ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் தனது உடல் முழுவதும் பொது பரிசோதனை செய்ய வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இதற்கான அனுமதியை புதன்கிழமை பெற்றார். இதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.35 மணிக்கு பேரறிவாளனை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந…
-
- 0 replies
- 707 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 26வது அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இலங்கை மீது விசாரணை செய்வதற்கான குழு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னதாக அமைக்கப்படவுள்ளது. இதன்படி மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மூவர் அடங்கிய குழுவை நியமிக்கவுள்ளார். எவ்வாறாயினும் இந்த விசாரணைக்கான குழு இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் சவால் விடுத்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்தவாறே குறித்த விசாரணைக்குழு தமது ஆதாரங்களை திர…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (06.06.14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய வழக்கில், இரு மதகுருமாரின்; ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். கொன்சலிற்றா, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி காணாமற்போயிருந்த போதும், அவர் மறுநாள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கின்றது. இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பது தொடர்பில் …
-
- 0 replies
- 329 views
-
-
கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் அமர்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. இந்த அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது. ஆணைக்குழுவின் விசாரணை காத்தான்குடியில் நாளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று 59 பேரும், நாளை 53 பேர…
-
- 0 replies
- 330 views
-
-
பொலிஸ் அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்க தன்மீது பொலிஸார் ஒருவர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலை நடைபெற்ற காணாமற்போனோர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டோரை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போதே இச்சம்பம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் நேற்றையதினம் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்ற காணாமற்போன உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டத்த…
-
- 1 reply
- 516 views
-
-
1,406 ஏக்கர் சுவீகரிக்கப்படும்; நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு news கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 406 ஏக்கர் (1,406.94) காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் காணிகளுக்காக காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளது அரசு. நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, காணி அபிவிருத்தி அமைச்சரிடம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதில்களிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிகள் அரசியல் …
-
- 1 reply
- 602 views
-
-
கனடியத் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கோருவதற்காக ஒட்டாவாவில் கூடி உள்ளனர் ஜூன் 6, 2014 கனடியத் தமிழர் தேசிய அவை இலங்கைக்கு எதிராக கனடிய அரசாங்கத்தின் பிரத்தியேகப் பொருளாதாரத் தடைச் சட்டத்தை பிரயோகிக்குமாறு கோருவதற்காக ஒட்டாவாவில் மே 26 முதல் மே 30 வரை கூடி உள்ளனர். இப்பரப்புரைக்காக பல தமிழர் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மாணவர் சமூகத் தலைவர்களும் கனடாவின் பல பாகங்களிலுமிருந்து வந்து இலங்கையின் போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைப் புரிந்த இலங்கை அரசிற்கு எதிராக பொருதாரத்தடையைக் கோரி உள்ளனர். இப்பரப்புரையில் பல கனடிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பல வெளிநாட்டு தூதுவராலயங்களுடனும் பல காத்திரமான…
-
- 2 replies
- 518 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே பங்கேற்பதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா உட்பட, பல தலைவர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த எதிர்ப்புக்கு இடையில், இந்தியா வருவதற்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் இருந்த, தமிழக மீனவர்களை, ராஜபக் ஷே விடுதலை செய்தார். பேச்சுவார்த்தை:அதன் தொடர்ச்சியாக, மோடி பதவியேற்ற அடுத்த நாளே, இரு நாட்டு தலைவர்களும் டில்லியில் சந்தித்தனர். இருதரப்பு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழர்களுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்! - ஜோதிடர்களின் ஆலோசனையுடன் தீர்மானம். [Friday, 2014-06-06 09:36:23] ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய தேர்தல் திகதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்ணயிப்பார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உசிதமான திகதிகள் குறித்து சில முக்கியமான ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த திகதிகளில் பொருத்தமான திகதியை ஜனாதிபதி மஹிந்த தீர்மானிப்பார். ஜனாதிபதி ஒருவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளின…
