Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லை, ஆனால் உரிமைகள் முதலில் என்கிறார் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார். இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. …

  2. ஹர்த்தாலை பூரணமாக அனுஷ்டிக்குமாறு கோருகின்றார் அமைச்சர் டெனீஸ்வரன்! கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நாளைய தினம் வடமாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்டிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன். மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் குறிப்பாக புங்குடுதீவில் இதே போன்று சம்பவம் நடைபெற்று ஒரு மாணவியை இழந்து நிற்கின்றோம். அதேபோன்று சம்பவம் தற்போது வவுனியாவிலும் நடைபெற்றுள்ளது. அத்தகைய காமுகர்களுக்கு சட்டத்தி…

  3. சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்: ஏன் விசாரணைகள் இடைநிறுத்தம்? வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தொடர்பா? (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக விசாரணைகள் ஏன் இடைநிறுத்தப்பட்டுள்ளன? அச்சம்பவத்துடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் அவரது நண்பரும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைதான் அதற்கான காரணமாவென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று சபையில் கேள்வியெழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராகிய நாம் எமது சுயாதீனமான செயற்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சபாநாயகராகிய உங்களிடம் கோரிக்கை விடுத்த போது உங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத…

  4. பொருளாதாரத் தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தம்: இந்தியக் குழு இலங்கை வருகிறது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியத்தூதுக் குழு ஒன்று எதிர்வரும் 4 ஆம் தேதி இலங்கை வருகிறது என, இலங்கைப் பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பிரதமர் ரனில் விக்ரமசிங்க, இலங்கை வரவுள்ள இந்திய தூதுக்குழுவினருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உள்ளுர் அமைப்புகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளின் போது அறிவிக்கப்படும் எனவும், எவ்வ…

  5. புதிய அரசியல் சட்டம்: திருகோணமலையில் மாறுபட்ட கருத்துக்கள் இலங்கையில் உத்தேச அரசியல் சட்ட சீர் திருத்தத்தில் வடக்கு - கிழக்கு இணைந்த அதிகார பகிர்வு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் திருகோணமலையில் முன் வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலைக் கூட்டத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக மக்கள் கருத்துக்களை பெறுவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவின் அமர்வு இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை முதலாவது நாள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் குறித்த விடயங்கள் தொடர்பாக தமிழர் தரப்…

  6. ஜேர்மன் முறைமை குறித்து பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன் பா.உ. [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2016, 01:06.14 AM GMT ] ஜேர்மனியில் சிறந்ததொரு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறைமையே காணப்படுகின்றது. அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அத்தகைய ஆட்சிமுறைமையை ஏற்றுக்கொள்வதற்கு உடன்பட்டால் நாம் அதனை பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13வது திருத்த சட்டத்தின் ஏற்பாடுகளும் மாகாணசபை முறைமையின் ஏற்பாடு…

  7. ஞானசார தேரருக்கு பிணை காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை தூற்றினார் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞாசார தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டார். இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலேயே அவர், விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்க, சாட்சியாளர்களை அச்சுறுத்தக்கூடாது என்றும் கட்டளையிட்டார். - See more at: http://www.tamilmirror.lk/166734/%E0%AE%9E-%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B0%E…

  8. ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. [Monday 2016-02-22 20:00] உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உ…

    • 11 replies
    • 779 views
  9. மணற் காட்டில் தீ வடமராட்சி, மணற்காட்டு, சவுக்குக் காட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (23) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறும் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டிலே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெருமளவான மணற் பாங்கான பிரதேசமாக இருப்பதால் தீயணைப்பு வாகனத்தையோ பிற வாகனத்தையோ கொண்டு சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/166699/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%A4-#sthash.LwPu7P4o.dpuf

