ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு) [Wednesday, 2014-03-26 20:06:59] வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண வைத்தியசாலைகளுக்கான உலர் உணவு பெறுகை கேள்வி கோரல்களில் குறைந்த விலைகளில் கேள்வி கோரல்களை கோரிய விண்ணப்பதாரிகளை நிராகரித்து விட்டு, உச்ச விலை கோரியவருடன் அமைச்சர் சத்தியலிங்கம் ஒப்பந்தத்தை செய்துள்ளமை உறுதியாகியுள்…
-
- 3 replies
- 843 views
-
-
மன்னாரில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் கையூட்டு பெறும் அதிகாரிகள் மார் 26, 2014 மன்னார் மாவட்டத்தில் இந்திய விட்டுத்திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து கையூட்டு பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. வட கிழக்கில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் ஐம்பதாயிரம் வீடமைத்து கொடுக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வரும் வேளையில் இவ்வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு கூட உண்மையாக பாதிக்கப்பட்டவ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. மாறாக அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதாகவே பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. ஏழை மக்களுக்கான வீடமைக்கும் பணியை கொழும்பைத் தலைமையாக கொண்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடை முறைப்ப…
-
- 2 replies
- 340 views
-
-
வடக்கினில் தொடரும் கைதுகளின் மத்தியினில் வடமராட்சியின் உடுப்பிட்டி கொம்மாந்தறைப்பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் கைதாகியுள்ளார். துரைராசா அமுதாகரன்(வயது 28) என்பவரே பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்றிரவு கைதாகியுள்ளார்.குறித்த இளைஞன் வன்னியிலிருந்து வருகை தந்து தனது சகோதரன் நடத்திவரும் மருந்துக்கடையினில் பணியாற்றி வந்திருந்தார். இந்நிலையினில் கடந்த சில நாட்களாக வெள்ளை வான் நபர்கள் இவரை தேடி வீட்டிற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இன்று யாழ்.நகரின் நாவலர் வீதியினில் செயற்பட்டு வரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்திற்கு சென்றிருந்த நிலையினில் அவர் கைதாகி கொழும்பிற்கு மேலதிக விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தவர்கள…
-
- 0 replies
- 433 views
-
-
'பாதுகாப்பு உத்தரவாதம் இருந்தால் சாட்சியாளர்கள் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்' இலங்கையில் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றே தேவைப்படுகின்றது என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை சாத்தியமானது என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். புதிதாக வந்துகொண்டிருக்கின்ற ஆதாரங்களும் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் முன்னால் சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்கள் முன்வருகின்றமையும் தமது இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் நவி பிள்ளை ஜெனீவாவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார். விவாதத்தை தொடங்கி வைத்த ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, எல்எல்ஆர்சி-யின் …
-
- 0 replies
- 638 views
-
-
HRW யுத்த குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தி;ல் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட சகல தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களும் இலங்கை அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உரிய நடவடிக்கை எடுக்க …
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குற்றச் சாட்டு;க்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமானதும், காலவரையறையுடன் கூடியதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய…
-
- 0 replies
- 275 views
-
-
என்னுடைய காதலனை தாக்கிய நபரை தங்காலை நீதிமன்றத்தில் வைத்தே அடையாளம் கண்டுவிட்டேன். உயிர் மீது இருந்த அச்சத்தின் காரணமாக அவரை நான் அடையாளம் காட்டவில்லை என்று பிரித்தானிய பிரஜையான குராம் ஷேகின் காதலியான விக்டோரியா எலஸ்சென்றானா சாட்சியமளித்தார். இந்த கொலை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ரோஹனி வல்கம முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அங்கு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் தங்காலை ரிசோட் ஹோட்டலில் வைத்து 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், தங்கலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரகுப்த விதாணகே பதிரண உள்ளிட்ட ஐவர் சந்தேகநபர…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கை வட பகுதியை இன்று உலகம் உற்றுப்பார்க்கின்றது , அங்கு நடப்பது என்ன, நடந்தது என்ன என்று தேடிக்கொண்டிருக்கின்றது: - மனோ கணேசன் [Wednesday, 2014-03-26 20:33:58] நாட்டின் வடபகுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அங்கு குறிப்பிட்டதாவது - “வடக்குப் பகுதியை இன்று உலகம் பார்க்கின்றது. அங்கு நடப்பது என்ன, நடந்தது என்ன, என்ன குற்றம் என்று தேடிக்கொண்டிருக்கின்றது. உலகத்தின் கவனத்தை, அவதானத்தை வடக்கு ஈட்டியிருக்கின்றது. கொம்பனி வீதியிலே ஜாவா லேன் இல்லை. வீடு உடைக்கப்பட்டது…
-
- 0 replies
- 408 views
-
-
இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் 25 மார்ச் 2014 Bookmark and Shareஐநாவின் இறுதி வரைபு வெளியானது:- இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வெளியானது! (வரைபு இணைப்பு)March 25, 2014 08:13 amBookmark and Share ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விச…
-
