ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் , தமது விடுதலையை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்குமுகமாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். யாழ்.பல்கலைகழக முன்றலில் வெள்ளிக்கிழமை காலை 10 தொடக்கம் மாலை 5 மணி வரையில் அடையாள உண்ணா விரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129905/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 392 views
-
-
தம்மாலோக தேரரை பார்வையிடச் சென்ற மஹிந்த யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அலன்மெதினியாராம விஹாராதிபதி தம்மாலோக தேரரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பார்வையிடச் சென்றுள்ளார். மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாலோக தேரரை மஹிந்த பார்வையிடச் சென்றுள்ளார். அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகவும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் சமூகத்தை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் பௌத்த பிக்குகள், விவசாயிகள், தொழிலாளிகள் என அனைத்து தரப்பினரையும் அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தம்மா…
-
- 0 replies
- 428 views
-
-
அடுத்துவரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என்று ஐ.நாள் மனித உரிமை அணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ நிலையான சமாதானம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் அதன் பாதையில் பயணித்துச் செல்கிறது. நல்லிணக்கம் நோக்கிய நகர்விற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. உதாரணமாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனை குறிப்பிட முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பிரச்சினை போன்றன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் ம…
-
- 0 replies
- 393 views
-
-
உலகின் மிகப் பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான எயர்பஸ் A380 என்ற விமானம் டுபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இவ்விமானத்தில் 502 பயணிகளும் 30 ஊழியர்களும் பயணித்துள்ளனர். இதில் பயணித்த 72 வயது நிரம்பிய ஆஸ்திரேலியா பெண்ணொருவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . http://www.vira…
-
- 0 replies
- 462 views
-
-
சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர்குழுவின் Sri Lanka Monitoring Accountability Panel (MAP) முதல் மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றது. இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களில் பங்காற்றிய ஆறு நிபுணர்களை கொண்டதாக இக்கண்காணிப்பு குழு இயங்குகின்றது. சிறிலங்கா தொடர்பில் கடந்தாண்டு(2016) ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானித்தினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இக்கண்காணிப்புக் குழு சுந்திரமான ஓர் செயற்பாட்டு நிறுவனமாக இயங்கி வருகின்றது. ஐ.நா மனித உரிமைச்…
-
- 0 replies
- 300 views
-
-
ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் -3 தாக்குதல் அணியில் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் எதிரியான விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த புன்குயில் எனப்படும் பெர்னாண்டோ எமில்தாஸ் (36) என்பவரை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று விடுதலை செய்தார். இந்த வழக்கில் ஒரேயொரு சாட்சியமாக முன்வைக்கப்பட்டிருந்து எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை வழக்குத் தொடுநரினால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி எதிரியை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். நாகமணி தெய்வேந்திரன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் நீதியரசர்களான சி.வி…
-
- 0 replies
- 307 views
-
-
எனக்கு வலிக்கின்றது: விமல் அழகன் கனகராஜ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேரர்களில் முக்கியமானவருமான உடுவே தம்மாலோக்க தேரர் தொடர்பில் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, தேரர்களை கைது செய்வது எனக்கு வலிக்கின்றது என்றார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஒழுக்கப் பிரச்சினையை எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்துள்ளதாக அறிகின்றேன். வில்பத்து சரணாலயத்தை அழித்த அமைச்சர் சுதந்திரமாகச் சுற்றித்திரிகின்றார். எனினும், விஹாரையில் யானைக்குட்டியை வைத்திருந்தமைக்காக தேரரைக் கைது செய்துள்ளீர்கள். இ…
-
- 2 replies
- 529 views
-
-
மாற்றுக் காணி கிடைத்தவுடன் இராணுவ முகாம் அகற்றப்படும் இராணுவத்தினருக்கு மாற்றுக்காணி கிடைத்தவுடன் மன்னார் கூட்டுறவு காணியில் உள்ள இராணுவ முகாம் அகற்றப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு முதல் மன்னார் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். தற்போது வரையில் அக்காணியை மீளக்கையளிக்காமைக்கான காரணம் என்ன?என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் , குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள். அவர்களுக்கான மாற்றுக்காணிகள் கிடை…