-
- 0 replies
- 432 views
-
-
உத்தேசிக்கப்பட்டுள்ள விதைகள் சட்டம் விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை பறிப்பதாக குற்றச்சாட்டு சனத்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றங்கள் இப்படியான சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற உலக நாடுகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான விதைகளை விருத்தி செய்வதும் பாதுகாப்பதும் இன்று பெரும்பிரச்சனைக்குரிய விடயமாகியுள்ளது. இலங்கையில் இது சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. விவசாய விதைகளைப் பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பில் விவசாய திணைக்களத்தின் இயக்குநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய விதைகள் சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் வணிக நிறுவனங்கள் விற்கின்ற விதைகள் மூலம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காவிட்டால், அந்த நிறுவனங்களை அதற்குப் பொறுப்பாக்குவதே…
-
- 1 reply
- 466 views
-
-
விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு , மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் ! 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
எமது மக்களின் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர், யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சிகள் இடம்பெறுவதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு அரச அதிகாரிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்பு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ; அண்மைக் காலங்களில் இராணுவத்தினர் படைக்கு ஆட்களைத் திரட்டும் பணியில் வடக்கில் பல்வேறு வழிமுறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். படையினர் வீடு வீடாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டு விண்ணப்பப் படிவங்களை வழங்கிய போதும் இளைஞர்க…
-
- 0 replies
- 557 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு பதிலாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் மர்சூகீ தாரூஸ்மன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவனீதம்பிள்ளையின் ஓய்வு பெறவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்தை தாரூஸ்மன் நிரப்பக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நவனீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக கடமையாற்றி வருகின்றார். இந்தோனேஷியாவின் சட்டவல்லுனரும், அரசியல்வாதியுமான தாரூஸ்மான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1999-2001ம் ஆண்டு வரையில் இந்தோனேஷியாவின் சட்ட மா அதிபராகவும் தாரூஸ்மன…
-
- 1 reply
- 416 views
-
-
யாழ் தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டைதீவுக் கண்டற்காட்டில் வெளிக்களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் யூன் 5ஆந் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி யூன் 5ஆந் திகதி தொடங்கி யூன் 11ஆந் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகப் பிரகடனப்படுத்தியிருந்த வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு அதற்கான நிகழ்ச்சியை இன்று வியாழக்கிழமை (05.06.2014) மண்டைதீவு தெருவெளிப் பிள்ளையார் கோவிலுக்;கு அருகாமையில் உள்ள கண்டல்நிலச் சூழலில் நடாத்தியத…
-
- 0 replies
- 509 views
-
-
மஹிந்தவும்- மோடியும் சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி. கச்சதீவு இலங்கையின் சொத்து . அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோகராஜன் எம்.பி.யும் புலிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்த அஸ்வர் எம்.பி.யும் புலிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்த அநியாயம் எங்கு இடம் பெறுகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுப்பதற்குத் தயங்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார்…
-
- 0 replies
- 519 views
-
-
பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில் 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை' என்று குறிப்பிட்டதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு அமைச்சருமான கெஹேலியா ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "இலங்கையில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு, இது குறித்து இந்திய அரசுக்குத் எங்களது முறையான ஆட்சேபத்தையும் தெரிவிப்போம். இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது பற்றி இலங்கை மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் நாங்கள் இதையே கூறினோம், இந்தியாவில் நிலையான ஆட்சி இலங்கைக்கு நல்லது. இன்று ஜெயலலிதாவுக்கு முன்பு டெல்லியில் இருந்த செல்வாக்கு இருக்…
-
- 0 replies
- 495 views
-
-
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது, என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது. இந்த இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் …