- 18 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் கிராம சேவகரொருவருவர் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து இன்று (26.3) கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா பிரதேச செயலகத்தின் செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டமானது வவுனியா, மன்னார் வீதியில் உள்ள தாதியர் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்து பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது. தமது பகுதி கிராம அலுவலர் லஞ்சம் கோருவதாகவும் பாலியல் சேட்டை புரிவதாகவும் தெரிவித்த இவ் ஆர்பாட்டக்காரர்கள் இந்தியன் வீட்டுத் திட்டம் வேண்டுமா? ரூபாய் 50,000, சிறந்த சேவையை வழங்கும் கிராம அலுவலர்; எமது கிராமத்திற்கு வேண்டும், சிவபுரம் மக்களுக்கு நீதி வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒழிப்போம், அரச…
-
- 0 replies
- 586 views
-
-
பொதுபலசேனாவிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கேட்கிறார் அமைச்சர் ரிசாட் பதியூதீன்! [Wednesday, 2014-03-26 08:10:14] தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பிடம், அமைச்சர் ரிசாட் பதியூதீன் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார். தமக்கு அவதூறு செய்தமைக்கு நட்ட ஈடாக 500 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வில்பத்து காட்டை அழித்து முஸ்லிம்களின் பிரத்தியேக வலயமொன்றை உருவாக்கி வருவதாக தம்மீது குற்றம்சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வில்பத்து மற்றும் மன்னார் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், போர் முடிந்த பின்னர் முஸ்லிம்கள் ஜனா…
-
- 2 replies
- 292 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இன்றைய தினம், இலங்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் நட்பு நாடுகளான ரஸ்யா, சீனா, கியூபா, வெனிசுலா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நவனீதம்பிள்ளையின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளன. நவனீதம்பிள்ளை பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. எனினும், பிரித்தானியா, அமெரிக்கா, கிரேக்கம் போன்ற நாடுகள் நவனீதம்பிள்ளையின் அறிக்கை சரியானது என தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. http://globaltamilnews…
-
- 0 replies
- 649 views
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக புதன்கிழமை(26) நடத்தியது. (படங்கள்:- பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/104610-2014-03-26-13-59-19.html
-
- 3 replies
- 568 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் தேவை அவசியமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைமையிலான நாடுகளினால் ஐ.நா மனித உரிமை பேரவையில் உத்தேச பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த உத்தேச பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களை அடுத்து மூன்றாவது முறையாகவும் திருத்தத்திற்கு உட்படுத்தி புதன்கிழமை மனித உரிமை பேரவையில் சமர்பித்து உரையாற்றும் போதே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, நவநீதம்பிள்ளையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி வரைபினை இலங்கைக்கான ஜெனீவா …
-
- 0 replies
- 360 views
-
-
ஜெனிவா விமர்சனத்தால் இலங்கைக்கே நன்மை ஏற்படும்! – என்கிறது பிரிட்டன். [Wednesday, 2014-03-26 17:31:20] ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக, விமர்சிக்கப்படுவது இலங்கைக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைப்பதன் ஊடாகவோ இலங்கை மீது விமர்சனம் செய்வதன் ஊடாகவோ தாம் எந்தவொரு இலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று பிரிட்டன் வெளி விவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் கியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் இடம்பெற்ற பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்…
-
- 0 replies
- 477 views
-
-
புலிகளே மனிதஉரிமைகளை மீறினராம்! – நம்பச் சொல்கிறார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா. [Wednesday, 2014-03-26 17:34:56] போரின் போது, விடுதலைப் புலிகளே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிழையான வழிகாட்டல்களுக்கு சர்வதேச சமூகம் ஏமாற்றமடைந்து விடக் கூடாது. அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புலம்பெயர் தமிழ் சமூகமே குற்றம்சுமத்தி வருகிறது. தங்களது தாளத்திற்கு இலங்கை ஆட்டம் போட வேண்டும் என்றே சர்வதேச சமூகம் விரும்புகின்றது.எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
-
- 0 replies
- 570 views
-
-
2016ம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இல்லை! – திட்டவட்டமாகத் தெரிவித்தார் மகிந்த. [Wednesday, 2014-03-26 17:51:44] 2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “ இதற்கு முன்னர் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும், இம்முறை உரிய நேரத்தில் தான் தேர்தல் நடத்தப்படும். நாட்டின் சில அரசியல்வாதிகள் நாட்டை காட்டிக் கொடுக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியாத தரப்பினர் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். அரசியலைத் தாண்டி குரோத உணர்வுடன் நாட்டுக்க…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை! [Wednesday, 2014-03-26 18:53:03] ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் கொண்டு வரப்படும் தீர்மானம் மீது இன்று பிற்பகலில் அல்லது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஜெனிவாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதம் நீண்ட நேரம் தொடருமானால், இலங்கை குறித்த தீர்மான வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெறும். அல்லது இன்று பிற்பகல் 3 மணிக்கு பின்னதாக அது நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இலங்கையில் இறுதிப் போரி…
