Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது.. இந்த யுத்தம் முடிவுறுவது எப்போது? உரியவர்கள் கவனம் எடுப்பார்களா? யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது, இந்தயுத்தம் குப்பைகளிற்கு எதிரானது. யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லுண்டாய் வெளியில் தினமும் குவியும் சுமார் 80 மெட்ரிக்தொன் கழிவுகளால் யாழ்நகரத்தின் சனத்தொகையின் குறிப்பிடத்தக்க அளவினர் பாரிய நோய் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இது குறித்து வடமாகாண முதலமைச்சரே ஆழந்த கவலைகொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் உள்ளன,யாழ் மாநாகரசரப இதற்கு தீர்வு காண மிகக்கடுமையாக முயல்…

  2. மாணவர்கள் மீதான தாக்குதல் : பாராளுமன்றில் சர்ச்சை கொழும்பு வோட் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தற்போது பாராளுமன்றில் விவாதம் நடைபெறுவதாகவும் இதனால் சர்ச்சை நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/11/03/மாணவர்கள்-மீதான-தாக்குதல்-பாராளுமன்றில்-சர்ச்சை

  3. 'சுமார் 1 ½ இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் வேகமாக பரவியது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தால் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கி நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடத்தப்பட்ட ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், '2009ஆம் ஆண்டுக்கு முன்னர் போதைப் பொருள் பாவனையென்பது முற்றுமுழுதாக இல்லாத மாவட்டமாக எமது வடமாகாணம் திகழந்தது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில விநியோகஸ்தர்களின் செயற்பாட்;டால் அதிகரித்த போதைப்பொருள் பாவனை,…

  4. "நான் அரசியல்வாதியல்ல உயர்நீதிமன்ற நீதியரசர்" - சி.வி.விக்னேஸ்வரன்:- உலகின் வலுவான நாடான அமெரிக்காவுடன் போரிட்டு மீண்டெழுந்துள்ள வியாட்நாம் மக்களிடம் இருந்து நாம் பலதை கற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது வாசஸ்தலத்தில் திங்கள் கிழமை காலை வியாட்நாம் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு சில அரசியல் காரணத்தால் கடந்த காலத்தில் வர முடியாது போனதாகவும் இங்கு வந்தால் பிரச்சனைகள் ஏற்படும் என தமக்கு கூறப்பட்டதாகவும் அதனாலையே கடந்த காலத்தில் வர முடியாது போனதாக வியாட்நாம் தூதுவர் தெரிவித்தார். உலகில் வலுவான நாடான அமெ…

  5. வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்புகள் வேண்டும்: சம்பந்தன் வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். - See more at: http://www.tamilmirror.lk/158215/வடக-க-க-ழக-க-ல-வ-ல-வ-ய-ப-ப-கள-வ-ண-ட-ம-சம-பந-தன-#sthash.TfZ0Mow7.dpuf

  6. இனவாதிகளுக்கு பயந்தே அரசு முடிவெடுப்பதில் தயக்கம் விமல் வீரவன்ச, உதய கமன்பில மற்றும் குணதாச அமரசேகர போன்ற இனவாதிகளுக்குப் பயந்தே தமிழ் அரசியல் கைதிகளை வி்டுவிக்க அரசாங்கம் தயக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்குவதென்ற உறுதிமொழியை ஜனாதிபதியும், பிரதமரும் காப்பாற்ற வேண்டும். இதனைக் காப்பாற்றத் தவறும் பட்சத்தில் கைதிகளுடன் இணைந்து போராட்டத்துக்கு இறங்க வேண்டி ஏற்படும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 90 வீதமானவர்கள் விசாரணைகளின் போ…

  7. மாலைதீவு இளைஞர் நாடு கடத்தப்பட்டார் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் பயணித்த படகில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார். மாலைதீவு தூதரகம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு எழுத்து மூலம் விடுத்த கோரிக்கையை அடுத்து, நேற்று முன்தினம் இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவின் நெதிமாலை பகுதியில் உள்ள வீட்டிலிருந்து 18 வயதுடைய அஷ்ரப் மொஹம்மட் என்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டார். நேற்று காலை 7.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் மாலைதீவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். நெதிமாலையில் உள்ள வீடொன்றில் அஷ்ரப்பும் அவரது தாயார் மற்றும் காதலி ஆகியோர் தங்கிய…

  8. யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பணியாளர்கள் கௌரவிப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களையும், சேவையில் 25 வருட காலத்தைப் பூர்த்தி செய்த பணியாளர்களையும், கௌரவித்து விருதுகள்,பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தலைமையில் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்று சித்தியடைந்தமைக்காக புலமைப்பரிசில்களும்,பரிசில்களையும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் வழங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் முக்கியமாக கொடூர போரின் வடுக்களை உடலில் சுமந்த…

  9. நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் : வடக்கு முதல்வர் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், யாழ்.பல்கலை ஊழியர்கள் மனமகிழ்வுடன் இருந்தால் தான் மாணவ சமுதாயம் வெற்றி வாகை சூடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. யாழ்.பல்கலையின் சமூகத்தின் கடந்த கால நடவடிக்கைகள் எம்மை மகிழ்வூட்டுகின்றன.குறிப்பாக பல்கலை அமைப்பு முறைக்கு மோசமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதை நீங்கள் எதிர்த்தீர்கள்,அரசியல் கட்சி ஒன்று அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு அச்சுறுத்தலை…

  10. என்னை சிறையில் போட்டாலும் தந்தை அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டார் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சில துரைமார் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பா அரசியலில் இருந்த ஓய்வுபெறாவிட்டால், ஏதாவது ஒன்றுக்காக உங்களை சிறையில் தள்ளுவார்கள் என தெரிவித்தனர். என்னை சிறையில் தள்ளினாலும் எனது அப்பா அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என்பதை நான் அந்த துரைமாருக்கும் தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/…

