Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமஷ்டி தீர்வுகளை முன்வைக்கும் அதிகாரம் வட மாகாண சபைக்கு உள்ளது (க.கமலநாதன்) வடக்கு மாகாணசபை எவ்வாறான அரசியல் தீர்வுவையும் முன்வைக்கலாம். அது தொடர்பில் ஆராய்வது எமது கடமை. ஆனால் இறுதித் தீர்வு அனைவரும் ஏற்றுக்கொள்வதாக அமைய வேண்டும். இந்த விடயம் தொடர்பிலான அதிகாரபூர்வ தீர்வு பிரதமரே எடுப்பார் என அரசியலமைப்புச்சபை பிரதிநிதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார். சமஷ்டி முறைமை தொடர்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்குகொண்டுள்ள பிரதிநிதிகளின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/6350

  2. கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக வெளியான தகவலை மறுக்கிறது கடற்படை கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி மறுத்துள்ளார். கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய அரசு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த போது, யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ விவகார அமைச்சின் நிதியுதவியுடன் தேவாலயம் ஒன்றே நிர்மாணிக்கப்படுகிறது என்றும், கடற்படை முகா…

    • 1 reply
    • 255 views
  3. ஜனாதிபதி இந்தியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவை சென்றடைந்துள்ளார். இன்று பிற்பகல் அளவில் ஜனாதிபதி மைத்திரி, புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி புதுடெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த போது இந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இந்திரஜித் சி;ங் வரவேற்றுள்ளார். ஜனாதிபதி சாஞ்சிக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்து மத வழிபாட்டு நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இதேவேளை, நாளைய தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விச…

  4. பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை -சொர்ணகுமார் சொரூபன் அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பொருத்து வீடுகளை நேரில் சென்று இன்று பார்வையிட…

  5.  'பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்தையே கூறினேன்' -எஸ்.ஜெகநாதன் “பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களையே ஊடக சந்திப்பின் போது நான் கூறினேன். மேற்கொண்டு எதுவும் எனக்குத் தெரியாது” என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) ஆஜராகினார். லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இ…

  6. இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ். மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாள 4,200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளில் வெங்காயம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் விவசாய வருமானத்தில் புகையிலை பெரும் பங்களிப்பை வழங்கிய…

    • 2 replies
    • 550 views
  7. நுவரெலியா மாநகர எல்லைக்குள் உள்ள அன்டபேங்க் கிராமத்தில் வீடொன்றின் முன்பகுதியில் தேன் கூடொன்று 5 மாதங்களாக காணப்படுகிறது. இந்த தேன் கூடு மூன்றரை அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இதுவரையிலும் எந்தவித இடையூறுகளும் தேனீக்களால் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. http://metronews.lk/article.php?category=lifestyle&news=16612#sthash.21dJhSw7.dpuf

    • 0 replies
    • 719 views
  8. வித்தியா கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்டதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால் விசாரணை தொடங்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட அடுத்தடுத்து 9 சந்த…

  9. பொதியால் விழிபிதுங்கிய பசில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை, மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்காக வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு குழுமியிருந்த ஒருவர் பொதியொன்றை வழங்கினார். அதனை வாங்கி, தான் இருக்கவேண்டிய ஆசனத்தில் ஒதுக்குபுறமாக வைத்த பசில், அதையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அது என்னவென்று தெரியவில்லை. எனினும், பொதியை வழங்கியவர், பசில் ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்றும், சிறுபண்டங்கள் அடங்கிய உணவுப் பொதியையே அவர் வழங்கியதாகவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/172100/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5…

  10. வன்னி யுத்தத்தின் இறுதி நாட்களில் சுமார் ஆயிரம் பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், கண்போன போக்கில் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடியே வந்தார்கள். இதனால் அங்கிருந்த பலர் கத றலுடன் செத்து மடித்தனர் என அந்த நேரத்தில் அந்த மருத்துவமனைக்குப் பொறுப்பாக இருந்த மருத்துவர் உயர்ச்சி தனது அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பிரித் தானிய நாடாளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், 16.05.2009 அன்று பின்னிரவு 3 மணியளவில் முள்ளி…

    • 0 replies
    • 389 views
  11.  நமது வாழ்க்கையே ஒரு நாடகம் -நடராசா கிருஸ்ணகுமார் “நமது வாழ்வே ஒரு நாடகம் தான். நாம் நாடகம் தான் ஆடிக்கொண்டிருக்கின்றோம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவை வெவ்வேறான நாடகங்கள்” என யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தெரிவித்தார். செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' என்ற நூல் புதன்கிழமை (11) மாலை 4 மணிக்கு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்…

