ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
போரின் இறுதிக்கட்ட மீறல்கள் புலம்பெயர் புலிகள் சாட்சியமளிக்கத் தயார்! போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என்று, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். ஜஸ்மின் சூகா தலைமையிலான, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகளுக்கான நிறுவகத்துடன் இணைந்து, இலங்கையில் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் மேற்கொண்ட ஆய்வின் போதே, அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். நான்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 75 தமிழர்களிடம், இந்த ஆய்வு நடத…
-
- 3 replies
- 417 views
-
-
தகுதியுடைய தமிழர்களுக்கு அரச உத்தியோகத்தை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது தகுதியுடைய தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கும், சிங்களத் தலைவர்கள் சிங்களவர்களுக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கின்றனர். அத்துடன், அதிகாரத்திலுள்ள குறைந்தளவான தமிழர்களே சில தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாகவும், தகுதியான தமிழர்களுக்கு அரச பணிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பாராபட்சங்கள் பற்றி இலங்கையில் நீண்டகாலமாக முறைப்பாடுள்ளது, எனினும் அதில் எந்த…
-
- 7 replies
- 514 views
-
-
கதிர்காம ஆலயத்தை நோக்கிய 400 கிரோமீற்றர் பாதயாத்திரை.! கதிர்காமத்தை நோக்கிய 400 கிலோமீற்றர் பாதயாத்தரை நேற்று மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. இப்பாதயாத்திரை கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கூடாக எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி கதிர்காமம் முருகன் ஆலய திருத்தலத்தை அடையவுள்ளது. இடை நடுவில் குறித்த மாவட்டங்களின் பிரதான ஆலயங்களில் தங்கி மேற்படி பக்தர்கள் கதிர்காமத்தை அடையவுள்ளனர். இப்பாதையாத்திரை குழுவில் ஆண்கள் பெண்கள் அடங்கலாக சுமார் 120 பேர் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk/article/7452
-
- 5 replies
- 761 views
-
-
இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம்: சிறிசேன அறிவிப்பு நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தூய குடிநீர் விநியோக திட்டத்தை துவக்கி வைத்த மைத்திரிபால சிறிசேன இலங்கையின் வடமத்திய மாகாணத்திலேயே அதிக அளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்ற போதிலும், இந்த நோய் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வவுனியா மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். நாட்டில் வருடமொன்றிற்கு ஐயாயிரம் பேர் புத…
-
- 0 replies
- 241 views
-
-
சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை inSha திருகோணமலை சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சுமார் 77,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளும், 8000 ரூபா பணமும் கோவிலிருந்து திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளங் காணப்படவில்லை. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை காளி கோயில் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்…
-
- 1 reply
- 537 views
-
-
இரணைதீவிற்கு செல்லவுள்ள இணைத்தலைவர்கள் நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி இரணைதீவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் இரணைதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி இரணைதீவிற்கு படகுகளில் செல்வதென சனிக்கிழமை (11) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு போர் ஏற்பட்ட பின்னர் பூநகரி இரணைதீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முழங்காவில் இரணைமாதா நகரில் குடியமர்ந்துள்ளனர். மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரிப் பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற…
-
- 0 replies
- 283 views
-
-
வடக்கின் இராணுவம் வெளியேற்றப்படாது.! வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன. வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. வடக்கில் தொடர்ந்தும் இராணவ ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவம் தடையாக இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பதிலை தெரிவிக்க…
-
- 0 replies
- 421 views
-
-
நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை -சம்பந்தன் விசனம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்ற போதும், நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 8 replies
- 735 views
-
-
இந்திய கடலில் தத்தளித்த இலங்கை தமிழ்குடும்பம் மீட்பு! இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை நாகப்பட்டின மீனவர் குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான படகில் பயணித்த இலங்கையர்கள், மத்திய கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளதாக அக்கரைப்பேட்டை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவை சேர்ந்த துஷ்யந்த் (27), துவாரகை (24) மற்றும் காகிதா(2) என இவர்கள் அடையா…
