Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -நவரத்தினம் கபில்நாத் வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நீர்த்தாங்கியில், நீண்ட காலமாக கூடு கட்டியிருக்கும் குளவிகளினால் அப்பகுதி வர்த்தகர்களும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக, வவுனியா பஸ் நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் எஸ். ஜெயச்சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் பலர் குளவி கொட்டிற்கு ஆளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பராமரிப்பிலேயே இந்நீர்த்தாங்கி உள்ளது. அதிகாலை பஸ் நிலையத்தில் உள்ள வர்த்த நிலையங்களுக்கு வருபர்கள் குளவிக்கொட்டிற்கு …

    • 0 replies
    • 320 views
  2. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தை ஆதரிப்பதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/117928-2014-07-14-02-58-31.html

    • 0 replies
    • 285 views
  3. இலங்கையர்களுக்கு தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் news தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு பல தசாப்தங்களின் பின்னர் சாதி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. புத்தூர் மற்றும் சுலியா மாவட்டங்களின் குடியிருப்புகளில் வாழும் இலங்கையர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=790543222314688634#sthash.igwUeWTQ.dpuf

  4. மேலும் 198 ஏக்கர் நிலத்தை விழுங்குகிறது சீனா! [Monday 2014-07-14 09:00] இலங்கையின் மேலும் பல ஏக்கர் அரச காணிகள் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளன. புதிய ஏற்பாட்டின்படி கம்பஹாவில் உள்ள 198 ஏக்கர் நிலம் சீன நிறுவனம் ஒன்றுக்கு உரித்தாகவுள்ளது. கண்டி - கொழும்பு வீதி அமைப்புக்காகவே இந்த நிலம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலம் தொடர்பில் ஏற்கனவே இலங்கை அரசாங்கமும் சீன தனியார் நிறுவனமும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஏற்கனவே சீன நிறுவனத்துக்கு கொழும்பு காலிமுகத்திடலில் வழங்கப்பட்ட நிலப் பகுதியில் தற்போது கட்டிட அமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.http://www.seithy.com/breifNews.php?newsID=113100&category=TamilNews&l…

  5. இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம் news இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக் கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில் பெயிண்டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன் இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும் …

    • 17 replies
    • 2.8k views
  6. கருணா, டக்ளஸ், பிள்ளையானிடம் விசாரணை! - ஜனாதிபதி ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு [sunday 2014-07-13 18:00] பிரதி அமைச்சர் கருணா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் ஆகியோருக்…

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு வதிவிடத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 1976ம் ஆண்டு அணிசேரா மாநாட்டுக்காக கட்டப்பட்ட தொடர்மாடியின் இரண்டாவது தளத்தில், இரா. சம்பந்தன் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அவரது வதிவிடத்தின் கதவு தட்டப்பட்டது. எனினும், கூட்டத்தில் அவர்கள் கவனம் செலுத்தியிருந்ததால் அது திறக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டதை அடுத்து, உதவியாளர் ஒருவர் கதவைத் திறந்தார். சிறிலங்கா இராணுவத்தின் இளம் அதிகாரி ஒருவர் இரா. சம்பந்தன் முன் வந்து நின்று, மரியாதை செய்தார். தொடர்மாடியை தாம் சோதனையிட வேண்ட…

    • 6 replies
    • 722 views
  8. வடமாகாணத்துக்கு சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்காமல் மீண்டும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை ஆளுநராக்கியதன் மூலம் தமிழர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் துளியளவும் விரும்பவில்லையென்பதை தெட்டத் தெளிவாக்கியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது இனங்களுக்கிடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது மாறாக மேலும் மேலும் குரோதத்தையும் இன முரண்பாடுகளையுமே தோற்றுவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக்கியமை தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கை…

    • 1 reply
    • 288 views
  9. 'இருநாட்டு உறவுகள் பலமடைந்துள்ளன': இந்திய வெளியுறவுத் துறை இந்தியா வந்திருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டு போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 'உள்நாட்டு போருக்கு பிறகு அந்நாட்டின் அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதன முயற்சிகள், வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் ப…

    • 7 replies
    • 527 views
  10. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரி ஜீ.ஏ. சந்திரசிறியை நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பி.பி.சி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி முன்னிலையில் தாம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோது, சிவில் பின்புலம் கொண்ட ஆளுநர் ஒருவரை நியமிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த உறுதிமொழியை மீறியதன் மூலம் ஜனாதிபதி தனது பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறார் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவத்தின் கட்டுப்பா…