-
- 8 replies
- 2.1k views
-
-
ஒருகால கட்டத்தில், யுத்தம் காரணமாக இந்நாடு இரத்தத்தில் மூழ்க தவறான அரசியல் வழிநடத்தல்களே காரணமாகின. இவ்வாறாதொரு கொடிய யுத்தத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முற்றுப்புள்ளி வைத்தார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற உலக இரத்தான தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், உலக இரத்தான நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடையும் அதேவேளை, இதனை ஏற்பாடு செய்த ஏற்பாடாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். தானத்தில் சிறந்த தானமாக இரத்ததானம் கருதப்படுக…
-
- 0 replies
- 239 views
-
-
தம்புள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலை இடம் நகர்த்துவதானது சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு விடுக்கப்படும் சவாலாக கருதப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தம்புள்ள பள்ளிவாசல் வேறும் ஒர் இடத்திற்கு மாற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிவாசல் இடம் நகர்த்தப்படும் விடயமானது பொதுமக்கள் விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த இடத்தை சில தரப்பினர் தொழுகை மண்டபமாக அடையாளப்படுத்தி வருவதாகவும் உண்மையில் சரியான முறையில் கட்டப்பட்ட ஓர் பள்ளிவாசலே இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த பள்ளிவாசலில் பல ஆண்டுகளாக மக்கள் தொழுகைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 358 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரானவர்களை கொலை செய்து தப்பித்துச் செல்லக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அதிகளவில் படுகொலைகள் இடம்பெற்ற நகரமாக அமெரிக்காவின் சிக்காகோ காணப்பட்டது எனவும், தற்போது அந்த பெருமை இலங்கையின் தங்காலை நகரிற்கு கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்காலை பஸ் நிலையமென்பது அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஓர் இடமாகும் எனவும், அந்த இடத்தில் ஒருவரை கொலை செய்து தப்பிச் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்து…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கைத் தமிழர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்தல் அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் கூறுகையில், யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் எமது மீனவ தொழி…
-
- 1 reply
- 747 views
-
-
கிளிநொச்சியில் பௌத்த கலைப்பொக்கிஷங்கள் கண்டு பிடிப்பு - இராணுவம் : 05 ஜூன் 2014 கிளிநொச்சியில் பௌத்த கலைப்பொக்கிஷங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி சிவநகர் மற்றும் உருத்திரபுரம் ஆகிய இடங்களில் பண்டைய பௌத்த மத அடையாளச் சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பண்டைய கால கற்கள் மற்றும் சிவனொளிபாதை மலைச் சின்னங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் பண்டைய பௌத்த மதச் சின்னங்களை கண்டதாகவும், அது குறித்து அகழ்வாராச்சி திணைக்களத்திற்க அறிவித்ததாகவும் கிளிநொச்சி கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிகளில் அகழ்வுப் பணிளை மேற்கொண்டதாக குறிப்…
-
- 3 replies
- 742 views
-
-
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மா…
-
- 28 replies
- 2.8k views
-
-
மன்னார் நகரிலுள்ள வியாபார நிலையமொன்றில் செருப்பு வாங்குவதற்குச் சென்ற சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த சிறுமியொருவர் மீது அங்க சேஷ்டை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவ்வியாபார நிலைய உரிமையாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் புதன்கிழமை (04) உத்தரவிட்டார். இவ்வியாபார நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (03) சென்ற 15 வயதான இச்சிறுமிக்கு பொருட்களை காண்பிப்பதாகக் கூறி வியாபார நிலைய உரிமையாளர் உள்ளே அழைத்துச் சென்று அங்க சேஷ்டை செய்ததோடு, தகாத முறையிலும் நடக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் இச்சிறுமி வியாபார நிலையத்திலிருந்து வெளியேறி சிறுவர் இல்ல காப்பாளரிடம் நடந்ததைக் கூறியதைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸ் ந…
-
- 1 reply
- 456 views
-
-
இந்தியரை நம்பக் கூடாது என்று பொருமினாராம் ராஜபக்ச! - ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள தகவல். [Wednesday, 2014-06-04 07:56:46] இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ஜூனியர் விகடன் சுட்டிக்காட்டியுள்ளது. அதில், மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.ஏதோ என்னை நட்பு ரீதியாகத்தான் அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை மரியாதையாக நடத்தவில்லை.இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை. முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார் என்றால், ஒரு வருடத்தில் நம்மை இருக்கும் இடம் தெரியாமல் இவர் செய்துவிடுவார்.எந்த…
-
- 2 replies
- 912 views
-