந்தியப் ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள புதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள, After the Fall : Sri Lanka in Victory and War (அழிவிற்குப் பின்னர்: வெற்றி மற்றும் போரில் சிறிலங்கா) என்கின்ற நூலில், இதன் ஆசிரியரான மோகன் கே. ரிக்கு, ‘நான்காம் ஈழப்போர் ஆரம்பித்தது தொடக்கம் அது முடிவுறும் வரையில் அனைத்துலக சமூகமானது இதற்கு முற்றிலும் உடந்தையாக இருந்துள்ளதாக’ வாதிடுகிறார். ‘தமிழீழ …
-
- 4 replies
- 606 views
-
-
புளுமெண்டல் பகுதியில் சட்டவிரோதமாக அமையப் பெற்றுள்ள வீடுகளை அரசாங்க அதிகாரிகள் உடைக்க முற்பட்டமையினால் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரையும் மீறி வீடுகள் உடைக்கப்படும் இடத்தை நோக்கி மக்கள் படையெடுக்க முயற்சிக்கின்றமையால் பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மேலும் புளுமெண்டல் பகுதியில் பிரதான வீதியில் சில மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹமான…
-
- 1 reply
- 475 views
-
-
பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணயைாளர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் இலங்கை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிடவுள்ளார். நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வெளியிடவுள்ள வாய்மூல அறிக்கையின் முற்கூட்ட…
-
- 0 replies
- 269 views
-
-
வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கி நகர்ந்து மாங்குளம் அல்லது ஓமந்தை பகுதியிலேயே அமைக்கப்படவேண்டும். அதற்காக நாம் முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாணத்திற்கு என அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கியே நகர்த்தப்பட வேண்டும். அதுவே எமது இருப்பையும் தக்க வைக்க உதவும். இன்று தென்பகுதியில் தம்புள்ள பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் காரணமாக எமது வடபகுதி வளங்கள் தென்பகுதி நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. எமத…
-
- 1 reply
- 637 views
-
-
ஜெனிவா வந்தடைந்தார் மங்கள : நாளை உபகுழு கூட்டத்தில் உரை (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவா வந்தடைந்தார். நோர்வேயிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து உக்ரேனுக்கு விஜயம் செய்திருந்தார். அந்தவகையில் உக்கேரினிலிருந்து அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவா வந்தடைந்தார். அந்தவகையில் நாளைய தினம் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ள இலங்கை விவகாரம் குறித்த உபகுழுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். மேலும் நாளை ம…
-
- 1 reply
- 371 views
-
-
தாக்குதல் நடத்த உதவிய தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தாபய ராஜபக்ஷ தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க தன்னால் முடியாதென்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத்தில் சாட்சியளித்த கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பில், கடந்த 2006-ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த உதவியதாக நான்கு தமிழ் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சாட்சியளித்தார். அதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு …
-
- 1 reply
- 317 views
-
-
வலி.வடக்கில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் ஆலயங்களும் இடித்தழிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- வலி.வடக்கில் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் இழித்தழிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்திருந்த பகுதிகளில் சனிக்கிழமை 201 ஏக்கர் நிலபரப்பில் மக்கள் மீள குடியமர அனுமதித்தனர். அதனை அடுத்து அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் விடுவிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். அதன் போது தமது பரம்பரை ஆலயங்கள் குல தெய்வ ஆலயங்களை …
-
- 1 reply
- 383 views
-
-
எதற்காக இருதரப்பினருக்கிடையே புதிதாக பேச்சுவார்த்தைகள் : வாசுதேவ நாணயக்கார இலங்கையின் ஒற்றையாட்சியை கைவிடுவது தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய்க கூட்டமைப்பும் இணகக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில் எதற்காக இருதரப்பினருக்கிடையே புதிதாக பேச்சுவார்த்தைகள் எனக் கேள்வியெழுப்பும் மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார, இந்தியாவை மீறி புலம்பெயர் அமைப்புக்களின் தேவையை நிறைவேற்ற கூட்டமைப்பு முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுடன் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசிய…
