ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் கொண்டு வந்து குடியேற்றிய அன்னியர்களும் குடியிருக்கின்றதுடன் அவர்கள் குடிமக்கள் செலவில் குளிர்காய்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று ஊர்காவற்றுரை நாரந்தனை கணேச வித்தியாலயத்தில் காலை 10.30 மணியிளவில் இடம்பெற்ற மரநடுகை மாதமாக நவம்பர் மாதத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எமக்கு மிக அத்தியாவசியமாக வேண்டியதான மரங்களை நட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். கடந்…
-
- 0 replies
- 277 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு வந்திறங்கிய ஐந்து சீனப்பிரஜைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் மற்றும் மீண்டும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்கள் உள்ளதா என விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும் அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்காத போதும், விமான நிலையத்தில் பதற்ற நிலையை தோற்றுவிப்பது போல் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர்களது பயணப் பைகளில் இருந்து சட்டவிரோத சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, சீனப் பிரஜைகள் ஐவரையும் மீண்டும் சீனாவுக்கே அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் தீர்மானித்தனர். வந்த விமானத்திலேயே அவர்களை ஒப்படைக்க முற்பட்ட ப…
-
- 1 reply
- 455 views
-
-
மீண்டும் கொழும்பு வருகிறது சீன நீர்மூழ்கி! - இந்தியாவின் எதிர்ப்பை அலட்சியம் செய்தது இலங்கை [sunday 2014-11-02 08:00] இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல், இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கை வந்து சென்றமை குறித்து இந்தியா இலங்கையிடம் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் பதற்றத்தை கொண்டு வரும் என்றும் இந்தியா எச்சரித்திருந்தது. எனினும் சீனாவின் இந்தக் கப்பல்கள் இராணுவ நோக்கில் இலங்கைக்கு வரவில்லை என்று இலங்கை பத…
-
- 1 reply
- 662 views
-
-
இலங்கையில் ஐந்தில் ஒரு பங்கு பரப்பளவு நிலத்தில் புதையும் ஆபத்து! [sunday 2014-11-02 07:00] இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் 12122 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இவ்வாறு மண்சரிவு மற்றும் மண்ணுள் புதையுண்டு போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இயற்கை காரணிகள் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் தனது எச்சரிக்கையி…
-
- 0 replies
- 690 views
-
-
வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு:- தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாகப் பிரித்து வைத்திருக்கும் பேரினவாத இலங்கை அரசு, இப்போது வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டி அவற்றையும் பிளவுபடுத்தும் திரைமறைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சிகளில் ஒன்றாகவே, வடக்கு மாகாணசபை நிதியை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என்றும், முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்றும் எல்லா மாவட்டங்களுக்கிடையிலும் நிதி சமமாகப் பகிரப்படவேண்டும் என்றும் உண்மைக்குப் புறம்பாகத் தீவிரமான பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றாட…
-
- 0 replies
- 474 views
-
-
பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்;த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக்குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் என்று விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையொட்டி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம். …
-
- 6 replies
- 2.8k views
-
-
அளுத்கம பகுதியில் இன்று மாலை மீண்டும் பதட்டமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்ஹா நகர் பகுதியை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த பதட்ட நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து உயர் இராணுவ அதிகாரி ஒருவர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்தாக தெரியவருகிறது. இதேவேளை சிறிய சம்பவமொன்று காரணமாக உருவான பதட்ட நிலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 முஸ்லீம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113136/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 615 views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியொன்றில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் http://virakesari.lk/articles/2014/11/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0…
-
- 2 replies
- 564 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- பதுளை ஹல்துமுல்ல கொஸ்லாந்தை மீரியாபெத்தை மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. உயிர் பிழைத்த மக்களை அரசாங்கம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மர்மம் புரியவில்லை என ஊடக வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. சம்பவம் இடம்பெற்று சில தினங்கள் கடந்துள்ள நிலையிலும், மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் 192 பேரைக் காணவில்லை எனவும், ஏனைய ஊடகங்கள் 400 பேரைக் காணவில்லை எனவும் தெரிவித்திருந்தன. எனினும், தற்போது இந்த…
