ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
இறுதிப் போரின் போது தமது உறவுகளை தொலைத்தவர்கள் இன்று கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமது உறவுகளை கண்டுபிடிக்க புதிய அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசாங்கம் இந்தப்பணியை செய்யத்தவறினால் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர். எமது பிள்ளைகளை தொலைத்து பல வருடங்கள் கழிந்துள்ளன. இந்தநிலையில் எமக்கு உரிய பதில் வேண்டும் என்று மன்னாரில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சார்ல்ஸ் என்பவர் குறிப்பிட்டார். எனது மகனை கொழும்பு சிறையில் கண்டதாக சிலர் கூறினர். எனவே அரசாங்கம் விரைவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து வந…
-
- 0 replies
- 319 views
-
-
"தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது" ககானி வீரக்கோன் -- விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்செய்திகள்- தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தான் முன்னரே உணர்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30 வருடங்களாக தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள் நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு விடுதலையை வழங்கும் என அவர்கள் எதிர்பார்த்த அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார். சிலோன் ருடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது …
-
- 15 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும்,உறுதியுடனும் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் வல்வெட்டித்துறையில் அன்பேசிவம் அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட,வறிய குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்;:- கிழக்கு மாகாணத்தின் எல்லைக்கிராமங்களை காப்பாற்றும் வகையில் எல்லைக்கிராம மக்களுக்காக அன்பே சிவம் தனது கைகளை ஏந்தியிருக்கிறது கடந்த காலங்களில் ஒரு குறிப்பிடக்கூடிய அளவுக்கு அவர்களின் உதவிகள் கிழக்கு மா…
-
- 1 reply
- 452 views
-
-
உணவு பாதுகாப்பின்மையினால் இலங்கையில் அதிகம் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. இலங்கையில் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய கணக்கின்படி 25வீதம் தொடக்கம் 30வீதமான தொற்றுநோயாளர்கள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். நாம் உணவுப்பாதுகாப்பு விடயத்திலும், சுகாதார தற்பாதுகாப்பிலும் அற்கறையற்றிருப்பதனாலேயே இவ்வாறான தொற்றுநோய்கள் மற்றும் தோற்றா நோய்களின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக நாங்கள் மாற்றப்பட்டிருப்பதற்குக் காரணம். என யாழ்.வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. உலக சுகாதார தினத்திற்காக இம்முறை உலக சுகாதார ஸ்தாபனம் உணவு பாதுகாப்பு என்னும் தலைப்பினை எடுத்திருக்கின்றது. இது எங்களுடைய யா…
-
- 0 replies
- 468 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் யூலை மாதம் 06 திகதி வரைக்கும் மன்னார் நீதவான் இன்று ஒத்திவைத்துள்ளார். அத்துடன், அந்த புதைகுழி சட்டபூர்வமான மயானம் என வாதாடிவரும் இலங்கை காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறையினரை, அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி மற்றும் அப்பகுதியில் காணப்பட்டதாக கூறப்படும் கிணறு ஆகியவற்றை தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்றது. இதன் போது மன்றில் முன்னிலையான குறித்த மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் காணப்பட…
-
- 0 replies
- 529 views
-
-
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய அவற்றின் 3ஆம் கட்ட காணிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நாளை செவ்வாய்க்கிழமை (07) சென்று பார்வையிடவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், திங்கட்கிழமை(06) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுக்கமைய வளலாய் மற்றும் வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அக் காணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்களிடம் கையளித்தார். இந்நிலையில் மிகுதிக் காணிகளினையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அந்த…
-
- 0 replies
- 464 views
-
-
தன்னை மஹா பராகிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழித்தொழ…
-
- 0 replies
- 959 views
-
-
ரணில் – விக்னேஸ்வரன் முரண்பாடு – உன்னிப்பாக விசாரிக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் APR 06, 2015 | 12:44by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பாக மேற்கு நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. அண்மையில் வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வுகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படாததுடன், வடக்கு மாகாணசபையினரைச் சந்திக்கவும் இல்லை. இதனால், சிறிலங்கா பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுகளில், வடக்கு மாகாண முதலமை…
-
- 0 replies
- 570 views
-
-
