ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கொக்குவில் பிலிப் ஜெயநாயகம் கொலை வழக்கு: குற்றவாளிக்கு 12 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை யாழ்ப்பாணம் கொக்குவில் ரபேல் பிள்ளை பிலிப் ஜெயநாயகம் என்பவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு 12 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ரபேல் பிள்ளை பிலிப் ஜெயநாயகம் என்பவரை சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பினால் பிடரியில் அடித்துக் கொலை செய்ததாக, இராமநாதன் கைலாசபிள்ளை என்பவருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர…
-
- 0 replies
- 747 views
-
-
கொக்குவில் பகுதியில் வாள்களுடன் ஐவர் கைது கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம் மூன்று மோட்டார் வாகனத்தில் வந்த ஐவரை பொலிஸார் மறித்து சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து வாள் மற்றும் கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த ஐவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எந்த வித ஆவணங்களும் அற்ற நவீன ரக மிகவும் பெறுமதியான மோட்டார் வாகனங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் யாழ். நீதிமன்ற தாக்குதலில் கைது செய்யப்பட்டு ஆள் பிணையில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவராவார். இதேவேளை குறித்த ஐவரும் இன்றைய தினமே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார். h…
-
- 0 replies
- 752 views
-
-
பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம் நாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடக அமைச்சருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் இந்த நாட்டில் அமுலில் இருப்பது போல இணையத் தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் போதுமானதாகவும், வலுவானதாகவும் இல்லாமையால் எண்ணிலடங்காத இணையத்தளங்கள் இந்த நாட்டுக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதும், பொறுப்புக்கூறும் கடமையோ, கட்டுப்பாடோ இல்லாமையால் செயற்படுகின்ற…
-
- 2 replies
- 589 views
-
-
இராணுவ பாடசாலைக்கு மில்லியன் கணக்கில் செலவிட்ட மகிந்த இராணுவத்தினரின் குழந்தைகள் கல்விகற்கும் பாடசாலைக்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மில்லியன் கணக்கில் நிதி வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனைக்கிணங்க, கொழும்பு கொம்பனித்தெருவில் கடந்த 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பாடசாலைக்கே இவ்வாறு நிதிவழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் மாத்திரம் குறித்த பாடசாலைக்கு 448.1 மில்லியன் ரூபா நிதி, அமைச்சரவை அனுமதியுடன் ஒதுக்கப்பட்டு அதில் 98.1 மில்லியன் ரூபா செலவில் பாடசாலைக்கு மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் பல பாடசாலைகள் அடிப்படை வசதிகள்கூட இல்…
-
- 0 replies
- 355 views
-
-
போலி கடவுச்சீட்டுடன் பருத்தித்துறை இளைஞன் கைது போலியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞரொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி கடவுச்சீட்டில் கனடா நாட்டுக்குரிய போலி விசாவும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். http://onlineuthayan.com/news/693
-
- 1 reply
- 398 views
-
-
வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் எஸ்.லெலின்குமார், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு குறித்த உத்தரவை பிறப்பித்ததோடு, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். வித்தியா கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள் 9 சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கடந்…
-
- 1 reply
- 670 views
-
-
வெளிவிவகார அமைச்சு மக்களை பிழையாக வழிநடத்துகின்றதா என கொழும்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது? இலங்கை வெளிவிவகார அமைச்சு வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உத்தேச தீர்மானம் குறித்த ஆவணம் சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் வெளிவிவகார அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசூரத்தில் சிங்கள மொழி பெயர்ப்பில் வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் சில விடங்களில் பிழையான வழிநடத்தல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உத்தேச தீர்மானத்தின் ஆறாம் மற்றும் எட்டாம் பந்திகள் மிக முக்கியமானவை எனவும், இவற்றின் ஆங்கில உள்ளடக்கத்திற்கும் சிங்கள …
-
- 0 replies
- 298 views
-
-
அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில் ஊடகங்களில் பல்வேறான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. அதுமற்றுமன்றி எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர், தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அவரால், இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமையால், அந்த சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தது. அதில், புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கு…
-
- 3 replies
- 647 views
-
-
