ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
'சுன்னாகம் பொலிஸார் எனது மகனின் படத்தின் நெற்றியில் பொட்டு வைத்திருந்தனர்' -எம்.றொசாந்த் இராணுவத்தினரால் காலில் சுட்டுக் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் தொடர்பில் ஒரு கோப்பை வைத்திருந்த சுன்னாகம் பொலிஸார், அதில் ஒட்டப்பட்டிருந்த எனது மகனின் புகைப்படத்தில் நெற்றியில் சிவப்பு கலரில் பொட்டு வைத்திருந்தனர். ஏன் பொட்டு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, அது உனக்குத் தேவையில்லாத விடயம் எனக் கூறி என்னை அங்கிருந்து துரத்தினர் என காணாமற்போன சிவசோதி திவ்வியதாசனின் தாயார் சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர…
-
- 0 replies
- 429 views
-
-
'நான் அடையாளம் காட்டுபவரை அழைத்து வாருங்கள்' -எம்.றொசாந்த் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.சுவாமிநாதன் ஆகியோர் இந்தாண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி வவுனியா புனர்வாழ்வு முகாமுக்கு விஜயம் செய்த புகைப்படத்தில் எனது கணவர் உள்ளார் என காணாமற்போன விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான வேதா என்று அழைக்கப்படும் யோசப் சீலனின் மனைவி சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு…
-
- 0 replies
- 474 views
-
-
'யாழில் 993 பேர் சாட்சியமளித்துள்ளனர்' -எம்.றொசாந்த் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற 6 அமர்வுகளில் 1,620 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 993 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்துக்கான அமர்வுகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று இன்று புதன்கிழமையுடன் (16) முடிவடைந்தது. 11 ஆம் திகதி நல்லூர் பிரதேச செயலகத்துக்கான அமர்வு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 235 பேர் சா…
-
- 0 replies
- 286 views
-
-
விடுதலைப்புலிகளின் தளபதிகள் தொடர்பில் சாட்சியம் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றபோதே, இவ்வாறு சாட்சியமளித்தார்கள். மேலும் சாட்சியம் அளிக்கையில் , நிதித்துறை கருவண்ணன். விடுதலைப்புலிகள் அமைப்பில் நிதித்துறையில் இருந்த கருவண்ணன் எனப்படும் சூசைப்பிள்ளை வரதராஜன் ஆகிய எனது கணவரை 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் த…
-
- 0 replies
- 740 views
-
-
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போனவரை சந்தித்தனர் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலை கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமல் போன எனது தம்பியை கண்டதாக தன்னிடம் தெரிவித்தாக சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றபோதே, இவ்வாறு சாட்சியமளித்தார். மேலும் சாட்சியம் அளிக்கையில் , மானிப்பாய் பகுதியில் சைக்கிள் கடை நடாத்தி எனது தம்பியான இராசையா சசிந்தன் 1997ம் ஆண்டு 02ம்…
-
- 0 replies
- 426 views
-
-
ஆறு லயன் குடியிருப்புக்களில் தீ இரத்தினபுரி - அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் மின்சார கோளாறு காரணமாக ஆறு லயன் குடியிருப்புக்களில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆறு குடியிறுப்புக்களில் உள்ள பொருமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, இவ் குடியிருப்புகளில் தங்கியிருந்த எவருக்கும் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. தோட்ட மக்களின் முயற்றியால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேற்படி பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தோட்ட மக்களை அப்பிரதேச ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மே…
-
- 0 replies
- 446 views
-
-
இரத்தக்கறை கொண்ட மஹிந்தவும்,கோட்டாவும் கைதிகளின் விடுதலை குறித்து பேசுவது எப்படி? [ Wednesday,16 December 2015, 13:12:59 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினதும் கரங்களில் கொலை செய்யப்பட்ட இரத்தக்கறை காணப்படுவதால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக கருத்துகூறுவதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சர்வதேச நாடுகள் ஸ…
-
- 0 replies
- 422 views
-
-
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். வத்திக்கானுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்த போதே, இவ்வாறு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/161679/%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-
-
- 1 reply
- 586 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்காக அண்மையில் ஏற்படுத்தப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இதனை கண்டித்துள்ள அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைப்பை சேர்ந்த அருட்தந்தை என். சக்திவேல் , இதன் மூலம் விடுதலையை எதிர்பார்த்திருந்த கைதிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட சிங்கள இனவாத தரப்பை மகிழ்விக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே கொழும்பு மகசீ…
