ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் கிடைத்துள்ளன. இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு 13 உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzCSdSWko3G.html
-
- 1 reply
- 356 views
-
-
'வொக்ஸ்வாகன் ஆலை திட்டமிட்டபடி அமைக்கப்படும்' ஜேர்மனிய கார்த் தயாரிப்பு நிறுவனமான வொக்ஸ்வாகனின் ஒருங்கிணைப்பு ஆலையானது திட்டமிட்டபடி குளியாப்பிட்டியில் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வொக்ஸ்வாகன் நிறுவனம் தனது ஆலை அமைப்புப் பணிகளை இடைநிறுத்தவில்லை என ஜேர்மனிய அரசாங்கம் உறுதிளித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இன்னும் இரண்டு வருடங்களுக்குள் குறித்த ஆலை செயற்படத் தொடங்கும் எனவும் அவர் கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/161931/-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%…
-
- 0 replies
- 575 views
-
-
திருக்கோணேஸ்வர கட்டுமானப் பணிகளுக்கு தடை இலங்கையில் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் இடம்பெற்றுவரும் கட்டுமான பணிகளுக்கு தொல் பொருள் ஆய்வுத் தினைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வர கட்டுமானப் பணிகளுக்கு தடை ஆலய உள் வீதியில் தேர் வலம் வருவதற்காக ஒன்பது தூண்கள் எழுப்பப்பட்டு கூரை அமைப்பதற்கும் உத்தேசித்துள்ள ஆலய நிர்வாகம் அதற்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ள நிலையிலே பணிகளை இடைநிறுத்துமாறு தொல் பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆலய பரிபாலன சபையின் தலைவரான பி.பரமேஸ்வரன். இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரர் தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் கிழக்க…
-
- 0 replies
- 653 views
-
-
பொது மக்களின் உதவி கோரும் யாழ் பொலிஸார் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் என்பன அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் யாழில் இடம்பெற்று வரும் குற்றச்சாட்டுக்களை குறைக்கும் வகையிலேயே பொலிஸார் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமு…
-
- 0 replies
- 669 views
-
-
கடும் காற்றுடன் அடைமழை பல இடங்களில் மரங்கள் வீழ்ந்து சேதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையான காலப்பகுதியில் கடுமையான காற்று வீசியது. காற்றுடன் பெய்த அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதித்தது. மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் காற்று காரணமாக மரங்கள் முறிந்தும் அடியுடன் சாய்ந்தும் விழுந்துள்ளன. நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் பல வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articl…
-
- 0 replies
- 529 views
-
-
தேசிய நத்தார் கொண்டாட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கத்தோலிக்க திருச்சபையின் தேசிய உற்சவம் எதிர்வரும் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியும் கலந்து கொள்வார். கர்தினாலும் வருகை தருவார். இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அத்துடன், கொழும்பை மையப்படுத்தி பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றார். http://www.seithy.…
-
- 0 replies
- 798 views
-
-
திருநெல்வேலியில் இயங்கி வரும் கொமர்ஷியல் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணப்பரிமாற்று ஏ.ரி.எம் இயந்திரத்தை சாதுரியமாகக் கழற்றிய திருடன் அதற்குள் இருந்து சுமார் 40 ஆயிரம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளான். இச்சம்வம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம். இயந்திரத்தை கழற்றி பணத்தை எடுத்து விட்டு மீண்டும் இருந்தது போன்று பூட்ட முற்பட்ட போதே அபாய எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இந்நிலையில் பண மோசடி இடம்பெறுவதனை வங்கியின் தலைமையகத்தின் தொழில்நுட்பப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டு குறித்த கிளையின் முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முகாமையாளர் ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு சென்ற போது திருடன் அவரைத் தள்ளிவிட்டு…
-
- 0 replies
- 440 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய நிறைவேற்று சபை என்ற ஓர் நிறுவனம் உருவாக்கப்படவில்லை. 100 நாள் திட்டத்தை அமுல்படுத்த சிவில் அமைப்புக்கள் பலவும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓர் சபையை உருவாக்கியிருந்தது என பிரதமர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtzCSdSWko0E.html
-
- 0 replies
