ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது .....??? 31 ஆகஸ்ட் 2014 நாட்டில் இன்னொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசநாயக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டை பலவீனப்படுத்துவதற்கும் பிரிப்பதற்கும் நாட்டிற்குள் உள்ள குழுக்கள் சில ஆதரவளிக்கின்றன, இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழலை குழப்புவதற்கு சில பலம் வாய்ந்த தேசங்கள் நிதி வழங்குகின்றன, இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் நாட்டையும் ஜனாதிபதியையும் காப்பாற்ற வேண்டும் என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Artic…
-
- 0 replies
- 521 views
-
-
தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துரையாடியுள்ளது. இது அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றிப் பயணம் என்று அவர்களால் மட்டுமே கூறலாம். ஏனெனில் பிரதமர் மோடியை அவர்கள் நேரில் சந்தித்துவிட்டனர், தாராளமாகப் புகைப்படங்களும் எடுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த படியே அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் அனைத்திலும் அவை முன்பக்கங்களில் பிரசுரமாகியும் விட்டன. எனவே இச்சந்திப்பு அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வெற்றிப் பயணமே. ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களது மனங்களை ஏமாற்ற இதுவொன்றே தமிழ்க் கூட்டமைப்பிற்குப் போதுமானது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இதுவொரு தோல்விப் பயணமே. பிரதமர் மோடியைச் சந்தி…
-
- 6 replies
- 810 views
-
-
பிரான்சு தலைநகர் பரிஸ் 10ல், தமிழர்களின் வியாபார மையமாக திகழும் லாச்சப்பல் பகுதியில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் இனந்தொியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் தோ்பவனிக்காக இன்றே அப்பகுதிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. இந்நிலையில் அப்பகுதி வர்த்தகர்கள் பிள்ளையார் பவனி வரும் பாதைகளை அலங்கரிக்கும் வேலைகளை ஆரம்பித்திருந்தவேளையில், லைக்கா மொபைல் நிறுவனமும் லாச்சப்பல் சந்தியில் பொிய கொட்டைகை ஒன்றை அமைத்து தமது விளம்பரங்களை செய்திருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது. இனந்தொியாத நபர்கள் லைக்கா கொட்டகைக்குள் ஊடுருவித்தாக்கி அங்கிருந்த விளம்பரப்பலகைகள…
-
- 1 reply
- 497 views
-
-
இந்திய மீனவர்கள் றோலர்களைப் பயன்படுத்தி மீனபிடிக்கின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எம்மையும் றோலர்களில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் தனக்கு அழுத்தம் தருகின்றனர் என்று வடக்கு மாகாண மீனபிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- வல்வெட்டித்துறையின் ஒரு பகுதி மீனவர்கள் என்னைச் சந்தித்துப் பேசினர். இதன்போது அந்த மக்கள் இந்த குற்றச்சாட்டை என்னிடம் முன்வைத்தனர். அத்துடன் தமிழக மீனவர்கள் றோலர்களை பயன்படுத்தினால் தம்மையும் அதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இலங்கையில் 18 வகையான மீன்பிடி முறைமைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதில் ற…
-
- 0 replies
- 280 views
-
-
இந்தியா (மோடி) சொன்னதும் தமிழ் ஊடகங்கள் சொல்லாததும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் முதல்முதலாக இந்தியாவின் பிரதமர் உள்ளடக்கிய குழுவினரை சந்தித்து திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சம்பந்தன் இவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த சந்திப்பின் பின்னர் அதிசயங்கள் நடைபெறப்போவதாக சொல்லி வந்த தமிழ் ஆய்வாளர்கள், ஊடகக்காரர்கள் என்போரின் கதைதான் அதோகதியாகிவிட்டது. பெரும் ஆவலுடன் ஒரு திரைப்படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் படத்தை பார்த்தபின் இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்ளுவதற்கு ஒப்…
-
- 0 replies
- 613 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாநகரசபையால் உபயோகிக்கப்பட்ட பழமை வாய்ந்த உழவு இயந்திரம் ஒன்று மாநகரசபைக்கு முன்பாக கடந்த வாரத்திலிருந்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரைக்கும் திண்மக்கழிவு அகற்றல் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக இந்த உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். இதன் பின்னர் இந்த உழவு இயந்திரம் பழுதடைந்த நிலையில் உபயோகிக்கப்படுத்த முடியாது மட்டக்களப்பு மாநகரசபையின் களஞ்சியசாலையில் இருந்ததாகவும் அவர் கூறினர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/79--image/124766-2014-08-31-07-01-03.html
-
- 2 replies
- 834 views
-
-
வன்னியை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னரான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களது வரலாற்று பாரம்பரியத்தை கட்டிக்காக்க வேண்டியது எங்கள் அனைவரது பாரிய பொறுப்பாகும். வரலாறுகளை நாம் எமது தந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கமைய வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இம் மக்களுடைய கோரிக்கைக்கு அமைய பண்டாரவன்னியனின் இராச்சியங்களில் ஒன்றாக விளங்கிய முல்லைத்தீவு நகரில் மன்னனுக்கு சிலை அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள…
-
- 1 reply
- 505 views
-
-
