Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் கொலைகளங்களிற்கு மீண்டும் சென்ற சனல்4-ஜோன் ஸ்னோ இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது. இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத…

    • 1 reply
    • 879 views
  2. நாளை இலங்கை வருகிறார் : சவுதி இளவரசர்! சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயத்தின் போது சவுதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். http://onlineuthayan.com/news/7657

    • 2 replies
    • 418 views
  3. 'முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காதீர்கள்' -ஏ.எம்.ஏ.பரீத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரிடமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரிடமும் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாணத்தில் முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, சுமார் 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மீளக்குடியேற இங்கு வரு…

    • 9 replies
    • 733 views
  4. புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை ஷெஹான் சாமிக்க சில்வா பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை(27) விடுவிக்கப்பட்டனர். கந்தசாமி கருணாநிதி, வீரசிங்கம் சுலக்சன், செல்வநாயகம் ஜோன்ஸன் ஆகிய மூன்று சந்தேக நபர்களையுமே, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல விடுதலை செய்தார். பிணையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ஏனைய 14 பேர், புனர்வாழ்வளிப்பதற்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் …

  5. மனித உரிமை மீறல் விசாரணை:இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது. மனித உரிமை மீறல் விசாரணை தொடரில் இருவரிடையே ஒத்த கருத்து இல்லை அப்படியான விசாரணைகள் எதிலும் வெளிநாட்டவர் யாரும் இடம்பெறமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பன்னாட்டு வல்லுநர்கள் உள்வாங்கப்படும் சாத்தியக்கூறுகளை…

  6. ஹோமாகம நீதிமன்றில் குழப்ப நிலையை தோற்றுவித்தவர்களை கைது செய்ய உத்தரவு நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தை மீறிய நிலையில் நடந்து கொண்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஹோமகம பொலிஸார் நீதிமன்றிற்கு விளக்கமளித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கின்றதா என பரிசோதனை செய்ய வேண்டும் என தேரர் கோரிக்கை விடுத்ததனால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாள…

  7. போர்குற்ற சிங்கள அரச படைக் கூடாரம் மீண்டும் ஒரு மகா கொடுமையை அரங்கேற்றி உள்ளது. அண்மையில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட சம்பூரில்.. 6 வயதுச் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று கிணற்றில் வீசியுள்ளது சிங்களக் கடற்படைக் காடைக்கூட்டம். இதுங்க மனுசப் பிறப்புகளா. இந்தக் கூட்டத்தை காக்க அதன் சனாதிபதியும் பிரதமரும் அயராது உழைப்பினமாமில்ல. இச்சம்பவம் குறித்து சம் சும் கும்பல்.. மூச். 6-year-old Tamil boy brutally raped and killed near genocidal SL Navy Camp in Champoor [TamilNet, Tuesday, 26 January 2016, 09:14 GMT] A 6-year-old Tamil boy, reported missing at Champoor on Monday evening at 5:30 p.m., was recovered dead after being brutally raped…

  8. ஆழஊடுருவும் அணி பற்றிய தகவல்கள் ஐ.நாவுக்கு வழங்கப்படாது! - ஜனாதிபதி உறுதி [Wednesday 2016-01-27 07:00] ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என …

  9. சித்தார்த்தனும் இன்று லண்டன் பயணம்! [ புதன்கிழமை, 27 சனவரி 2016, 02:02.38 AM GMT ] ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் இன்று லண்டன் செல்லவுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினமும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றும் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். இந்த நிலையில், கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று லண்டனுக்குப் பயணமாகவுள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றுள்ள ஸ்கொட்லாந்தின் சமஷ்டி முறை தொடர்பாக ஆராயவே இவர்கள் அங்க…

  10. பொறுப்புக்கூறும் தேவை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது : மனித உரிமைகள் கண்காணிப்பகம் போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பாகத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , சர்வாதிகார ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதாகக் கூறியே தற்போதைய இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெ…

  11. பிக்குகள் சிலரால் நீதிமன்றத்தின் முன் குழப்பநிலை (வீடியோ) January 26, 2016 02:41 pm http://tamil.adaderana.lk/news.php?nid=76420 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்தமையை அடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. ஞானசார தேரரை விளக்கமறியலில் வைப்பின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி, பிக்குகள் சிலர் ஒன்று கூடியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் மீ…

  12. ஞானசார தேரருக்கு சுகயீனம் காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து ஏசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக இருக்கும் நோய்க்கு, அவர் கடந்த சில நாட்களாக குளிசைகளை உட்கொள்ளாமையை அடுத்தே அவர், திடீரென நோய்வாய்ப்பட்டதாகவும் அதன் பின்னரே அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/164840/%E0%AE%9E-%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%A4-%…

  13. தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீடு - 27 ஜனவரி 2016 தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள், பொது அமைப்புகளின் பி…