- 429 views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சுயாதீனத் தொலைக்காட்சி ஊடாக மைத்திரியின் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்ற ஆணை பிறப்பித்த கடிதம் சிக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்காக சுயாதீனத் தொலைக்காட்சி சேவையை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நடைபெற்ற குறித்த வழக்கில் சாட்சியமளித்த சுயாதீனத் தொலைக்காட்சியின் கணக்காய்வாளர் மேற்குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று கடிதம் ஒன்றின் வாயில…
-
- 0 replies
- 406 views
-
-
புலிகளுடன் தொடர்புடையோர் அரசியல் கைதிகள் அல்லர்! புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்'' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை, வி…
-
- 0 replies
- 508 views
-
-
இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் ; பிரதமர் வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட வே…
-
- 0 replies
- 367 views
-
-
தோட்டத் தொழிலாளர் பிறப்புச் சான்றிதழில் இந்தியத்தமிழர் என்றே பதியப்படுகின்றனர் : இந்திய அணியின் வெற்றியில் அவர்கள் குதூகளிப்பதில் என்ன தவறு தோட்டத்தொழிலாளர்களினதும் அவர்களது பிள்ளைகளினதும் பிறப்புச் சான்றிதழில் இந்தியத் தமிழர்கள் என்றே பதியப்படுகிறது. இவ்வாறான நிலையில் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் வெற்றியை பட்டாசு கொளுத்தி, கைதட்டி குதூகளித்து அவர்கள் மகிழ்ந்தால் அதனை தவறு என்று கூறுவதுசரியா என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை, வைத்தியசாலை, அடிப்பட…
-
- 0 replies
- 386 views
-
-
நாடாளுமன்றத்துக்குள் இன்று தீக்குளிப்பேன்! - வடிவேல் சுரேஸ் எம்.பி சபதம் [Saturday 2015-12-19 07:00] தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். சம்பளப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில…
-
- 0 replies
- 1.5k views
-
-
பட்ஜெட் வாக்கெடுப்பு இன்று! அரச பங்காளிகள், கூட்டமைப்பு ஆதரவு; ஜே.வி.பி. எதிர்ப்பு! நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதன்போது, பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் வாக்களிக்கவுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பட்ஜெட்டுக்கு சார்பாக வாக்களிக்கவுள்ளது. ஜே.வி.பி. பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
- 0 replies
- 657 views
-
-
சாதிய அடிப்படையில் உள்ளூராட்சி தொகுதிகளுக்கான எல்லைகள் பிரிப்பு- விசேட குழு நியமனம் [ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2015, 04:13.08 AM GMT ] கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி தொகுதிகளுக்கான எல்லைகள் பிரிப்பு சாதிய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தினேஷ் குணவர்த்தன தலைமையில் உள்ளூராட்சி எல்லைகள் மறுசீரமைப்பு தொடர்பான குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் சிபாரிசுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்டிருந்தது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்த தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டே நடைப…
-
- 0 replies
- 534 views
-
-
புதிய இலங்கை அரசாங்கம் பெறுமதிமிக்க பங்காளி – சுஸ்மா சுவராஜ் 19 டிசம்பர் 2015 புதிய இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பெறுமதிமிக்க பங்காளி என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கையுடனான இரு தரப்பு உறவுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவிப் பிரமாண நிகழ்விற்கு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அண்டை நாடுகளுடனான உறவுகள் வலுப்பெற்று வருவதாகவும் அவர் …
-
- 0 replies
- 812 views
-
-
பிரான்சில் திலீபன் சிலை - கொதிக்கும் சிங்கள நாளிதழ்! [Saturday 2015-12-19 07:00] தியாகி திலீபனுக்கு பிரான்சில் சிலை அமைக்கப்படவுள்ளது குறித்து திவயின சிங்களப் பத்திரிகை கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரான்சின் தலைநகர் பாரிசில் அந்தஜோய் எனப்படும் பிரதேசத்தில் திலீபனுக்கான சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனைக் காரசாரமாக விமர்சித்து திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு சிலை அமைக்க அனுமதி அளித்ததன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பிரான்சிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக குறித்த செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அரச…
-
- 0 replies
- 813 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு 19 டிசம்பர் 2015 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பாராளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படும் என அந்நாட்டு பாராளுமன்றில் அறிவித்திருந்தார். எனினும், இந்த உத்தேச திட்டத்திற்கு இ…
