ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
கேட்பாரற்று அல்லலுறும் மக்கள் நீதி வேண்டி மன்றாட்டம்- யாழ்ப்பாணம். 31.10.2014 மதிப்பிற்குரிய அம்மணி/ஐயா, கடந்த 22.10.2014 அன்று எமது அரியாலை முள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியவதனி (வயது 18) என்பவர் கொடூரமான பாலியல் வல்லுறவுக்கும் உடலியல் உளவியல் ரீதியான வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்த வன்முறையை நிகழ்த்தியவர் முள்ளி வீதி, அரியாலை எனும் .முகவரியைச் சேர்ந்த 27 வயதுடைய சோதிநாதன் யசிந்தன் என்பவராவார். இவர் கடந்த காலங்களிலும் இது போன்ற பல வன்முறைகளை எமது முள்ளி, பூம்புகார் பகுதிகளில் நிகழ்த்தியுள்ள காரணத்தாலும் இவருடன் இணைந்த இவருடைய வன்முறைகளுக்குத் துணை போகும் நண்பர்கள் இன்னமும் சமூகத்தில் நடமாடித் திரிவதாலும் உள்ள அச…
-
- 0 replies
- 840 views
-
-
ஏ-9 வீதியில் கரணமடித்தது கார் - 2 பேர் பலி! - மூவர் காயம். [Wednesday 2014-11-05 19:00] ஏ-9 வீதியால் சென்ற கார் ஒன்று மாங்குளம், பனிக்கங்குளத்தில், இன்று மாலை விபத்துக்குள்ளானதில், இருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று மாலை 4.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுமார் 75 மீற்றருக்கு அப்பால் கரணமடித்தது. காரில் பயணித்துக் கொண்டிருந்த 5 பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற மாங்குளப் பொலிஸார் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்க…
-
- 1 reply
- 650 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் மலர்க்கண்காட்சி ஒன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தி மரநடுகையை ஊக்குவித்து வருகிறது. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மலர்க்கண்காட்சியை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பித்து வைத்தார். 5ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் 13 நிறுவனங்கள் கலந்து கொண்டு தமது அலங்காரத் தாவரங்களையும் பயன்தரு மரங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு உற்பத்திகளைக் காட்சிப்படுத்தி விற்பனையும் செய்யவுள்ளனர்…
-
- 1 reply
- 654 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப்பதிவுகளின் இறுதி நாளான இன்றும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன. வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்திலும் அதன்பின்னரும் காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லை . மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவுகள் கடந்த 02, 03, 04, 05 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றன. இறுதிநாளான இன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தை சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய 49 பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 33 பேர் தங்களுடைய காணாமல் போன உறவுகள் குறித்து ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்திருந்தனர். மேலும் 34 பேர் தங்களுடைய உறவுகளையும் தேடி…
-
- 0 replies
- 266 views
-
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யுமாறு பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை கோட்பாடுகளை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட உடனேயே அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் தடை செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக புலிகளின் கொள்கைகளை பின்பற்…
-
- 1 reply
- 547 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீ : விமானங்களை இந்தியாவில் தரையிறக்க தீர்மானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீ பரவியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த தீ விபத்து காரணமாக விமானங்கள் இந்தியாவில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/11/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0…
-
- 2 replies
- 607 views
-
-
பல நூற்றாண்டுகால தமிழர் இருப்பை பறைசாற்றும் பாரம்பரிய எம் தமிழ்க்கிராமத்தில் இன்று எமது இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது என தென்னமரவடி மக்கள் முறையிட்டுள்ளனர். மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளை அடுத்து அங்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பொன்றிலேயே மேற்படி முறையீடுகளை தெரிவித்துள்ளனர். மேலும் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுச்சிறப்புமிக்க வளம் பொருந்திய எம் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியவில்லை. மீன்பிடிக்க முடியவில்லை. தற்காலிக வீட்டிலேயே நான்கு வருடங்களை தாண்டி பயணிக்கிறது எம் சொந்த மண் வாழ்க்கை என்றும் அவர்கள் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரமாக கொக்கிளாய் ஆற்றி…
-
- 0 replies
- 404 views
-
-
-யோ.வித்தியா இலங்கையில் இருந்து மீன் கொள்வனவை தடை செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முறையற்ற அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மீன்பிடி முறைகளுக்கு எதிரான அமைப்பு (ஐடடநபயடஇ ரசெநிழசவநன யனெ ரசெநபரடயவநன) ஆகியன, இந்திய மீனவர்களின் அத்து மீறல்களையும் கண்டு மௌனமாக இருப்பது ஏன்? என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் புதன்கிழமை (05) கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதி தடை செய்யப்பட்டமையால் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் மட்டுமன்றி இந்திய மீனவர்களும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பயன்படுத்தி இலங்…