  10. ரணில், மஹிந்த ஒரே மேடையில்: அறிவுரை கூறிய தேரர்: கைவிரலை காட்டி சைகை செய்த ரணில் நாட்டின் நன்மை கருதி பிரமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமக்கிடையிலான அரசியல் மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கொழும்பு - ஹுணுபிடிய கங்காராம விகாரையின் தலைவர், கலபோட ஜானீஸ்ஸர தேரர் இருவருக்கும் அறிவுரை கூறினார். இதன்போது மேடையில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபகஷ ஆகியோர் புன்னகைத்தவாறு ஒருவருக்கொருவர் கதைத்து கொண்டிருந்தனர். கொழும்பு - ஹுணுபிடிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெரா நேற்று மற்றும் நேற்று முன்தினமும் சிறப்பாக நடைபெற்றது. நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ர…

  11. தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா? ப.தெய்வீகன் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நாட்டு மக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்லிணக்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள செயற்றிட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவது என்றும் அவற்றை அடையும் வழிகள் குறித்தும் நாட்டு மக்களிடம் பரந்துபட்ட கருத்துக்களை கேட்டறிவதும்தான் இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இணையமொன்றை ஆரம்பித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயலென்றோ வெறுமனே ஒரு கண்துடைப…

  12. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க PTIயை கையில் எடுங்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (22) ஊடகங்களுக்குக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய, தமக்கு விடுத…

  13. பலாலி விமானத்தளத்தின் விஸ்தரிப்பு நடந்தே தீரும்! எதிர்ப்புக்கள் பற்றிக் கவலையில்லை! பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமைகளினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பா, மக்கள் மீள்குடியமர்வா என்பது தொடர்பில் மக்களிடம் கருத்தறியுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், விமான நிலைய அபிவ…

  14. வடக்கு அதிவேக நெடுஞ்சாலை :நிர்மாணப்பணிகள் ஜூன் மாதம் ஆரம்பம் (எம்.எம் .மின்ஹாஜ்) வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பாதையின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்தான நடவடிக்கைகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏற்கனவே தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை ஆரம்பித்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதுமாத்திரமின்றி முக்கிய அபிவிருத்தி திட்டங்களை எமத…

  15. கதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்திற்கு எதிராக ஆலயங்களுக்கு சென்று தேங்காய் உடைப்பது உள்ளிட்ட மத நம்பிக்கை ரீதியான எதிர்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள…

  16. நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணையுங்கள்: கச்சதீவில் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வடமாகாணத்திற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அண்மையில் வடமாகாணத்திற்கான புதிய ஆளுநராக பதவியேற்ற ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் புதிய ஆளுநர் பதவியேற்று கலந்து கொள்ளும் முதல் உற்சவம் இதுவென்பதோடு, இந்த உற்சவத்தின் போது தமிழ் மொழியிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை விசேட அம்சமாகும். மேலும் வடமாகாணத்தில் விடுவ…

  17. யாழில் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி! ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி! யாழில் நடைபெறும் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி நிகழ்வில் ஜனாதிபதியும் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம சாரணருமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஜம்பொறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இலங்கை சாரண வரலாற்றில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தேசிய சாரணர் ஜம்பொறியில் பங்கேற்ற ஜனாதிபதி, தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இதன்போது, சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட கலந்து கொண்டவர்கள் தங்களது தாய்மொழியில் தேசிய கீதத்தினை இசைத்தனர். இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் ச…

  18. அண்மைக் காலங்களில் வடமாகாண முதலமைச்சருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் எதிராகப் பகிரங்கப் போர்ப்பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இப்போரின் முன்னணி படையாக செயற்படுபவர்கள் சில மாகாணசபை உறுப்பினர்கள். .அந்தப்படையின் தளபதியாக செயல்படுபவர் நீண்ட காலமாகவே முதலமைச்சர் பதவியில் கண் வைத்து செயற்படும் தவிசாளர் சி.வி.கே சிவஞானம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிகாரங்களை சரிவரப் பயன்படுத்தும் தன்மை தமிழ் மக்களிடம் இல்லாமல் போய்க் கொண்டு இருப்பதாகவும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் எனவும் அவை பற்றி விசாரணை ஈடேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மாகாண …

