Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்ச்சைக்குரிய கிணற்றை இன்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 26 ஆம் திகதி மாலை 3 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் கிணறு அடையாளம் காணப்பட்டது. இதன்போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோரும்இ மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். இதன் போது போக்குவரத்திற்காக இப்பாதை மூடப்பட்டு கிணற்றை அடையாளப்படுத்துவதற்கு இங்கு காணப்படும் பற்றைக்காடுகள் அ…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதிகாரத்தைப் பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில், அதிகாரத்தைப் பகிர்வதாக கூறி வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்தினால், மீண்டும் பறித்தெடுத்துக்கொள்ள முடியும் என்பதால் தாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆகவே அதிகாரத்தைப் பகிராமல் அதிகாரத்தை தங்களிடமே தந்துவிடுமாறே கோருவதாகவும், அதன்போது அதிகாரம் தங்களிடமே நிரந்தரமாக இருக்கும் என்றும், …

  3. லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட, காணாமல் போன சம்பவம் குறித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த இராணுவ உத்தியோகத்தர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு லெப்டினன் கேணல்கள், ஒரு இராணுவ சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் உள்ளிட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும், இரண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உ…

  4. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதினொரு பாராளுமன்ற ஆசனங்களை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றது. மாத்தறை மற்றும் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் தகுதியிழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.இலங்கையின் புதிய சட்டங்களின் அடிப்படையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான அரசாங்கம், 19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தது.இந்த திருத்தச் சட்டத்தில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் இலங்கையில் தேர்தலில் போட்டியிட்டு பதவி வகிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் காலி மற்றும் மாத்தறை…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை தொடர்பில் திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம், இன்றைய தினம் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தலைமை தாங்கிய ராடா நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தலைமை தாங்கிய ராடா நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகவும் புனரமைப்பதாகவும் தெரிவித்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. வீடுகளை நிர்மானிப்பதற்காக 645 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் பெற்றுக்கொண்ட இந்த நிறுவ…

  6. வடமாகாண கால்நடை அமைச்சின் ‘தகர்’ திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வியாழக்கிழமை (27.08.2015) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ‘தகர்’ என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும். இதனைப் பெயராகக் கொண்டு ‘தகர் வளர் துயர் தகர்’ என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றைக் கடந்த ஆண்டில் இருந்து செயற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே தற்போது நல்லூர் மூத்தவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு யமுனாபாறி ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மூத்தவிநாயகர் சனசமூக நிலைய…

  7. ஹெவ்லொக்ஸ் அணியின் முன்னாள் தலைவரும் பிரபல ரக்பி வீரருமான வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் இருவர் தப்பிச் சென்றதனை, தாஜூடீனின் குடும்ப உறுப்பினர்கள் கண்டு பிடித்துள்ளனர். சட்டத்தரணிகளை இத்தாலிக்கு அனுப்பி, சந்தேக நபர்கள் தங்கியிருக்கும் மற்றும் தொழில்புரியும் இடங்களை கண்காணித்து அந்த தகவல்களை, புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமானவரே இந்த இருவரும் இத்தாலிக்கு தப்பிச்…

  8. மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரசியல் மிருகம்! - என்கிறார் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட[Friday 2015-08-28 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரசியல் மிருகம் அதிகாரம் இன்றி அவரால் இருக்க முடியாது என்று என்று பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரான ஜயதேவ உயங்கொட பைனான்சியல் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் உயங்கொட, கடந்த கால அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் போது வெளிவரும் தகவல்கள் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரானதாகவே …

  9. எங்கள் பாதுகாப்பு எங்கள் கைகளில்’ எனும் தொனிப் பொருளில் நல்லூரில் விழிப்புணர்வு எங்கள் பாதுகாப்பு எங்கள் கைகளில் எனும் தொனிப்பொருளில் யாழ் .போதனா வைத்தியசாலையின் என்பு முறிவு பிரிவும், 35 ஆம் அணி மருத்துவ பீட மாணவர்களும் இணைந்து நடாத்தும் வீதி விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வுக் கண்காட்சியும் இரத்ததான முகாமும் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூர் பொதுச் சுகாதார மருத்துவ அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வு அடுத்தநாள் 29 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் மறுநாள் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 8 மணி வரையும் தொடர்ந்து நடைபெறும். இந்நிகழ்வின் போது கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் பற்றிய ஒளி நாடாக்களும் இவிபத்துக்களைக் குறைப்பதற்…