  11. முல்லைத்தீவில் இடம்பெறும் காடு அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சூழல் சமநிலை பாதிக்கப்படுவது தொடர்பில் விழிப்பாக இருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாவற்குளி நீரேரிக்கு அண்மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மரம் நடுகை மாதத்தின் தொடக்க விழாவின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், மனிதர்களின் தான்தோன்றித்தனமான போக்குகளால் இயற்கையின் சமநிலை பாதிப்படைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்த போதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்தகாலத் தவறுகளைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. மரங்களின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்ற நீர் ஆவியாகி மேலே செல்வதாலேயே மழைவீழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கின்…

  12. சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருள் அமைகின்றது என கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். கிளிநொச்சி முழங்காவிலில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற சிறுவர் முதியோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் துஷ;பிரயோகத்துக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருள் அமைகின்றது. ஜனாதிபதி கூட தேசியக்கொள்கையில் போதைப்பொருள் ஒழிப்பினை முக்கியப்படுத்தியுள்ளார். முழங்காவில் பகுதியில் 25 கிலோகிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றி குற்றவாளிகளையும் கைதுசெய்துள்ளதாக அறிந்தேன். போதைப்பொருட்களைப் பரப்பும் நபர்களை சட்டத்தின்முன் தண்டிப்பதன் ஊடாக சமூகத்தினைப் பாதுகாக்கமுடியும். பொலி…

  13. வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் குறிப்பிட்டார். கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமாகாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. குறிப்பாக கொலைச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றது. இதேவேளை நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையைில் 2014ஆம் ஆண்டு ஐ…

  14. அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு, தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலிருந்து, அரசாங்கத்துடன் தொடர்பில் காணப்படுவதாகத் தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக எதிர்காலத்தில், நாடாளுமன்றமானது அரசியலமைப்புச் சபையாக மாற்றப்படுமெனத் தெரிவித்த அவர், இந்த விடயம் பற்றி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக அரசாங்கமானது, அனைத்துக்…

  15. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்ந்து வரும் அடை மழை காரணமாக வீதிகள், பாடசாலைகள் உட்பட பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். http://virakesari.lk/articles/2015/11/03/மட்டுமாவட்டத்தில்-கடும்-மழை-பல-குடும்பங்கள்-இடம்பெயர்வு

  16. "சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்கவேண்டும். இது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக எஞ்சியுள்ள ஒரே வழி. எமது சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு. இறந்த பின்னர் எமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்…

    • 0 replies
    • 1.4k views
  17. வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள், விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25ஆவது ஆண்டு நிறைவு நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 'இனச்சுத்திகரிப்பு' நடவடிக்கை குறித்து தாம் வெட்கப்படுவதாகவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைக்கு அன்று எதிர்ப்பு தெரிவிக்காத தமிழர்கள் அனைவரும் இந்த வரலாற்றுத் தவறுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம்கூட ஒரு 'போர்க் குற்றமே'என்றும் தெரிவித்திருக்கிறார். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறித்து சர்வதேச அளவில…

  18. ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான போராட்டத்தை மாத்தறையில் இருந்து தொடங்குகிறது மஹிந்த அணி! [Tuesday 2015-11-03 07:00] இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. இதன்படி முதற்கட்ட எதிர்ப்பு நடவடிக்கை இம்மாத நடுப்பகுதியில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்…

  19. தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது புதிய அரசியல் கூட்டணி குறித்து அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 30.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/nz0xdpszpo5z

  20. "ஐ.நா. தீர்மானம் தொடர்பாக சிங்கள தரப்பு மேற்கொள்ளும் அவசர அவசரமான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பு தயாராகவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது" : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 30.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான யதீந்திரா வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/bsbsxormqx0o

  21. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியத் தேவையில்லை. முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப்பில்லை. இது இன பாதுகாப்பே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொ ரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனசுத்திகரிப்பு எனவும் கூறிய கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அரியநே;திரன் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்தானது அவரின் சொந்தகருத்தே தவிர அது தமிழ்த் தேசியகூட்டமைப்பின் கரு…

    • 3 replies
    • 810 views
  22. இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு முன்னிலை சோசலிசக் கட்சி எனக் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. “இது வீரர்களின் மாதமாகும்" என்ற வாசகத்துடன் விலங்கை உடைத்தெறியும் கைகள் போன்ற படமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளால் சாவகச்சேரிப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும் ஒரு விதமான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/2279

  23. ஜனாதிபதி மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமென பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஓர் அமைச்சர் என்கிற முறையில் ஜனாதிபதிக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ப…

  24. அரசியல் கைதிகள் விடுதலை: வடக்கு முதல்வரின் தலையீடு அவசியம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய வடமாகாண முதலமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறப்பாக அமையும் என அரசியல் கைதிகள் விரும்புவதாக அரசியல் கைதிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சில அரசியல்வாதிகள் மத்தியில் அரசியல் கைதிகளுக்கும், பெற்றோராகிய எமக்கும் நம்பிக்கை அற்று போயுள்ளது. சில தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் கைதிகளை த…

  25. தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்? - சி. சிவமோகன் கேள்வி [ Saturday,31 October 2015, 10:11:16 ] எந்த தவறும் செய்யாத தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று சனிக்கிழமை வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், நான் வன்னி மண்ணில் வாழ்ந்தவன். எமது பிரதேசத்தில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அரசபடைகள் அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கி வந்தது. இதற்கு உறுதுணையாக அரச அதிகாரிகளும் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.