ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நில அளவையாளர் திரு. கனகையா அழகேந்திரன் வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு வேட்பாளர். இவரையே நான் சிபாரிசு செய்தேன். திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசா வெற்றி பெறக்கூடிய வேட்பாளரோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ அல்ல என்பதினால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரைச்சிபாரிசு செய்தவர்களே வெற்றிக்கு உழைக்கவேண்டும் என வடமாகாணசபையின் துணை அவைத் தலைவரும், தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளைத் தலைவருமான அன்ரனி ஜெயநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ம.அன்ரனி ஜெயநாதன், தலைவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, முல்லை மாவட்டக் கிளை, 10.07.2015. கௌரவ மாவை சேனாதிராஜா, தலைவர…
-
- 0 replies
- 353 views
-
-
நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121937/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 165 views
-
-
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 261,422 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆறு பேரை தெரிவு செய்வதற்கு 19 அரசியல் கட்சிகளும், 11 சுயேச்சை குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன. இவற்றுள் புதிய சிகல உருமய கட்சியினதும், ஒரு சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே 6 பேரை தெரிவு செய்வதற்கு மொத்தம் 252 பேர் போட்டியிட உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்புஇஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும், முன்னாள் நாடா…
-
- 0 replies
- 312 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். சமல் மற்றும் நிருபாமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரிற்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதன் மூலம் பிரபலமான அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணாண்டோவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121944/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 149 views
-
-
தேர்தல் வேட்பு மனுவைத்தாக்கல் செய்வதற்கான இறுதி தினமான இன்று பரவலாக தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. முக்கிய கட்சிகள் வேட்பு மனுவை தாக்கல் செய்த வேளை தேர்தல் சட்டங்களிற்கு மாறாக வாகனப்பேரணிகள் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. குருநாகல் , காலி மற்றும் வன்னி மாவட்டத்திலேயே தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறி ஆறு வாகன பேரணிகள். இடம்பெற்றன,குருநாகலிலும் நகரத்திற்கு வெளியே பல வாகனப்பேரணிகள் இடம்பெற்றன,வன்னி மாவட்டத்தில் ஓரு வேட்பாளர் 120 வாகனங்களில் பேரணியாக சிலாவத்துறையிலிருந்து வ…
-
- 0 replies
- 126 views
-
-
தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரம்: யாழ் மாணவனின் அரிய கண்டுபிடிப்பு! July 13, 20151:15 pm யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாயபீட மாணவனொருவன் அரிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளார். தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். விவசாயபீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல்துறை மாணவனான வாகீசன் டிவாகர் இதனை கண்டுபிடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர். இதுவரை பாவனையில் உள்ள தானியங்கி முட்டைபொரிக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் விட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும், அதிக வசதிகளை கொண்டதாகவும், குறைவான விலையை கொண்டதுமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் வடக்கிற்கு தேவையான கோழிக்குஞ்சுகள் தென்பகுதியிலிர…
-
- 4 replies
- 788 views
-
-
வந்தது இடி….! மைத்திரி இராஜினாமா? July 13, 20157:11 am ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி தினமான இன்று, ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்றும் அதன்போதே அவர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் அரசியல் குழப்பம் தற்போது பெருங் குழப்பமாக உள்ளது. பரப்பளவில் பெரிய ஜனநாயக நாடுகளில் கூட இந்தளவு பரபரப்பு தேர்தல் காலத்தில் இருந்த தா? என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களோடு விடிகின்றது. அந்தவகையில் இன்று வெளியாகியுள்ள தகவல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பானதாகும். ஆம…
-
- 3 replies
- 548 views
-
-
யாழில் 2015ம் ஆண்டு 4.5 மில்லியன் லீற்றர் மதுபானம் விற்பனை..! 25 மாவட்டங்களில் புகைத்தலில் முதலிடம். July 13, 20158:32 am வடமாகாணத்தில் மதுபானம் புகைத்தல் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் 2015ம் ஆண்டு 4.5 மில்லியன் லீற்றர் மதுபானத்தை வடமாகாண மக்கள் நுகர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் புகைத்தல் பாவனையில் 42.9 வீதமாக இலங்கையின் 25 மாவட்டங்களில் முதலாமிடத்தில் இருக்கும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் இருக்கின்றது. இந்நிலையில் போதைப் பொருட்கள், மதுபானம், புகைத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பாடசாலைகளிலும், இளைஞர்கள் மத்தியிலும் விழிப்பு ணர்வை வளர்ப்பதன் ஊடாகவும், பொதுமக்களுக்கும் பொலிஸர்ருக்கும் இடையில் தொடர்பாடலை வளர்ப்பதன் ஊடாகவுமே வடக…
