ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
வடக்கு, கிழக்கை மையப்படுத்தி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவந்துள்ளது. வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனை பெறுதல் ஆகிய தேவைகளின் நிமித்தம் சில தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே அவர் மேற்படி மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக முதலமைச்சரின் நெருங்கிய தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை வடமாகாண சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியதரப்பினருக்கு கையளிக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை எதி…
-
- 0 replies
- 474 views
-
-
உடனடியாக அமுலக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் காலியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவை பதவி மாற்றங்களில் முக்கிய அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் பதவி இழக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131640/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 358 views
-
-
சில தமிழ் சிங்கள தரப்புக்கள் நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றன – சுவாமிநாதன் 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு சில தமிழ் சிங்கள தரப்புக்கள் நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக புனர்வாழ்வு, புனமைப்பு ,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவத்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இன்று கொழும்பில் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கல்விச் சுற்றுலா ஒன்றுக்காக கொழும்பு வந்தவர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன சமூக மக்களுடன் சகோர…
-
- 3 replies
- 295 views
-
-
Views - 26 'வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும்;; காணிகள் அபகரிக்கப்படுகின்றன' என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மன்னார் மாவட்டத்தில் விளையும் விளாம்பழங்கள் தனித்துவமான சுவையுடையவை. இதனால், மன்னாரில் வெற்றுக்காணிகளில் பெரிய அளவி…
-
- 1 reply
- 382 views
-
-
முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்: த.தே.கூ -சொர்ணகுமார் சொரூபன் 'அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பொன்றை முடித்த பின்னர் வெளியில் வந்த சுமந்திரன் எம்.பி, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாங்கள் அரசாங்கத்தைச் சந்தித்தமைய…
-
- 4 replies
- 702 views
-
-
சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? : ஆதரவளிக்க முடியாத நிலைப்பாட்டில் கட்சிகள் (ஆர்.யசி) எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எந்தவித முன்னறிவித்தலும் இல்லை. சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஆதரிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் தெரிவித்தன. பாராளுமன்றத்தில் தனிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத நபர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கட்சிகள் தெரிவித்தன. எதிர்க் கட்சி…
-
- 3 replies
- 465 views
-
-
தினேஸ், டலஸ், கம்பன்பில ஆகியோருக்கு நீதிமன்றம் தடை பாராளுமன்ற உறுப்பினர்ளாக தினேஸ் குனவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்பன்பில் ஆகியோர் எதிர்வரும் மேதினம் முதலாம் திகதியன்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள ஷாலிகா மைதானத்துக்குள் நுழைய முடியாது என கொழும்பு மேலதிக நீதிவான் இடைக்கால தடை விதித்துள்ளார். மேலும் மே முதலாம் திகதி பொது எதிரணி அல்லது இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற் சங்கத்தின் அங்கத்தவர்கள் பிரவேசிப்பதற்கும் கொழும்பு மேலதிக நீதிவான் இடைக்கால தடை யை விதித்துள்ளார். http://www.virakesari.lk/article/5771
-
- 0 replies
- 342 views
-
-
ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 11 ஆவது நினைவு தினம் இன்று: யாழ், அக்கரைப்பற்றில் நினைவு தின நிகழ்வுகள் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கொல்லப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. தர்மரத்தினம் சிவராம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். மறுநாளான ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக்கு கட்டடத்துக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த நினைவு தினம் நாளை சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவிய…
-
- 0 replies
- 366 views
-
-
அதிக வெப்பத்தால் பாடசாலைகளுக்கு பூட்டு மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் பூட்டப்பட வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.எம்.என்.டபிள்யூ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் காரணமாக, பாடசாலை மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இன்று பிற்பகல் இரண்டு மணி வரையில், அநுராதபுரத்தில் 36 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், பொலன்னறு…