-
- 0 replies
- 393 views
-
-
விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இலங்கைத் தமிழரான இ.மயூரநாதன். உலகின் ஒவ்வொரு மொழியிலும் அடிப்படைச் செய்திகள் முதல் அரிய தகவல்கள் வரை அனைத்தையும் திரட்டி விக்கிப்பீடியாவில் பதியும் வசதி செய்து தரப்பட்ட போது, தமிழ் மொழிக்காக இணையத்தில் குதித்தவர் மயூரநாதன். இலங்கைத் தமிழரான இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? ஆங்கில மொழி விக்கிப்பீடியா, 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகின் பல மொழிகளிலும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. ஆனால், தமிழில் அதற்கான ஆரம்ப முயற்சிகூட அப்போது இல்லை…
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்! இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வன்முறை மற்றும் பெண்களின் உளநிலை ஆரோக்கியம் என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://onlineuthayan.com/news/10495
-
- 0 replies
- 240 views
-
-
தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாலே போர் ஏற்பட்டது 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழ்த் தரப்பினர் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாகவே தனிநாட்டுக்கான வட்டுக்கோட்டை பிரகடனமும், போரும் ஏற்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான மூன்றாம் வாசிப்புமீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பல்லின மற்றும் பல மதத்தினர் வாழும் நாட்டுக்கு இவை உகந்…
-
- 0 replies
- 450 views
-
-
பிரபாகரன் எப்போது இறந்தார்? சிவாஜிலிங்கம் கேள்வி! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று நடைபெற்றது. தகவல் அறியும் சட்டமூலத்துக்கு வடமாகாண சபை பரிந்துரை வழங்கும் நடவடிக்கை இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இதனை நான் கேட்டால், 'அது தேசிய பாதுகாப்பு விடய…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட் போட்டிகளுக்கென்று தனியான கௌரவம் உண்டு! கிரிக்கெட் போட்டிகள் அதற்குரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும். போட்டிகளில் வன்முறைகள் இடம்பெற அனுமதிக்க முடியாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110 ஆவது வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியபோது, அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் கொலை நடந்துள்ளது. இவ்வாறான சம்பவங்களை கிரிக்கெட் போட்டிகளில் ஏற்றுக்கொள்ள முடி…
-
- 0 replies
- 235 views
-
-
இலங்கையில் கழுகு ஒன்றை வதைத்துக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்கள் நேற்று காலிப்பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காட்டுப் பிரதேசமொன்றில் பிடிபட்ட கழுகை அவர்கள் துண்டுகளாக வெட்டி, வதைத்து கொன்றமைக்காக வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியான உடன் சமூக வலைத்தளங்களில் அது தீவிரமாகப் பரவி, அதில் தொடர்புடைய இளைஞர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று பலரும் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள். இலங்கையில் நிலவும் கலாசாரப் பழக்க வழக்கங்களின் பிரகாரம் உயிரினம் ஒன்றைக் கொன்று புசிப்பது ஒன்றும் பாரிய குற்றச் செயலாக கருதப்படுவதில்லை. ஆனால்…
-
- 0 replies
- 214 views
-
-
வடக்கில் மீட்கப்பட்ட மக்களின் தங்கத்தில் 40 கிலோகிராம் தங்கத்துக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, மீட்கப்பட்ட தங்கத்தை ஆறு வருடங்களாகத் தடுத்து வைத்திருப்பது நல்லதல்ல என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், அந்த வங்கிகளில் மூழ்கிப் போயிருந்த நகைகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் என்று 150 கிலோகிராம் நிறையுடைய தங்கம் மீட்கப்பட்டதாக இராணுவம் அறிக்கையிட்டுள்ளது. அந்தத் தங்கத்தில், வளையல்கள், மாலைகள் மற்றும் மோதிரங்கள், ஏன் தா…
-
- 0 replies
- 306 views
-
-
எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகிய நோயாளர்களுக்காக, இலங்கை மாணவன் கண்டுபிடித்த மருந்தினை மேம்படுத்துவதற்குரிய போதிய வசதிகள் இலங்கையில் இல்லை என, கொழும்பு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவனின் கண்டுபிடிப்புத் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில், அம்மாணவனுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக மேற்படி வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டாக்டர் சுமித் ஆனந்த கூறியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக குறித்த மாணவன், நனோ தொழில்நுட்பத்தையே பயன்படுத்தவுள்ளார் என்றும் அதற்குரிய வசதிகள் இலங்கை வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் காணப்படவில்லை என்றும் டாக்டர் குறிப்பிட்டார். எயிட்ஸ் நோய்க்கான ம…