    • 3 replies
    • 500 views
  10. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமாம் இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் குறித்த நாடுகள் அது தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க மறுக்கின்றன. கடந்த ஆறு மாத காலத்தினுள் சுமார் 840 பேர் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிடவில்லை. இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி செல்லும் பெருமளவானோர் நேபாளம் ஊடாகவே பயணிக்க…

  11. பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது : நீதியமைச்சர் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசரமாக ரத்து செய்யப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல்களைக் கண்காணிக்கும் கபே அமைப்பு அரசாங்கத்திடம் கோரியிருந்தது. எனினும், அதனை விடவும் முக்கியமான விடயங்கள் காணப்படுவதாகவும் அவசர அவசரமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்தல் குறித்து கவனம் செலுத்தப்பட மாட்டாது எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் உடனடியாக சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமெனவும் கபே அமைப்பினால் கோரிக்கை விடு…

  12. 2 அலுகோசு வேலைக்கு 13 விண்ணப்பங்கள் அலுகோசு பணியாட்கள் தேவையென்று வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தையடுத்து, தமக்கு 13 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பணிக்கே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாகவும் இந்த விளம்பரம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், நீதி அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அருண அத்தபத்து தெரிவித்தார். தற்போது வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரிகள் நவம்பர் மாதத்துக்குள் தெரிவு செய்யப்படுவர் என்றும் தெரிவு செய்யப்பட்டோருக்கு இரண்டு கிழமைகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என…

  13. சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை - கொலைகார சிங்கள அரசிடமே போர்க்குற்ற விசாரணை ஒப்படைப்பு : - வைகோ[Friday 2015-08-28 07:00] ஈழத்தமிழ் இனம் இன்றைய உலகால் சபிக்கப்பட்ட இனம் போலும்; சில நாடுகளின் தொடர் துரோகங்களால் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுத் துன்ப நரகத்தில் தள்ளப்படும் கொடுமை புதியபுதிய பரிமாணங்களை அரங்கேற்றுகிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனத் தனி அரசு அமைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழந்தமிழர் பண்பாட்டைப் பாதுகாத்து மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் ஆங்கிலேயரும் அடுத்தடுத்துப் படை எடுத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் அதுவரை தனித்தனியாக இருந்த சிங்களர்களையும், தமிழர்களை…

  14. அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது : ராமதாஸ் [Friday 2015-08-28 07:00] இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையில், அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வேதனை அளிக்கும் போதிலும், இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் அதிர்ச்சி அளிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கையில…

  15. அதிகார ஒப்படைப்பையே கோருகிறோம்! - சுமந்திரன்[Friday 2015-08-28 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறு தான் வலியுறுத்துவதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது- அதிகாரப் பகிர்வின் போது வழங்கிய அதிகாரத்தை மீண்டும் பறித்தெடுத்துக் கொள்ள மத்திய அரசாங்கத்தினால் முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை. எங்களது கோரிக்கை என்னவென்றால் அதிகாரத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் என்…

  16. சுசில் நம்பிக்கைத் துரோகி! - என்கிறார் வாசுதேவ[Friday 2015-08-28 07:00] சுசில் பிரே­ம்­ஜயந்த நம்­பிக்­கை ­து­ரோகம் இழைத்து விட்டார் என்று முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார குற்­றம்­சாட்­டினார். இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி மேலும் தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளி­யிலும் மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் ஜன­நா­ய­கத்­திற்­கா­கவும் குரல் கொடுப்போம். எமக்கு ஆத­ர­வாக 50 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அவர்கள் ஆத­ர­வுடன் எதிர்க்­கட்­சி­யாக செயல்­ப­டுவோம். ஒரு போதும் தேசிய அர­சாங்கம் என்ற பொய்­யான மாயை­யை காட்டிக் கொண்டு மேற்­கு­லக நாடு­களின் சேவ­க­னாக செயல்படும் ஐ.தே.கட்­சி­யுடன் இணை­ய­மாட்டோம். எதிர்க்கட்­சியின் தலைவர் பத­விக்கு குமார வெல்­…

  17. உள்ளூராட்சித் தேர்தலில் குதிக்க புதிய கூட்டணியை உருவாக்குகிறார் சோமவன்ச! [Friday 2015-08-28 07:00] உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய முன்னணி ஒன்றை பதிவு செய்யவுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த முன்னணியில் குடியியல் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னணி பெரும்பாலும் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும். எனினும் அதன் பெயர் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் சோமவன்ச தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=139229&category=TamilNews&language=tamil

