ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
மக்கள் ஆணைக்கு மாறான கருத்துக்கள் வந்தால் ஏற்கமாட்டோம்! (வீடியோ) January 26, 2016 05:30 pm நாட்டில் இருக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு இடம்கொடுத்து அரசாங்கம் நல்லதொரு செயல்முறைக்கு முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது, அதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்துவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். "அரசியல் தீர்வு சம்பந்தமான எங்களது நிலைப்பாட்டை 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாங்கள் முன்வைக்கையில், மக்கள் இதனை சர்வஜன வாக்கெடுப்பாக கருதி ஆணையை கொடுக்க வேண்டும் என்றோம், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த ஆணையை மிக பெரும்பான்மை வாக்குகளால் அளித்துள்ளனர். …
-
- 0 replies
- 332 views
-
-
பௌத்தர்கள் என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – பிரதமர்: பௌத்தர்கள் என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – பிரதமர்:- பௌத்தர்கள் என்ற ரீதியில் வெட்கபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற பதற்ற நிலைமை குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். பௌத்த பிக்கு வேடத்தில் சாதாரண நபர்கள் புகுந்து குழப்பம் விளைவித்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணை அறிக்கை அஸ்கிரி, மல்வத்து மற்றும் கோட்டே ரஜமஹா விஹாரை பீடாதிபதிகளிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத…
-
- 0 replies
- 400 views
-
-
இரண்டு மாதங்களில் 6 நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வரும் கடந்த ஆறுமாத காலத்தில் சர்வதேச நாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளத நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. இலங்கையின் ஆட்சிகாலத்தில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிடிருப்பது இதுவே முதற்தடவையாகும் என்று கடற்படை அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பாதுகாப்பு போர்க்கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 25 போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன. இதில் ரஷ்யா, அவுஸ்திரேலிய, ஜப்பான், …
-
- 0 replies
- 266 views
-
-
வடக்கு முதல்வர் விவகாரம் : சுமந்திரன் கருத்து வெளியிட மறுப்பு (ஆர்.ராம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் குறித்து கருத்து வெளியிட மறுப்புத்தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் அண்மைக்காலமாக இடைவெளியேற்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பபட்டது. இதன்போது அது குறித்து நான் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட முடியாதென சுமந்திரன் குறிப்பிட்டார். http://www.vira…
-
- 0 replies
- 431 views
-
-
சர்வதேச வர்த்தகக்கண்காட்சி 7ஆவது வருடமாக யாழ்ப்பாணத்தில்! யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 07ஆவது வருடமாக எதிர்வரும் 29,30,31 திகதிகளில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. என யாழ். தொழிற்றுறை மன்றத் தலைவர் கே.விக்னேஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் பிரதான அனுசரணையை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனமும், இணை அனுசரணையை எஸ்-லோன் நிறுவனமும் வழங்குகின்றன. தொலைதொடர்பாடல் பங்காளராக மொபிடெல் நிறுவனமும், மின்வலு உற்பத்திப் பங்காளராக sicher நிறுவனமும், அழகுக் கலை பங்காளராக 4ever நிறுவனமும், கல்விப் பங்காளராக ICBT jaffna நிறுவனமும், தகவல் தொழில்நுட்பப் பங்…
-
- 0 replies
- 484 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா ஆர்வம்: சின்ஹா தெரிவிப்பு! இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் ஒற்றுமை, இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று காலை நடந்த 67ஆவது இந்திய குடியரசு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் அயல்நாடு என்ற கொள்கையில் இலங்கையில் தொடர்ந்தும் முக்கிய இடத்தில் இருப்பதாகவும் இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டினார். மேலும்இ இலங்கையில் புதிய அர…
-
- 0 replies
- 374 views
-
-
'மக்களை பேய்க்காட்டக்கூடாது' -எம்.றொசாந்த் 'வடமாகாண சபை ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகியும், எவ்வித வினைத்திறனான செயற்பாடுகளை செய்யவில்லை. மக்களைப் பேய்க்காட்டாமல் நல்லதைச் செய்தால், அதற்கு எந்தவித தடையும் இருக்காது' என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், வவுனியாவிலிருந்து கைதடிக்கு சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு நாங்கள் வரவில்லை. வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ந…
-
- 2 replies
- 537 views
-
-
இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மண்ணில்! இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று யாழ். இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் இங்கு யாழ். இந்திய துணைத் தூதுவரினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் இங்கு கருத்து தெரிவித்த இந்திய துணைத்துவாதுவர், …
-
- 3 replies
- 543 views
-
-