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு முயற்சிக்கிறது பொதுபல சேனா - ரிஷாட் மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாக வாழ முற்படும் போது பொதுபல சேனா இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்கின்றது அரசு. இந்த அமைப்பை கட்டுப்படுத்தாது பாராமுகமாக செயற்படுகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார். பொதுபல சேனா இனம் தெரியாத நபர்களை வைத்து அமைச்சர் ராஜித சேனரத்ன, மன்னார் ஆயர் இராயப்பர் ஜோசப் மற்றும் என்னையும் சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்த அமைப்பு நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு சாபக்கேடாகும். அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவங்களுக்கு பொதுபல ச…
-
- 1 reply
- 432 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது. அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது - ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. புனித பாப்பாண்டவர…
-
- 0 replies
- 843 views
-
-
ஹலி கொப்டரில் வருவதால் அபிவிருத்திக்கு உதவிட முடியாது முதலமைச்சர் தெரிவிப்பு 2014-08-30 10:23:03 கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவிவிடாது. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் இவர்களே நந்திபோன்று தடையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒன்றுசேர்ந்தால் தான் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் பங்களிப்புடன் பருத்தித்துறை தும்பளை தெற்கு மாதர் கிராம…
-
- 0 replies
- 460 views
-
-
மாவட்ட மட்ட தாச்சி போட்டி ஆலடி சிந்து-தாவடி காளியம்பாள் இன்று பலப்பரீட்சை 2014-08-30 10:38:22 யாழ்.மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கம் இலங்கை வங்கி, வர்த்தக வங்கி, மக்கள் வங்கி ஆதரவில் மாவட்ட மட்டத்தில் தாச்சிப் போட்டிகளை நடத்தி வருகின்றது. இப்போட்டிகள் மின்னொளியில் கைதடி விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. தொடரின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இவ் இறுதிப் போட்டிக்கு தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் ஆலடி சிந்து வி.க.மோத வுள்ளன. முன்னதாக இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகமும் மோதியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்…
-
- 0 replies
- 474 views
-
-
மகஜர் வழங்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பொலிஸ்; வீதியில் அமர்ந்து போராடினர் உறவுகள் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்றைய தினம் ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்க சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்று வட மாகாணங்களில் உள்ள பிரஜைகள் குழுக்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் ஆகியவற்றினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு வவுனியா நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காணாமல் போனவர்களது உறவினர்கள் நூற்றுக்கணக…
-
- 0 replies
- 429 views
-
-
ஓடுபாதைக்கு 5 ஏக்கர் மிகுதி மக்களுக்கு : இராணுவ பேச்சாளர் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் 245 ஏக்கர் வயல் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த ஊடகவியாலளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிகையில் :- முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகள் அமைத்திருந்த விமான ஓடுபாதையை குறித்த பிரதேசத்து பொதுமக்களின் எதிர்கால பயன்பாட்டிற்கென இராணுவத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. இதற்காக 5 ஏக்கர் வயல் நிலத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப…
-
- 0 replies
- 399 views
-
-
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்கள் மூவர் நேற்றைய தினம் கந்தசாமி ஆலய்திற்கு அருகில் உள்ள பயங்கரவத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். கிளிநொச்சிப் பகுதியிலுள்ள பாடசாலைகளின் முகவரிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட உயிர்ப்பதிவு என்னும் புத்தகம் தொடர்பிலேயே மேற்படி பாடசாலைகளின் அதிபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர். குறித்த புத்தகம் கத்தோலிக்க மதகுரு ஒருவரினால் அச்சிட்டு வெளியிடப்பட்டதாகவும், இதன் பிரதியினை பாடசாலைகள் விடுமுறை என்பதால் தாங்கள் இன்னும் படிக்கவில்லை எனவும் கூறிய அதிபர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட பயங்கரவாதத் தடுப்புப்…
-
- 0 replies
- 344 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/33532/57//d,article_full.aspx
-
- 0 replies
- 372 views
-
-
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் விளக்கமளித்துள்ளார். இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையான மூன்று நாட்கள் கொழும்பில் கலதாரி விடுதியில் இடம்பெற்றது. இதில் இந்தியாவில் இருந்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தார். கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்ட கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருந்தன. இதனால் சுப்பிரமணியம் ச…
-
- 0 replies
- 312 views
-
-
மோடியுடனான சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பு கூறுவது அப்பட்டமான பொய்யாம்! - சம்பிக்க ரணவக்க சொல்கிறார். [sunday 2014-08-31 08:00] இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்து வரும் கருத்துக்கள், பேட்டிகள் அனைத்துமே பொய்யானதும், கை கால் மூக்கு வைத்த கற்பனை கலந்ததுமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உண்மையாக மோடி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துகள் அனைத்துமே அப்பட்டமான பொய். இந்தியா, இலங்கை தொடர்பாக எதனையு…