  18. பிரகீத் குறித்து ஐ.நாவில் பொய் கூறிய முன்னாள் பிரதம நீதியரசரிடமும் விசாரணை! [Friday 2015-08-28 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடமும் விசாரணை நடத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர். பிரகீத் எக்னெலிகொட வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக மொஹான் பீரிஸ் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அமர்வொன்றில் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து இவ்வாறான பொய்யான தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். குறித்த பொய்யான தகவலை முன்னாள் பிரதம நீதியரசர் வேண்டுமென்றே வெளியிட்டாரா? அல்லது தவறான வழிநடத்தல் காரணமாக அவர் இத்தகவலை வெளியிட்டாரா என்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கி…

  19. ஐ.நா அறிக்கையை இலங்கை எதிர்க்கக்கூடாது! - அமெரிக்கா[Friday 2015-08-28 07:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகிய பின்னர் அரசு தம்மை நியாயப்படுத்தி, அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசு கடந்த காலத்தை தைரியமாக எதிர்நோக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிம…

  20. உள்ளக விசாரணையை பக்கசார்பின்றி நடத்த வேண்டும்! - மகிந்த சமரசிங்க[Friday 2015-08-28 07:00] ஜெனிவாவில் அடுத்தமாதம் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட இருக்கும் பிரேரணையை சரிவர பயன்படுத்தா விட்டால் இனியும் சந்தர்ப்பம் கிடைக்காது என முன்னாள் மனித உரிமை விவகார அமைச்சரும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்த போது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசினால் அதனை செப்டம்பர் வரை பின்போட முடிந்தது. இது தானாக நடந்ததல்ல. இதற்கான பின்ன ணி…

  21. இலங்கையில் மாதாந்தம் 20 பேருக்குத் தொற்றுகிறது எய்ட்ஸ்! [Friday 2015-08-28 07:00] மாதம் தோறும் எச்.ஐ.வி.எய்ட்ஸ் வைரஸ் தொற்றிய 20 பேர் கண்டுபிடிக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத் திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதல் மாத காலப் பிரிவில் 126 எய்ட்ஸ் நோயாளர்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அநேகர் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் காரணமாக வைரஸ் பரவியுள்ளது. இலங்கை மன்ற நிறுவனத்தில் மூன்று நாள் வேலைத் திட்டம் ஒன்றின் மூலம் எய்ட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர் களுக்கு அறிவூட்டப்பட்டது. 15 குழுக்கள் இதுவரை பயிற்றுவிக் கப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்கு ஒரு கோடி ரூபாவைச் செலவிட்டுள்ளது. 1986ஆம்ஆண்டு முதல் இ…

  22. சிறுவயதிலே பாடசாலை இடைவிலகுபவர்கள் சமூக சீரழிவுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் : ஜெயசேகரம் சிறுவயதிலே பாடசாலை இடைவிலகுபவர்கள் போதைவஸ்து, குடிபோதை, கோஸ்டி மோதல் போன்ற சமூக சீரழிவுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் என வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலை இடைவிலகிய மற்றும் இடைவிலகும் தருவாயில் இருக்கும் மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைப்பதற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் எமது வடமாகாணமே ஆகக்கூடிய பாடசாலை இடைவிலகிய மாணவர்களை கொண்டுள்ளதால் எமது வணிகர் கழகம் கூடிய கரிசனை எடுத்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. போர் க…

    • 0 replies
    • 232 views
  23. யாழ்.பல்கலையில் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் :பாலசுந்தரம்பிள்ளை இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் கல்வியில் பின்னடைவு என்பது கவலைக்குரிய விடயமாகும். அதாவது போர் மற்றும் பிரதேசத்தின் பின்தங்கிய நிலை காரணமாகவும் கல்வியில் சற்று பின்தங்கி நிற்கின்றோம் என யாழ்.பல்கலையின் முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். நேற்று யாழ்.பிரதேச செயலகத்தில் பாடசாலைக்கல்வியில் இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக யாழ்.பல்கலையில் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழர்களாக…

    • 0 replies
    • 239 views
  24. சர்வதேச விசாரணையே வடக்கு மாகாணசபையின் நிலைப்பாடு! - ஜப்பானிய இராஜதந்திரியிடம் சிவிகே [Thursday 2015-08-27 18:00] வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போர் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை தான் என்று சொல்லி வருகின்ற நிலையில் அது பற்றி எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அவ்வாறு சொல்வது அவர்களுடைய நி…

    • 0 replies
    • 393 views
  25. Tuesday 2015-08-25 07:00] தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற…

    • 10 replies
    • 959 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.