ஒபாமா- மைத்திரி சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துபசாரத்திற்கு இடைநடுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பரக் ஒபாமாவை சந்தித்து கைலாகு செய்து சொற்ப நேரம் பேச…
-
- 0 replies
- 795 views
-
-
தீப்பெட்டி வழங்க மறுத்த வர்த்தகர் மீது தாக்குதல் நபர் ஒருவர் பீடி பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி கேட்டபோது வர்த்தகர் கொடுக்க மறுத்ததால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சாவகச்சேரி பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றது. வர்த்தக நிலையத்துக்கு வந்த ஒருவர் பீடி பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி தருமாறு வர்த்தகரைக் கேட்டுள்ளார். பொது இடத்தில் பீடி பற்ற வைக்கக்கூடாது எனக் கூறிய வர்த்தகர் தீப்பெட்டி இல்லையயனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட பொருள்களைத் தூக்கி வீசியதுடன் வர்த்தகரையும் சோடாப் போத்தலை உடைத்து தாக்கியுள்ளார். கையில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான வர்த்தகர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சே…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளித்ததாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அது ஒருமித்த கருத்தொன்று அல்ல எனக் குறிப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. சர்வதேச விசாரணை ஒன்றை நாம் கோரிவந்த நிலையில் ஆகக் குறைந்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல…
-
- 6 replies
- 690 views
-
-
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல மோட்டர் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திங்கள் இரவு துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு வியாபார நடவடிக்கையில் முடிவடைந்து கடையை பூட்டிவிட்டு வீடு சென்ற உரிமையாளர் இன்று காலை 8 மணிக்கு கடையை திறப்பதற்காக வந்த போது கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கடையின் முன்பக்க வாயில் கதவின் 8 பூட்டுக்களையும் உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கடையில் உள்ள பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை,…
-
- 0 replies
- 240 views
-
-
குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென பொலிஸ் தலைமையகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றுவோர் மற்றும் குடியிருப்பவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் பலவற்றுக்கு தற்காலிக அடிப்படையில் தங்கியிருந்தவர்கள் பணியாற்றியவர்களே பொறுப்பு என்ற காரணத்தினால் இவ்வாறு பதிவிற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ்…
-
- 0 replies
- 532 views
-
-
இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பமானது. ஆனால் குறித்து சென்ற கேள்விகள் ஊமையாய் உறங்கிய அழுத்தம் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியது கனடா வந்த சுமந்தரனிடம் கேள்வி கேட்க சென்ற என் போன்ற மக்களை குரல் எழுப்பி கேள்வி கேட்க விடாமல் துண்டெழுதி கேள்வி கேட்க வைத்து, படித்தது பாதி படிக்காதது பாதி, கேள்வியை திரிபு படுத்தி படித்தது பாதி, என நுனிப் புல் மேய்ந்து சாதுரியமாக பதில் என்ற பெயரில் எதையோ சொல்லி தட்டிக் கழித்து தப்பித்தார் சுமந்திரன். சபை ஊமைகள் அரங்கானது….நம்புங்கள்.. நாம் ஊமைகளாகவே இருக்க பணிக்கப்பட்டோம். பேச்சு வன்மை உள்ளவர் தான்.. மறுக…
-
- 3 replies
- 1.2k views
-
-
தீர்மானம் என்ற புஸ்வாணம் ப. தெய்வீகன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் விசாரணைசெய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நாளைய தினம் ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவுள்ளது. எந்த விதமான எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தீர்மானத்தின் எதிர்காலம் குறித்த ஜோதிடங்களுக்கெல்லாம் அப்பால், இந்த தீர்மானத்தில், அமெரிக்கா உட்பட அதன் உறுப்புநாடுகள் எவ்வளவு தூரம் நீதி நியாயத்துடன் நடந்துகொண்டன என்பதுதான் பாதிக்கப்பட்ட தரப்பை; பொறுத்தவரை வேதனைகொள்ளவேண்டிய விடயமாக நோக்கப்படவேண்டியுள…
-
- 0 replies
- 567 views
-
-
ஒக். 2 இல் யாழில் அஹிம்சை தினம் அனுஷ்டிப்பு :சம்பந்தன் பங்கேற்கிறார் காந்தி ஜெயந்தி தினமான ஒக்ரோபர் 2ஆம் திகதி யாழில் சர்வதேச அஹிம்சை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 4 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கின்றார். இந்தியத் துணைத்தூதுர் கே.நடராஜன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கவிஞர் சோ.பத்மநாதன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தயானந்தராஜா, பேராதனை பல்கலைக்கழக மாணவி கே.தயாளினி ஆகியோர் உரையாற்றவு…
-
- 0 replies
- 474 views
-
-
சிறுவர், பெண்கள் வன்முறைக்கு எதிராக யாழில் நடைபயணம் சிறுவர் பிரச்சினை மற்றும் பெண்கள் வன்முறைக்கு எதிராக யாழ். நகரப்பகுதியில் நடைபயணம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பம் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடைபயணம் யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக காலை 9.30 மணயிளவில் ஆரம்பமாகி யாழ். மாவட்ட செயலகத்தில் நிறைவடையவுள்ளதாகவும், நடைபயணத்தின் நிறைவில் சிறுவர் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை …
-
- 0 replies
- 404 views
-
-
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு : வலியுறுத்தி கையெழுத்து வேட்டை பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வுபடு கொலைகளைக் கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக் குத்தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரியும் நேற்று வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது. இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் பெருமளவானவர்கள் கையெழுத்திட்டனர். அண்மையில் இடம்பெற்ற புங்குடுதீவு பாடசாலை மாணவி மற்றும் கொட்டதெனியா 5 வயதுச் சிறுமி ஆகியோர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று …
-
- 0 replies
- 186 views
-
-
சட்டவிரோதக் குடியேறிகளை அனுமதிக்காது ஆஸி. :ரொபின் மூடி ஆஸ்திரேலியாவுக்குப் படகுகள் மூலம் சட்டவிரோதமாக வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ரொபின் மூடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியப் புதிய பிரதமராக மல்கோல்ம் ரேன்புல் அண்மையில் பதவியேற்றார். இந்நிலையிலேயே தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:- ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாக வரும் குடியேற்ற வாசிகளை அனுமதிப்பதில்லை எனப் புதிய பிரதமரும் அறிவித்துள்ளார். இந்த விடயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கையின் ஒத்துமைப்பு உள்ளது. இவ்வாறு படகுகள் மூலம் வருபவர்கள் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது ஆஸ்திரேலிய பிராந்தியமான பப்ப…
-
- 0 replies
- 638 views
-
-
பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகள் தடை பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்தப் படுவதைத் தடைசெய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரமான காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இன்னும் சில நாள்களில் முடிவெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரங்களிலும், தனியார் வகுப்புகளை தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. இதனால் பாடசாலைக்கு வருவதைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை நிறுத்தும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் வகுப்புகளை முழுமையாகத் தடைசெ…
-
- 0 replies
- 315 views
-
-
வடமாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு: அமைச்சர் சத்தியலிங்கம் வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கு மாகாணத்தில் போரின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இறுதிப்போரின் போது காயமடைந்து பலர் சுயமாக இயங்க முடியாதவர்களாக காணப்படுகின்ற…
-
- 0 replies
- 562 views
-
-
அரசமைப்பு மாற்றத்தினூடாக மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை : ஜனாதிபதி புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம்,மனித உரிமை ஆகியவற்றை மேமம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் அங்குள்ள விகாரையொன்றுக்குச் சென்றார். இங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசுக்கு சர்வதேச சமூகம் பாரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்றும், மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்த…
-
- 0 replies
- 189 views
-
-
முன்னாள் புலிகளை சிறை வைக்க முயற்சி : வழக்குத் தாக்கல் செய்வதற்கு தயாராகிறது ஜாதிக ஹெல உறுமய உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவரும் புலிகளின் உறுப் பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் குறித்து கட்சியின் சட்டத் தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித படுகொலைகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சமாதானத்தை சீர்குலைத்தமை, சிறுவர் போராளிகளை படைய…
-
- 0 replies
- 246 views
-
-
அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே விசாரணை பொறிமுறை அமையும் : பிரதமர் ரணில் ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு இணங்க விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்தார். அத்தோடு இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தின் முழுமையான அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்படும் என்றும் உண்மை, நல்லிணக்கத்துக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பு ஹைட்பார்க் சந்தியிலுள்ள பிலிப் குணவர்தன விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மாநகர சபைக்கு உரித்தான இரண்டு மாடிக் கட்டடமும் நேற்றைய தினம் பிரதம…
-
- 0 replies
- 170 views
-
-
உண்ண உணவில்லை என்றாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் , அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்வதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண சுற்றுலாத்துறை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் இவ்வருடத்தைய கருப்பொருளானது சற்று வித்தியாசமாக அமைந்…
-
- 3 replies
- 855 views
-