Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 29 SEP, 2024 | 06:00 AM 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

  2. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்! Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 05:53 PM கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2023 (2024) மீள் பரிசீலனை பெறுபேறுகள் மற்றும் இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய விண்ணப்பங்களை ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 08 வரை இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கமுடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் வ…

  3. தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போத…

  4. 01 OCT, 2024 | 02:14 PM முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு தற்போது விடுபாட்டுரிமை இல்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்தியவங்கி திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க பதவி வகித்ததால் அவருக்கு விடுபாட்டுரிமை காணப்பட்டதால் முன்னர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியில்லை அவருக்கு தற்போ…

  5. 01 OCT, 2024 | 11:15 AM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார் இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடகபதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது- நீடித்து நிலைத்திருக்கும் இலங்கை அமெரிக்க உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், குடிமைபங்கேற்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் திறன்களை வலுப்படுத்தும் அதேவேளை வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களையும,; செழித்துவளரும் பொருளாதாரங்களையும் கட்டியெழுப்பும், எங்களின் பகிரப்பட்ட இலக்குகள் குறித்து …

  6. 01 OCT, 2024 | 10:49 AM அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்திய இலங்கை இணைப்பு திட்டங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தி திட்டம் உட்பட இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் இந்தியாவுடனான திட்டங்கள் குறித்து அரசாங்கம் இறுதிமுடிவை எடுக்கும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவுடனான இணைப்பு திட்டங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன அந்த திட்டங்களின் தற்போதைய நில…

  7. Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 10:16 AM யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட கண்புரை நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகள் வெற்றியளித்துள்ளன. எனவே, யாழ். மாவட்டத்திலோ அல்லது வடமாகாணத்திலோ கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட பார்வைக் குறைபாடுடையோர் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரேனும் இருப்பின் யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சத்திர சிகிச்சைப்பிரிவை நாடுவதன் ஊடாக ஒரு மாத காலத்துக்குள் உரிய…

  8. சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

  9. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் இரத்து October 1, 2024 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வரபிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். மேலும் ‘மாதிவெல குடியிருப்பில் நவம்பர் 14 வரை மாத்திரமே வசிக்க முடியும். இராஜதந்திர கடவுச்சீட்டினை எவரும் பயன்படுத்த முடியாது. சாதாரண கடவுச்சீட்டினையே பயன்படுத்த வேண்டும்’ என குஷானி ரோஹனதீர தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியினால் ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் முன்னாள் பாராளுமன்ற …

    • 1 reply
    • 415 views
  10. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 05:12 PM மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலையை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில் 'வர்த்தகம் முக்கியத்துவம் கொண்ட மன்னார் தலைமன்னார் சர்வதேச நெடுஞ்சாலையில் மதுக்கடையா?', 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே', 'மக்கள் வாழ்விடத்தில் மதுபானசாலையா? ஏழை மக…

  11. Published By: VISHNU 01 OCT, 2024 | 04:08 AM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் வழிகாட்டலின்கீழ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கைகள…

  12. Published By: VISHNU 01 OCT, 2024 | 01:57 AM கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவே தமிழர்களின் விகிதாச்சார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் அனைவரும் அணிதிரளுமாறு கரம் கூப்பி அழைக்கின்றோம் என ஈ.பி.ஆர். எல்.எப். கட்சியின் சிரேஸ் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடக மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது இதில் கருத்து தெரிவிக்கையில் …

  13. Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:20 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கட்சியில் இருக்கும் போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசியலில் சற்று பின்னடைந்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கி…

  14. ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஐந்து ஆண்டுகளை நிறைவு …

  15. 28 SEP, 2024 | 05:59 PM எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள…

  16. யாழில் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது! Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:13 PM யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள், 04 பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேநபர்களை மேலதிக சட்ட நட…

  17. 29 SEP, 2024 | 10:03 AM தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், …

  18. Published By: VISHNU 30 SEP, 2024 | 09:44 PM மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் வி…

  19. மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்? ”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமை…

  20. Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 12:54 PM முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக…

  21. 2050 ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் இருத்தலியல் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டுப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வரவிருக்கும் நெருக்கடி குறித்து கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. “எங்கள் உ…

  22. 30 SEP, 2024 | 10:24 AM தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள். இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக்கட்சியினர் பெறுகின்றார்கள். தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும். ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்…

  23. 28 SEP, 2024 | 11:22 AM வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்க…

  24. யாழின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தல் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகள் திறப்பது நல்லிணக்கத்தையும் பிராந்திய அபிவிருத்தியையும் பலப்படுத்தும் என இராமநாதன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். “கொழும்பின் சமீபத்திய வீதி அணுகல் சீர்திருத்தங்களுக்கு இணங்க, யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி @அனுரா திசநாயக்கவிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். கொழும்பில் உள்ள முக்கிய வீதிகளை இன்று முதல் பொதுமக்கள…

  25. இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.