Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய கட்சி தற்போதைக்கு அமைக்கப்படாது புதிய அரசியல் கட்சி தற்போதைக்கு அமைக்கப்படாது என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனித்தனியாக இயங்கி வரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவான ஓர் எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதே எதிர்க்கட்சிகளின் தலைவர்களது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியான ஓர் எதிர்க்கட்சியை அமைப்பதனை விடவும், ஒரே பாதையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பயணிக்க செய்வதே நோக்கமாகும் எனவும்,புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு முன்னதாக வேறும் பல்வேறு கருமங்களை ஆற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு,பொதுவான எதிர்க்கட்சியொன்றை அமைக்…

  2. யோஷிதவுக்குப் பிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி ஏ.ஏ. ஹேயந்துடுவ அனுமதித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168089/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3-#sthash.W9wWkgPe.dpuf நிஷாந்த தவிர்த்து யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு பிணை கிடைத்தது! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்க…

    • 1 reply
    • 280 views
  3. சிறுமியை தாயாக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சிறுமிக்கும், குழந்தைக்கும் நீதியா? வயோதிபருக்கு கருணையா? இன்று தீர்ப்பு! பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ நேரம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வயது 14 வருடம் 4 மாதம். எதிரியாகிய முதியவருக்கு 63 வயது. இந்த வன்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரண…

  4. சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - வெரோனிகா சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண் விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பலங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். அழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ் தோட்டத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதிக்கு பணிபெண்…

    • 0 replies
    • 552 views
  5. மின் தடைக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இது பற்றி பதிவு செய்துள்ளார். இலங்கை வரலாற்றில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதில்லை. கடந்த அரசாங்கத்தை குறைகூறி இந்தப் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியாது.அரசாங்கத்தின் திறமையற்ற மற்றும் மோசமான நிர்வாகத்தினால் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படுவதாக நாமல் ராஜபக்ச மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். http://onlineuthayan.com/new…

  6. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார். இந்த சுவாரசிய சம்பவம் இன்று சனிக்கிழமை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு நிகழ்வின் மேடையில் இடம்பெற்றது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை மக்களிடம் 26 ஆண்டுகளின் பின்னர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் மக்களுக்கு சொந்தமான 750 ஏக்கர் காணிகளும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…

  7. போர் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தார் பிரபாகரன்? போர் விதிகளை மீறி கொல்லப்பட்டாரா? விசாரணைகளுக்கு தயாராகிறது அரசாங்கம்! போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? அவர் உயிருடன் பிடிபட்டாரா? என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் இடம்பெற்றவை எனக்கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன. இது குறித்து அரசாங்க…

  8. வடமாகாணத் தொண்டராசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீடும் முறைகேடுகளும் இடம்பெறுகின்றதா? 14 மார்ச் 2016 சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவார்களா? பாதிக்கப்பட்டவர்கள் தமது பெயர் விபரங்களை ஆதாரத்துடன் radiokuru@yahoo.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்:- வடமாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக சம்பளம் இன்றி தொண்டராசிரியராக சேவையாற்றியவர்களுக்கு அவர்களின் நிரந்தர நியமனத்துக்கான போராட்டங்களின் பயனாக நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் குழப்பங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. குறித்த தொண்டர் ஆசிரியர் நியமணத்தில், பல முறைகேடுகள் இருப்பதாக கூறி, தொண்டராசிரியர் நியமனப…

  9. எவரின் விருப்பு வெறுப்பிற்காகவும் நான் அரசியல் செய்யப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஸ எவரது விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதற்காகவும் தாம் அரசியல் செய்யப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளுக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தாம் அரசியலில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக தாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் தம்மை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தம்மைச் சுற்றி இணைந்து கொள்ளும் தரப்பினர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாம் கைவிடப் போ…

  10. உபமின் நிலையங்கள் அனைத்திற்கும் இராணுவப் பாதுகாப்பு இலங்கை மின்சார சபையின் அனைத்து உபமின் நிலையங்களிலும் இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் நேற்று மூன்றாவது முறையாகவும் இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. http://onlineuthayan.com/news/10732

  11. தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் மரணம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் கொல்லப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்காவின் ஜொஹனர்ஸ் பேர்க்கில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று மோதியதில் இந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வாகனத்தைச் செலுத்திய 24 வயதான சாரதியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்திய நபர் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து கொண்டிருந்த இலங்கைத் தம்பதியினர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129984/language/ta-IN/article.aspx

  12. அஸ்கிரிய மகாநாயக்கர் இலங்கை சிக்கல்களுக்கு தீர்வுகாண முயன்றவர்: மைத்திரி இலங்கையின் செல்வாக்கு மிக்க பௌத்த மதப் பீடங்களில் ஒன்றான கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரரின் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது, ஜனாதிபதி இவ்வாறு கூறினார். குருநாகலிலுள்ள ஒரு விகாரையில் வைத்து கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரை கடந்த வாரம் சந்தித்து பேசியபோது, நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அவர் தன்னுடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதனிடையே, கலகம ஸ்ரீ அத்ததஸ்…

  13. இலங்கையின் திடீர் மின்சாரத் தடை நாசகரச் செயல் என சந்தேகம் இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது ஒரு நாசகாரச் செயற்படாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இரண்டு வாரங்களுக்குள், இரண்டு தடவை நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் பிபிசி கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் நாடு முழுவதிலும் இப்படியானதொரு மின் தடை ஏற்பட்டதில்லை என்று தெரிவித்த அமைச்சர், இது வழமைக்கு மாறான ஒரு சம்பவம் என்றும் கூறினார். இதனால் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு அப்பால் நாசகார செயல்…