-
- 4 replies
- 671 views
-
-
ஓ.. உவரின்டை நல்லிணக்கத்துக்குப் பரிசை தமிழ் சனம் குடுத்ததுதானே! யாழ்ப்பாணத் தம்பி: யுத்தத்திலை மனித உரிமைகள் பற்றின நன்னெறிக் கோட்பாடுகளைப் பின்பற்றினான் எண்டு மகிந்த ராஜபக்ச முந்தி ஒருக்கால் சொன்னது நினைவிருக்கே? நாங்களும் அதென்னடா? யுத்தத்திலை மனித உரிமை நன்னெறிக் கோட்பாடு எண்டு கேட்டம்... ஏனென்டால் மகிந்த ராஜபக்ச நடத்தின யுத்தம் எப்பிடியானது எண்டு மறக்க ஏலுமே? போரிலை, அப்பாவிச் சனங்களிலை குண்டுகளை கொட்டி, பாதுகாப்பு வலயங்களை அறிவிச்சு, அதிலை செல் அடிச்சு, சரணடைஞ்சதுகளை சுட்டுக் கொண்டு, பெண்களை வன்கொடுமை செய்து, காணாமால் போகச் செய்து எண்டு ஏகப்பட்ட அநியாங்கள் எத்தினை? உதெல்லாம் மனித உரிமை நன்னெறிக் கோட்பாடுகளின்டை அடிப்படையிலைத…
-
- 0 replies
- 434 views
-
-
இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்ட போதும் காவலரண் அகற்றப்படவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்த இராணுவ சோதனை வீதித் தடை அகற்றப்பட்ட போதிலும் இராணுவ காவலரண் அகற்றப்படவில்லை. காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரையிலான பகுதி மீள குடியமர கடந்த சனிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இருந்த இராணுவத்தினரின் சோதனை சாவடி வீதி தடை ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது. வீதி தடை அகற்றப்பட்ட போதிலும் வீதியோரமாக இருந்த இராணுவ காவலரண் அகற்றப்படவில்லை. குறித்த இராணுவ காவலரணில் இராணு…
-
- 0 replies
- 347 views
-
-
தென்மராட்சி - வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கும் சாவகச்சேரியிலுள்ள தேசியப் பாடசாலை ஒன்றின் மாணவன் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் நீதி கிடைக்கக் கோரியும் தென்மராட்சி பிரதேச மக்களால் இன்று சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 'அவதானம்! அவதானம்! பிரத்தியேக வகுப்புத் தொடர்பில் அவதானம், 'அச்சுறுத்தாதே! அச்சுறுத்தாதே! சிறுவர் உரிமைகளைக் தட்டிக்கேட்கும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தாதே!,'வேலியே பயிரை மேய்வதா?', 'கைதுசெய்! கைதுசெய்! காவாலி ஆசிரியர்களைக் கைதுசெய்! அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பு,' 'சிதைக்காதே! சிதைக்காதே! மலர…
-
- 0 replies
- 402 views
-
-
மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி தமது மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி, யாழ் நல்லூர் கோயில் முன்றலில் வலி வடக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 15.06.1990ம் ஆண்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குறித்த மக்களின் இன்னல்களை நேரில் கண்டறிந்த ஐனாதிபதி, "06 மாதங்களுக்குள் உங்களை மீளக்குடியேற்றுவேன்.." என வாக்குறுதியளித்த நிலையில், அது இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 08 அம்ச கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஐா, சிறிதரன், சரவணவன் மற்றும் ஈழ மக்கள் ஐனநாயகட்சியின் ஆதரவாளர்கள், சிவில் சமூக அமைப…
-
- 2 replies
- 348 views
-
-
சர்வதேச விசாரணையை கோரி ஜெனிவாவில் உபகுழு கூட்டங்கள்: முன்னாள் போராளிகளும் பங்கேற்பு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீ கஜன்) ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இடம்பெறுகின்ற உப குழுக்கூட்டங்களில் தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு விளக்கமளித்து வருகின்றனர். குறிப்பாக வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் இந்த உப குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விளக்கமளித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 210 views
-
-
இலங்கை நிலைமை குறித்த வாய்மூல அறிக்கை புதன்கிழமை : பதிலளிக்க தயார் நிலையில் இலங்கை (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். அதாவது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது என்பது தொடர்பாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார். கடந்த வருடம் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்…
-
- 0 replies
- 237 views
-
-
ஐ.தே.கவில் இணைகிறார் சரத் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக்கட்சியில் நாளை செவ்வாய்க்கிழமை இணைந்துகொள்வார் என்று சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன - See more at: http://www.tamilmirror.lk/175682/ஐ-த-கவ-ல-இண-க-ற-ர-சரத-#sthash.zYP3A652.dpuf
-
- 0 replies
- 279 views
-