-
- 0 replies
- 581 views
-
-
தன்னிச்சையாகச் செயற்படுகிறார் சுவாமிநாதன் : சாடுகின்றார் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் முயற்சியினாலே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற காணி, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற, காணி விவகாரத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா, இது குறித்து பிரதமர் ரணில் வி…
-
- 1 reply
- 515 views
-
-
புலி உறுப்பினர்களை விடுதலை செய்தது போன்று, இராணுவ புலனாய்வாளர்களை விடுதலை செய்யவேண்டும்: 16 டிசம்பர் 2015 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தது போன்று, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்களை விடுதலை செய்யவேண்டும் என அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கைதுசெய்யபட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஏற்பாட்டாளர் மேஜர் அஜித் பிரசன்ன இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் விடுதலையின் போது நீதி நடைமுறையெதுவும் பின்பற்றப்படவில்லை, மாறாக ஜனாதிபத…
-
- 3 replies
- 533 views
-
-
சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது! அமைச்சர் ராஜித கூறுகிறார் [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 01:32.35 AM GMT ] தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. முன்னைய அரசாங்கத்தை போலவே எம்மையும் கருதாது அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ எம்மால் அனாவசியமாக எதையும் மேற்கொள்ளவும் முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணை பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும். வடக்கு,கிழக்கு பகுதிகளின் மீள்…
-
- 4 replies
- 654 views
-
-
ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை - ஆதங்கப்படும் சகோதரி [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 09:21.04 AM GMT ] யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணையின் போது சகோதரி ஒருவர் தனது சகோதரன் தொடர்பான முறைப்பாட்டின் போது ஆதங்கப்பட்டுள்ளார். குறித்த சகோதரி மேலும் தெரிவிக்கையில், இவ் ஆணைக்குழு மீது துளியேனும் நம்பிக்கை இல்லை எனவும் எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் தற்போதைய அரசு குறித்து நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். எனது சகோதரன் போராடப்போய் காணாமல் போயிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன், ஆனால் பெண் சகோதரிகளுக்காக உழைக்கப்போனவன் காணாமல் போய்விட்டானே.…
-
- 0 replies
- 489 views
-
-
அமெரிக்க - இலங்கை இருதரப்புப் பேச்சு பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பம்!- அமெ. உயரதிகாரி ஷனோன் அறிவிப்பு [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 01:29.36 AM GMT ] இலங்கை அமெரிக்கா அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு கூட்டுப் பேச்சு அடுத்த வருடம் பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ள ஷனோன், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தார். இவர் கையோடு வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சின் பின்னர…
-
- 15 replies
- 562 views
-
-
'எனது மகன் இறுதியாக பாலச்சந்திரனுடன் நின்றார்' -எம்.றொசாந்த் எனது மகன் இறுதித் தருணங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுடன் நின்றதாக கண்டவர்கள் எனக்குக் கூறினர். பாலச்சந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் சில இளைஞர்களின் சடலங்களும் அருகில் இருந்தன. அவற்றில் எனது மகன் இருப்பாரே எனத் தெரியவில்லையென காணாமற்போன ஐங்கரன் என்பவரின் தந்தை மார்க்கண்டு அருளானந்தம் தெரிவித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர…
-
- 0 replies
- 645 views
-
-
12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம் [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 12:34.42 AM GMT ] 12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 12 வெளிநாடுகளும், 26 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 133 கோடி ரூபா பணம் வழங்கியுள்ளன. அண்மையில் முல்லைத்தீவில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணமொன்றில் இந்த விடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரிட்டன், இத்தாலி, பொஸ்ட்வானா,…
-
- 1 reply
- 591 views
-
-
அரசியல் ரீதியாக அணுகும் விடயத்தை பிரதமர் நிர்வாக ரீதியாக அணுகுகிறார் : முதலமைச்சர் சாடல் கிராம இராச்சியத் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மத்திய அரசாங்கம் சதி செய்கிறது எனக் குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் ரீதியாக அணுக வேண்டிய விடயத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிர்வாக ரீதியாக அணுகுகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, கடந்த வருட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் வேறுபாடு எதுவும் இல்லை. அரசின் திட்டங்களால் தென்பகுதிகள் நன்மையடைகின்றனவே த…
