ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இன்று பொலிவியா செல்கிறார் ஜனாதிபதி மகிந்த! - உலகத் தலைவர்களை சந்திப்பார். [Thursday, 2014-06-12 08:03:22] ஜீ-77 நாடுகள் அமைப்பின் 50 வது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொலிவியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா தெரிவித்தார். ஜீ-77 நாடுகள் அமைப்பின் 50வது வருட நிறைவு மாநாடு தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் சண்டாகுருஸ் நகரில் எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 'சிறப்பாக வாழ்வதற்கான புதிய உலக ஒழுங்கு' (For a new world order for Living well.) என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ஆம் திகதி விசேட உரையாற்ற விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம் மாந…
-
- 2 replies
- 608 views
-
-
மலையக பெருந்தோட்டத் துறையைச் செர்ந்த பெண்ணொருவர் ஒரு மாத சம்பளமாக 57,375 ரூபாவினைப் பெற்றுச் சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார் .கொட்டகல பிளான்டேசனுக்குச் சொந்தமான மவுண்ட் வேணன் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான தனலஷ்மி என்பவரே பெருந்தோட்டத்துறை வரலாற்றில் இவ்வாறதொரு பெருந் தாகையைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். கொழுந்து பறிக்கும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் ஒருநாள் வேதனத்தைப் பெறுவதற்காக 18 கிலோ தேயிலைக் கொழுந்தினை பறிக்க வேண்டும். ஆனால் 1899 கிலோ தேயிலைக் கொழுந்தினை தான் பறித்ததன் மூலமே இந்தக் தொகை தனக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தனது கணவன் சுகவீனமுற்றவர் என்றும் கூறியுள்ளார். இதேவேளை மேலும் சில தொழிலா…
-
- 0 replies
- 659 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ பார்த்தீனியச் செடி 10 ரூபா என்ற ரீதியில், வடமாகாண விவசாய அமைச்சால் நாளை புதன்கிழமையிலிருந்து தொடர்ந்து 07 நாட்களுக்கு (11) கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தது. பார்த்தீனியச் செடி அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தக் கொள்வனவுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தூர், சிறுப்பிட்டி மேற்கு, அச்செழு, அச்சுவேலி மேற்கு வசாவிளான், ஏழாலை, வட்டுக்கோட்டை, கைதடி கிழக்கு, கோண்டாவில், மாதகல், உடுப்பிட்டி, வல்லை நாச்சந்தி ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியச் செடிகளை பிடுங்கி உரப்பைகளில் இட்டு அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கொள்வனவு நிலையங்களில் கையளிக்க முடியும் எனவும் வடமாகாண விவசாய அமைச்சு…
-
- 18 replies
- 4.1k views
-
-
இறுதி மோதல்களின் போது தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்றால் அல்லது மோதல்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஏதும் இல்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பயப்பிடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு, சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனால் நாட்டு மக்களே கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகாரத்தைப் பரவலாக்கி நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்தி…
-
- 0 replies
- 456 views
-
-
புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்ப பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் நடவடிக்கை! [Thursday, 2014-06-12 07:52:38] பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய ஊடகம் ஒன்றின் தகவல் படி, இதற்கான ஏற்பாடுகளை தற்போது பிரித்தானிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளனர். இதற்கிடையில், தற்கொலை சம்பவங்களை கருதி இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுவதை இடைநிறுத்தப் போவதில்லை என்று, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி …
-
- 0 replies
- 396 views
-
-
நா.நவரத்தினராசா வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் புதன்கிழமை (11) தெரிவித்தார். இது தொடர்பில் வலி. தெற்குக்கு உட்பட்ட சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபையினால் ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப் பிடிப்பவர்களின் நடவடிக்கைகள் காரணமாக சந்தை வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சந்தையில் அதிகளவிலான பொதுமக்கள் கூடியிருக்கும் வேளையில்…
-
- 1 reply
- 483 views
-
-
நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்பகுதியில் ஜெலி மீன்களின் தாக்கம் காணப்படுவதன் காரணமாக கடலுக்கு குளிக்க வரும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்கொழும்பு சுற்றறுலாத் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெலி மீன்களின் தொடுகையினால் இதுவரை நான்கு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த மீன்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருப்பதன் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வைத்தியர்கள் சிலர் தெரிவிக்கையில், ஜெலிமீன் வேறு கடல் விலங்குகள் அல்லது மனித உடலுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அதனுள் இருந்து விஷத்தை வெளிவிடுகின்றன. இதன் காரணமாக பல்வேறுபட்ட நோய்த் தாக்கங்கள் மனித உடலில் ஏற்படுகின்றன. இந்த ம…
-
- 0 replies
- 516 views
-
-
கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.30 அளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 20ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பஸ்சில் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். படங்கள் http://tamil.adaderana.lk/news.php?nid=57664 (அத தெரண தமிழ்) http://tamil.adaderana.lk/
-
- 5 replies
- 722 views
-
-