-
- 0 replies
- 411 views
-
-
பொறுமை இழந்துவிட்டோம்: மனோ 'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நாம் பொறுமை இழந்து விட்டோம். தோட்ட நிறுவனங்களுக்கு தேவையான கால அவகாசங்களை வழங்கி விட்டோம். ஆனால், தோட்ட முகாமையாளர்கள் உருப்படியான மாற்று யோசனைகளை முன்வைக்கத் தவறிவிட்டார்கள். ஆகவே, தோட்டத் தொழிலாளர்களின் நிரந்தரமான சம்பள பிரச்சினை தொடர்பாகவும் இப்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வான 2500 ரூபாய் தொடர்பாகவும், எமது கடுமையான நிலைப்பாடு மேதின தீர்மானமாக மேதின மேடையில் அறிவிக்கப்படும்' என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் …
-
- 0 replies
- 455 views
-
-
ஐ.தே.க.வுடன் பசில் கூட்டணி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அயல்நாடொன்றில் உதவியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் சதி முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஜயசேகர, 'மஹிந்த ராஜபக்ஷ மீது நாம் அன்பு கொண்டுள்ளோம். அதனாலேயே, பசில் ராஜபக்ஷவின் சதித் திட்டத்துக்குள் மூழ்கி ஏமாற்றமடைய வேண்டாம் என்று மஹிந்தவருக்கு கூறுகின்றோம். அவர், சு.க.வின் காலி மேதினக் கூட்டத்துக்க…
-
- 0 replies
- 313 views
-
-
கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு -சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி – பரந்தன் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியிலிருந்தே இந்த வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கமைய எல்.எம்.ஜே ரவைகள், மகசின் தோட்டாக்கள், துப்பாக்கியின் பாகங்கள், பழைய ஷெல் ஆகியவற்றை இராணுவம் மீட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அறியமுடிகிறது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அற…
-
- 0 replies
- 351 views
-
-
ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கு நீதிகோரி நாளை ஆர்ப்பாட்டம் -ஜே.ஏ.ஜோர்ஜ் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் கொல்லப்பட்டு 11 வருடங்களாகும் நிலையில், அவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து, ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிக்காக, நியாயத்துக்காக போராடவேண்டியதற்கு பதிலாக நன்கொடை, நற்சான்றிதழ் வழங்கப்பட்டுவரும், பெறப்படும் இந்த காலப்பகுதியில் கொலைகளுக்குப் பொறுப்பானவர்களை கைதுசெய்ய, அழுத்தம் கொடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்…
-
- 1 reply
- 532 views
-
-
அண்மையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்நோக்கில் ஒரு விசேட சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி எதிர்வரும் ஒருவருட காலத்தினுள் “பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் காணி சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது” என அச்சட்டமூலம் கூறுகின்றது. இந்த சட்டமானது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். வழமைபோலவே தாங்களும் இணைந்துதான் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அச்சட்டம் கொண்டுவந்ததாக கூட்டமைப்பு சொல்லும் என்பது எதிர்பார்க்ககூடியதே. அதனையே ஒரு ஊடகத்திற்கு பகிரங்கம…
-
- 1 reply
- 587 views
-
-
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவானது இந்தியாவிடம் கைய ளிக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதர் ஆர்.நடராஜன் மூலமாக இந்திய மத்திய அரசுக்கு கையளிக்கப்பட்டுள்ள இத்தீர்வுத்திட்ட முன்மொழிவானது ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் வழங்கப்படும் என தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைய வேண்டுமாயின் அதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட முன்மொழிவானது சர்வதேச நாடுகள் அனைத்துக்கும் தெரியப்படுத்துவது அவசியம் என்பது ஏற்புடையதாகும். தமிழ் மக்கள் தங்களுக்கான ஆகக்குறைந்த தீர்வாக எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை…
-
- 1 reply
- 735 views
-
-
வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து மாகாண சபைக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து அப்பிரதேசத்தில் விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டு அங்கிருந்துதான் மக்களுக்குத் தேவையான விதைகள் மற்றும் பழமரக்கன்றுகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு நாடுபூராகவும் விநியோகிக்கப்பட்டுவருகின்றது. இதைவிட இங்கு விவசாயம் சம்பந்தமான ஆர…
-
- 3 replies
- 607 views
-
-
நீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வட மாகாணத்துக்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை குறுகிய மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பணித்துள்ளார். எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள வட பகுதிக்கான நீர் விநியோகம் மற்றும் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள முக்கிய கூட்டத்தை முன்னிட்டு, நகர திட்டமிடல் மற்றும்…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழீழ வைப்பகத்தின் தங்க கிணற்றை தேடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதி யில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுத்த தங்க அகழ்வு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அகழ்வு பணிகள் நடைபெறும் இடத்துக்கு மாவட்ட நீதிபதி சமுகமளித்திருந்ததுடன் இலங்கை மின்சார சபையினர் சிறப்பு மின்னிணைப்பு செய்திருந்தனர். இந்நிலையில் அகழ்வுப்பணிக்காக பாரிய அளவிலான பெக்கோ இயந்திரம் கிடைக்கவில்லையென புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் தெரிவித்தனர் இதனையடுத்து அகழ்வுப…
-
- 0 replies
- 600 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நாட்களை கடத்தும் நோக்கிலும் மரணச்சான்றிதழை வழங்கி விடுவதிலுமே அதீத அக்கறை காண்பிப்பதாக கவலையுடன் தெரிவித்த காணாமல் போனோரது உறவினர்கள், நட்டஈட்டையும் மரணச் சான்றிதழையும் மட்டுமா இந்த ஆணைக்குழுவினரால் கண்டறிந்து தரமுடியும் எனவும் விசனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். வடக்கு கிழக்கில் காணாமல் போனவர் கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு வின் 16ஆவது அமர்வு 4 நாட்களாக கிளி நொச்சி மாவட்டத்தில் நடைபெற்று நேற்றைய தினத்துடன் நிறைவடைந்திருந்தது. இந்த நிலையில் இதுவரை காலமும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ள ப்பட்டு வந்த விசாரணைகளில்…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை பகல் நேரங்களில் மட்டும் காவல் துறை இந்த பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் அந்த பகுதியில் தமிழ் விவசாயிகள் நெல் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட தற்போது ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். யுத்தம் காரணமாக 2006 ம்…
-
- 0 replies
- 399 views
-
-
வீரதுங்கவை ராஜபக்ஷவே மறைத்து வைத்துள்ளார் : ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் வலைவீசி தேடும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே மறைத்து வைத்துள்ளார். அவரது தாய்லாந்து விஜயத்தின் போது குறித்த விட யம் அம்பலமாகியுள்ளது. எனவே இது தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷவிடமும் ஜீ.எல்.பீரிஸிடமும் உடனடியாக வாக்குமூலம் பெற்று உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். அத்துடன் இலாபமீட்டும் நிறுவனமான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை தனது சுய …
-
- 0 replies
- 419 views
-
-
மஹிந்த, கோத்தா, பசில் ஆகியோருக்கு கடூழியச் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும்.! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றிருக்காது விட்டிருந்தால் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் இன்று கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் சுயரூபம் வெளிவந்திருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். மஹிந்தவுடன் இருந்தவர்கள் அவரை கைவிட்டபோதும் ஜனாதிபதியும் நாமுமே அவருடன் இருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட இறுதி முன்மொழிபு இந்திய மத்திய அரசிடம் கையளிக்கும் பொருட்டு நேற்றைய தினம் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜனிடம் கையளிக்கப்பட்டது. தீர்வுத்திட்ட முன்மொழிபை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், இந்தியத் துணைத் தூதுவர் ஆர்.நடராஜனிடம் நேரில் கையளித்தார். மருதடி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரித்த நிபுணர்குழுவில் இடம்பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த அலன் சத்தியதாஸ் ஆகியோர் உடனி…
-
- 1 reply
- 420 views
-
-
வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது:- 29 ஏப்ரல் 2016 வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு நேற்றைய தினம் அரசியலமைப்பு சபையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சி. துவராசா ஆகியோர் இணைந்து வரைபை கையளித்தனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131610/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 209 views
-
-
இலங்கையுடனான உறவுகளுக்கு ஒபாமா முக்கியத்துவம் அளிக்கின்றார் – சமந்தா பவர்: 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:- இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜ…
-
- 0 replies
- 365 views
-