-
- 0 replies
- 568 views
-
-
பிரித்தானியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் பிரித்தானியாவுக்காக உயர்ஸ்தானிகர் ஒருவரை நியமிக்காமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் இடம்பெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில, தமது கேள்வி ஒன்றின் போது இலங்கை பிரித்தானியாவுடன் சிறந்த உறவைப் பேணி வருகின்ற நிலையில் ஏன்? புதிய உயர்ஸ்தானிகர் ஒருவரை நியமிக்காமல் இருக்கிறது என்று கேள்;வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்சா டி சில்வா, தகுதியான உயர்ஸ்தானிகர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே பணியில் இருந்த உயர்ஸ்தானிகரை அப்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர் தாக்கிய…
-
- 0 replies
- 435 views
-
-
போர்க்குற்ற விசாரணையின்போது புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை? போர்க்குற்ற விசாரணையின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திவயின பத்திரிகை செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஐந்து மேற்கத்தேய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியிருந்தன. இந்த நாடுகளே ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டு, போர்க்குற்ற விசாரணையை திணித்துள்ளன. குறித்த நாடுகளி…
-
- 0 replies
- 363 views
-
-
பிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே பிரதியமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். பிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின. இந்த இரண்டு பிரதான கட்சிகளின் பகைமை அரசியல் அதிகார ஆசையே இந்நிலைக்கு காரணமாக அமைந்தது. எனவே இனி மேலும் எம்மிடையே பகைமை அரசியல் வேண்டாம். அதனை கைவிடுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வ…
-
- 3 replies
- 597 views
-
-
நயினாதீவுக்கு - நாகதீபவுக்கு வேண்டும் ஒரு "ம்" [ Wednesday, 16 December 2015 ,04:56:47 ] இலங்கையின் அரசியல் நிலவரங்கள் பிராந்திய, மற்றும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப் போர்களின் சங்கூது தரவையாக காணப்படுகின்றன. இவற்றில் இந்தியா, சீனா, அமெரிக்கா என களத்தில் அடையாளம் காட்டும் பெரிய நாடுகளும் சிறிய கேந்திர நாடுகளும் கபடியாடிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு அரசியலில் பேரினவாதம் சாயம் வெளுக்காமல் சால்வைகள் மட்டும் மாறிக் காணப்படுகின்றன. ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாற்றம் விரும்பிய எங்கள் மக்களுக்கும் விதிப்பயன் இயங்கத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசியல் வழிநடத்துநர்கள் ஒத்தூதிகளாக - நல்லபிள்ளைகளாக - எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டியும் உள்ளுக்குள்ளே கலம்பம…
-
- 19 replies
- 1.5k views
-
-
மீண்டுமொரு பிரபாகரன் உருவாவதை தடுத்து தீர்வை வழங்குமாறு சுதந்திரக் கட்சி வலியுறுத்து [ Friday,18 December 2015, 03:07:19 ] ஸ்ரீலங்காவில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும், தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே பகைமை அரசியலை கை விடுவோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் உட்பட 9 அமைச்ச…
-
- 7 replies
- 661 views
-
-
நொடிந்து போயுள்ள வடக்கின் விவசாயத்தை எம்மால் தூக்கி நிறுத்த முடியவில்லை: பொ.ஐங்கரநேசன் FRIDAY, 18 DECEMBER 2015 03:35 வடக்கு மாகாண சபை தோற்றம் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், நீண்ட மோதல்களினால் நொடிந்து போயுள்ள வடக்கின் விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். “சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட எமது விவசாயிகள் தினக் கூலிகளாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, அவர்களது விளைநிலங்களில் இராணுவம் விளையாட்டு அரங்குகளையும் உல்லாச விடுதியையும் அமைத்திருக்கிறது. இது மஹிந்தவின் மாளிகை என்று ஊடகங்களை அழைத்துச் சென்று உலகுக்குக் காட்டிய நல்லாட்சியின் புதிய ஜனாதிபதியும் அவற்றை …
-
- 2 replies
- 659 views
-
-
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை: தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, பிரபல பாடசாலைகளில் இணைந்துகொள்ளவுள்ள மாணவர்களுக்கான பாடசாலை ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு: http://www.hirunews.lk/tamil/122344/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-05-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%…
-
- 0 replies
- 423 views
-