-
- 0 replies
- 244 views
-
-
மோடியின் ஆலோசனையால் கடும் போக்கில் இருந்து தளர்கிறது இலங்கை அரசு! - இந்தியன் எக்ஸ்பிரஸ் [sunday 2014-08-31 08:00] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை காரணமாக இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றால் மாத்திரமே அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் கூறிவந்தது. தற்போது கூட்டமைப்பின் நடவடிக்கைகளே முன்னர் தம்முடன் இடம்பெற்ற பேச்சு முறிவதற்கான காரணம் என்று அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரினால் அதனுடன் பேச்சு நடத்த அரசாங்கம் விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் சுச…
-
- 0 replies
- 727 views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்! - ஐ.நா குழு வலியுறுத்துகிறது. [sunday 2014-08-31 08:00] இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பலாத்காரம் மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான ஐ.நா நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது. ஐ.நாவின் 13வது பிரகடனத்தின்படி இலங்கை அரசாங்கம் விசாரணைகள், முறைப்பாடுகள், ஆலோசனைகள், விசாரணைகளின் சாட்சிகள் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கவேண்டும் என்றும் இந்தக் குழு கோரியுள்ளது. இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்கு…
-
- 0 replies
- 435 views
-
-
ஜனவரி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு! [sunday 2014-08-31 08:00] அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் சரத்துக்களுக்கு அமையவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்பவும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் ப…
-
- 0 replies
- 381 views
-
-
எதிரிகளை விட நண்பர்களாலேயே மஹிந்தவுக்கு ஆபத்து! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் எச்சரிக்கை [sunday 2014-08-31 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரிகளை விட, நண்பர்களாலேயே பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குப் பயணம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்திய பிரதமர் வரவேற்ற விதம் மற்றும் கூட்டமைப்புடன் அவர் நடத்திய நெருக்கமான பேச்சுகள் என்பன தொடர்பாகவே ஆங்கில இதழ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பின் போது செயற்பட்ட விதம் குறித்து இலங்கை பெருமிதம் அடைந்தது. இதன் காரணமாக இந்தியாவும் புதிய அரசாங்கமும் கூட, தம்முடன் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நின…
-
- 0 replies
- 599 views
-
-
திருமலை எழுத்தாளர் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா 12 மணிநேரம் தொடர்ந்து எழுதிச் சாதனை! [sunday 2014-08-31 08:00] திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் கட்டுரை எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நேற்றுக் காலை 8.00 மணிக்கு இந்த சாதனை முயற்சியை ஆரம்பித்தார். கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பில் அவர் முதல் 04 மணித்தியாலங்கள் எழுத்தும் எனது வாழ்வும் எனும் பொருளிலும், அடுத்த 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் என்ற பொருளிலும், இறுதி 04 மணித்தியாலங்கள் கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதியுள்ளார். நேற்றிரவு தனது சாதனை முயற்சியை நிறைவு செய்த எ…
-
- 0 replies
- 296 views
-
-
நோர்வே மண்ணில் பிறந்து வளர்ந்து அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்பயின்று தமிழ் இனத்தின் விடுதலைக்காக விடுதலைப்பண்ணெடுத்து பாடிவருகின்றார் இளம் குயில் நிதுலா ஞானச்சந்திரன். மிகவும் இளையவராக இருக்கின்ற இவர் சினிமா மோகத்துக்குள் சிக்குண்டு போகாது தேசத்தின் வலியை சுமந்து தன் குரலால் உரிமைகீதம் பாடிவருகின்றார் குறிப்பாக இந்த காலகட்டத்தில் கலைஞர்கள் சினிமாவுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் தேசவிடுதலை சார்ந்து சிந்திப்பதிலும் பங்களிப்பதிலும் சற்று குறைந்து வருவதை வெக்கத்தோடு பார்க்கின்ற நிலையில் விடுதலைக்காக போராடிவருகின்ற ஒரு இனத்தின் பிள்ளை எப்படி இருக்கவேண்டும் என்ற எடுத்துக்காட்டாக தன்னை இனம் காட்டியுள்ளார். காலத்தின் தேவைகருதி இந்த இளையவரின் பிடரி நிமிர்ந்திருப்ப…
-
- 1 reply
- 458 views
-
-
விசாரணை தேவையில்லை, அதிகாரப்பகிர்வே அவசியம்! - என்கிறார் தயான் ஜயதிலக. [saturday 2014-08-30 18:00] தற்போது, சர்வதேச விசாரணையோ அல்லது உள்ளக விசாரணையோ அவசியமில்லை. அதிகாரப்பகிர்வே உடனடியாகத் தேவையாகவுள்ளதென ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பிரச்சினைகள் - விவரணை III எனும் வெளியீடு தொடர்பாக விமர்சன ரீதியிலான கலந்துரையாடலொன்று நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு கலாநிதி தயான் ஜயதிலக்க தொடந்து உரையாற்றுகையில், இலங்கையில் இடம்பெற்றத…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரில் தமிழ் மொழியை கற்று தேர்ச்சி அடைந்த படை அதிகாரிகள் உட்பட படை வீரர்கள் 1600 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதயபெரெராவும் கலந்து கொண்டார்கள். விருந்தினாகள் கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்பு படையினரின் நடன நிகழ்வு மற்றும் கண்டியன் நடன நிகழ்வுகளுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. …
-
- 6 replies
- 729 views
-