Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 21 FEB, 2024 | 07:39 PM 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது. இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் க…

  2. உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து வௌியான தகவல் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம். 2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும…

  3. 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி! இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நானாவித வர்த்தக கண்காட்சியாகக் குறிக்கப்படும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 'வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்' என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது. குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்…

  4. Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 10:33 AM 2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190064

  5. 2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்! இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 587.11 பில்லியன் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இறக்குமதிகள் மூலம் அரச வருவாய்க்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவிடம் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையிலான குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை 55,447 மோட்டார் கார்கள், 7,331 சரக்கு போக்குவரத்து வாகனங்கள், 142,524 மோட்டார் சைக்கிள்கள், 15,035 முச்சக்கர வண்டிகள் மற்றும் 1,679 பயணிகள் பேருந்துகள் மற்றும் வேன்கள் சுங்கம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ள…

  6. 2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது! இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115 டிரில்லியனை அடையும் பாதையில் உள்ளதாக அதன்படி பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட குறிப்பிட்டார். இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசுத் துறையால் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக உயர்ந்த வரி வருவாயாகும். மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 630 பில்லியன் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டு இலக்கை சுமார் ரூ. 300 பில்லியன் தாண்டும் என்று இலங்கை சுங்கத்துறை நம்பிக…

  7. 2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்! இந்த ஆண்டு (2025) இதுவரை 57 திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீடுகள் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் 101% அதிகரிப்பைக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து வளர்ச்சிக்கு மாறி வருவதாகவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் வருகையை அனுமதிக்கும் வணிகத்தை எளிதாக்குவதில் அரசா…

  8. 2025 இல் இலங்கையின் ஏற்றுமதி வலுவான ஆரம்பத்தில்! 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.334 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டின் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அதேநேரம் இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10.3% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. ஜனவரி 2025 இல் பொருட்கள் ஏற்றுமதி செயல்திறன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இருந்தது, இது ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 3.51% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிக்கின்றது. ஆடை மற்றும் ஜவுளி, தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், வைரங்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், மசாலா பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றின் ஏற்ற…

  9. 2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் பிர­தமர் இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. குறித்த நாடு­களுடன் நட்புகொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம். அத்­துடன் இந்த நாடு­களின் நிதி உத­வி­களை பெற்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­துவோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அத்­துடன் 2020 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய மாற்றம் ஏற்­படும். 2025 ஆம் ஆண்டில் கடன் இல்­லாத நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பு மாவட்­டத்தில் நேற்று 1100 குடும்­பங்­க­ளுக்கு வீட்டு கடன…

  10. 2025 இல் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் நிலை என்ன? வளம் மிக்க இலங்கை -2025’ என்­கிற கொள்­கைத் திட்ட முன்­மொ­ழிவை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மை­யில் வெளி­யிட்­டார். நாட்டை வளம்­மிக்­க­தாக மாற்­று­வது இதன் நோக்­கம். இந்து மா கட­லின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் மிக்க இட­மாக இலங்­கையை மாற்­று­வ­தன் மூலம் இந்த நோக்­கத்தை அடை­வது அந்­தத் திட்­டத்­தின் வழி. எல்லா மக்­க­ளும் உயர்ந்த வரு­மா­னத்­தை­யும் சிறப்­பான வாழ்க்­கை­யை­யும் பெறத்­தக்க சூழலை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது இந்­தக் கொள்­கை­யின் நோக்­கம் என்று தலைமை அமைச்­சர் அ…

  11. 2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெற உள்ளது. https://athavannews.com/2025/1438749

  12. 2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம் Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 01:29 PM 2025ஆம் ஆண்டுக்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசியநிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. "நமது நிகழ்காலத்தைப் பாதுகாக்கவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்" என்ற தலைப்பில் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு மையத்தால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதி…

  13. 2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது! இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பணவனுப்பல் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.9% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 6.57 பில்லிய…

  14. 2025 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களையே பெறும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் BATTINEWS MAINNovember 11, 2020 (ரீ.எல்.ஜவ்பர்கான்) எதிர்வரும் 2025ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெறும். இது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதற்கான பலனாகும். 22- 16 ஆக மாறியது. 16 இப்போது 10 ஆக மாறியுள்ளது. இது 5 ஆக மாறப்போகிறது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் தொடர்ந்து பேசிய அவர், நான்கரை ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான எத்தகைய உரி…

  15. அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணைகள் மற்றும் 2024 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வித் தவணைகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நடத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதே சமயம், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு அக்டோபர்/நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலை கல்வ…

    • 0 replies
    • 337 views
  16. அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி விதிமுறைகள் 2025 ஆம் ஆண்டிலும் கட்டம் கட்டமாக தொடரும் என்று கல்வி அமைச்சு (education ministry)வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வி விதிமுறைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும். சாதாரணதர, உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர்/நவம்பர் 2025 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025 பாடசாலை ந…

    • 0 replies
    • 330 views
  17. 18 DEC, 2024 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட தேவைக்கு உட்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்த…

  18. 26 NOV, 2024 | 11:25 AM 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 2025 ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 2025 பெப்ரவரி 17ஆம் திகதியும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199701

  19. 2025 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆசிரியர்கள் அதிருப்தி editorenglishFebruary 19, 2025 2025 ஆம் ஆண்டு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டினார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2025 வரவு செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்ததாகக் கூறினார். சுபோதினி குழு அறிக்கையின்படி மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பள முரண்பாடுகளைச் சரிசெய்ய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய அதேவேளையில், அரசு ஊழியர்கள் ரூ.20,000 சம்பள உயர்வு கோரிப் போராட்டங்களை நடத்தியதை அவர் நினைவுபடுத…

  20. 2025ஆம் ஆண்டில் அநுர அரசாங்கம்: சந்திக்கப்போகும் சவால்கள்! 2025ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் , சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்புக்களை சமநிலைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் கடுமையான நிதி சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளை பூரணப்படுத்துவதற்கும் இடையே உள்ள கடுமையான சவால்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தலை இடியாக இருக்கப் போகிறது. பல எதிர்க்கட்சிகளும், பழைய அரசியல் தலைமைகளும் தேசிய மக்கள் சக்தியின் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது என்பது தொடர்பில் உற்று நோக்கி வ…

  21. 2025ஆம் ஆண்டில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடு 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச செலவுகள் குறித்து இதில் கணிப்பிடப்பட்டுள்ளதுடன், மொத்த செலவு 4,691 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார …

  22. 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படும்-வடக்கு மாகாண ஆளுநர்! அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு மாகாண …

  23. 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் adminDecember 28, 2024 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண …

  24. 13 MAR, 2025 | 08:20 PM (நமது நிருபர்) இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக காண்டே நாஸ்ட் டிராவலர் பெயரிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் குடும்ப நட்பு நாடுகள் பட்டியல் இலங்கை, சுவீடன், நோர்வே, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜேர்மனி, பின்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப உதவும் அமெரிக்காவின் ரெமிட்லி மீள்குடியேற விரும்புபவர்களுக்கு தெரிவிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய குடிவரவு சுட்டெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை சுகாதாரத் தரம், பொருளாதார வலிமையிலிருந்து பாதுகாப்பு அளவீடுகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு வரையான 24 காரணிகளில் 82 நாடுக…

  25. Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 04:27 PM 2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார். திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் நா.வேதநாயகன் மேலும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.