  14. 17ம் திகதி கூட்டத்தில் பங்கேற்றால் சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்? எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்றால், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இது குறித்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் கூட்டு எதிர்க்கட்சியினால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்ரீலங்…

  15. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தினால் பாரிய விளைவுகளை ராஜபக்சக்கள் சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மஹிந்த ஆட்சியில் தான் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். “உண்மையாக கூறினால் நான் கட்சியை விட்டு செல்வதற்கு பாதையை அமைத்தது ராஜபக்சக்கள் தான், எனினும் நான் அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மஹிந்த புதிய கட்சியை உருவாக்கி சுதந்திர கட்சியை பிளவுபடுத்…

  16. இலங்கை மின்­சார சபையின் தலை­வ­ர் ராஜ­ினாமா இலங்கை மின்­சார சபையின் தலை­வ­ரான அநுர விஜ­யபால தனது பத­வியை ராஜ­ினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடு முழு­வதும் இன்று திடீ­ரென ஏற்­பட்­டி­ருந்த மின்­சார தடை பல மணித்தியாலங்களாக நீடித்துள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இதேவேளை இத்­திடீர் மின்­தடைக்­கான காரணம் இன்று சரி­யாக கண்­ட­றி­யப்­ப­ட வில்லை. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=15488#sthash.f3Yt5svV.dpuf

  17. இலங்கை நாடாளுமன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனர்கள்! அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சீனப் பிரதிநிதிகள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த நிலையில் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த சீனப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது, வெறுமனே 20 உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் பிரசன்னமாகியிருந்த நிலையில் வெற்றிடமாகவிருந்த நாடாளுமன்றத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமது நாட்டில் விவாதம் ஒன்று இடம்பெறும் போது அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிப்பதாக தெரிவித்த அவர்கள்,உங்களது நாட்டில் நாடாளுமன்ற விவாதங்களுக்கு வருவது இதுபோன்ற சிறு தொகையான மக்கள் பிரதிநிதிகளா? என …

  18. அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள் பார­தூ­ர­மா­னவை என்றும், அதனை போர்க்குற்ற சாட்­சி­ய­மாக முன்­வைக்­க­லா­மென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார்.வெள்­ளைக்­கொடி விவ­காரம், யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் பிர­பா­கரன் உயி­ரு­ட­னி­ருந்தார் என்ற சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் குறித்தும் அவர் தனது உரையில் தெரி­வித்­துள்ளார். இவைதான் யுத்தக் குற்­றங்­க­ளாகும். எனவே, அவ­ரது உரையை யுத்தக் குற்ற விசா­ர­ணையின் போது ஒரு சாட்­சி­ய­மா­கவும் கொள்ள முடியும். இறுதியுத்­தத்தின் போதும் அதன் பின்­னரும் வன்னிப் பிர­தே­சத்­தி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான த…

  19. கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் 2017 செப்டம்பரில் நிறைவு பெறும் என இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் எஸ் சிறிசேன தெரிவித்துள்ளார். தாமரைக் கோபுரமே இலங்கையிலும் தென்னாசியாவிலும் உயரமான கட்டடமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நிர்மாணப்பணிகளில் வாகனத்தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதிகள் அமைப்புக்காக மேலும் நிதி தேவைப்படுகிறது. சீன அரசாங்கத்தினால் இந்தப் பணிகளுக்காக நிதியை ஒதுக்க முடியாது. உள்ளூர் வளங்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 350 மீற்றர் உயரத்தைக்கொண்ட இந்தக் கோபுரத்தை நிர்மாணிக்க 104.3 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது…

  20. போரின் இரா­ணு­வத்­தி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பின்னர் காணாமல்போன தங்­கத்தை பயன்­ப­டுத்தி துபாயில் மேற்கொள்­ளப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் பாரி­ய­ள­வி­லான முத­லீடு தொடர்­பாக விசாரணை நடத்­து­வ­தற்கு பாரிய நிதி மோசடி குற்றப்பிரி­வினர் இவ்­வாரம் துபாய் செல்லவுள்ளனர். சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்ள­தாக நிதி மோசடி குற்றப்­ பி­ரி­வினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=153315&category=TamilNews&language=tamil

  21. அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸி தேரரின் இறுதிக்கிரியைகள், இன்று கண்டியிலுள்ள பொலிஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸி தேரரின் உடல், அஸ்கிரியா விஹாரையின் உபாலி மண்டபத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேரரின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு, கண்டியில் விசேட போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தினத்தை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும். விஹாரையிலுள்ள குளியலறையில் விழுந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந…

  22. இலங்கை முழுவதும் திடீர் மின்தடை இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இரு முறை இவ்வாறு இலங்கை முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129980/language/ta-IN/article.aspx

  23. 28 இந்திய மீனவர்கள் கைது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை இன்று கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர், பத்தாம் திகதி நான்குபேர் என முன்னதாக 41 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர். இதன்படி இன்று கைதானவர்களுடன் சேர்த்து மொத்தம் 69…

    • 1 reply
    • 347 views
  24. யாழ்.பொதுநூலகத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை யாழ்.பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார். யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இந்தியன் கோர்னர் என்ற புத்தக நிலையம் ஒன்று …

  25. சூடு வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி; தந்தையும் வளர்ப்புத் தாயும் கைது மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ஆம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத்தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி ஆறாம் குறிச்சி பதுறியா பகுதியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும்,சிறுமி தொடர்ந்தும் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்று கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.