-
- 0 replies
- 696 views
-
-
வித்தியா கொலை குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ முடியவில்லை! - கைவிரித்தது அரசாங்கம் [Wednesday 2015-12-16 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப…
-
- 0 replies
- 695 views
-
-
அவன் கார்டிற்கு 40 ஆயிரம் மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலுத்த வேண்டும் [ Wednesday,16 December 2015, 03:34:59 ] அவன் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பல் மற்றும் வர்த்தக நடவடிக்கைளை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், குறித்த நிறுவனத்துடன் அரசாங்கம் செய்துகொண்டிருந்து ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்தமையால் அவன் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40 ஆயிரம் மில்லியன் டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக நிறுவனத்தின் முன்னாள் வணிக கப்பல் முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் அவன் கார்ட் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்ற…
-
- 0 replies
- 594 views
-
-
'குற்றவியல் திருத்தச் சட்டம்: பழைய மொந்தையில் புதிய கள்ளு' 16-12-2015 05:04 AM குற்றவியல் விடயங்களின் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ், ஒழுங்குவிதிகள் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தத் திருத்தச் சட்டம், அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு, டிசெம்பர் 11ஆம் திகதிய ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1887 தண்டனைக் கோவையின் சில ஏற்பாடுகளுக்கு, புதிய ஏற்பாடு ஒன்றை புகுத்துவது, இந்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும் என்பதுடன், 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவி…
-
- 0 replies
- 528 views
-
-
கிளிநொச்சியில் நிரந்தரக் காணியின்றி 4224 குடும்பங்கள்; மாவட்டச் செயலகம் தகவல் [ Wednesday,16 December 2015, 05:02:55 ] கிளிநொச்சி மாவட்டத்தில் 04 ஆயிரத்து 224 குடும்பங்களுக்கு நிரந்தரக் காணிகள் இல்லாததனால், அவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாமல் உள்ளதாக மாவட்டச் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் கடந்த 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மீள்குடியேற்றம் இடம்பெற்றது. தற்போது இங்கு 42 ஆயிரத்து 862 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் இவர்களில் 15 ஆயிரத்து 592 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை எனவும் நிரந்தர வீடுகள் இல்லாதவர்களில் காணி இல்லாமல் 4,224 குடும்பங்கள் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வகுப்புத் …
-
- 0 replies
- 784 views
-
-
விசாரணை என்ற பெயரில் மக்களை குழப்ப முயற்சி; செல்வம் சீற்றம் [ Wednesday,16 December 2015, 02:49:22 ] காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது காணாமற்போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக விசாரனைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை தான் வண்மையாக கண்டிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வருகின்ற நிலையில், தமது உறவுகள் கிடைத்து…
-
- 0 replies
- 454 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பாகிஸ்தான் வசமாகி விட்டது! - ஜேவிபி குற்றச்சாட்டு [Wednesday 2015-12-16 08:00] காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி …
-
- 0 replies
- 430 views
-
-
பலியெடுக்கும் யாழ்.தேவி! கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி! கிளிநொச்சியில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஏ- 9 பாதையிலிருந்து கிளிநொச்சி உதயநகர் மேற்கிற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இச் சம்பவத்தில் பலியான வயோதிபர் உதயநகர் கிழக்கைச்சேர்ந்த 76 வயதான ராமசாமி பழனியாண்டி எனவும் வடக்கின் ரயில் பாதைகளில் இடம்பெற்ற 19 வது பலி எனவும் தெரிய வருகிறது. …
-
- 0 replies
- 418 views
-
-
புலிகளை ஆதரித்திருந்தால் இன்றும் நானே ஜனாதிபதியாக இருந்திருப்பேன்! -என்கிறார் மகிந்த [Tuesday 2015-12-15 09:00] புலிகளை ஆதரித்திருந்தால் இன்றும் நான் ஜனாதிபதியாகவே இருந்திருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். “எனது ஆட்சியில் தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு ஒருபோதும் இருக்கவில்லை. அதேபோல் இந்த நாட்டை துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கவில்லை. நான் நாட்டில் ஜனாதிபதியாக தலைமை ஏற்ற பின்னரே நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது புலிகளை ஆதரித்திருந்தால் இன்றும் நான் ஜனாதிபதியாகவே இருந்திருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். “எனது ஆட்சியில் தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற ஒரு நிலைப்ப…
-
- 2 replies
- 368 views
-