-
- 1 reply
- 392 views
-
-
லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் -செல்வநாயகம் கபிலன் சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (06) இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதிய…
-
- 8 replies
- 969 views
-
-
அன்று பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போது கொக்கட்டிச்சோலை பிரதேசமே இரத்த வெள்ளத்தில் படிந்தது. காலங்கள் எத்தனை கடந்து போனாலும் பிரதேசமக்கள் இப்படுகொலை நடந்த நாளை கரிநாளாக பிரகடனம் செய்து வருடாந்தம் துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர். இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 26வது ஆண்டு நினைவு நாள். இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி படுவான்கரை பிரதேசங்களில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் விசேட பூசைகளும், மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் நினைவுக்கோபுர முன்றலில் உறவினர்களால் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில்…
-
- 1 reply
- 437 views
-
-
அறிவியல் நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட, விவசாய பீட மாணவர்களினால் மழை மற்றும் வெயில் காலங்களில் பேரூந்திற்கு காத்திருக்கும் பொழுது பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும், வீதியின் இருமருங்கிலும் பஸ் தரிப்பிடம் அமைத்து தரும்படி கடந்த வருடம் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன்தினம் (10.06.2016) நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரனோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார், பல்கலைக்கழக பொறியியல், விவசாய பீட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கிளிநொச்சி விவசாய கல்லூர…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் பின்னர் உள்ளக விசாரணையாகி இப்போது அது கூட இல்லையென்ற நிலையாகிவிட்டது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எந்த விசாரணையையும் இலங்கை அரசு நடத்தாது என முதலிலேயே தெரிந்தும் காலத்தை விரயமாக்கும் அரசின் செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடந்தையாக இருந்துள்ளது எனவும் ஆரம்பம் முதல் இறுக்கமாக இருந்திருந்தால் இந்த நிலைவந்திருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 29ந்திகதி ஐ.நாவில் புதிய கதையைச் சொல்ல இருக்கிறார். இதைக் கேட்டு அமெரிக்கா வாய்மூடி மௌனமாக இருக்கப்போகின்றதா? அல்லது பேசுமா? என…
-
- 1 reply
- 305 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்! இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா? என்ற நெருக்கடி நிலைமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நீதிபதிகள் கொண்ட ஹய்ப்ரிட் நீதிமன்றத்தை வேண்டி பேர் கொண்ட சர்வதேச சட்டத்தரணிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைனைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, இலங்கை அரசாங்கம் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையொன்றை அமைக்குமாறு ஆணையாளர் செய்த…
-
- 0 replies
- 327 views
-
-
News Articles 2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை – வடமாகாண சபை மேற்படி விடயம் தொடர்பாக 2015ம் ஆண்டின் வடமாகாண சபைக்கான நிதிச் செலவீனங்கள் தொடர்பான முன்னுக்கு பின் முரணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வடமாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மை நிலையை பொது மக்களுக்கு அறியத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாய கடம…
-
- 3 replies
- 706 views
-
-
க.பொ.த உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொறியியல் தொழிநுட்ப(ENGINEERING TECHNOLOGY) துறையில் ஏறாவூர் பற்று மீராகேணியைச் சேர்ந்தஅப்துல்லாஹ் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் ஐந்தாவது இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 224 வது இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். Index Number : 6799248 Stream : ENGINEERING TECHNOLOGY Z-Score : 1.8562 District Rank : 5 Island Rank : 224 மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்த இம்மாணவன் தான் தெரிவு செய்த பொறியியல் தொழிநுட்ப பாடப்பிரிவு ஏறாவூர் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படாத காரணத்தினால் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு சென்று குறித்த துறையினை தெரிவு செய்ததுடன் தனது கல்விக்கு தேவையான…
-
- 0 replies
- 275 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துக் கூறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை அமெரிக்க காங்கிரஸ் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. அமெரிக்க காங்கிரஸின் இலங்கை சம்பந்தமான ஆர்வக் குழு நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நேற்றிரவு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் இலங்கை அரசு சார்பில்,…