ஆட்சி மாற்றம் நாம் எதிர்பார்த்த எதனையும் எமக்கு தந்துவிடவில்லை என அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியிடம் தான் தெரிவித்தகாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அது தொடர்பில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியல் மாற்றம் எந்தவிதமான நன்மை தீமைகள் அளித்துள்ளன என்பது பற்றி என்னிடம் கேட்டார், அதற்கு நான் நாம் எதிர்பார்த்தவை நடைமுறையில் இல்லை என குறிப்பிட்டேன். அதற்கு தங்களால் முடிந்த மட்டில் அரசாங்கத்திற்கும் தமிழ் மக்…
-
- 0 replies
- 342 views
-
-
முல்லைத்தீவு, வற்றாப்பளை பிரதேசத்தில் இரு விளையாட்டுக் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஆறு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் இறுதிநாள் சுற்றுப்போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிலையில் போட்டிகளும் இடம்பெற்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே இரு விளையாட்டுக் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இந்த குழு மோதலில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜின் கொலை குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் மூன்று கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் கப்பம் பெறல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்திருப்பதாக காவற்துறை பேச்சாளர் கூறியுள்ளார். தற்போது அவர்கள் மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்ப்பட்டுள்ளனர்http://www.pathivu.com/news/38869/57//d,article_full.aspx
-
- 13 replies
- 919 views
-
-
காத்திரமான போர்க்குற்ற விசாரணை சிறிலங்காவின் பழைய காயங்களை குணப்படுத்தக் கூடும் APR 06, 2015 | 11:50by நித்தியபாரதிin கட்டுரைகள் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று செயற்படுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு ஐபிஎஸ் செய்தி ஊடகத்தில், ‘அமந்த பெரேரா’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. 23 வயதான ஜெசி யோகேஸ்வரன் எம்முடன் சிரித்த முகத்துடன் உரையாடினார். உலகெங்கும் வாழும் இளம் பெண்களைப் போலவே ஜெசியும் பல்வேறு கனவுகளுடன் வாழ்கிறார். ‘நான் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். நல்லதொரு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் …
-
- 0 replies
- 481 views
-
-
சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியும் விவசாயம் செய்யும் தண்ணீரை ஏன் உப்பு ஆற்றுக்கு அனுப்புகின்றீர்கள் என கேள்வியெழுப்பியும் மட்டக்களப்பு நகரில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் என்பன இடம்பெற்றன. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெருமளவான தமிழ் முஸ்லிம் விவசாயிகள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான உறுகாhமம் நீர்ப்பாசன குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதியைப்பெறும் விவசாயிகள் குறித்த குளத்திலிருந்து நீரை வழங்காமையால் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரியாவெளி தளவாய் பூமாச்சோலை கரடியனாறு பவளவெட்டுவான் உட்பட…
-
- 1 reply
- 459 views
-
-
சிறிலங்கா, இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனா APR 06, 2015 | 11:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு கலந்துரையாடல் வரும் 8ஆம் – 9ஆம் நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், சீனாவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. பிஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், “தொடர்புக் கொள்கையை வலுப்படுத்தவும், அவர்களின் அபிவிருத்தி மூலோபாயங்களை அடையாளம் காணவும், பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்புக்கான வழிகளைக் கண்டறியவும், பிராந்திய, நாடுகள், மற்றும் பொதுமக்களின் பொதுவான நன்மை …
-
- 0 replies
- 254 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் புனர்வாழ்வுக்கு கிளிநொச்சியில் தேசிய நலன்புரி நிலையம் APR 06, 2015 | 2:44by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கான தேசிய நலன்புரி நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் புனர்வாழ்வுக்காகவே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ”போரினால், பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நன்கு தெரிந்த உண்மை. …
-
- 0 replies
- 321 views
-
-
அம்பாறையில் காணாமற்போனோர் குறித்த விசாரணை – புறக்கணிக்க சிவில் அமைப்புகள் அழைப்பு APR 06, 2015 | 2:13by மட்டக்களப்புச் செய்தியாளர்in செய்திகள் காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விசாரணைகளைப் புறக்கணிக்குமாறு, மாவட்ட சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிபர் ஆணைக்குழு, இன்று தொடக்கம் எதிர்வரும் 9ம் நாள் வரையான நான்கு நாட்கள் அம்பாறை மாவட்டத்தில் அமர்வுகளை மேற்கொள்ளவுள்ளன. கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ள இந்த அமர்வுகளில் பங்கேற்க, 330 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் …
-
- 0 replies
- 193 views
-
-
