ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது ! நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 127 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 178 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின், 327 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ், 1,907 கிராம் 588 மில்லி…
-
- 0 replies
- 246 views
-
-
164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து! நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிதுள்ளனர். பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்…
-
- 0 replies
- 135 views
-
-
Published By: DIGITAL DESK 7 23 JUL, 2024 | 09:28 AM (துரைநாயகம் சஞ்சீவன்) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான நடைபாதையின் அகலத்தை 6அடி 3அங்குலம் வரை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. இதற்காக 1கோடியே 50 இலட்சம் ரூபா மாகாணசபையின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த, வீதியானது சிங்கள மகாவித்தியாலயம் தொடக்கம் துறைமுக பொலிஸ் நிலையம் வரையான 1078 மீற்றர் தூரம் நீளமான நடைபாதை…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 JUL, 2024 | 07:58 PM யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிச் சென்ற பஸ் திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://www…
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தாக்கல் செய்த சட்ட மூலம், வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் இதுவரையில் 1500 ரூபாவாக காணப்பட்ட அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவிய…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்! இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை அரசி…
-
- 1 reply
- 224 views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும். பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப) #Eelam #srilanka #jaffna…
-
- 1 reply
- 264 views
-
-
22 JUL, 2024 | 05:18 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது. நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவுப் பெறும் வரை அரசி…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 22 JUL, 2024 | 11:34 AM ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் இலான் மஸ்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் சேவை அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,…
-
- 4 replies
- 627 views
- 1 follower
-
-
ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன! ”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்” என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால். அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும். உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்கள…
-
- 0 replies
- 141 views
-
-
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெ…
-
- 0 replies
- 245 views
-
-
22 JUL, 2024 | 01:17 PM இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது. இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 22 JUL, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டி…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
17 JUL, 2024 | 05:40 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று புதன்கிழமை (17) வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன். சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண…
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 JUL, 2024 | 07:58 PM கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்; கடந்த எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக, சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக, இரத்தமும் சதையுமாக நடைபெற்று வருகின்ற போராட்ட வ…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தீ மூட்டிக்கொண்ட தாய் பலி. கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அவர் மீது பரவிய …
-
- 1 reply
- 392 views
-
-
அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில், சம்பந்தனின் தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களா…
-
- 1 reply
- 419 views
-
-
21 JUL, 2024 | 10:26 AM ஆர்.ராம் தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை திங்கட்கிழமை (22) கைச்சாத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் கூட்டிணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் மறைவினையொட்டி இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு நிகழ்வு ஒத…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 21 JUL, 2024 | 11:47 AM (ஆர்.ராம்) அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பொறுப்பையேற்று சொற்பகாலத்துக்குள் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அம்முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவதுரூபவ் யாழ்.வணிகர் கழகத்துடனான சந்தப்பின்போது, நாம் எமது பொருளாதாரக் கொள்கைகளை…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 21 JUL, 2024 | 11:43 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமையுடன் ஈராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளமையை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணியில் பொதுவான சின்னத்தில், பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார பெரும் நெருக்கடிக்களை எதிர்கொண்டது. இந்த நெருக்க…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/306563
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
21 JUL, 2024 | 02:57 PM (எம்.ஆர்.ஆர்.வசீம்) அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்துவந்த வரையறையற்ற அதிகாரங்களை சாதாரண ஜனநாயக முறைக்கு மாற்றும் வகையிலேயே 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் நேற்று சனிக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் தொடர்பில் நானே மிகவும் அ…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன. இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும். அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வே…
-
-
- 5 replies
- 798 views
-
-
பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்! நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பிரச்சினை வந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மிக உயரமான வெளிச்ச வீடுகளில் ஒன்றாகவுள்ள மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன் மடு வெளிச்சவீடு சுமார் 30 வருடங்கள் பின் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, கடற்தொழில் அமைச்சு …
-
- 0 replies
- 300 views
-