  14. யாழில் ஏற்பட்ட திடீர் நில வெடிப்பு தொடர்பில் ஆய்வு! (படங்கள்) January 27, 2016 04:18 pm யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் உண்டான திடீர் விரிசல் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் இன்றைய தினம் அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு வேளை பாரிய சத்தத்துடன் நிலத்தில் திடீர் விரிசல் உண்டாகியிருந்தது. இந்நிலையில் குறித்த நில விரிசலுக்கு காரணம் நில அதிர்வு என மக்கள் மத்தியில் பேசப்பட்டுவந்தது. இந்நிலையில், புவியியல்துறை பேராசிரியர்கள் மேற்படி நில விரிசலுக்கு காரணம் நில …

  15. வெள்ளை வான் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, இன்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினர். கடந்த 16ஆம் திகதி இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ள இந்த மூவரும், உன்னை வெகுவிரைவில் வெள்ளை வான் கொண்டு வந்து கடத்துவோம் என …

  16. உறுதியாகிவிட்ட சு.கவின் பிளவு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் தாயராகி வரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பல்வேறு குழுக்களிடையே பகையுணர்வு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இரண்டு காரணிகளால், அதாவது, மஹிந்த ராஜபக்ஷ என்ற காரணியினாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு ஒட்டிக் கொண்டிருந்த சிறு கட்சிகள் என்ற காரணியினாலும் சுதந்திரக் கட்சியின் பிளவு ஊர்ஜிதமாகிக் கொண்டு வருகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையினால், எதிர்காலத் தேர்தல்களின் போது, தமது அணியினருக்குப் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களிட…

  17. தமிழ் அரசியல் கைதிகள் மூவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை; 14 பேருக்கு புனர்வாழ்வு [ Wednesday,27 January 2016, 07:37:49 ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் பிணையில் விடுதலையான 39 பேர் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் அவர்களில் மூவர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை ச…

  18. அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 01:45.11 AM GMT ] அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் "எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி வரை அபிவி…

  19. காணமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை 27 ஜனவரி 2016 ஓய்வு பெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கால எல்லையை மேலும் ஓரு வருடமாக நீடிக்குமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள்தனதுஆணைக்குழு முன்னிலையில் முன்வைத்த 14000 முறைப்பாடுகளில் 5000 முறைப்பாடுகள் குறித்தே விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக மக்ஸ்வெல் பரணகம இந்திய ஆங்கில நாளிதழ் ஓன்றிற்கு தெரிவித்துள்ளார். காணமற்போன பாதுகாப்புபடையினரின் குடும்பத்தவர்களால் முன்வைக்கப்பட்ட 5600 முறைப்பாடுகள் குறித்து இது வரை விசாரணைகளை ஆரம்பிக்கவேயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளா…

  20. வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக தீர்வு அதற்கு தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா 27 ஜனவரி 2016 நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்:- வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக தீர்வு அதற்கு தமிழர்கள் உதவவேண்டும் என்கிறார் சந்திரிக்கா ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இ…

  21. மீள்குடியேற்ற கூட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தீவிரம் [ Wednesday,27 January 2016, 05:29:35 ] யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முப்படைகளின் தளபதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இராணுவம், பொலீஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://ibctamil.com/news/index/17646

  22. வெளிநாட்டு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த 14 வயதான பாடசாலை மாணவன் கைது Published by Rasmila on 2016-01-27 08:54:47 வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அந்த குடியிருப்பின் 14 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டு பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரான மாணவனை கைது செய்ததாகவும் பின்னர் அவரை கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிமன்றம் விடுவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அறிய முடிவதாவது, குறித்த பெண் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள குறித்த வாடகை வீட்டில் தங்கியிருந்த போது பாலியல்…

  23. மேலும் பல வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் கொழும்பு வருகின்றன! [Wednesday 2016-01-27 07:00] கடந்த ஆறுமாத காலத்தில் வெளிநாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. இலங்கை வரலாற்றில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிடிருப்பது இதுவே முதற்தடவையாகும் என்று கடற்படை அறிவித்துள்ளது. கடந்த ஆறுமாத காலத்தில் வெளிநாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. இலங்கை வரலாற்றில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிடிருப்பது இது…

  24. வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்! - சனல் 4 பணிப்பாளர் [Wednesday 2016-01-27 07:00] வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஜோன் ஸ்னோ வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஜோன்…

  25. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விகாரை வேண்டும் ; மாணவர்கள் கோரிக்கை [ Wednesday,27 January 2016, 04:55:43 ] யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் சில கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள மாணவர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பௌத்த விகாரை அமைக்கப்பட வேண்டும் எனவும் சிங்கள மாணவர்களுக்கான மாணவர் சங்கம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://ibctamil.com/news/index/17645

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.