ஆனந்தா போன்ற சிங்கள கல்லூரிகள் சிறுபான்மை மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்!- சந்திரிக்கா [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 04:37.25 PM GMT ] ஆனந்தா, நாலந்தா மற்றும் விசாகா போன்ற சிங்கள பௌத்த பாடசாலைகள் தமது பாடசாலை அனுமதிகளில் சிறுபான்மையினருக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார். தாம், ஜனாதிபதியாக இருக்கும் போது குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் சிறுபான்மை மாணவர்களின் ஒதுக்கீடுகள் குறித்து பணிப்புரை விடுத்த போதும் அதற்குரிய பதில்கள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து முஸ்லிம் மாணவர் ஒருவர் ஆனந்தா கல்லூரிக்கு தாம் அனுப்பியதாக சந்திக்கா நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். …
-
- 3 replies
- 565 views
-
-
திடீரென்று வீதியில் முளைத்த பிள்ளையார்! யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் நீண்ட காலமாக குப்பைகள் நிறைந்து வழிந்து கொண்டு இருந்தன. மழைக்கு முளைத்த காளான் போல அவ்விடத்தில் குப்பைகள் யாவும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் தீடிரென பிள்ளையார், முருகன் சிலை ஒன்றை வைத்து அதற்கு மலர் மாலையும் அணிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட காலமாக குறித்த வீதியால் பயணிப்போர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. குறிப்பாக அவ்வீதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றும் இருக்கிறது. அவ்விடத்திலே கொட்டப்படும் குப்பைகள் வீதிகளுக்கு வருவதுடன் துர்நாற்றமும் வீசிவதால் பாடசாலை மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். …
-
- 1 reply
- 486 views
-
-
அச்சுவேலியில் நிலத்தின் வெடிப்பு மேலும் விரிவடைகின்றது யாழ்.அச்சுவேலி நவக்கிரி பகுதியில் ஏற்பட்ட நிலவெடிப்பு மேலும் விரிவடைந்து உள்ளதாக யாழ்.பல்கலைகழக புவியியற்துறை பேராசிரியர் ரீ .ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். நவக்கிரி பகுதியில் கடந்த 23ம திகதி அதிகாலை வேளை திடீர் என நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டது. அதனால் ஒரு வீடு சேதமடைந்து இருந்ததுடன் சுமார் 500 மீற்றர் தூரம் வெடிப்பு ஏற்பட்டு இருந்தது. அச் சம்பவம் தொடர்பில் புவியியற்துறை பேராசிரியர் தெரிவிக்கையில் , அன்றைய தினம் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பினை தொடர்ந்து அவதானித்து வந்த வேளை வெடிப்பானது 1.5 சத மீற்றர் அகலத்துக்கு விரிவடைந்து உள்ளது. அத்துடன் மேலும் புதிய இடங்கள் சிலவற்றிலும் வெடிப்புக்கள் ஏ…
-
- 0 replies
- 567 views
-
-
நியமனங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் -எம்.றொசாந்த் வடமாகாண சபையால் வழங்கப்படும் நியமனங்களில் வெளிப்படைத் தன்மைகள் இல்லாமையால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. உரிய விடயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பலரது மனஉளைச்சலுக்கு தீர்வுகாண முடியும் என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். வடமாகாண சபையால் வழங்கப்படும் நியமனங்களில் முறைகேடுகள் உள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. வெற்றிடங்களுக்கு ஆட்களை இணைக்கவுள்ளதாக பத்திரிகைகளில் மட்டும் விளம்பரம் செய்யா…
-
- 0 replies
- 367 views
-
-
'சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே' பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்! [Tuesday 2016-01-26 09:00] சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே" உள்ளிட்ட பல்வேறு பொப்பிசைப் பாடல்களின் ஆசிரியரும், பிரபல உதைப்பந்தாட்ட மத்தியஸ்தருமான எம்.எஸ். கமலநாதன் நேற்று வடமராட்சி, வதிரியில் காலமானார். ஈழத்தின் பொப்பிசைப் பாடல்களில் மிகவும் பிரபலமான சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே என்ற பாடலை எழுதி அதற்கு இசையமைத்த இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றிருந்தார். எழுபதுகளில் இந்த பாடல் இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்திருந்ததுடன் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?new…
-
- 1 reply
- 823 views
-
-
செய்தி இணைப்பு: http://www.sencholai.org/?p=3082
-
- 1 reply
- 759 views
-
-
குடாநாட்டில் பனைமரங்கள் அனுமதி இன்றி தறிப்பு - வடமாகாண சபையின் அக்கறையீனமே காரணம்? January 26, 2016 01:29 pm குடாநாட்டில் அண்மைய காலங்களாக பனைமரங்கள் உரிய அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படுவதால் பனைவளம் அழிவடையும் நிலை எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபை அக்கறையற்று இருக்கின்றமை மிகுந்த வேதனையளிப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எனது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையினூடாகவே பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக பனைமரங்கள் தறிக்கப்படுவதில் உரிய வகையிலான கட்டுப்பாடுகளும் நட…
-
- 0 replies
- 415 views
-
-
இராணுவத்தின் களங்கம் நீக்க அக்கினிப் பரீட்சை ஜே.ஏ.ஜோர்ஜ் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியில் பாதுகாப்புப் படையினர் மீதான குற்றச்சாட்டை விலக்கி, கௌரவமான படையினர் என்பதை வெளிப்படுத்துவதுமே எமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'எவ்வாறாயினும், சில சம்பவங்கள் மீதான இந்த விசாரணைகள் இராணுவத்தின் மீது தவறில்லை என்பதை நிரூபிப்பதற்கு மாத்திரமே' எனவும் அவர் குறிப்பிட்டார். 'பல தாசாப்தகால யுத்தத்திலிருந்து நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் தியாக…