-
- 0 replies
- 320 views
-
-
சாலாவ வெடிப்பை வீடியோ செய்தார் மஹிந்த கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர். தல்தென ஞானசார தேரரிடம் நலன்விசாரித்தவர்கள…
-
- 0 replies
- 244 views
-
-
சலாவ ஆயுதக் கிடங்கு அழிவு 500 கோடிக்கு மேல் இழப்பு! கொஸ்கம-சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தினால், இராணுவத்துக்கு, 500 கோடி ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இனிமேல், அந்தப் பகுதியில் ஆயுதக் கிடங்குகள் அமைக்கப்படாது என்றும், எஞ்சியுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘தேவைக்கு அதிகமாக இருந்த பெருந்தொகையான ஆட்லறி, பல்குழல் பீரங்கிக் குண்டுகள் அழிந்து போனவற்றுள் அடங்கியுள்ளன. இவை வழங்குனரிடமே திருப்பி விற்கப்படவ…
-
- 0 replies
- 282 views
-
-
ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.! ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ், ஸ்ரீ ரெலோ, தேசிய காங்கி ரஸ் உட்பட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அனைத்து சுதந்திரக் கூட்ட…
-
- 0 replies
- 301 views
-
-
கொஸ்கம சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் : புது கதை வெளியானது.! கொஸ்கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சீனாவுக்கு அனுப்பப்பட விருந்த வெடி பொருட்களே வெடித்துச் சிதறியுள்ளதாக சிங்கள வார இதழான ராவய, செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரின் போது, சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள், பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட வெடி பொருட்களை இலங்கையில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் வசதிகள் இல்லாமையினால், கொள்வனவு செய்த நாட்டிடமே அவற்றை திரும்பவும் கையளிக்கப்படவிருந்ததாக…
-
- 0 replies
- 395 views
-
-
சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார். சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு நாளைய தினம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் குறித்த மதிப்பீடுகளின் அடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் தற்போதுள்ள மதிப்பீட்டின்படி முழுமையாக சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எண்ணிக்கை 654 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதீப்பீடுகள் நிறைவடைந்ததன் பிறகு சீதாவாக்கை பிரதேச சபைக்குட்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சேதமடைந்த வீடுகளுக்கு ரூபா 50,000 வீதம் மூ…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் காணப்படுவதாகவும் இதனைப் பொலிசார் கட்டுப்படுத்தவேண்டும் என பருத்தித்துறை சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர். பருத்தித்துறை பொலிசார் நடாத்திய சிவில் பாதுகாப்புக் கூட்டம் பருத்தித்தறை பொலிஸ் நிலையித்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே பொதுமக்களால் மேற்படிவேண்டுகோள் பொலிசாரிடம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது புனிதநகர் மீன் சந்தைக்கு அருகாமையில் தினமும் மாலை வேளையில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இரவு 9மணிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் பகுதிகளில் ஆட்டோக்களில் வருபவர்கள் கஞ்சா வாங்கிச் செல்வதாகவும் தெர…
-
- 8 replies
- 547 views
-
-
தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சி.சி.டி.வி. காணொளி வெளியாகியுள்ளது. குறித்த கைக்குண்டுத் தாக்குதலில் இறந்த 41 வயதுடைய பெண் தவறான காதல் உறவில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவித்தமையாலே, 54 வயதுடைய நபர் கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார். கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபருடன் சம்பவ இடத்தில் இருந்த மேலும் ஒரு பெண்ணும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கைக்குண்டு தாக்குதலில் தவறான காதல் உறவில் எதிர்ப்புத் தெரிவித்த பெண் மற்றும் 9 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே குறித்த சி.சி.டி.வி. காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 290 views
-
-
கொஸ்கம இராணுவ முகாம் ஆயுத கிடங்கில் எற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கு, இராணுவத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆயுதக்கிடங்கு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், ‘நான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது இந்த சம்பவம் நடந்திருந்தால் இராணுவத் தளபதி இராஜினாமா செய்திருப்பார் அல்லது தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்’ என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கே இராணுவத்தினர் மத்தியிலிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கேணல் தரத்தில் செயற்பட்ட கோத்தாபய …
-
- 1 reply
- 449 views
-