    • 0 replies
    • 368 views
  11. கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் 14 வயதுச் சிறுமியைக் கத்தியைக் காட்டி பற்றை ஒன்றுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று கூறப்படும் 25 வயது இளைஞர் ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் இன்றிரவு கைது செய்திருக்கின்றனர். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த நபர் நாளை காலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாதிப்புற்ற சிறுமி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். தனது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள கிணற்றுக்குத் தண்ணீர் எடுப்பதற்காகத் தனது இளைய சகோதரனையும் கூட்டிச் சென்ற சிறுமிக்கே இக்…

    • 0 replies
    • 663 views
  12. இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆந்திரபிரதேசத்தில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக உரிமையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக நெக்ஸ்ட், லெவிஸ் போன்ற ஆடை நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தில் இருந்தே ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தொடர்பான உடன்படிக்கை இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. ஆந்திரபிரதேஸ், விசாகபட்டிணத்தில் உள்ள இந்த தொழிற்சாலையை இந்தியாவின் பினாமி என்ற அடிப்படையில் இலங்கை நிர்வாகம் செய்யும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யுத்த குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் இவ்வாறு இந்தியா நெருங…

  13. 2022 ம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதி! - என்கிறார் அமைச்சர் ரம்புக்வெல [sunday 2014-07-13 18:00] மகிந்த ராஜபக்சவே 2022 ம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதி என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்திய பின்னர், எந்த தேர்தலையாவது நடத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2022 ம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதி எனவும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். http://www.seithy.com/bre…

  14. கிளிநொச்சியில் மாட்டுவண்டிச் சவாரிக்கும் தடை! - கொழும்பிலிருந்து வந்ததாம் உத்தரவு [sunday 2014-07-13 18:00] கிளிநொச்சியில் இன்று நடைபெறவிருந்த மாபெரும் மாட்டு வண்டிச்சவாரி இராணுவத்தினராலும் பொலிசாராலும் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் நாகதம்பிரான் கமக்கார அமைப்பு நாகலிங்கம் நந்தகுமார் நினைவாக அக்கராயன் சவாரி திடலில் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாட்டுச்சவாரி போட்டிக்காக வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் ஏராளம் சவாரியாளர்கள் தங்கள் மாடுகள் வண்டிகள் சகிதம் வருகைதர இருந்த நிலையில் இறுதி நேரத்தில் கொழும்பில் இருந்து வந்ததாக கூறப்படும் உத்தரவின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி தொடர்பாக முற்கூட்டிய …

  15. விரும்பாவிட்டால் முயற்சிகளைக் கைவிடத் தயார்! - ஜனாதிபதியிடம் ரமபோசா தெரிவிப்பு [sunday 2014-07-13 19:00] இலங்கை அரசுக்கு விருப்பமில்லாவிட்டால் தென்னாபிரிக்கா தனது முயற்சிகளை கைவிடத்தயார் என அந்த நாட்டின் விசேட பிரதிநிதி சிறில் ரம்போசா தனது இலங்கைப் பயணத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த வேளை அவருடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் உங்களது அரசாங்கத்தின் வேண்டுகோளின் பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளோம், உங்களுக்கு எங்களது பங்களிப்பு பிடிக்கவில்லை என்றால் நாங்கள் விலகிக் கொள்ள தயாராக உள்ளோம், நாங்கள் எங்கள் நாட்டினது கௌரவத்தை காப்பற்றவேண்டும் என ரமபோசா தெரிவித்துள்…

  16. 13வது திருத்தம் வேண்டாம், சமஷ்டித் தீர்வே தமிழர்களுக்குத் தேவை! - அமிர் நினைவு நிகழ்வில் பேராசிரியர் சிற்றம்பலம் [sunday 2014-07-13 19:00] தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல்தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவையில்லை என்று பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழரசு கட்சியின் ஆரம்ப கால உறுப்பினருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 25 ஆவது நினைவு தினம், இன்று யாழ். மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் சிற்றம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் இதுவரை காலமும் பட்ட கஷ்டங்களுக்கு ச…

  17. கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டங்கள்! - அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் அறிவிப்பார் சம்பந்தன் [sunday 2014-07-13 19:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், மற்றும் முக்கிய திட்டங்கள் குறித்து, அதன் தலைவர் இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் 34 ஆவது மாநாடு எதிர்வரும் 19 ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியிலும் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 20 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சம்பந்தன் எதிர்வரும் 19 ஆம் தி…

  18. யாழ்ப்பாணத்துக்கு வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி வணக்கத்துக்குரிய றூல்சோ இன்று விஜயம் செய்திருந்தார். இன்று காலை வருகை தந்த அவர், யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்துடன் இணைந்து யாழ். புனித செபஸ்தியார் தேவாலயத்தில் விசேட திருப்பலி பூசையை நடத்தினார். அடுத்த வருடம் போப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அவரின் வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் றூல்சோ அவரது பயணம் அமைந்திருக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவரது இலங்கை வருகைக்கான முழுமையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. http://tamil24news.com/news/archives/173598