-
- 1 reply
- 215 views
-
-
துப்பாக்கி ரவைக்கு அஞ்சும் மைத்திரி! சூத்திரதாரி யார்..?: வெளிவரும் ஆதாரம் [ திங்கட்கிழமை, 13 யூலை 2015, 02:32.25 AM GMT ] எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன். மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பது யார்...? வட - கிழக்கின் அரசியல்,ஆதிக்கம் யாரிடம், தேர்தல் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன். http://www.tamilwin.com/show-RUmtyHSXSVno1G.html#
-
- 0 replies
- 294 views
-
-
சுமந்திரன் கதைத்ததால் சீற்றத்தில் டக்ளஸ். July 13, 20152:18 pm வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை முடிவடைந்தபின்னர் ஆட்சேபணை தெரிப்பதற்கான கூட்டம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளரின் தலமையில் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது . கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது உதவி தேர்தல் ஆணையாளர் தனக்கு வந்த தொலை பேசி அழைப்பினை தமிழரசு கட்சி உறுப்பினர் சுமந்திரனிடம் கொடுத்து கதைக்குமாறு கூறினார். அதனை அடுத்து சுமந்திரன் தொலைபேசியில் உரையாடினார். சுமந்திரன் தொலைபேசி கதைத்ததை ஈ.பி.டி.பி. யினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேர்தல் திணைக்களம் பக்க சார்பாக செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் அவ்வாறான எந்த முறைகேடும் இடம்பெறவில்லை என …
-
- 0 replies
- 521 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களிகன் விபரம் சுசில் பிரேம்ஜயந்த தினேஷ் குணவர்தன விமல் வீரவங்ச மொஹான் லால் கிரேரு காமினி லொகுகே திலங்க சுமதிபால கீதாஞ்சன குணவர்த்தன ரோஹித போகொல்லாகம ஜனக வெலிஅத்த சந்தன கதிரஆராச்சி காந்தி கொடிகார தனசிறி அமரதுங்க மல்ஷா குமாரதுங்க பிரசன்ன சோலங்கஆராச்சி ஜகத் குமார சுமித்திரஆராச்சி வஜிரா மாபலகம மகேஷ் அல்மேதா நல்லையா குமரகுருபரன் உதயபிரபாத் கம்மன்பில பாவுல் ஹாமிட் முகமட் ஜயந்த கெடகொட பந்துல குணவர்த்தன ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரம் ரணில் விக்ரமசிங்க ரவி கருணாநாயக்க விஜயதாச ராஜபக்ஷ ரோஷி சேனாநாயக்க எரான் விக்ரமர…
-
- 2 replies
- 581 views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர், வேட்பாளர் பெயர் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/07/13/ஐமசுகூவின்-குருநாகல்-வேட்பாளர்-பட்டியல்-வெளியானது-மஹிந்த-முதலிடத்தில்
-
- 0 replies
- 228 views
-
-
யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாத நிலையில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தவர்களாக, அபிலாஷைகள் நிறைவேற்றப்படாதவர்களாகவும் வாழ்கின்றார்கள். 'ஏனைய சமூகத்தவர்களை போன்று தமிழ் மக்களும் சமமான உரிமையை பெற்று வாழவேண்டும். அதையே தமிழ் மக்களும் விரும்புகின்றனர். தமிழ் மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலேயே சுயநிர்ணம் நாடி அவர்கள் தங்கள் குரலை ஒலிக்கச்செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்' என்றார…
-
- 1 reply
- 210 views
-
-
யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையினில் தமிழர் விடுதலைக்கூட்டணி ,இராமநாதன் அங்கயன் தலைமையினில் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணி,வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சை அணி என்பவை தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.குறிப்பாக கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ள முன்னணியின் வேட்புமனு தாக்கல் அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் …
-
- 1 reply
- 708 views
-
-
இந்தியாவிலிருந்து திரும்பிய நிலையில் சுமார் ஏழு வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி தாங்கள்; வாழ்ந்துவருவதாக நொச்சிக்குளம், சாந்திபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர். திருகோணமலை மாவட்டத்தின் மொரவௌ பிரதேச செயலாளர்; பிரிவில் நொச்சிக்குளம், சாந்திபுரம் கிராமம் உள்ளது. யுத்த சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று, 2007ஆம் ஆண்டு தங்களின் சொந்த இடத்துக்கு திரும்பிய 23 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. இந்தியாவிலிருந்து திரும்பிய தாங்கள் கொட்டில்களிலும் ஓலைக்குடிசைகளிலும் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவருவதாகவும் அவர்கள் கூறினர். வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதருவதாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கூறியபோதிலும், அவை செய்து தரப்படவில்லை. இதனால், தாங்கள் ஏம…
-
- 2 replies
- 265 views
-
-
