Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும். பொது விதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/310643

  2. முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக் கோரியவர்கள் இவர்கள்தான். இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச் சம்பாத்தியம் செய்கிறார்கள். இந்தப் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இ…

  3. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை நிலத்தினுள் புதையுண்டிருந்த வெடி பொருள் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/196213

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்ல-வில் இயங்கும் இலங்கை மலையக ரயில் சேவை 13 அக்டோபர் 2024, 12:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான, நம்பகமான, மற்றும் சரியான நேரத்தில் ரயில் போக்குவரத்துச் சேவையை குறைந்த செலவிலும் திறமையான முறையிலும் வழங்குவது’ இலங்கை ரயில்வே துறையின் நோக்கம். ஆனால், இதுகுறித்து இலங்கை பொதுமக்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம்: இந்தியத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மலையகப் பாதையில் ரயில் சேவையைக் குறைக்க முடிவு …

  5. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தப் பதவி நாசமாக்கப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். – இவ்வாறு வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன். “வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடி செய்ததால் அமைச்சரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சத்தியலிங்கம் தற்போது வன்னி மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாள…

  6. 11 OCT, 2024 | 02:48 PM இஸ்ரேல் லெபனானில் கிராமமொன்றை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலில் இலங்கையை சேர்ந்த இரண்டு அமைதிப்படையினர் காயமடைந்துள்ளனர். இராணுவ பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196033

  7. திருகோணமலை: புனித பூமி என்ற போர்வையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்! October 13, 2024 திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது. குறித்த சம்பவம் இடம்பெற்ற்றுள்ளது. புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் முஸ்லீம் பெண் ஒருவர் மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குறித்த பகுதியில் மயானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இதன்போது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை கா…

  8. இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. R Tamilmirror Online || மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர

  9. ரணில் 26 மாதங்களில் 24 நாடுகளுக்கு பயணம்! செய்திகள் ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளுக்கும் 2024ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப குறித்த ஆண்டுக்காக ஜனாதி…

  10. பிரம்படி படுகொலை நினைவேந்தல்! adminOctober 13, 2024 யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை (12.10.24) முன்னெடுக்கப்பட்டது. பிரம்படி பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர். https://globaltamilnews.net/2024/207454/

  11. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். ” இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்…

  12. டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) குற்றம்சாட்டியுள்ளார். குறித்த விடயத்தை இன்று (12) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது ஆனால் இன்று சுயநலவாதிகளின…

  13. திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்கள் தெரிவுக்கு 217 வேட்பாளர்கள் போட்டி -03 கட்சிகள், 03 சுயேச்சைக் குழுக்கள் நிராகரிப்பு திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக களத்தில் 17 கட்சிகளின் சார்பில் 119 வேட்பாளர்களும், 14 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 98 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். அத்துடன் இம்முறை கட்சிகள் பல பிரிந்து புதிய அணிகளாக போட்டியிடுவதால் மாவட்டத்தில் கடும் போட்டி நிலை உருவாகியுள்ளது. 20 கட்சிகள் வேட்புமனுவை கையளித்த போதும் அவற்றில் 03 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 03 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. …

    • 1 reply
    • 228 views
  14. தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு kugenOctober 12, 2024 தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்…

  15. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது. கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195803

  16. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தனது சொத்துக்கள் குறித்த கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption)அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொத்துப் பிரகடனங்களை மீள சமர்ப்பிக்க வேண்டும் என புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்கத் தொடங்கியுள்ளனர். சொத்துக்கள் மற்றும் கடன்கள் பொதுவாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் போது,…

  17. மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்று சனிக்கிழமை (12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 10 வது கெமுனு கோவா படைப் பிரிவினால் அமைக்கப்பட்ட குறித்த வீடு தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.பி.ஏ.ஆர்.பி ராஜபக்ஷ தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது. இதன் போது குறித்த வீட்டை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல், ஜே.பி.சி.பீரிஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்து குறித்த குடும்பத்திடம் கையளித்தார். மேலும் குறித்த வீட்டு வளாகத்தில் மர நட…

  18. யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் இன்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196117

  19. யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https:…

  20. நாம் ஒரு பலமான எதிர்க்கட்சியாக வருவோம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சர்வஜன அதிகார கட்சியானது, நாடு முழுவதும் அதிகளவிலான ஆசனங்களைப் பெற்று ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு, நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனவும் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவரும், சட்டத்தரணியுமான சாதிக்குள் அமீன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பதக்கம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந…

  21. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளிடம் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கடிதம் மூலம் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண்பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று விசாரிப்பது, முறையற்ற தொடுகைகளில் ஈடுபட்டது என பெற்றோர்கள் முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்த பிள…

  22. தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே. இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று (12) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் எனும் தலைப்பிலான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51/1 இலக்க தீர்மானத்தினை ஏற்க மாட்டோம…

  23. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவை (ஓய்வு) இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்தார். சம்பத் துய்யகொந்தவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சந்திப்பின் போது தூதுவருடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டார். இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்டாவும் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/196090

  24. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். "இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட…

  25. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளனர். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தொடர்பில் பலரும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவில்லை என தெரிவந்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமரும் அலரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.