-
- 0 replies
- 707 views
-
-
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கைது [ Tuesday,26 January 2016, 06:47:19 ] பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். http://ibctamil.com/news/index/17606
-
- 1 reply
- 1.3k views
-
-
முன் வைத்த காலை அரசாங்கம் பின் வைக்கக்கூடாது: சுமந்திரன் -வி. நிரோஷினி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசாங்கம், முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியாயமான கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இரு தரப்பிடமும் கோரினார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/164679/-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-…
-
- 0 replies
- 334 views
-
-
பலத்த பாதுகாப்பு மத்தியில் பிள்ளையான் கிழக்கு மாகாண சபை அமர்வில் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 05:48.29 AM GMT ] கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலையிலுள்ள மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டெம்பெர் 29ஆம் நாளன்று நடந்த மாகாண சபை அமர்வில் இறுதியாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார். ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந…
-
- 0 replies
- 403 views
-
-
01/25/2016 இனியொரு... LEAVE A COMMENT தென்னித்திய சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்து இலங்கைக்குச் சென்று சினிமாக் கவிதைகள் பேசியமை இன்றைய தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்தி. ஈழத்துக் கவிதை மரபு ஒன்றிருந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்க கடந்து போக முடியாத காலம் ஒன்று உள்ளது. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து ஈழத்தில் கவிதை பாடவேண்டிய அவலத்துள் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வட மாகாணசபயில் பல்தேசிய நிறுவனங்களின் ஊழலின் ஊற்றுமூலமாகத் திகழும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் அழைப்பின் பேரில் இலங்கை சென்ற வைரமுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது நிலவெடிப்பு ; மக்கள் மத்தியில் பீதி - அதிகாரிகள் விரைவு [ Saturday,23 January 2016, 04:59:05 ] யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட நிலவெடிப்பு 100 மீற்றர் தூரத்தையும் கடந்து தொடர்ந்து செல்வதால் மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை இந்த நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதற்கு முன்னர் 100 மீற்றர் தூர பரப்பளவில் நிலவெடிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்த போதிலும் தற்போது அந்த வெ…
-
- 8 replies
- 1.1k views
-
-
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர் 400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் காலிமுகத்திடலில் ஜனவரி 26 ம் திகதி நேரில் பார்வையிடவுள்ளனர். 2012 இல் கைப்பற்றப்பட்ட 1.5 தொன் யானைதந்தங்களை உலக சுங்க தினமான ஜனவரி 26 ம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களம் காலிமுகத்திடலில் தீமூட்டி அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கென்யாவிலிருந்து கொழும்பு ஊடாக துபாய்க்கு கடத்தப்பட்டவேளை இலங்கை சுங்கத்துறையினர் இந்த தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய இந்த தந…
-
- 4 replies
- 761 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடு? [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 03:08.19 AM GMT ] ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை கட்சியின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹசனலி நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டதால் அக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறவுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல்களை அவர் நிராகரித்தார். அத்துடன், தான் ஒருபோதும் கட்சியைவிட்டு விலகமாட்டார் என்றும், தனக்கு எதிராக கும்பலொன்று போலிப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றத…
-
- 0 replies
- 312 views
-
-
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் தீ விபத்துக்கள் ; வீடு,கடை தீக்கிரை [ Tuesday,26 January 2016, 03:06:36 ] வவுனியா பஸார் வீதியில் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் எரிந்த பொருட்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை. அத்துடன் தீ ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நி…
-
- 0 replies
- 385 views
-
-
சட்டவிரோத சிறுநீரகஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையுடன் சுகாதாரஅமைச்சு உத்தியோகத்தருக்கு தொடர்பு? 26 ஜனவரி 2016 சட்டவிரோத சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையுடன் இலங்கை சுகாதார அமைச்சு உத்தியோகத்தர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகமொன்று இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் காணப்படும் சட்ட பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுரேஸ் பிரஜாபதி, இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவரும் இரண்டு மருத்துவர்களும் அனுமதி வழங்கினால் இலங்கையில் சிறுநீரகமொன்…
-
- 0 replies
- 214 views
-