பிரித்தானியாவில் துடுப்பெடுத்தாட்ட விளையாட்டின் போது வீசப்பட்ட பந்து மார்புப் பகுதியில் தாக்கியதனால் உயிரிழந்த பாவலன் பத்மநாதனுடன் விளையாடிய சக அணி வீரரும் ஊடகவியலாளருமான கருணாகரன் அவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்காக மெல்பேர்ணிலிருந்து ஊடகவியலாளர் தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/karunakarans-interview-100715
-
- 6 replies
- 796 views
-
-
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர், விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாரதிபுரத்திலுள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர். அந்தக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்திருந்த சந்தேகநபர், அங்குள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் யாழ்;ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் எனவும் கிளிநொச்சி பொலிஸார் கூறினர். - h…
-
- 0 replies
- 249 views
-
-
புங்குடுதீவில் 18 வயதான மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து வாதிகள் தரப்பு சட்டத்தரணி தவராசா விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின்னணியில் யாழ்ப்பாணத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறித்த படுகொலை தொடர்பான வழக்கில் பல்வேறு மர்மங்களை தவராசா வெளிக் கொண்டுவந்திருந்தார். அத்துடன் இந்த படுகொலையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்காக குறித்த அரசியல்வாதி மேற்கொண்ட முயற்சி குறித்த தகவல்களும் வெளிவரும் என்ற அச்சத்தில், அவரை இந்த வழக்கில் இருந்து நீக்குமாறு குறித்த அரசியல்வாதி கொலையுண்ட மாணவியின் குடும்பத்தாருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலைய…
-
- 0 replies
- 212 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamilmirror.lk/150163#sthash.9Qy1IJL1.dpu
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளன. பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான திகதி கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் இறுதி நாளான இன்றைய தினம் நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான காலம் நிறைவடைகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை 10மணிக்கு …
-
- 0 replies
- 254 views
-
-
அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கு உலக வங்கி அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் கிடைக்காதபோதிலும் முதலமைச்சர் ஒருவர் அனைத்துலக முகவர் அமைப்பு ஒன்றுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளது குறித்து கொழும்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்தபோது, அவரது செயலகத்தினால் உலக வங்கியுடனான சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்டதாக, கொழும்பில் உள்ள உலக வங்கியின் பணியகம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில், சந்திப்புகளுக்கான கோரிக்கைகள் விடுக்கப்படும் போது, எப்போதுமே அதற்குச் சாதகமாக ப…
-
- 0 replies
- 204 views
-
-
வடமாகாணத்தில் மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், 2015 ஆம் ஆண்டு 4.5 மில்லியன் லீற்றர் மதுபானத்தை எமது மாகாண குடிமக்கள் நுகர்ந்துள்ளனர். மேலும் புகைத்தல் பாவனையில் 42.9 வீதமாக இலங்கையின் 25 மாவட்டங்களில் முதலாமிடத்தில் யாழ்.மாவட்டம் இருக்கின்றது. இந்நிலையில் போதைப் பொருட்கள், மதுபானம், புகைத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பாடசாலைகளிலும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாகவும் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்பாடலை வளர்ப்பதன் ஊடாகவுமே வடக்கில் போதைப்பொருள் கட்டுப்பாடு சாத்தியமாகுமென நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்த…
-
- 0 replies
- 186 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹுனைஸ் பாருக் இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அவர் கடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்தார். இந்தநிலையில் இப்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்திருக்கிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அலி சாகிர் மௌலானா, நேற்றுமுன்தி…
-
- 1 reply
- 348 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இன்றைய தினமே வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளன. இதேவேளை வெள்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 111 சுயேட்சைக்குழுக்களும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளன. யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையினில் தமிழர் விடுதலைக்கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் வேட்புமன…
-
- 0 replies
- 261 views
-
-
Priya Rasa அச்சுவேலி பகுதியில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். குறித்த இளைஞன் பொலிஸ் கான்ஸ்டபிளை திருமணம் செய்வதாக தெரிவித்து வந்த நிலையில் பின்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்பாக நின்று தனக்கு தானே தீ மூட்டி கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில…
-
- 2 replies
- 341 views
-