ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பை” விடுத்துள்ளது. ஆணைக்குழு பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
பொருளாதாரத்தை மீட்டு விட்டோம் என பொய் கூறும் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் பேரிடியாக மாறியுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்றையதினம் (13.07.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறுகையில், "நாட்டில் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்கின்றன. இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை. காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை. பொருளாதார முன்னேற்றம் மாறாக மக்கள் மீ…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை! ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தொிவித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”ட்ரம்ப் மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்…
-
- 0 replies
- 171 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு! தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ம் மதியம் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/13921…
-
- 0 replies
- 273 views
-
-
13 JUL, 2024 | 05:22 PM (நா.தனுஜா) நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவயமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே அமைந்திருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டமிடப்பட்ட இராணுவமயமாக்கல், 'யுக்திய' நடவடிக்கையின் கீழ் இடம்பெறும் சட்டவிரோத கைதுகள் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுவரும் அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சட்டம் மற்றும் க…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:49 AM மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர்கள் என கூறப்படும் புற்று நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள் போன்றவர்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் செலவுகளையும் அலைச்சல்களையும் குறைப்பதற்காக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று முன்னெடுக்கப்பட்டு வந்த சிகிச்சை நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இறுதி நிலை நோயாளர்களாக இருப்பவர்களை வைத்தியசாலைகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களும் கிளினிக் போன்ற செயற்பாடுகளுக்கு …
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:51 AM (நா.தனுஜா) கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை அமெரிக்கத்தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மெத்தியூ ஹின்ஸன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருக்கும் நிலையில், இன்னமும் பதிலுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான தமது உடன்நிற்பை இது வெளிப்படுத்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனோர் பற்றிய அலுலகத்தின் தலையீட்டுடன் நிதி ஒதுக்கப்பட்டதை அடுத்து கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த மற்றும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன் …
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:56 AM அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசிவருவதாகவும்…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பகுதியில் 10 போத்தல்கள் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று(13.07.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கை இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பினை பொலிஸார் மீட்டதுடன் , கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணொரவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
13 JUL, 2024 | 06:06 PM தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், "எங்கே எங்கே உறவுகள் எங்கே", "கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே" என்று கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/188381
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
வீட்டுச் சின்னம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது சரியான முடிவு எடுப்போம் - ஜனா
-
- 0 replies
- 159 views
-
-
13 JUL, 2024 | 12:25 PM கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு செயற்றிட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்கும் நிகழ்ச்சித் தொடரின் விசேட கூட்டம் வெள்ளிக்கிழமை (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சியின் வரவேற்புரையை தொடர்ந்து இவ்விசேட கூட்டம் ஆரம்பமானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மூச்செடுக்க முடியாத நாட்டை படிப்படியாக மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அரசாங்கம் சிந்தித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 2…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெ…
-
-
- 1 reply
- 257 views
- 1 follower
-
-
வெளிநாட்டவர்களுக்கான விசா விநியோகத்தில் சிக்கல் – ஹர்ஷ டி சில்வா! வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுவதால், விலைமனுக்கோரல் விடயத்தினை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அரச நிதி தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரச நிதி தொடர்பான குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் சேவையை வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆனால் அந்த சேவை வி.எப்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. மாறாக ஜி.பி.எஸ…
-
- 1 reply
- 213 views
-
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminJuly 13, 2024 முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது. நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2024/205050/
-
-
- 16 replies
- 1.5k views
-
-
13 JUL, 2024 | 10:56 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும், ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அநுரகுமார, பிராந்தியத்தின் வர்த்தக பிரமுகர்களை வெள்ளிக்கிழமை (12) காரைதீவில் சந்தித்து பேசியபோது மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டு மக்கள் காலம் காலமாக தொடர்ந்து நாட்டையும் மக்களையும் அழித்து வருபவர்களுக்கே வாக்குகளை வழங்கி வந்திருக்கின்றார்கள். இதனால் தான் நாடு அனைத்து விதங்களிலும் கெட்டு குட்டிச்சுவராகி இருக்கிறது. இனவாதிகளும் ஊழல்வாதிகளும் இந்நாட்டை ஆண்டதால்தான் நாட்டில் இனவாதம் மேலோங்கி பொ…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
13 JUL, 2024 | 11:01 AM (இராஜதுரை ஹஷான்) படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் நாட்டுக்காக எதனை செய்துள்ளார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா, அல்லது தங்களின் குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா? இவர்களால் இனி ஏதும் முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆகவே இவர்கள் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசாத் தி விஸர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணி காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
13 JUL, 2024 | 10:53 AM யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். இதன்போது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
13 JUL, 2024 | 10:07 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டதுடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு முன்னதாக முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு, அதன் நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடினர். https://www.virakesari.lk/…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். யாழ். போதனா வைத்தியசாலை என்பது வட மாகாணத்தில் மிகப்பெரிய போதனா வைத்தியசாலை இங்கு விபத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகும் நிலையில், அதிகமான நோயாளிகள…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
12 JUL, 2024 | 04:43 PM புதிய சட்டமா அதிபராக கே. ஏ. பாரிந்த ரணசிங்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட்டுள்ளார். சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபரின் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். https://www.virakesari.lk/article/188314
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இந்நாட்டின் கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 12 JUL, 2024 | 12:43 PM இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் இதுவரை காணப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது. இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும். இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 09:43 AM வேலை நிறுத்தம் நேற்று வியாழக்கிழமை (11) இரவு முதல் கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னரே ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சில ரயில் கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் நிலைய அதிபர்கள் வேலைக்கு திரும்ப வேண்டியுள்ளதாகவும், பல ரயில்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, நண்பகல் 12 மணிக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/188268
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JUL, 2024 | 01:56 AM வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளுக்கு வியாழக்கிழமை (11) விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பர்வையிட்டு கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் உள்ள 9 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்தேன். வெலிக்கடையில் தங்கவேலு நிமலன் (47)ஜோ.கொ.வலன்ரினோ (41)மகசீன் சிறையில் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) கடந்த மார்ச் 26இல் கைது) மகசீன் சிறையில் 15 - 29 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரன் ஆகியோரைப் பார்வையிட்டேன். அவர்களுடைய விடு…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-