-
- 0 replies
- 397 views
-
-
01.11.2014 அன்று காலை பாராளுமன்றத்தில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் 2015 பற்றிய உரையின் முழு வடிவம் உங்களுக்காக... 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு முதலில் சபாநாயகர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள் 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஓர் வரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளார். துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என எல்லாத்தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்த…
-
- 0 replies
- 458 views
-
-
திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரவித்தனர்.இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாசலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119862&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 296 views
-
-
பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது. நேற்று வடக்கு மாகாணசபையில்; நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில், மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நிலச்சரிவு இடரால் 75சிறுவர்கள் வரையில் தாய்,தந்தையை இழந்து தவிக்கின்றனர்.அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு …
-
- 3 replies
- 363 views
-
-
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவ…
-
- 0 replies
- 274 views
-
-
புதையுண்டு போன கொஸ்லாந்தை மக்களின் தியாகம் மலையக மக்களுக்கு நிலத்தையும் வீட்டையும் பெற்றுக் கொடுக்குமா?: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:- மலையக மக்கள் தொடர்பாக இலங்கையின் ஊடகங்களில் வரும் செய்திகளை தொகுக்கும்போது ஏதோ ஓர் நெருக்கத்தை உணர்ந்திருக்கிறேன். அந்த மக்கள் வாழும் லயன்களுக்கும் வன்னியில் எங்கள் மக்கள் வாழ்ந்த முள்வேலி முகாங்களுக்கும் - யுத்தத்தின் பின் இப்போ மக்கள் வாழும வாழ்விடங்களுக்கும்; இடையில் ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது போல் உணர்கிறேன்... மீள்குடியேறிய மக்களின் கூடாரங்களும் மலையக மக்களின் கூடாரங்களும் கூட அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றன. இலங்கையில் மலையக மக்களின் வாழ்வு பற்றி பேசும் தொலைக்காட்சிகளில் மலையகம் தொடர்பில் ஒளிபரப்பாகும் பெரு…
-
- 0 replies
- 418 views
-
-
போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எத…
-
- 0 replies
- 242 views
-
-
-வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு, ஏறாவூர்- சவுக்கடி கடலில் கே.எல் ஜவாஹிர் என்பவரது கரை வலையில், பெரும் எண்ணிக்கையிலான கருக்குப் பாரை ரக மீன்கள், வெள்ளிக்கிழமை (31) பிடிபட்டுள்ளன. சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மீனும் தலா 7 கிலோகிராம் நிறையுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://tamil.dailymirror.lk/--main/131598-2014-11-01-05-12-21.html
-
- 0 replies
- 410 views
-
-
கிராமப் பெண்கள் சிலருடனான ஒரு கூட்டத்தில் ஒரு தடவை நான் கலந்து கொண்டிருந்தபோது அங்கு கலந்துரையாடல் மிகக் கடினமாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஓர் விதவைகள் சங்கம். அரசாங்கத்தின் மூலம் வாழ்வாதாரத்திற்கான பல உதவிகளை அங்கிருந்தவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனாலும் வாழ்வாதாரத்திற்கான உதவிகள் தேவையென கிளிப்பிள்ளை போன்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். முன்பு கிடைத்த உதவிகளை அசட்டையாகக் கைவிட்டதுபோல் தோன்றியது. அவர்கள் மாற்று வழிகளைத் தேடுவதற்கான பல கருத்துக்களை நாம் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கெல்லாம் உற்சாகமாகப் பதிலளிக்கின்ற நிலைமையில் கூட அவர்களிருக்கவில்லை. ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலைப் பெறுவதற்கு பல தடவைகள் சிறு சிறு கேள்விகளி…
-
- 0 replies
- 441 views
-
-
-எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இந்து ஆலயங்களில் 30ஆம் திகதி வியாழக்கிழமை(30) இரவு உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் மற்றும் திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலய என்பவற்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் சம்பவம் இடம்பெற்ற ஆலயங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/131554-2014-10-31-11-41-58.html
-
- 0 replies