-
- 0 replies
- 438 views
-
-
வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 100 மில்லியன் ரூபாய் ஊழல் மோசடி தொடர்பாக வடமாகாணசபை தனியான விசாரணைக்குழுவை அமைக்கவுள்ளது. குறித்த ஊழல் மோசடிகளில் தற்போதைய ஆளுநருக்கும் தொடர்புகள் இருக்கலாமென்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இவ் விசாரணைக் குழுவை அமைப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அமைத்த விசாரணைக்குழு தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளை காப்பாற்றவே முற்படுவதாகவும் கூறப்படுகின்ற நிலையில் பொறியியலாளரிடமிருந்து ஊழல் செய்த பணம் விரைவாக திரும்பப் பெறுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள வடமா…
-
- 0 replies
- 355 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு மீன்பிடித்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தால் பாரியளவில் இழப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில் ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இழப்புக்களை தவிர்க்க முடியாது என இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்யுள்ளனர். இலங்கை அரசாங்கம் மீன்பிடித்துறை தொடர்பிலான சர்வதேச நியமங்களை பின்பற்றத் தவறியுள்ள காரணத்தினால், இலங்கையிலிருந்து மீன் வகை இறக்குமதியை தடை செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்டால் 13 பில்லியன் ரூபா வருமானமும், 30000 பேரின் தொழில்களையும் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக த…
-
- 0 replies
- 406 views
-
-
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் வடபகுதிக்கு செல்வதற்க்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை, அரசமைப்பிற்க்கு எதிரானவை என இலங்கையின் மூத்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். பிரபல சட்டத்தரணிகள் ஏ.ஜே வெலியமுன மற்றும் லால் விஜயநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய சட்டத்தரணிகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளின் படி நடமாடுவதற்கான சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதை பாராளுமன்ற சட்டம் மூலமாகவோ அல்லது அவசரகால சட்டம்மூலமாகவோ மாத்திரமே செய்யமுடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது வடபகுதிக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களோ அல்லது அவசரகாலச்சட்…
-
- 0 replies
- 360 views
-
-
போரினால், பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவசியமானது என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் நிலை மிக மோசமாக உள்ளது.அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் நான் எடுத்து வருகிறேன். மேலும் யுத்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் ஏராளம். அதிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அந்த மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தயாராக இல்லை. தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களுக…
-
- 0 replies
- 250 views
-
-
வட மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் ஆற்றிய உரையில், வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. எனினும், மாகாணசபையின் அரசியல்வாதிகளுக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வடக்கு தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றியுள்ளனர். இந்தக் காணிகளை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு வர அனுமதிக்காமை காரணமாக அவர்களுக்கு உண்மைத் தகவல்களை பெற்று…
-
- 0 replies
- 264 views
-
-
கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம் இறுதி யுத்தத்தின்போது பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவம் அறிவித்ததற்கு அமைய ஒப்படைக்கப்பட்ட தனது கணவரை தற்பொழுதுவரை காணவில்லை எனவும் இராணுவத்திடம் ஒப்படைத்தபின்னர், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகின்ற புகைப்படமொன்று கடந்த 2009.7.24 அன்று வீரகேசரிப் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதெனவும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கதறி அழுது தனது கணவரை மீட்டுத் தருமாறு நேற்றுக் கோரியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை…
-
- 0 replies
- 873 views
-
-
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை 09.00 மணி முதல் முன்னெடுத்திருந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் சற்று முன்னர் (மதியம் 12.20) நிறைவுக்கு வந்தது. விமான நிலைய ஊழியர்கள் 5 கோரிக்கைகளை முன்வைத்தே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்துக்கான மின்சாரம் இன்று காலை 10.03க்கு துண்டிக்கப்பட்டதையடுத்து மின்பிறப்பாக்கியூடாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. எனினும், மின்பிறபாக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், மின்சாரத்தை 10.45க்கு மீண்டும் துண்டித்தனர். அதுமட்டுமன்றி, விமான நிலையத்தின் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால், குட…
-
- 0 replies
- 291 views
-
-
வவுனியாவில் 24 மணித்தியாலயத்தில் 22.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியாயில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அளெகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் வவுனியாவில் 22.1 மில்லிமீற்றர் மழையும் நேற்று 20.7 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் அடுத்த 24 மணித்தியாலயத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது http://www.metronews.lk/article.php?category=news&news=7576#sthash.nLoilA…
