Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்தில் ஒரு சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினால் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பெயர்களுடன் இன்று திங்கட்கிழமை தகவல்களை வெளியிடப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சம்பிக்க ரணவக்கவால் எழுதப்பட்ட, "சக்தியும் சக்தியும்' எனும் நூலின் இரண்டாம் கட்டமான "சீரழிவு பொருளாதாரம்' என்ற தொகுதி இன்றைய தினம் கொழும்பில் வெளியிடப்படவுள்ள நிலையில் அதனுடன் இணைந்ததாக கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட, பொருõளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளார். "மெகா டீல்'எனும் தொனிப்பொருளில் அமைச்சர்கள் மற…

  2. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கப்­போ­கின்­றது என்று நன்­றா­கவே தெரி­கின்­றது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக யார் போட்­டி­யி­டு­கின்­றார்­களோ அவ­ருக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு செயற்­படும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார். பொது எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வதேச சக்­தி­களின் சூத்­தி­ரத்­துக்கு ஏற்ப செயற்­ப­டு­கின்றார் என்­பது அவர் ஆற்­றி­யுள்ள உரை­யி­லி­ருந்து தெளி­வா­கின்­றது. இது பார­தூ­ர­மான கூற்­றாகும். உக்­ரேனில் தேர்­தலில் வெற்­றி­பெற்ற ஜனா­தி­ப­தியை ஒருவருடம் கூட செயற்­பட …

  3. வடமாகாணசபையில் தொடரும் இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுதலித்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலை மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் தூக்கி வீசியுள்ளார். சிவாஜிலிங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை ஜனாதிபதி தேர்தலின் பின்னராக விவாதிக்கலாமென முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில் அதனை சபை முன்பதாக வாக்கெடுப்பிற்கு விட கே.சிவாஜிலிங்கம் கோரியிருந்தார். எனினும் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட்டிருந்த நிலையினில் கோபமுற்ற கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசினார். முன்னதாக தொடரும் இன அழிப்பு தொடர்பான பிரேரணை கே.சிவ…

    • 9 replies
    • 2.7k views
  4. 104 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அனுமதி! [Monday 2014-12-15 09:00] வரும் ஜனாதிபதி தேர்தலில் 104 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மட்டும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் திணைக்களம் மற்றும் பெபரல் கண்காணிப்பு குழு ஆகியன சார்பிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைக்கப்படவுள்ளனர். தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு கூட்டமைப்பு, தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு சபை, பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் 104 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மட்டும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் திணைக்களம் …

  5. அலரிமாளிகைக்கு வருவோருக்கு 950 ரூபாவில் சாப்பாட்டுப் பொதி! – ஒரு நாளைக்கு 45 இலட்சம் ரூபா செலவு [sunday 2014-12-14 09:00] அலரிமாளிகைக்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு, 950 ரூபா பெறுமதியான உணவுப் பொதி வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். நாளொன்றுக்கு 5000 பேர் அங்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கான உணவுக்காக மட்டும் ஒரு நாளைக்கு 45 இலட்சம் ரூபா செலவழிக்கப்படுகிறது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளவர்கள் எவரும் உறுதியானவர்கள் அல்லர். இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்று தெரியாது. அலரிமாளிகைக்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு, 950 ரூபா பெறுமதியான உணவுப் பொதி வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தா…

  6. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நம்ப முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்சி தாவுவதற்கு முந்தியதினம் இரவு வரையில் மைத்திரிபால என்னுடன் இருந்து விட்டு திடீரென கட்சித் தாவினார். கட்சியை விட்டு விலகுவது குறித்து முறையாக சொல்லக்கூட இல்லை. இவ்வாறான நபர் ஒருவரிடம் எவ்வாறு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பினை ஒப்படைக்க முடியும்? எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முறையாக எதிர்க்கட்சித் தலைவரிடம் தாம் கட்சியை விட்டு விலக உள்ளமை குறித்து அறிவித்து விட்டே விலகினார். என்னை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த சில தரப்பினர் முயற்சித்து …

  7. தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது, அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஓய்வுபெற்ற படையினரையும், சேவையில் உள்ள படையினரையும், சிறிலங்கா அதிபருக்கு ஆதரவு திரட்டும் பணியில், சிறிலங்கா அரசாங்கம், ஈடுபடுத்தியுள்ளதாக, எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டு தொடர்பாகவே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைக்கு ஓய்வுபெற்ற படையினரை ஈடுபடுத்துவதாக என்மீது குற்றம்சாட்டுபவர்கள் ஒன்றை மறந்து விட்டனர். சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்து கொண்டு தான் அரசியலில் பிரவேசித்தார்.அப்போது அவர் ஜெனரல் தரத்தில் இருந்தார்.…