போர்ப் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்த லண்டன் மாநாட்டில் வில்லியம் ஹேக் மற்றும் ஏஞ்செலினா ஜோலி இலங்கையில் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி பிரிட்டனில் தஞ்சம் கோரி , தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பல தமிழ்ப் பெண்களை பிரிட்டன் இலங்கைக்கே திரும்ப அனுப்பிவருகிறது என்று வரும் புகார்கள் குறித்து பிரிட்டன் ஆராயும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார். போர் மற்றும் மோதல் பகுதிகளில் பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்த புதிய சர்வதேச உடன்பாடுகளைக் காணும் நோக்கில், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகமும், நடிகையும், ஐநா மன்ற சிறப்புத் தூதருமான ஏஞ்சலினா ஜோலியும் இணைந்து நடத்தும் சர்வதேச மாநாடு நேற்றிலிருந்து லண்டனில் நடந்து வருகிறது. தொடர…
-
- 0 replies
- 432 views
-
-
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றினை நடத்துமாறு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகமவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவின் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 1990 ஆம் அண்டு காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் கலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணையை முன்னெடுக்குமாறு கோரும் முறைப்பாட்டு பிரித ஒன்றினையும் அவர்கள் ஆணைக்குழு தலைவரிடம் கையளித்தனர் என்றும் ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவின் பேச்சாளர் அலுவலகம் தெர…
-
- 0 replies
- 557 views
-
-
(பிஸ்ரின் முஹம்மத்) ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழுவுக்கு (CERT) கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 800 போலி பேஸ்புக் கணக்குகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் தலைமையகத்துக்கு அறிக்கைக்கு அமைய வே இவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழுவின் (CERT) சிரேஷ்ட பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார். இவ்வருட ஆரம்ப ஐந்து மாத காலப்பகுதிக்குள் பேஸ்புக் தொடர்பான 900 முறைப்பாடுகள் நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. கடந…
-
- 0 replies
- 532 views
-
-
இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தன் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதை இலக்காக கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக்குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (11-06-2014); இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி விடுதியில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அனைவருக்கும் மின்சாரம் என்ற அரசின் கொள்கைக்கு அமைவாக இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் மின்சார வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கை மின்சார சபையின் வடக்கின் வசந்தம் திட்ட …
-
- 1 reply
- 607 views
-
-
வடமாகாண சபையின் உத்தியோக பூர்வ வலைதளமான www.np.gov.lk என்ற இணையத்தளம் Hacked 'ஹேக்' செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை (06.06.14) ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இயங்கியது. இந்நிலையிலேயே அந்த இணையத்தளம் மீண்டும் Hacked செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது குறித்த இணையத்ளத்தினை உபயோகப்படுத்துவது, ஆளுநர் அலுவலகம் ஆகையினால் அவர்களிடம் கேட்குமாறு கூறினார். எனினும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் இது பற்றித் தங்களுக்குத் தெரியாது கூறுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108…
-
- 0 replies
- 436 views
-
-
இனியபாரதி என்ற புஷ்பகுமார், புஸ்பகுமார - குமார - குமார மாத்தையா, என்ற பெயர்களில் இலங்கைப் புலனாய்வுத் துறையினரோடு இணைந்து செயற்பட்டவர் - இணைப்பு - 2 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக, கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கில் புலிகளின் தளபதியாக இருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் அவ்வியக்கத்தை இரண்டாக பிளந…
-
- 0 replies
- 820 views
-
-
சரியான திசை வழியில் அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே சாத்தியமான வழிமுறையாகும். இவ்வழிமுறையே வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (11.06.14) மானிப்பாய் இந்துக்கல்லூரி வளாகத்தில் புதிய மகிந்தோதயம் தொழில்நுட்ப பீடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்லூரி அதிபர் சிவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடந்த கால தவறான அரசியல் முன்னெடுப்புக்கள் பாரிய அழிவுகளையும், இழப்புக்களையும், துன்பங்களையும் எமக்கு தந்துள்…
-
- 0 replies
- 395 views
-
-
நாட்டின் ஆட்சி மாற்றம் அவசியமானதே. எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க தயாரில்லை என தெரிவித்த ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 1987 காலப்பகுதியில் ஜே.வி.பி. யினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கு மன்னிப்புக் கோருகின்றோம் எனவும் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. யின் நிலைப்பாடு மற்றும் கட்சியின் தலைவர் சர்வதேச ஊடகம் ஒன்றின் முன்னிலையில் மன்னிப்புக் கோரியமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தற்போது தேவைப்படுகின்றது. மக்களும் அதனை விரும்புகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபத…
-
- 0 replies
- 208 views
-
-
எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. முஸ்லிம் தலைவர்கள் எம்மை சீண்டிப்பார்க்க வேண்டாம் என எச்சரிக்கும் பொதுபலசேனா பௌத்த அமைப்பு முஸ்லிம்களுக்கும் இறுதி ஆதரவு நாம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் தெரிவித்தது.இஸ்லாமிய மார்க்கம் என்னவென்பதை முஸ்லிம் இனவாத தலைவர்களுக்கு நாம் கற்று தருகின்றோம். எமது வகுப்புகளுக்கு வாருங்கள் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டது. பொதுபலசேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது முஸ்லிம்கள் விடயத்தில் பொதுபலசேனா அமைப்பு கடுமையாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி எழுப்பிய போதே அவ்வமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவ…
-
- 0 replies
- 328 views
-
-
பாராளுமன்றத்தை அதிகாரமில்லா நிறுவனமாக மாற்றி, எதிர்கட்சிகளை எட்டி உதைத்த இந்த அரசாங்கம் இன்று தன் மனித உரிமை பாவங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து கழுவி, இந்நடவடிக்கையில் எதிர்கட்சிகளையும் பங்காளிகள் ஆக்க முயல்கிறது. தலைவர்கள் இதை செய்கிறார்கள் என்றால் அவர்களின் சீடர்கள், முதல்வர் ஜெயலிதாவின் கொடும்பாவியை எரித்து, பிரதமர் மோடியை திட்டி தீர்த்து கொழும்பு நகர வீதிகளில் இந்தியாவை ஆத்திரமூட்டுகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்த விசாரணை முஸ்த…
-
- 0 replies
- 375 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்று நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உடனடியாக சம்பூர் அனல் மின்னிலைய வேலைத் திட்டங்களை தொடங்க வேண்டும் என்று பணிப்பு விடுத்திருக்கிறார். இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு எதிரொலியாக உடனேயே ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்ற நோக்கில் சம்பூர் அனல் மின்னிலையத்தை தொடங்கும்படி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உத்தரவிட்டிருக்கிறார். சம்பூர் ஈழத் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் கிராமம். ஈழத் தமிழர்களின் தாயக நிலப் பகுதியான கிழக்கில் திருகோணமலையில் இருக்கும் இந்த சம்பூர் கிராமம்…
-
- 0 replies
- 600 views
-
-
பளை, தம்பகாமம் பகுதியில் புதன்கிழமை (11) காலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி அதேயிடத்தைச் சேர்ந்த முத்தையா திலீபன் (வயது 30) என்பவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, படுகாயமடைந்த ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர். இதேவேளை, இக்கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் படுகாயமடைந்த நபருடன்; மற்றுமொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மரணமடைந்த நபருக்கும் படுகாயமடைந்த நபருக்குமிடையில் பணக் கொடுக்கல், வாங்கல் விடயத்திலிருந்த பிரச்சினை இரு குழுக்களுக்கிடையிலான கைகலப்பாக மாறி கத்திக்குத்து இடம்பெற்றதென்று ஆரம்பக்கட்ட விசாரண…
-
- 0 replies
- 366 views
-
-
மகிந்த ராஜபக்ஷ இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை அடுத்து, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவி பிள்ளை இன்று அறிவித்ததை அடுத்தே மகிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து வந்துள்ளது. ஒத்துழைப்பு இல்லை ரவிநாத ஆரியசிங்க இதனிடையே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப…
-
- 1 reply
- 557 views
-
-
வல்வெட்டித்துறை நகர சபையின் கொடுப்பனவுகளை அங்கீகரிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்தமையால் சபை நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபையின் மாதந்தக் கூட்டம் தலைவர் என்.அனந்தராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் சபையின் நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவுகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை தலைவரால் முன்வைக்கப்பட்டது. அப்போது சபையில் உப தலைவர் உட்பட மூவர் அப்பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அதற்கு எதிரான மாற்றுப் பிரேரணை ஒன்றையும் கொண்டு வந்தனர். தலைவர் சமர்ப்பித்த பிரேரணையை தலைவர் என். அனந்தராஜா, ம. மயூரன் ஆகியோர் ஆதரவாகவும் உப தலைவர் க.சதீஸ், உறுப்ப…
-
- 0 replies
- 466 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் வடமாகாண அமைச்சின் ஏற்பாட்டில் 'உலக சுற்றுச்சூழல் வார நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (10) காலை மன்னார் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பி.ஐங்கரநேசன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத்துறை மற்றும் சுற்றாடல் அமைச்சர் ரி.குருகுலராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கலான அயூப் அஸ்மீன், வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த விருந்தினர்கள் பேன்ட் வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபத்திற்குள் அழைத்…
-
- 0 replies
- 346 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். எமது செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாம் கவலைப்படவில்லை. ஜனநாயகத்தை விரும்புவோர் எம்முடன் கைகோர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ அரசாங்கத்திற்…
-
- 0 replies
- 242 views
-
-
வடமாகாணக் கபடிப் போட்டிகளிலிருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினையும் வவுனியா பரக்கும் குளம் மகா வித்தியாலய அணியினையும் நீக்குவதாக வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் செவ்வாய்க்கிழமை (10) அறிவித்தார். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மே மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற 19 வயதுப் பிரிவு ஆண்கள் கபடிப் போட்டி இறுதிச் சுற்றில் மேற்படி இரு அணிகளும் மோதியிருந்தன. இதில் இரு வீரர்களுக்கிடையில் முரண்பாடு வரவே, இரு அணி வீரர்களும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டனர். தொடர்ந்து, இந்த சண்டை பெரிதாகி இரு அணிகளின் ஆதரவாளர்களும்…
-
- 0 replies
- 325 views
-