-
- 0 replies
- 362 views
-
-
யுத்தம் குறித்து முழுமையாக விசாரிக்க தயார்! - என்கிறார் மகிந்த ராஜபக்ஷ. [Wednesday, 2014-03-26 08:49:44] ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாளிகாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, 30 வருட காலம் இந்த நாட்டில் கொடூரமான யுத்தம் நிலவியது. இந்த யுத்தத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்களென அனைத்து இன மக்களும் கொல்லப்பட்டனர். இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல. இது இனவாத யுத்தமுமில்லை. அன்று பிரபாகரன் என்ற பயங்கரவாதி ஏற்படுத்திய பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எமது பொறுப்பாக அமைந்தது. இரண்ட…
-
- 1 reply
- 342 views
-
-
மேல் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள். [Wednesday, 2014-03-26 08:31:37] எமது உரிமைகளை சலுகையாக அன்றி உரிமையாகப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாண மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேல்மாகாண தமிழ் பேசும் வாக்காளர்களுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- இலங்கையில் மொழியாலும் மதத்தாலும் சிறுபான்மையாகவுள்ள தமிழ் பேசும் மக்களின் மதவுரிமைகள், வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகள், நிலவுரிமை, கலாசார உரிமை இத்தனைக்கும் மேலாக தமிழர்களது …
-
- 3 replies
- 367 views
-
-
அமெரிக்க குடியுரிமையை துறக்க ராஜபக்ச குடும்பத்தினர் தயாரா? - சவால் விடுகிறார் கரு ஜெயசூரிய. [Wednesday, 2014-03-26 08:13:28] தேசப்பற்று குறித்துப் பேசும் ராஜபக்ச குடும்பத்தினர் அமெரிக்க குடியுரிமையை துறக்க தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐதேக தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜெயசூரிய. தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா? உண்மையிலேயே தேசப்பற்று இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க குடியுரிமைகளை ராஜபக்ச குடும்பத்தினர் துறக்க வேண்டும். இலங்கை என்ற நாட்டை முதன் முதலில் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க…
-
- 0 replies
- 429 views
-
-
அங்கு இழைக்கப்படும் குற்றம் இனப்படுகொலை, போராட்டமானது அதிலிருந்து விடுதலை பெறுவதற்கானது: - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடகப் பேச்சாளர் திரு. கிருஸ்ணா சரவணமுத்து [Wednesday, 2014-03-26 11:07:42] அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடகப் பேச்சாளர் திரு. கிருஸ்ணா சரவணமுத்து அவர்கள் 25.03.2014 நேற்றையதினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் தமிழில் - 'கடந்த மூன்று வருடங்களாக ஜெனீவா கட்டடங்களுக்குள் சிறிலங்கா, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை, நற்பேறின்றி, இந்த அதிகார பூர்ப வரைபுகள் யாவும் எமது பிரச்சினையின் உண்மையான அடிப்படை ந…
-
- 0 replies
- 347 views
-
-
வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பும் ஜெனிவாவில் எதிரொலித்தது! – இரண்டு கூட்டங்களில் உண்மையை அம்பலப்படுத்தினார் சஜீவன். [Wednesday, 2014-03-26 08:53:12] ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்துத் தொடர்ந்து இரண்டு நாட்களாக வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத் தவிசாளரும் வலி வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுத் தலைவருமான சண்முகலிங்கன் சஜீவன் அம்பலப்படுத்தினார். தாயகத்தில் நிலப்பறிப்புக்குள்ளாகிய மக்களின் நிலை குறித்து நேற்று முன்தினம் திங்கட்கிழமையும் நேற்று செவ்வாய்க்கிழமையும் இரண்டு கட்டங்களாக அவர் உரையாற்றினார். முன்னதாக இனவாதம் குறித்த பொது விவாதத்தில் கலந்துகொண்ட சண்முகலிங்கன் சஜீவன் முக்கிய கருத்துக்களை சர்வ…
-
- 0 replies
- 316 views
-
-
புலிகளுக்கு ஆயுதம் வாங்கிய கனேடியத் தமிழருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை! [Wednesday, 2014-03-26 08:20:30] விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை வாங்கிய குற்றத்துக்காக கனேடிய குடியுரிமை கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு நியூயோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.பிரதீபன் நடராஜா என்ற அவர், விடுதலைப் புலிகளுக்கு விமானங்களை தயாரிப்பதற்கான பொருட்களை விநியோகித்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அவர் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் அவர் தொடர்பான வழக்கு நியூயோர்க் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சிறிஸ்கந்தராஜா என…
-
- 0 replies
- 277 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சியில் நேற்று (26-03-2014) பொதுச் சந்தையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி உடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்;டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த ஊடவிகவியலாளரினால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் வியாபார அனுமதிகள் புதுப்பிக்கப்படாத மற்றும் கரைச்சி பிரதேசசபைக்கு செலுத்த வேண்டிய மாதாந்த கட்டணங்கள் செலுத்தாத வியாபார நிலையங்கள் சீல் வைக்கப்பட்டது இந்த சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரே தாக்கப்பட்டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமா…
-
- 0 replies
- 274 views
-