Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாகிஸ்தானிய ஜனாதிபதியும் வந்தடைந்தார் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்மூன் ஹுஸைன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். தனது குறுகிய கால விஜயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/167709/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.yR3zOGiu.dpuf

  2. 8 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது! யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில், 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த, மன்னாரைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்று இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்தனர். …

  3. அரசியல் கைதிகள் விடுதலை குறித்து சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க உலகளாவிய ரீதியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பு தீர்மானித்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் அமைப்புச் செயலாளர் நடராஜா ஜனகன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள இடதுசாரி அமைப்புக்களின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தொடக்கம் மார்ச் 3ஆம் திகதிவரை நெதர்லாந்தில் இடம்பெற்றது. இதில் 28 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க…

  4. மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்! வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும் பணி மக்களின் கடும் எதிர்ப்பால் இன்றும் இடைநிறுத்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தின் போது குறித்த நிலத்தினை சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் குறித்த காணியினை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்தது. ஆனால் இம்முறையும் மக்களின் கடும் எதிர்ப…

  5. மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்! மூத்த ஊடகவியலாளரான என்.நவரட்ணராஜா (வயது 62) இன்று அதிகாலை 2.45 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார். முன்னாள் கிராம நிர்வாக அலுவரான இவர் சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டவராவார். யாழ்ப்பாணத்தில் போர் நெருக்கடி மிகுந்த காலத்திலும் பணியாற்றியவர். இவர் செய்தியாளராகவும் நீண்டகாலம் செயற்பட்டவர். நான்கு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று கடுமையாக சுகயீனமுற்றதால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மேலும் இந்நிலையிலேயே …

  6. முல்லையில் இராணுவம் சிறப்புப் போர்ப் பயிற்சி! இரகசியமாக நடத்துகிறது! முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினருக்கு சிறப்பு காலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன்கட் டுப் பகுதிகளில் உள்ள பற்றாலியன் பயிற்சிப் பாடசாலைகளில் இந்த சிறப்புப் போர்ப்பயிற்சி கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு படைகளின் தலைமைய கத்தின் கீழ் உள்ள டிவிசன்கள், பிரிகேட்கள், முன்னரங்க பாதுகாப்பு பிரதேசம் மற்றும் பற்றாலியன்களில் பணியாற்றும் படையினருக்கே இந்த சிறப்பு போர்ப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 68ஆவது டிவிசன் படையணியின் கீழ் உ…

  7. ஸ்ரீலங்காவில் தமது உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் ஆராயப்படும் - ஐ.நா [ Tuesday,8 March 2016, 04:54:23 ] ஸ்ரீலங்காவில் பணியாற்றிய தமது உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இனசிட்டி பிரஸ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து உறுப்பினர்களினதும் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையின் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் ஸ்ரீலங்காவில் பணியாற்றிய போது வெள்ளை வானில…

    • 1 reply
    • 437 views
  8. இந்திய அம்புலன்ஸ் தெற்கில் ஓட இடமளியோம்! இலங்கையில் அறிமுகம் செய்யவுள்ள இந்திய அம்புலன்ஸ் சேவை, சுகாதாரத் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கை எனவும், தென் மாகாணம் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாது எனவும் தென் மாகாண சுகாதார பிரிவின் அம்பியுலன்ஸ் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்கத்தின் வருடாந்த கூட்டம் காலியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் தலைவர் சேனக விஜேநாத் கூறியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையில் இந்த அம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…

    • 7 replies
    • 724 views
  9. தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் உயர் அழுத்த மின்கம்பியைப் பிடித்து மரணம் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த ரவீந்திரன் என்பவர், அருகில் உள்ள மின்சார கோபுரத்தில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியைப் பிடித்து உயிரிழந்தார். மதுரை திருமங்கலம் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாம். ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி, ரவீந்திரனின் கடைசி மகன் அங்கு இல்லாததால் அவரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கவிருப்பதாகக் கூறியதையடுத்தே ரவீந்திரன் இவ்வாறு செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்த வருவாய் அதிகாரி சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து அந்த அதிகாரியை மீட்டனர்.…

