ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு சாதகமாகிவிட்டது : இல்லாவிட்டால் அடையாளம் தெரியாமல் போயிருப்பார் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். இனவாதத்தால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என மஹிந்த உள்ளிட்ட தெற்கு அரசியல் வாதிகள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு நாம் ஒரு போதும் முன் நோக்கி நகர முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற…
-
- 0 replies
- 394 views
-
-
பொருளாதார மையம் தொடர்பில் பொதுக்கருத்து வடக்கில் ஏற்பட வேண்டும் : அமைச்சர் மனோ வடமாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட இருநூறு கோடி ரூபா பெறுமதிமிக்க பொருளாதார மையம், வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட முயற்சி எடுக்கப்படுமானால், அதை தமிழ் முற்போக்குக் கூட்டணி கடுமையாக எதிர்க்குமென தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாணத்து உழைப்பாளர்களின் நலன் கருதி உருவாக்கப்பட உள்ள இந்த பொருளாதார மையத்தை, வேறு இடங்களுக்கு எவரும் காவிக்கொண்டு செல்லும் முயற்சி அமைச்சரவையில் எடு…
-
- 0 replies
- 349 views
-
-
போலி நாணயத்தாளென முறைப்பாடு செய்தவரே பிரதான சூத்திரதாரி : சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட மூவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாயில் உள்ள வங்கியொன்றில் நகைகளைஅடகு வைத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள்கள் கலந்திருப்பதாக பெண்ணொருவரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு மாற்றியிருந்தனர். இந்நிலையில் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார் குறித்த போலி நாணயத்தாள் தொடர்பாக முறைப்…
-
- 0 replies
- 164 views
-
-
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆட்சிமாற்றத்தின் பின்பும் தமது கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தட்டிக்கழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் வழக்கானது தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வரு…
-
- 1 reply
- 273 views
-
-
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணித் தெரிவில் இடம்பெற்ற சதி, அது எவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவைபற்றி வடக்கின் முதலமைச்சர் விபரிக்கையில், கடந்த திங்கட் கிழமை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்களும் கலந்துகொள்ளும் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்திற்குச் சென்றபோதுதான் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் அங்கே ஒரு சதி நடைபெற்றது தெரிய வந்தது. அந்தக் கூட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரின், வடக்கு மக்களால் பொருளாதார மையத்திதை எங்கு நிறுவலாம் என்ற உறுதியான நிலைப்பாடு இல்லாமையால் அதனை மதவாச்சிக்கு மாற்றவேண்டும் என நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் என்ற தொனி…
-
- 0 replies
- 385 views
-
-
இன்றைய தினம்(24.06.2016) வளத்தாப்பிட்டி, பளவெளி சிவன் ஆலய தலைவர் திரு.துரைசிங்கம் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலய வழிபாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு தனது 2015ம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் குழாய்நீர் இணைப்புக்காகவும், மின்சார இணைப்புக்காகவும் இவ் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கியிருந்தார். இன்றைய தினம் அவற்றையும் பார்வையிட்டு திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர், எல்லைக் கிராமங்களை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு. அதே போல் மக்களாகிய உங்களுக்கும் உண்டு எனக் கூறினார். மாகாண சபை உறுப்பினருடன் நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி ஆலய பொருளாளர் க.கனகராஜா அவர்களும் கலந்த…
-
- 0 replies
- 304 views
-
-
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பிலான வழக்கு 15 வருடங்களின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தத் தாக்குதல் 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24இல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், இரத்தினசிங்க புஷ்பகுமரன் அல்லது பொன்னுத்துரை, நிர்மல ரஞ்சன் அல்லது மசூர், விக்டர் அல்பிறட் டொமினிக், சுப்பிரமணியம் நவராஜசிங்கம், நாகேந்திரம் நகரத்தினம், தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீத…
-
- 0 replies
- 572 views
-
-
'கடந்த இரு வருடங்களாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்து தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது' என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கடந்த இரண்டு வருடங்களாக, கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்புடைய ஐந்து சம்பவங்களை திறமையான முறையில் முறியடித்து, அவற்றை கைப்பற்றியிருந்த யாழ்ப்பாணம், நெல்லியடி, இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் …
-
- 0 replies
- 210 views
-
-
கடந்த யுத்த கால இடம்பெயர்வுகளுக்கு பின்னர் வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகார சபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு நேற்றைய தினம் (23.06.2016) வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடமாகாண வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை. இந்த கலந்துரையாடலில் மாவட்ட சங்கங்களின் செயற்பாடு, கிளைச் சங்கங்களின் பதிவு, அதிகார சபைக்கான நிய…
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கையின் பொலிஸ்துறையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் 400 தமிழ் இளைஞர்களை இணைத்து கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய கலந்துரையாடல் மற்றும் மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு தமிழ் பொலிஸாரின் அவசியம் துரிதமாக உணரப்படுகிறது. இந்நிலையிலேயே புதிதாக 400 பேர் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் மீது சந்தேகம் இருந்தமை காரணமாக அவர்களை பொலிஸ்துறையில் இணைத்துக்கொள்ளப்படுவதில் பிரச்சினை இருந்து வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/108835
-
- 0 replies
- 239 views
-
-
துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை மறைத்த அதிபருக்கும் விளக்கமறியல் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரின் குற்றச்செயலை மறைக்க முனைந்த குற்றச்சாட்டில் அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் பிறிதொரு ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆசிரியர், நேற்றுக் காலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தனர். எனினும், அவர்களையும் நீதிமன்றத்த…
-
- 1 reply
- 338 views
-
-