யேமனில் சிக்கியோரை மீட்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா APR 06, 2015 | 1:49by கார்வண்ணன்in செய்திகள் போர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது. யேமனில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான சவூதி அரேபிய கூட்டணிப் படைகளின் விமானத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் முனைப்படைந்துள்ளன. இந்தியா தனது போர்க்கப்பல்களை யேமனுக்கு அனுப்பி, அங்கிருந்து தனது குடிமக்களை மீட்டு, அருகில் உள்ள நாடான டிஜிபோட்டிக்கு அனுப்பி வருகிறது. …
-
- 0 replies
- 369 views
-
-
நள்ளிரவு 12 மணிக்கு பொதுமகனின் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்: முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் நேற்றைய தினம் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியத்த சம்பவம் ஒன்ற இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றைய தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள பொதுமகன் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். குறித்த சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில் ஓடிய படைச்சிப்பாய் அருகிலுள்…
-
- 1 reply
- 348 views
-
-
APR 05, 2015by கார்வண்ணன்in செய்திகள் மூன்று நாள் பயணமாக இன்று முன்னிரவில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில் நேரடியாகச் சென்று வரவேற்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தை சென்றடைந்த, சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது குழுவினரை, பாகிஸ்தான் பிரதமர் மற்றும், வெளிவிவகார அமைச்சு உயரதிகாரிகள் பலரும், நேரில் சென்று வரவேற்றனர். அத்துடன், சிறிலங்கா அதிபருக்கு, 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னதாக பயணிகள் விமானம் மூலம் கராச்சியில் உள்ள ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்திருந்…
-
- 0 replies
- 413 views
-
-
பாகிஸ்தானுடனும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்கிறது சிறிலங்கா? APR 05, 2015 | 16:54by கார்வண்ணன்in செய்திகள் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பாகிஸ்தான் சென்றடையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன. இன்று இஸ்லாமாபாத்தை சென்றடையும், சிறிலங்கா அதிபர், நாளை, பாகிஸ்தான் அதிபர் மாமூன் ஹுசேன், பிரதமர் நவாஸ் ஷரீப் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுகளின் பின்னர், புரிந்துணர்வு உடன்பாடுகளும், ஒத்துழைப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த உடன்பாடுகளில், அணுசக்தி ஒத…
-
- 0 replies
- 320 views
-
-
மகிந்தவை விடவும் சீனாவுக்கு வேண்டியவராகிவிட்ட மைத்திரி – உபுல் ஜோசப் பெர்னான்டோ APR 02, 2015 | 8:27by நித்தியபாரதிin கட்டுரைகள் சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது. இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘உபுல் ஜோசப் பெர்னான்டோ’ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக, மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. கடந்த வாரம் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் எதிர்காலம் தொடர்ப…
-
- 0 replies
- 203 views
-
-
சிங்களக் கல்வியாளரின் பார்வையில் சிறிலங்கா பிரதமரின் யாழ்ப்பாணப் பயணம் APR 04, 2015 | 10:05by நித்தியபாரதிin கட்டுரைகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையையும் அதன் முதலமைச்சரையும் ஓரங்கட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாட முடியும் என பிரதமர் கருதினால், இவர் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் விட்ட மோசமான அதே தவறுகளை மீண்டும் இழைக்கிறார். இவ்வாறு கல்வியாளர் ‘சுமணசிறி லியனகே’, கொழும்பு ரெலிகிராப் ஊடகத்தில், எழுதியுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. எனது தனிப்பட்ட கருத்தின் படி, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்…
-
- 0 replies
- 317 views
-
-
அமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் இந்தியாவின் நிலை APR 05, 2015 | 11:15by நித்தியபாரதிin கட்டுரைகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.இவ்வாறு The diplomat ஊடகத்தில்,Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான இராஜதந்திர முயற்சியாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா, செசெல்ஸ் மற்றும் மொரிசியஸ் தீவுகளுக்கான பயணத்தை மார்ச் மாதம் மேற்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் இ…
-
- 0 replies
- 197 views
-
-
கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ். நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணியொன்றை நடாத்தவுள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போராட்டத்தின் முடிவில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மக…
-
- 0 replies
- 293 views
-
-
எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு எமக்கு முறையாக அறிவிக்கப்பட்டால், நாம் உண்மையாக செயற்படுவோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் எமக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை பற்றி கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் நேர்மையானதாக இருக்கும். கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் என்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கட்சித் தலைவர…
-
- 0 replies
- 235 views
-