-
- 0 replies
- 287 views
-
-
இந்தியாவுடனான பொருளாதார தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) கைச்சாத்திடுவதற்கு முன்னர் சகல தரப்பினருடனும் பேச்சு நடத்த இருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். உத்தேச ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இரண்டு மூன்று வாரங்களில் இந்திய தரப்பு பதில் கிடைத்த பின்னர் மீண்டும் அது குறித்து ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா இலங்கைக்கிடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்வதற்கான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையானால் அதனை சபையில் முன்வைக்க முடியும். மாதிரி ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு அது எதிர்க்கட்சியிலுள்ள கட்சி தலைவர்களுக்கு வழங்கப்…
-
- 0 replies
- 261 views
-
-
காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உரையாற்றும்போது காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மை நிலைமை கண்டறியப்பட வேண்டுமென குறிப்பிட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறுக்கீடு செய்து நீங்கள் காரணமாகவிருக்கும் சம்பவங்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள். ஆணைக்குழுக்களின் முன்னிலையில் உங்கள் மீது குற…
-
- 1 reply
- 576 views
-
-
சட்டமும், ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதே உண்மை! சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகாரப் பிரிவினால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண…
-
- 4 replies
- 351 views
-
-
நீரில் மூழ்கிய ஆலயம் வெளிப்பட்டது! மலையகமெங்கும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேக்கங்களில் போதியளவு நீரின்றி எங்கும் காணப்படுகின்றது. மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள் நீர் வற்றி வருவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென பலரும் அஞ்சுகின்றனர். மலையகத்தில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத் தின் நீர்மட்டம் 20 அடி வரை குறைவடைந்துள்ளது. இது இவ்வாறிருக்க மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கியிருந்த (பழைய நகரில்) ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம் தற்போது மீண்டும் வெளித் தெரிகிறது. நீர் நிறைகின்ற காலத்தில் ஆ…
-
- 4 replies
- 559 views
-
-
பசில் ராஜபக்ஸ வெளிநாடு செல்லத் தடை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, திவிநெகும திட்டத்தின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது. …
-
- 0 replies
- 403 views
-
-
யாழ்ப்பாணம் வருகின்றார் சட்டம், ஒழுங்கு அமைச்சர்! நாளை யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து நேரில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க, பொலிஸ்மா அதிபருடன் நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் வெள்ளிக்கிழமை பொலிஸ்மா அதிபருடன் யாழ்ப்பாணம் வரவுள்ளேன் என்றார். http://onlineuthayan.com/news/10435
-
- 0 replies
- 315 views
-
-
குற்றச்செயல்களைத் தடுக்க வடக்கில் பாதுகாப்பு தீவிரம்! வடக்கில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஸ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித்தடைகள், உடனடி சுற்றி வளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல்கள் முத…
-
- 0 replies
- 222 views
-
-
'தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்' ரொமேஸ் மதுசங்க சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக, நேற்றைய (09) தினம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது' என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அத்தோடு, 'கடந்த 15 நாட்களாக, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய பின்னர், சட்டமா அதிபர் ஊடாக அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றும் அவர் கூறினார். ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், கொழும்பு மெகசின் சிறைச்ச…
-
- 0 replies
- 398 views
-
-
'தங்கத்தால் தடுமாறிய செல்வம்' அழகன் கனகராஜ் தங்கம் என்றால் தங்கம் தான், அதிலென்ன, அந்ததத் தங்கம் அதுவும் வடக்கு தமிழர்களின் தங்கம், அவைக்கு நேற்று புதன்கிழமை கேள்வியாய் வந்து, அவையையே ஒருகணம் அதிரவைத்துவிட்டது எனலாம். நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தின் பின்னர் பிரதமரிடம்; கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், தேயிலை மற்றும் இறப்பரின் நிர்ணய விலைகள், உர மானியம் தொடர்பிலும் கேட்கப்பட்டிருந்தன. தெற்கு மக்களுக்குக் காணி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வடக்கு மக்களுக்குத் தங்கமும் …
-
- 0 replies
- 460 views
-