    • 3 replies
    • 859 views
  10. விவசாயிகளை தூண்டி விட்டவர்கள் யார் என்பதை நாமறிவோம் விவசாயிகளை தூண்டி விட்டு நாட்டுக்குள் நெருக்கடிகளை தோற்றுவிப்பவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? என்பதை நாமறிவோம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நாம் பயணிக்கும் பாதை பிழையானதாக இருந்தால் அப்பாதையை மாற்றிக் கொண்டு சரியான பாதையில் பயணிக்க வேண்டும். விவசாயத் துறையில் எமது பயணம் மாற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். "நச்சுத்தன்மையற்ற விவசாயம் தார்மீக நாடு" என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகமும் விவசாய அமைச்சும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மண்டப வளவில் நடத்தும் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். …

  11. மட்டக்களப்பில் குடியிருப்போர் விவரங்களைக் கோரும் போலிசார் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு போலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது போலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. போர்க் காலத்தில் நடைமுறையிலிருந்தது போன்ற இந்தப் பதிவு முறை காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது. வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸார…

  12. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தகவல் தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்பு அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் வழியாகவும் தரை மார்க்கமாகவும் நடத்திய தாக்குதல்களில் 10 விமானங்கள் முற்றாக அழிந்ததோடு, ஆறு விமானங்கள் பகுதியளவில் சேதமடைந்தன. புலிகளின் தற்கொலை போராளிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்நத 14 பேர் பலியாகியிருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=15292…

  13. வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என தெரிவித்தமையால் சர்ச்சை..! (ப.பன்னீர் செல்வம்) வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் சிறிது நேரத்தின் பின்னர் சுயநினைவுக்கு வந்து தவறை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை நினைவுபடுத்தினார். ஜனாதிபதி செயலகமும், விவசாய அமைச்சும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடாத்தும் “நச்சுத்தன்மையற்ற விவசாயம் தார்மீக நாடு” என்ற தொனிப் பொருளினாலான கண்காட்சியின் இரண்டாம் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வவிசாய அமைச்சின் செயலாளர் விஜேயரத்ன வரவேற்பு…

    • 1 reply
    • 396 views
  14. `இலங்கையில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் அதிகரிப்பு' `இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் அதிகரித்துள்ளன' (கோப்புப் படம்) இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, உச்ச நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2014 இல் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை 370 எனவும், அந்த எண்ணிக்கை 2015 இல் 472ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. முன்னாள…

  15. சமஷ்டி தொடர்பில் நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்க சம்பந்தர் முயற்சி சமஷ்டி தொடர்பில் நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்க சம்பந்தர் முயற்சி வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி ஆட்சி முறையொன்றைக் கொண்டுவருவதற்கான யோசனைத் திட்டமொன்றை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்குக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடும் முயற்சியை இன்னமும் கைவிடவில்லை என்றும், ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி ஆட்சி முறை கிடைப்பதற்கு உதவுமாறு, இந்தியாவிடம் கோரிக்…

    • 3 replies
    • 338 views
  16. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அரசாங்கத்தைப் புறம் தள்ளி இந்திய மத்திய அரசுடன் நேரடி உறவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மாகாணசபை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அடித்தளமிட்டது 13ஆவது திருத்தச் சட்டமாகும். அத்துடன், 13ஆவது திருத்த சட்டம் இந்திய தலையீட்டின் மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதே வழியில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றுக்கும் இந்திய தலையீட்டைப் பெற்றுக் கொள்வது முதலமைச்சர் விக்னேஸ்…

    • 1 reply
    • 440 views
  17. வடக்கு கிழக்கில் இயற்கை அழிவுகளை எனது கண்களில் கண்டேன் (ப.பன்னீர்செல்வம்) வடக்கு கிழக்கில் இயற்கை அழிவுகளை எனது கண்களில் கண்டேன். எனவே அம்மாகாணங்களை நாம் மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அது எமது கடப்பாடாகும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. சூழல் பாதுகாப்பு சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற நச்சுத் தன்மையற்ற விடயம். தார்மீக நாடு என்ற தொனிப்பொருளுடனான கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு …

    • 1 reply
    • 464 views
  18. இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுடனான 'எட்கா' ஒப்பந்தத்தை படிப்படியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றும், வர்த்தக சமூகத்தினர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும், சாதாரண மக்கள் அதுபற்றி தீர்மானம் எடுப்பதற்காகவும் குறித்த ஒப்பந்தத்தின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவிருக்கும் "எட்கா "ஒப்பந்தம் தொடர்பில் நேற்று விடுத்துள்ள விசேட ஊடக…

  19. குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா யாழ்ப்பாணம் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினாலும் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் குருசடி தீவில் கடல்மாரக்கமாக அனைத்து பொருட்களும் எடுத்து சென்று கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு கடல்மார்கமாக யாத்திரிகள் பயணம் செய்தனர் அற்கான சகல ஏற்பாடுகளையும் புதிய பங்குத்தந்தை அருட்பணி அன்ரனிபாலா தலைமையில் பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இம்மாதம் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நவநாள் தி…

  20. கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 2016 ஆம் ஆண்டில் 231 வேலைத்திட்டங்களை மேற்கொள்ள 900.7 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு 122 மில்லியன் ரூபாயும், 20 விவசாய வீதிகளின் வேலைகளுக்கு 48.80 மில்லியன் ரூபாயும், 36 வாய்க்கால்களின் புனரமைப்பு வேலைகளுக்கு 88 மில்லியன் ரூபாயும், 16 நெற் களஞ்சியங்கள் அமைக்க 96 மில்லியன் ரூபாயும், கமநலசேவை நிலையத்துக்குரிய கட்டடங்கள் மற்றும் மாவட்டக் காரியாலயத்துக்கு கட்டடம் அமைத்தல் ஆகிய 18 வேலைத்திட்டங்களுக்கு 66 மில்லியன் ரூபாயும் தேவைப்படுகின்றது. அத்துடன் 39 விவசாயக் கிணறுகள் அமைப்பதற்கு 157.50 மில்லிய…

    • 0 replies
    • 312 views
  21. யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இன்று மதியம் 1.30 மணியளவில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பகுதியில் மிக வேகமாகப் பயணித்த வேளையில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தின் போது யாழ்ப்பாணம் சாவல்கட்டுப் பிரதேசத்தை சேர்ந்த அ.கவிராஜ்(19), செ.புவிதரன்(22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் உயிரிழந்த இருவரினது உடல்களும் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். …

    • 0 replies
    • 544 views
  22. கொரியா சென்றவர்களின் எண்ணிக்கை 14 வீதம் வரை அதிகரிப்பு வேலைவாய்ப்புக்காக கொரியா சென்றவர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டை விட 2015ஆம் ஆண்டில் 14 வீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 2015ஆம் ஆண்டு தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை 5007ஆக இருப்பதுடன், 2014ஆம் ஆண்டை விட 701 எனும் எண்ணிக்கையால் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு தென்கொரியாவுக்கு தொழிலுக்காக 4, 306பேர் சென்றுள்ளனர். 2015ஆம் ஆண்டு கடற்தொழிலுக்காக 1319 தொழில் வாய்ப்பும் உற்பத்தி…

  23. கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு : அரசியல் கைதிகள் தொடர்ந்தும் போராட்டம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு தமிழ் அரசியல் கைதிகளிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள போதும் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 15 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஒரு பெண் உள்ளிட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்திருந்தார்…

  24. புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்தறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் நாளை மறுதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளனர்.இந்த சந்திப்பின்போது தமது குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் கருத்துக்கள் தொடர்பிலும் எதிர்கட்சி தலைவருக்கு விளக்கமளிக்கப்படும் என குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் கர…

  25. பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், பொருளாதார நிபுணரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான எம்.பாஸ்கரலிங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பாஸ்கரலிங்கம் கடந்த காலங்களில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் முன்னின்று செயலாற்றியிருந்தார். பொருளாதாரத்தில் நிபுணத்துவமற்ற ஹர்ச டி சில்வா போன்றோரின் வருகையின் பின்னர் பாஸ்கரலிங்கத்தின் மவுசு கட்சிக்குள் குறையத் தொடங்கியிருந்தது. இதன் காரணமாக மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த பாஸ்கரலிங்கம் எதுவித பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் வருமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.