- 422 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக்காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தடையாகவுள்ளதென்ற ஜனாதிபதியின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கெளரவமானதொரு தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கு ஜனாதிபதி தயாரானால் தாமும் சில நிபந்தனைகளுடன் பேச்சுக்குத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைத் தம்மிடமிருந்த அந்நியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி தீவிரம் காட்டி வருகின்றார் என்றும் சம்பந்தன் எம்.பி. குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடை பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். அவர் அங…
-
- 0 replies
- 437 views
-
-
நாடுகடத்தப்பட்ட 40 எச்ஐவி நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில்! – நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல். [saturday 2014-11-01 08:00] எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளன என்றும், அவர்கள் 40 பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போதே ஹரிஸன் இந்த தகவலை வெளியிட்டார். இதனையடுத்து, ஹரிஸனின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, 'எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 772பேர் மட்டுமே இலங்கையில் உள்ளனர்' என்று கூறினார். உலகின் 33 நாடுகள், இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆயினும், இலங்கையில் இவ்வகை நோ…
-
- 1 reply
- 796 views
-
-
பொலிஸாருக்கு எதிரான கருத்துக்களையே ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்; எஸ்.எஸ்.பி நாங்கள் மக்களின் நலனுக்காக செய்யும் நல்ல விடயங்களை சுட்டிக்காட்டாது எங்களுக்கு எதிராகவே ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கவலை வெளியிட்டுள்ளார். யாழ். பொலிஸ் தலைமைப் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்.குடா நாட்டில் நடைபெற்று வருகின்ற பாரிய குற்றங்கள் குறித்தும் பொலிஸாரது செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் எஸ்.எஸ்.பியிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடா நாட்டு மக்களுக்காக நாம் பல நல்ல விடயங்களைச் செய்து வருகின்றோம். ஆனால் அவை எதனையும் ஊடகங்கள் பெரிதுபடுத்துவதில்…
-
- 0 replies
- 527 views
-
-
வடமாகாண உள்ளுராட்சி சபையின்அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நூறு மில்லியன் ரூபா வரையில் சுருட்டப்பட்டுள்ளது-சுரேஸ் பிறேமச்சந்திரன் வடமாகாண உள்ளுராட்சி சபையில் ஒப்பந்த அடிப்படையிலான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நூறு மில்லியன் ரூபா வரையில் சுருட்டப்பட்டுள்ளதாக யாழ்.ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளாா். அவா் அங்கு மேலும் தொிவித்ததாவது. வடமாகாண உள்ளுராட்சி சபையில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியில் சுமார் நூறு மில்லியன் ரூபா வரையில் அதிகாாிகளால் சுருட்டப்பட்டிருக்கின்றன. வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர…
-
- 0 replies
- 323 views
-
-
கொஸ்லந்தை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 75 சிறுவர்களையும் அரசு பொறுப்பேற்கிறது - பாராளுமன்றத்தில் அறிவிப்பு கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவின் காரணமாக ஏற்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்லாது முழு நாடுமே சோகத்தில் உறைந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று சபையில் தெரிவித்தார். அத்துடன் இந்த அவலத்தில் பாதிக்கப்பட்டு அநாதரவாகியுள்ள 75 சிறுவர் சிறிமியரின் பாதுகாப்பு அவர்களது எதிர்காலத்தேவைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும் அவர் கூறினார். கொஸ்லந்தை சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கூற்றினை வெளியிட்டே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…
-
- 1 reply
- 429 views
-
-
ஆனந்தி சசிதரன் குறித்து வட மாகாண ஆளுனர் விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தொடர்பில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவை என ஆனந்தி கோரியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற போது ஆனந்தி சசிதரன் வட மாகாண சபையின் அனுமதியை பெற்றுக்கொண்டாரா என சந்திரசிறி கேள்வி எழுப்பியுள்ளார். மாகாணசபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் ஆளுனர் இந்த விளக்கத்தை கோரியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாதுகாப்பு தரப்பு அதிக…
-
- 0 replies
- 633 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா அமைப்பாளர் தலைமறைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா அமைப்பாளர் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அலவ் பிள்ளே விஜேந்திரகுமார் எனப்படும் சன் மாஸ்டர் என்ற நபரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு போலியான தகவல்களை வழங்கியதாக சன் மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான படிவங்களை வைத்திருந்ததாகவும், வெற்றுப் படிவங்களில் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்iமையில் இவ்வாறான ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சின்னத…
-
- 0 replies
- 405 views
-