  8. வடக்கு மாகாண சபை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை செலவு செய்யவில்லையென்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில் ஆளுநருடன் இணக்க அரசியலில் மாகாணசபை தயாராகியுள்ளது. கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபையின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் புதன்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்மீதான விவாதம் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தேச தொகைகளின் விவரங்கள் வருமாறு: ஆளுநர் செயலகம் - 12 கோடியே 49 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா. முதலமைச்சர், அவரின் கீழான அமைச்சுக்கள் - 7 கோடியே 21 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா. விவசாய அமைச்சு - 5 கோடியே 31 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா. கல்வி அமைச்சு - 2…

  9. இந்தியாவின் கோரிக்கையை மீறி சந்தேகநபர் இலங்கையிடம் ஒப்படைப்பு December 14, 2014 10:26 pm இலங்கையை சேர்ந்த முஹம்மது ஹுசைன் முஹம்மது சுலைமான் (47) என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அந்நாட்டின் குடியுரிமை துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, அந்நாட்டு பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் இலங்கையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீட்டித் தந்த திட்டத்தின்படி, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய கும்பலுக்கும் மலேசியாவில் பிடிபட்ட முஹம்மது ச…

  10. தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியது முக்கியம் – சுமந்திரன் DEC 15, 2014 | 1:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு, வரும் அதிபர் தேர்தல் தீர்வைத் தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரக்கூடிய தேர்தலாக இது இருக்காது என்ற ஆலோசனையை நாம் தமிழ்மக்களுக்கு கூற விரும்புகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. நாம் எமது மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்ற அ…

  11. பிரித்தானியாவின் ஆளும்கட்சி மைத்திரிக்கு ஆதரவு! [sunday 2014-12-14 09:00] பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாக பிரித்தானியாவின் ஆளும்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள கொன்சவேட்டிவ கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை சந்தித்தனர். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாக பிரித்தானியாவின் ஆளும்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள கொன்சவேட்டிவ கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை சந்தித்தனர். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரகசியமாக மேற…

    • 11 replies
    • 1k views
  12. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் மாலை வரை இந்தக் கூட்டம் இடம்பெறும். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் உள்ள கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துரையாடப்படும் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். http://seithy.com/breifNews.php?newsID=122630&category=TamilNews&language=tamil

  13. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடிக்கடி உயர்பீடத்தை கூட்டி வெங்காயத்தையே உரிக்கிறது என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நையாண்டி செய்துள்ளார். எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிச்சார கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிகமான கிழக்கு மாகாண மக்கள் தமக்கு விடிவு கிடைக்க வேண்டும் என தேர்தலிகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கின்றனர். ஆனால் அவர்கள் இன்றுவரை மக்களை ஏமாற்றியே வருகின்றனர். இன்று முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் மு.கா. மக்களின் உணர்வகளை புரிந்துகொள்ளாது, தமது சொகுசு வாழ்க்கையையும் பதவிகளையும் மட்டும் எதிர்ப்பார்த…

  14. அபிவிருத்தி என்னும் போர்வையில் நாட்டு மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான் ஜனாதிபதியானால் இன்றுள்ளதைப் போன்று மூன்று மடங்கு அபிவிருத்தியினை ஏற்படுத்துவேன். மேலும் தோட்டப்புற இளைஞர்களின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கொத்மலையில் இடம்பெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.தே. க.வின் அமைப்பாளர் அசோக ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரிய நவீன் திசாநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன், பி.இராஜதுரை, ஆர். யோக…

  15. அரசு இலவசமாக வழங்கும் சகலவற்றையும் பெற்றுக்கொண்டு ஜனவரி 8 ஆம் திகதி தனக்கு வாக்களிக்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொலநறுவையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை வரவழைக்க முடிந்ததாக ஜனாதிபதி பெருமை பேசி வருகிறார். ஆனால் அந்த மக்கள் கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம். எதிர்வரும் நாட்களில் செல்போன்கள், சேலைகள் மற்றும் சைக்கிள்களை கொண்ட கொள்கலன்கள் இலங்கைக்கு வரவிருக்கின்றன. ஆகவே, இலவசமாக அரசு கொடுக்கும் அந்தப் பொருட்களை வாங்கி கொண்டு எதிரணியின் பொது வேட்பாளரான எனக்கு வாக்களியுங்கள் …

  16. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 11 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத் தொகுதியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்துக்கு தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு …

  17. கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்தில் ஆயுதங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. குறித்த ஊடகத்தில் கிழக்கில் பற்றி எரியும் தீ எனும் தலைப்பில் மூன்றாவது வாரமாக வெளியிடப்பட்டுள்ள தொடர் கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் அடிப்படைவாதிகள் இன்று கிழக்கு மாகாணத்தில் கூட்டாக இணைந்து செயற்படுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் மூதூரில் உங்களுக்கு ஆயுதம் ஒன்றை இலகுவாக பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளலாம். ரி.56 ரக துப்பாக்கியொன்று 35 ஆயிரம் ரூபா, மி.மி.9 கைத்துப்பாக்கி 20 ஆயிரம் ரூபா, மி.மி.3.8 துப்பாக்கி 15 ஆயிரம் ரூபா, எல்.ரி.ரி.ஈ. பயன்படுத்திய மைக்ரோ துப்பாக்கி 10 ஆயிரம் ரூபா …

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்தது. ஐரோப்பிய நீதிமன்றின் தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு தடைப் பட்டியலிலிருந்து புலிகள் இயக்கம் நீக்கப்பட்டது. எனினும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்மானம் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய தடை உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

  19. சிங்கள தேசத்தில தங்கட உரிமையளுக்காக போராடுற மாணவர்கள தண்டிச்சு அவர்களின்ட வாழ்க்கையை நாசாக்கிற குள்ள நரி வேலையில ஈடுபடுற மகிந்தவின்ட உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தமிழ் மாணவர்களின்ட உரிமையளை மறுத்து அவையின்ட குரலயும் நசுக்கிறவர்.. கிட்டத்தட்ட மகிந்த சிந்தனைக்கு ஏற்ற உயர்கல்வி அமைச்சர்... எங்களுக்கு ஒழுக்கம்தான் முக்கியம் எண்டு அநுராதபுரத்தில மகிந்தர் வாய் கிழிய கத்துறார்.. அதோட ஒழுக்கம் உள்ள பிரசைகளை வளர்த்து தன்ட அபிவிருத்தி மேம்பாடுகளில ஈடுபடுத்தவேணுமாம் எண்டும் உருகினார்... மகிந்தவுக்கு ஒழுக்கத்தப்பற்றி பேச என்ன அருகதை இருக்குது? அதப்போல மாணவர்களின்ட ஒழுக்கத்தப் பற்றி வாய்கிழிய பேசி ஒழுக்காற்று நடவடிக்கை எண்டுற பேரில பல்கலைக்கழகங்களில அராஜகம் செய்யி…

  20. ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கின்ற தற்போதைய சூழலில், முஸ்லிம்களின் நெடுநாள் பிரச்சினைகளில் சாதகமான முடிவுகள் சில தமக்கு கிடைத்துள்ளதாக கிழக்கு இலங்கை முஸ்லிம்கள் தெரிவிக்கிறனர். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி , வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முடிவுகள் சில தமக்கு கிடைத்துள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி…

  21. "கொடூர பேய் போய் நல்ல பிசாசு வருவது சிறந்தது" ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என நாம் கூற மாட்டோம் என்றாலும் மக்களாகிய நீங்கள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாம் உருதுணையாக நிற்போம் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவத்தார். வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுகாதார அமைச்சரினால் புதிய வேலர் சின்னக்குளத்தில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று (13.12) வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இது தேர்தல் காலம் என்பதனால். நாங்கள் எமது ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு முதல் மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாத்திரமன்றி வட…

  22. ஹப்புத்தளை, தம்பேதன்னை மவுசாகலை தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் லயன் குடியிருப்புக்கள் அதிர்ந்ததுடன் பீதியடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியில் ஓடிச்சென்று பாதுகாப்பு தேடினர். எனினும் உயிர்சேதங்கள், பொருள் சேதங்கள் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பாரிய சத்தத்துடன் லயன் குடியிருப்புக்கள் அதிர்வடைந்தன. அத்துடன் குடியிருப்புகளில் தூசுகள் பரவியது. இதனால் மக்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறினர். எனவே மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு வெளியேறினர். இதனையடுத்து தோட்ட நிர்வாக புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு…

  23. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நீண்ட காலமாக நடாத்தப்படாமை தொடர்பிலும் நடாத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கடிதமொன்றை சனிக்கிழமை (13) அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் இருவரும் நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் மேற்படி கூட்டங்கள் எதுவும் இதுவரை மன்னார் மாவட்டத்தில் நடாத்த…

  24. மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த, முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி, 'எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வார்' என தெரிவித்தார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114398/language/ta-IN/article.aspx

  25. மலசலகூடத்துக்குள் மகிந்த! – அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண். [saturday 2014-12-13 10:00] மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என ஐதேக எம்.பி. சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றில் கிண்டலடித்தார். பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவின் பதாகைகளை அரச தரப்பினர் ஒட்டிவிடுகின்றனர். மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என ஐதேக எம்.பி. சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றில் கிண்டலடித்தார். பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.