சிறிலங்கா கடற்படையினரின் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய, கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் கே.சி.வெலகெதர, பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தினால், குற்றவாளியாக காணப்பட்டதையடுத்தே, கொமாண்டர் கே.சி.வெலகெதர பதவியிறக்கப்பட்டுள்ளார். கடற்படைத் தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றார், கடற்படையை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இவர் மீது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 21 ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 13ஆம் நாள் வரை, அனுமதியின்றி விடுமுறையில் இருந்தார் என்பதாலும் இந்தக் காலப்…
-
- 1 reply
- 379 views
-
-
ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர , விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் நடத்தக்கூடாது. ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் , பரிசளிப்பு விழாவும் இன்று காலை நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ…
-
- 1 reply
- 494 views
-
-
மத்திய வங்கியின் ஆளுநர் பதவி நீடிப்பை கோரப் போவதில்லை ; அர்ஜூன மகேந்திரன் கோப் குழுவின் முடிவு வரும் வரை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி நீடிப்பை கோரப் போவதில்லையென மத்திய வங்கி ஆளுநரான அர்ஜூன மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய மத்திய வங்கி ஆளுநராக இருக்கும் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் இம் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8035
-
- 3 replies
- 649 views
-
-
அவிசாவளை, புவக்பிடிய, வெருளுபிடிய பிரதேச, புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான மோதலினால் பதட்ட நிலைமை உருவாகியுள்ளது. பதட்ட நிலைமை நிலவிய சம்பவ இடத்துக்கு நேற்று நேரடியாக ஸ்தலத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து முன்னெடுத்தார். அமைச்சரின் பணிப்புரையின்படி அவிசாவளை பொலிஸ் பிரிவு உள்வரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹான் டயஸ் விவகாரத்தை நேரடியாக பொறுப்பேற்று பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன் காயமடைந்தவர்களையும் பார்வைய…
-
- 1 reply
- 847 views
-
-
தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம் தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதே இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/8058
-
- 2 replies
- 622 views
-
-
இயற்கை அனர்த்தத்தினால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய டக்ளஸ் எம்.பி. (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்லஸ் தேவானந்தா சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றில் இன்று 23 இன் கீழ் இரண்டில் விசேட கூற்று ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவிடத்தில் முன்வைத்த போதே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அவருடைய வினாவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ந…
-
- 0 replies
- 184 views
-
-
வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென இராணுவத்திற்கு கூறியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற வரலாற்…
-
- 3 replies
- 323 views
-
-
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களையும், கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும் என உடுப்பிட்டி அமெரிக்கன் மிஸன் கல்லூரி அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார். மேற்படி பாடசாலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தரம் 5 இல் கல்வி கற்று புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த 5 மாணவர்கள் தரம் 6க்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக வேறு பாடசாலைக்குச் சென்றுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மேற்படி பாடசாலையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. கௌரவிப்பு வழ…
-
- 0 replies
- 457 views
-
-
பாரியளவு போதைப் பொருளுடன் இரு இலங்கை இளைஞர்கள் இந்தியாவில் கைது இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 06 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விமானத்தின் பயணத்தை ரத்து செய்து விமானத்தை சோதனையிட்டுள்ளனர். இதன்போது இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்களின் பயணப் பைகளில் மொத்தம் 3 கிலோ 600 கிராம் எடையுள்ள ‘பிரவுன்சுகர…
-
- 0 replies
- 245 views
-
-
'நல்வழியில் செல்லாவிடின் நானிருக்க மாட்டேன்' நான் ஒரு போதும் ஒருவருக்கும் தவறான வழிக்காட்டல்களை வழங்கியதில்லையெனவும் தவறுகளைக் கண்டறியும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் சட்டத்துக்கேற்ற முறையில் செயற்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார். இலங்கை துறைமுக அதிகார சபையின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளின் சேவையை பாராட்டும் பொருட்டு ஒழுங்குச் செய்யப்பட்டிருந்த நிகழ்வி கலந்துகொண்டிருந்த போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 'பாதுகாப்புப் பிரிவில் இருபது - முப்பது வருடங்களாக ஒரே நிலையில் சேவையாற்றிய பொழுதும் எவ்விதப் பதவியுயர்வுகளும் வழங்கப்படவில்லை. நான் ஒன்றறை …
-
- 0 replies
- 394 views
-
-
மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் ( ரி.விரூஷன் ) யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் இக் கோரிக்கையை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடாத்தியிருந்தனர். இதன…
-
- 12 replies
- 2k views
-
-
வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம் ரி.விரூஷன் யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான …
-
- 2 replies
- 451 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனைத்து இராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த முழு இராணுவப் பாதுகாப்பும் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ, நெருக்கமான பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாரச்சி உள்ளிட்ட ஐந்து உயர் இராணுவ அதிகாரிகள் மஹிந்தவின் பாதுகாப்பு பணிகளிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன்படி, மஹிந்தவிற்கு வழங்கப்பட்ட மொத்த இராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக வ…
-
- 1 reply
- 490 views
-
-
வெளிநாடுகளில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்துகோரி நிராகரிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் அவ்வாறானவர்களுக்கான கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலைமை மாற்றப்பட்டிருப்பதுடன், கடந்த காலத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை அடைவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அகதிகளாக வெளிநாடுகளில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ள இலங்கையர்கள், இலங்கையர்களாக ஏற்றுக் கொ…
-
- 0 replies
- 298 views
-