-
- 0 replies
- 240 views
-
-
மீரியபெத்த பெருந்தோட்டத்தில் இடம் பெற்ற பாரிய மண்சரிவில் பெரிதும் பாதிக்கப்பட்டுஇ பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சம் அடைந்திருப்பவர்கள். வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்கி னேஸ்வரனிடம் தமக்கு வளமான வாழ்வினை ஏற்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். தஞ்சம் அடைந்திருக்கும் எம்மை எந்த உதவிகளும் செய்யாமல் இங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் போல் தெரிகின்றது. நாம் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் எம்மிடம் இருந்து வருகின்றது. நாம் படும் கஷ்டம் போன்று உயிருடன் இருந்து வரும் எமது பிள்ளைகளும் எம்மைப் போன்று கஷ்டப்படக்கூடாது. அதற்கான ஒழுங்குகளை நாங்கள் மேற்கொள…
-
- 2 replies
- 493 views
-
-
-ரஸீன் ரஸ்மின் 'பல்கலைக்கழகத்தில் படிச்சுக்கொண்டிருந்த எனது மகனை 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிடிச்சுக்கொண்டு போனார்கள். இன்று வரைக்கும் எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. என்னுடைய மகன் இருக்கிறானா அல்லது இல்லையா இரண்டில் ஒரு முடிவைச் சொல்லுங்கள்' என முல்லைத்தீவு முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வுகள், ஞாயிற்றுக்கிழமை (02), முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. இதன்போது, ஆணைக்குழு முன் முறைப்பாடுகளை பதிவு செய்யும் போதே அவர் மே…
-
- 3 replies
- 757 views
-
-
வடக்கில் காணிகள் வழங்கப்பட்டு அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என பெயரிடப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் லாபத்தைக் கருத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த மக்கள் வடக்கில் குடியமர்த்தப்படுவதாகவும் ஒவ்வொரு ஏக்கர் காணியை வழங்கி அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என அரசாங்கம் பெயர் சூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சுதந்திரம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சுதந்திரம் இருந்தால் அறை இராணுவ ஆட்சி நடத்தப்பட வே…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியம் அளிப்பதை இலங்கை அரச படைகள் கட்டுப்படுத்தி வருகின்றன. பொறுப்புக்கூறல் மற்றம் நல்லிணக்கம் தொடர்பில் நீண்டகால - நிலையான தீர்வொன்று தொடர்பில் அரசு மீளச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதன்போது ஐ.நா விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க விரும்புவோரைத் தடுப்பது என்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்றும்இ நீதிக்கான உரிமையையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் சாட்சிகளைத் திரட்டினார் என்ற பெயரில் இடம்பெற்ற கைது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே…
-
- 0 replies
- 234 views
-
-
புலிகளுக்காக பேசவில்லை, மக்களுக்காகவே பேசுகிறோம்: சம்பந்தன் கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்தமை குறித்து பேசவில்லை, மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியே பேசுகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சம்பந்தன், வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. எனினும், மாகாணசபையின் அரசியல்வாதிகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. ராணுவத்தினர் வடக்கு தமிழ் மக்களின் நிலங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலங்களை ம…
-
- 0 replies
- 495 views
-
-
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவக்குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைபெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2014/11/05/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%A…
-
- 0 replies
- 312 views
-
-
முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டமொன்றை வழங்க முடியாது – அரசாங்கம் 04 நவம்பர் 2014 முஸ்லிம் மக்களுக்காக தனியான நிர்வாக மாவட்டமொன்றை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களை உருவாக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். இன ரீதியாக நிர்வாக மாவட்டங்களை அமைக்குமாறு அரசியல் கட்சிகள் கோருவது நியாயமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கோரிக்கை முஸ்லிம் இளைஞர்களின் மனதுகளில் பிரிவினைவாதத்தை தூண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதமாக உருவாகியது என அவர…
-
- 2 replies
- 580 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் விபத்தில் சிக்கி மரணம்! ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இந்த விபத்து கடந்த வாரம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த அதிகாரிகளின் மரணத்தையடுத்து இது குறித்த செய்திகள் இன்று வெளியாகியுள்ளன. கடந்த வாரம் வனாத்தமுல்லையில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் ஒன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. வைபவம் முடிந்து மீண்டும் அலரிமாளிகைக்கு ஜனாதிபதி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. வனாத்தமுல்லையில் இருந்து பேஸ்லைன் வீதி ஊடாக அலரிமாளிகை செல்ல முயன்றபோது, வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக மோட்டார் சைக்கிள் படையணியின் இரண்டு வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்…
-
- 1 reply
- 416 views
-