ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வது குறித்து கூட்டமைப்புடன் பேசுவோம் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதியுச்ச சமஷ்டித் தீர்வில் உறுதியாக இருப்பதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 322 views
-
-
தனிப்பட்டநோக்கங்களில் செயற்படவில்லை தனிப்பட்ட ரீதியிலான நோக்கங்களின் அடிப்படையில் செயற்படவில்லை எனவும், நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதே தமது பிரதான இலக்கு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்போது தனிப்பட்ட வாக்குகளை இலக்கு வைக்காது, தேசிய ரீதியில் சிந்தித்த அரசியல்வாதிகள் செயற்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பன பற்றி சிந்திக்காது மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார். http://online…
-
- 0 replies
- 302 views
-
-
கிளிநொச்சியில் சமநேரத்தில் இரு விபத்துக்கள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு விபத்துக்கள் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கன்ரர் வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில், பழுதாகிய நிலையில் மின் விளக்குகள் ஒளிரவிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் பாரவூர்தியின் பின்பகுதியில் மோதி இரண்டாவது விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த…
-
- 0 replies
- 251 views
-
-
மகிந்தவின் புதிய கட்சி சுதந்திர தினமன்று உதயம்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் பெயர், சின்னம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக இவர்கள் தாமரைப் பூவினை சின்னமாக கோரியிருந்தனர். எனினும் தேர்தல்கள் ஆணையாளர் அதனை வழங்க மறுத்துள்ளதால் தாமரை மொட்டு சின்னத்தில் கட்சி செயற்படவுள்ளதாகவும் தெ…
-
- 0 replies
- 279 views
-
-
நவாலித் தாக்குதல் பெருந் தவறு; இராணுவம், அரசே முழுப் பொறுப்பு! சம்பவத்தை அறிந்தபோது கூச்சலிட்டு குமுறினேன் என்கிறார்: சந்திரிகா யாழ்.நவாலித் தேவாலயத்தின் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதான செய்தியை அறிந்தபோது நான் இராணுவத்தினரையும் விமானப் படையினரையும் நோக்கி உரத்துக் கத்தினேன். இந்தத் தாக்குதல் ஒரு தவறு. எது எப்படியிருந்தாலும் அதற்கு விமானப் படையினரும் இராணுவத்தினரும் அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். "உதயனு'க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 3 replies
- 570 views
-
-
ரணில் – சொல்ஹெய்ம் டவோஸில் திடீர் பேச்சு [ Saturday,23 January 2016, 04:10:09 ] உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்ஸர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஸ்ரீலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. உலகின் முக்கிய தலைவர்கள் பலரும் பெரும் முதலாளிகளும் பல்தேசிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொள்ளும் பொருளாதார மாநாடு டவோஸ் நகரில் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீலங்கா பிரமதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அடங்கிய உயர்மட்டக் குழுவினர் இதில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வின…
-
- 0 replies
- 358 views
-
-
2013 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பார்க்க கூடுதல் அதிகாரங்கள் 2015 இல் கோரப்பட்டுள்ளது- கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை கோரிக்கை த.தே.கூ ஆல் கைவிடப்பட்டுவிட்டது என்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்தை கூட்டமைப்பு முற்றாக மறுத்துள்ளது. இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துத்தெரிவித்த அதன் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மேற்படி நிராகரிப்பை வெளியிட்டார். அவர் மேலும் அந்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில்; விக்னேஸ்வரன் கடந்த வாரம் வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கேழ்விகளுக்கு பதிலளிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது 2013 வட மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தம…
-
- 0 replies
- 277 views
-
-
யாழில் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மக்கள் விசனம் [ சனிக்கிழமை, 23 சனவரி 2016, 05:32.10 AM GMT ] யாழ்ப்பாணம் - சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவோயில் கலந்தமை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுன்னாகம் தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்டு வந்த குடிதண்ணீர் விநியோகம் கடந்த இரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளமையால் இப் பகுதியைச் சேர்ந்த பல குடும்பங்கள் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர் . குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் தமது பகுதிக் கிராம சேவகர், வலி தெற்குப் பிரதேச சபை, உடுவில் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்குப் பல தடவைகள் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 402 views
-
-
தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படாது – அவுஸ்திரேலியா:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 23 ஜனவரி 2016 :- தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படாது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் இந்த இலங்கை அகதிகள் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது. 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் இந்திய துணைக் கண்டத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணித்த சுமார் 1200 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளதாக தென் இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய கொ…
-
- 0 replies
- 266 views
-
-
ஜேர்மனி நாட்டவரை தாக்கியதாக பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு அளுத்தம பொலிஸ் அதிகாரிகள் சிலர் தம்மை தாக்கியதாக தெரிவித்து ஜெர்மனி நாட்டவர் ஒருவர் நேற்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தின் போது ஆறு பொலிஸ் அதிகாரிகள் தம்மை மிரட்டியதாகவும் அதில் ஒருவர் தம்மை தாக்கியதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தார். 23-Jan-2016 10:38 am http://onlineuthayan.com/news/7464
-
- 0 replies
- 165 views
-
-