  19. மங்களவுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் வாகி இடமாற்றம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் வைத்து வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் வாகி கால்லகே கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தலைமயில் நடைபெற்ற கூட்டமென்றின் போது வாகி கால்லகேவிற்கும் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்த பரிந்துரைகளின் அடிப்படையிலான குழுவில் இரண்டு இராணுவ மேஜர் ஜெனரல்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென கால்லகே வெளிவிவகார அமைச்சரிடம் கோரியுள்ளார்.இந்தக் கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் மங…

  20. ஹுஸைனை சந்திக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள் மொஹமட் பாதுஷா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இளவரசர் அல் ஹுஸைனின் அண்மைய விஜயம், முஸ்லிம்களின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக வாழ்வில் எவ்வித தடயத்தையும் ஏற்படுத்தாது போயிருக்கின்றது. இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஒரு நாற்பது நிமிடமாவது முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக நேரத்தை ஒதுக்காதது அல்லது அதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்ளாதது, மக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன், முஸ்லிம் மக்களை கண்டு கொள்ளாது விட்டாரா? அன்றேல், முஸ்லிம் தரப்பு அவரது வருகையை அலட்டிக் கொள்ளவில்லையா…

  21. ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று யாழ்ப்­பா­ணத் திற்கு விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். யாழில் இடம்­பெ­ற­வுள்ள 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறியை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி யாழ். வருகிறார். இன்று மாலை 4.00 மணிக்கு யாழ். மத்­திய கல்­லூ­ரியின் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள சாரணர் ஜம்பொறியை ஜனா­தி­பதி ஆரம்­பித்து வைக்­க­வுள்­ள­தோடு யாழ். மத்­திய கல்­லூ­ரியின் நூற்­றாண்டு விழா­விலும் கலந்து கொள்­ள­வுள்ளார். இந்­நி­கழ்வில் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முத­ல­மைச்சர் வ…

  22. பல முக்கிய பிரமுகர்கள் இவ்வாரம் கைது? பல முக்கிய பிரமுகர்கள் இவ்வாரம் கைது செய்யப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில், நிதி மோசடிப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருபவர்களிடம் இலஞ்சம் கோரப்படுவதில்லையெனவும்,நாட்டினதும் மக்களினதும் நன்மை கருதியே வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோ…

  23. வாக்குறுதியை காப்பாற்றுமா பரணகம ஆணைக்குழு? ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மேலும் மூன்று மாத காலம் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆம் திகதியுடன் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், ஜேர்மனிக்கான பயணத்தை அதேநாள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்கும், ஆவணங்களில் கையெழுத்திட்டு விட்டுச் சென்றிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வழக்கத்துக்கு மாறாக, இம்முறை இந்த ஆணைக்குழுவுக்கு மூன்று மாத கால பதவி நீடிப்புக்கே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக இர…

  24. கையை உடைத்த பாவம் வேண்டாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்திய பாவத்துக்கு உள்ளாகாமல், அரசியலிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கௌரவமாக விடைபெற வேண்டும் என மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்சக்தி, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த வீரவர்தன, 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒருபோதும் பிளவுபடாது. அதற்கு, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இடமளிக்க மாட்டார். அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவும், இந்தக் கட்சியைப் பிளவுபடுத்திவிட்டு மற்றுமொரு கட்சியை உருவாக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர, ஏனையோரின் தேவைக்காக புத…

  25. நீதிமன்றத்தையும் ஏமாற்றும் CSN நிறுவனம்! நெருக்கடிக்குள் யோசித [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016, 05:17.39 AM GMT ] பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் CSN தொலைக்காட்சி நிறுவனம், அதன் முகாமைத்துவத்தில் மாற்றம் செயற்பட்டுள்ளது. தற்போது ரெட் வானொலியை விற்பனை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதில்க்க தெரிவித்துள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் ஆரம்பமாகிய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பல முறை CSN நிறுவனத்திற்கு கீழ் உள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலியின் முகாமைத்துவத்தை மாற்றுவதற்கு முயற்சித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.