  19. எம்மை ஒருபோதும் குற்றவாளியாக்கி விட முடியாது! - என்கிறார் ஞானசார தேரர் [sunday 2014-07-13 07:00] முஸ்லிம் இனவாதத்தை தடுப்பதே எமது நோக்கமே தவிர அப்பாவி முஸ்லிம் மக்களை அழிப்பது எமது நோக்கமல்ல என்று பொது பல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; பொதுபலசேனா அமைப்பு எப்போதும் ஏனைய மதங்களையோ மதத் தலைவர்க ளையோ அழிக்க வேண்டும் என நினைத்ததில்லை. நாட்டிற்கு எதிராக தீய சக்திகள் உருவாவது முழு நாட்டிற்குமே பாதிப்பினை ஏற்படுத்தும். அது பௌத்தனாக இருந்தாலும் இந்துவாக இருந்-தாலும் கிறிஸ்தவமோ அல்லது முஸ்லிமாக இருந்தாலும் அனைவரையும் பாதிக்கும் விடயமாகும். அதே போல் இலங்கைக்குள் ஊடுருவி வரும் …

  20. முற்றிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ் எதிர்காலத்தின் தலையிடியாக தழைத்துவருகின்றது. தெற்கிலே முஸ்லிம் மக்கள் மதவாதிகளால் தாக்குதலுக்குள்ளானபோது சிறுபான்மை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக சமூகம் தவறாது தனது குரலினையும் ஓங்கி ஒலித்தது. இந்தக் குரலானது முஸ்லிம்களிற்கு சார்பானதோ அல்லது பேரினவாதிகளிற்கு எதிரானதோ என்று மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. மானுடத்தின்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளிற்கும் அடாவடித்தனங்களிற்கும் எதிராதனேயன்றி வேறில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கத் தமிழ் ஐக்கியத்திற்கேற்ப மனிதநேயம் காக்கப்பெற்று இன மத சமூக வேறுபாடுகளின்றி அனைவரும் ஒருதாய்…

  21. கிளி பாரதிபுரம் மக்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு: [saturday 2014-07-12 19:00] கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாராதிபுரம் பகுதி மக்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிதண்ணீர் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் மக்களால் தொிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வறட்சி காரணமாக அப்பகுதியிலுள்ள கிணறுகள் அனைத்தும் வற்றியுள்ளதுடன், எஞ்சியுள்ள கிணறுகள் உப்புநீராக மாறியுள்ளதாகவும் அதனால் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், கூட நிரை பெற முடியாநிலையில் நீண்ட தூரம் நடந்துசென்று தண்ணிர்பெற வேண்டியுள்ளதாகவும். பல நாட்களுக்கு ஒரு தடவையே தூர இடங்களுக்குச் சென்று குளிக்க வேண்டியிருப்பதாகவ…

  22. இலங்கையின் குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரிப்பு! [sunday 2014-07-13 07:00] அரசியல் நோக்கத்துடன், சமூக ஊடக பயிற்சித் திட்டங்களை அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வருவதாக இலங்கை அமைச்சர்கள் சிலர் சுமத்திய குற்றச்சாட்டை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், அமெரிக்கத் தூதரகத்தினால், தொண்டு அடிப்படையில் சமூக ஊடகங்கள் குறித்து அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. கருத்து வெளிப்பாடு மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான எமது நீண்டகால ஆதவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNew…

  23. காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியமளித்த சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையினை பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. அதன்போது யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வசிக்கும் போது வெள்ளை வானில் வந்தவர்களால் வீட்டில் வைத்து கணவர் கடத்திச் செல்லப்பட்டார். அந்த நேரத்தில் இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டில் தான் யாழ்ப்பாணம் இருந்தது என்றும் அவர்கள் தான் எனது கணவரை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்தார். அதனையடுத்து எந்தப் பகுத…

  24. யாழ்ப்பாணம் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த வைரவர் ஆலயம் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீமன்காமத்தில் தனி நபர் ஒருவரால் கட்டப்பட்ட தலைசிட்டி ஞான வைரவர் ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இராணுவத்தினருக்கே தெரியாத நிலையில் இருந்த ஆலயத்தை பார்ப்பதற்கு உரிமையாளர்கள் விரும்பியதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் அனுமதிபெற்றதையடுத்து குறித்த ஆலயத்துக்கு சென்று தரிசித்திருந்தனர். இது குறித்து விஜயகலா மகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தலைசிட்டி ஞான வைரவர் ஆலயம் தனியாள் ஒருவரால் கட்டப்பட்டது. இதுதான் உலகத்…

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் நிறுவுனருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் மணிவிழா யாழ்.இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும், யாழ்.மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ்.பல்கலைக்கழக கல்விமான்கள் மற்றும் மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினர். http://www.jvpnews.com/srilanka/76196.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.