  12. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு மேற்குப் பக்கமாகவுள்ள சூரிய சைவ உணவக கட்டடத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி, ஒன்றுகூடலுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்களையும் பணியாளர்கள் இல்லாதவிடத்து பணியாளரின் குடும்ப அங்கத்தவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் …

    • 0 replies
    • 215 views
  13. மட்டக்களப்பு மாநகர சபை, பொது மக்களிடமிருந்து வரிப்பணத்தை அறவிடுவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் தெரிவத்தார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகருக்கு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையலான அதிகாரிகள் வரவேற்பளித்தனர். மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் உயர் ஸதானிகர் கலந்து கொண்டார். இங்கு மாநகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மாநகர ஆணையாளர் விளக்கமளித்தார். இங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்றும் உறுதுணையாக இரு…

    • 1 reply
    • 433 views
  14. வெள்ளவத்தை தொடர் ரயில் விபத்து : தடுக்க விஷேட திட்டம் (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளவத்தை - மற்றும் தெஹிவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி பதிவாகும் ரயில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க வெள்ளவத்தை பொலிஸார் விஷேட திட்டங்களை அமுல் படுத்தத் தீர்மானித்துள்ளனர். மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித பனாமல்தெனிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதன்படி அவதானக் குறைவு காரணமாக…

  15. முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார் ஆகும். இலங்கை மற்றும் இந்திய இராணுவம் தமிழின அழிப்பின்போது வகை தொகையின்றி மாணவர்களைக் கொன்று குவித்தனர். இவற்றில் செஞ்சோலை, நாகர்கோவில் பாடசாலையில் இடம்பெற்ற குண்டுவீச்சு… இவ்வாறு பாடசாலைகள் என்று தெரிந்துமே திட்டமிட்டவகையில் குண்டுவீசி படுகொல…

  16. விசேட படையினர் வேண்டாம் -எஸ்.ஜெகநாதன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்தால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்…

  17. மஹிந்தவுக்கு அழைப்பில்லை பாராளுமன்ற மைதானத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடை­பெற­வுள்ள இரா­ணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே இந்த விழாவில் இம்­முறை அவர் கலந்­து­கொள்ள முடி­யாது என பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன தலை­மையில் அமை­தி­யான முறையில் இம்­முறை வெற்றி தினம் கொண்­டா­டப்­படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்­பிட்­டது. எதிர்­வரும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இரா­ணுவ வெற்­றி­தின நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளதா என நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வின­வி­ய­போதே பாது­காப்பு இரா­ஜாங்க…

  18. சம்­பந்தன் எந்த முகா­முக்கும் செல்­வ­தற்கு உரிமை உள்­ளது : அர­சாங்கம் திட்­ட­வட்டம் எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் சம்­பந்தன் வடக்கில் எந்தப் பகு­திக்கும் செல்­வ­தற்­கான அதி­காரம் அவ­ருக்கு உள்­ளது. வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் ஏனைய பகு­தி­க­ளுக்கும் அவர் சென்று பார்­வை­யிட முடியும். எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் அவ­ருக்­கான அந்­தஸ்தும், முன்­னு­ரி­மை­யும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் வடக்கில் எந்த செயற்­பா­டு­களும் அமை­ய­வில்லை எனவும் அர­சாங்கம் தெரி­வித்­தது. தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற…

  19. பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றம்­சாட்­ட ­மு­டி­யாது தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீ­டு­களால் வடக்கு மாகா­ண­சபை தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். தேசத்தை கட்­டி­யெ­ழ…

  20. ஜெனிவா தீர்மானத்தை ஸ்ரீலங்காவுடன் இணைந்து அமுல்படுத்துவோம் [ Friday,13 May 2016, 02:53:34 ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அனைத்து ஸ்ரீலங்கா மக்கள…

  21.  யாழ். நீதிமன்றில் கெஹகலிய மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல, யாழ். நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ். நகரில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் முன்னாள் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாகப் பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். காணாமல் போன இருவரையும், பாதுகாப்புப் படையினர் கைதுசெய்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டார் என்பதனால் அவரைச் சாட்…

  22. வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/6221

    • 22 replies
    • 1.9k views
  23. இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்தினால் பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுக்க நேரிடும்! 13 மே 2016 சமஷ்டி பிரிவினையல்ல!! விக்கியின் உரை:- இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்தினால் பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுக்க நேரிடும்! தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தி…

  24. 'தமிழர்கள் படுகொலைக்கு தி.மு.க-வே காரணம்' 13-05-2016 09:00 AM இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/172102/-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-#sthash.oWlDqA8O.dpuf

  25. பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது' பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒருவார கால நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார். முள்ளிவாய்க்காலில் பலியானவர்…

    • 9 replies
    • 811 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.