கவிப்பேரரசு வைரமுத்து வடக்கு முதல்வரை சந்தித்தார்! முல்லைத்தீவில் நடக்கும் உழவர் விழாவில் பங்கேற்க வந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனை சந்தித்துப் பேசினார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அழைப்பின் பேரில் கவிப்பேரரசு வைரமுத்து இலங்கை வந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த இவர் நேற்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். இதன்போது வைரமுத்து தான் எழுதிய நூல்களை முதலமைச்சருக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார். …
-
- 0 replies
- 597 views
-
-
போர் பற்றிய புலனாய்வு இரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கையில்! [Saturday 2016-01-23 08:00] ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரின் இரகசியங்கள் மற்றும் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப் பிரிவு, விசேட படையணிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள ஹூசெயன் முயற்சித்துள்ளார். வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் ஒன்றின் ஊடாக ஹூசெய்ன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். எனினும், வன்னிப் போர் தொடர்பிலான அனைத்து புலனாய்வுத் தகவல்கள் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள ஹூசெய்ன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஐ.நா …
-
- 0 replies
- 339 views
-
-
ஜனாதிபதியின் கருத்து அதிர்ச்சியளிக்கின்றது – யாஸ்மீன் சூகா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 23 ஜனவரி 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் சந்தேகம் நிலவுவதாகவும், வெளிநாட்டு நீதவான்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படாது எனவும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரபால …
-
- 0 replies
- 355 views
-
-
யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! [Saturday 2016-01-23 08:00] யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்கப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்…
-
- 0 replies
- 380 views
-
-
ஜெனீவா தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு ஜப்பான் பிரதிநிதி இலங்கை விஜயம் [ சனிக்கிழமை, 23 சனவரி 2016, 01:53.37 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதியொருவர் இலங்கை விஜயம் செய்யவுள்ளார். தீர்மானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நடைமுறைச் சாத்தியமான ஓர் திட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜப்பானின் விசேட பிரிதிநிதி மெத்து நெபூச்சீ இலங்கை விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 24ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெபூச்சீ, ஜப்பான் அரசாங்கத்தின் குற்ற விசாரணை தொடர்பான நிபுணத்துவ நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது. இ…
-
- 0 replies
- 289 views
-
-
தாமரை மொட்டு சின்னத்தில் மஹிந்தவின் புதிய கட்சி சுதந்திர தினத்தன்று அறிமுகம்? [ Saturday,23 January 2016, 03:09:09 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கட்சி மற்றும் அதன் பெயர் ஆகியவற்றை ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தன்று அறிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. குறித்த தினத்தில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய சுதந்திர தின வைபவத்தை புறக்கணித்து, அந்த தினத்தில் புதிய கட்சியை அறிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளதாக அறியமுடிகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இ…
-
- 0 replies
- 312 views
-
-
அரசியலுக்கு வரத் தயார்! - கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு [Friday 2016-01-22 07:00] மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டுக்…
-
- 8 replies
- 701 views
-
-
சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார் கடந்த ஆண்டு ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொண்டிருந்தார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் 'சர்வதேசத்தின் தலையீட்டை' அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்கு…
-
- 6 replies
- 470 views
-
-
'வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை': மைத்திரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையானது 'உள்ளக விசாரணையாக' இருக்கும் என்றும் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் இலங்கையின் இணை-அன…
-
- 7 replies
- 845 views
-
-
சம்பந்தனுக்கு “வாழும் வீரர்” விருது வழங்கி மதிப்பளித்தது கனடிய தமிழர் பேரவை! [Tuesday 2016-01-19 07:00] கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார். கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்கு கனடிய வ…
-
- 9 replies
- 669 views
-
-
வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம்! இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 313 views
-
-
பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார். வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர். வெளியில் சென்ற பெண் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக நின்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதன்போது, அங்கு வந்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெண் மீது கல்வ…
-
- 0 replies
- 378 views
-
-
ஜனாதிபதியின் வாகனம் விபத்து! பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களுடம் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://onlineuthayan.com/news/7442
-
- 0 replies
- 303 views
-
-
வடபகுதி மாணவர்களின் கல்வியை கெடுத்துக் குட்டிச்சுவராக்க திட்டமிட்டு சதி! : வடமாகாண முதலமைச்சர் எச்சரிக்கை! வடபகுதி மாணவ மாணவியர்க்குரிய மிகச் சிறப்பான இயல்பு அவர்கள் கல்வியில் மேம்பட்டிருப்பதே. இதனைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் வகையில் பல்வேறு தீய நடவடிக்கைகள் எமது மாணவ சமுதாயத்தின் மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 472 views
-
-
வடக்கு முதல்வரை சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்! : யாழில் உண்ணாவிரதம்! வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு வலியுறுத்தி கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற தனிநபர் தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். வடக்கு முதலமைச்சரை குறை கூறி விமர்சிப்பதற்காக செலவளிக்கும் நேரத்தை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வதற்காகச் செலவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 500 views
-