Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீனா இருக்கும் வரை எம்மை ஒன்றும் செய்ய முடியாது! – மார்தட்டுகிறார் மகிந்த. [Tuesday, 2014-03-18 08:12:39] நட்பு நாடுகளின் ஆதரவு எம்மோடு உள்ளவரை நாட்டைக் கட்டியெழுப்பும் எமது முன்னேற்ற நடவடிக்கைகளை எவராலும் சீர்குலைக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “நாட்டின் அபிவிருத்திப் பயணத்தைத் தடை செய்ய சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் சீனா நேரடியாகவே இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று சீனத் தூதுவர் இங்கு உரையாற்றும் போது கூறினார். அதற்காக நான் அவருக்கு நன்றி கூற விரும்புகின்றேன். எமது நட்பு நாடுகளின் ஆதரவு எமக்கு உள்ளவரை எம்மை எவரும் எதுவும் செய்ய முடியாது. நாட்டை…

  2. புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடையார்கட்டு தெற்கு, உடையார் கட்டு பகுதியில் வசித்து வரும் மயில்வாகனம் யசீகரன்(34) என்கிற இளைஞனே இன்று மதியம் 12.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றில் வேலை செய்துவருவதுடன் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.onlineuthayan.com/News_More.php?id=301772754518352655

  3. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.. இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய ஒன்றியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடி குழு மற்றும் நீதிக்கான சர்வதேச ஆணைக்குழு ஆகின இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்து கண்டனத்தை தெரிவித்துள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெனாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மஹேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை தன்னிச்சையான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இனவாத விரோதம் மற்றும் இடையூறு உருவாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். எனினும் கைது செ…

  4. மனிதஉரிமைகள் விவகாரத்தில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு சீனா பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள சீன உதவித் தூதுவர் றென் பக்கியாங், தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, இதனைத் தெரிவித்துள்ளார். “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக, தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டிய அவசியம் இருப்பதாக சீனா கருதவில்லை. 30 ஆண்டுகால தீவிரவாதத்தை சிறிலங்கா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும், அமைதி உருவாக்கப்பட்டதும், மனிதஉரிமைகள் பாதுகாப்புக்கு மிகப் பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மனிதஉரிமைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நாம் எதி…

  5. இலங்கை ஆட்சிப்பீடத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் சிங்களவர்கள் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை ஒட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. இதில் 'இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை', 'பயங்கரவாதத் தடைச்சட்டம் மூர்க்கமானது','நாடு சீனர்களுக்கு லஞ்சம் ராஜபக்சவினருக்கு','இலங்கையின் மனித உரிமைகளின் அழிவை நிறுத்து','அரசியல் கைதிகளை விடுதலை செய்'போன்ற வாசகங்களை கொண்ட பாதகைகளை தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.c…

  6. இத்தாலி அரச தொலைக்காட்சிகளான RAI STORIATk RAI 3Ak வெளிக்கொண்டு வரும் “ஈழ விடுதலை போராட்டமும் இனப் படுகொலையும்” இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடை பெற்ற இன அடக்கு முறையை உலகிற்கு வெளிக்காட்டும் இன்னும் ஓர் ஆவணம். உலக நாடுகளே உங்கள் மனக் கதவுகளை திறவுங்கள், 2009 முள்ளிவாய்காலில் எமது தமிழ் மக்கள் 2 லட்சம் பேரின் உயிரை பறிக்கும் இறுதிக்கட்டத்திலும் உலக நாடுகளின் வீதிகளில் இறங்கி எமது மக்களின் உயிர் காக்க போராடினோம். உங்கள் மனக் கதவுகள் திறக்கப் படவில்லை, எமது மக்களின் 2 இலட்சம் உயிர் பறிக்கப்பட்டது, பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன, 90 ஆயிரம் இளம் விதவைகள் உருவாக்கப்பட்டனர், பாலியல் பாலாத்காரம், சர்வ சாதாரணமாக்கப்பட்டது, காணமல் போன பல்லாயிரம்பேர் பற்றி பதிலில்லை, சிறைகளில்…

  7. நாட்டின் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் குறித்த யுத்த குற்றங்கள் தொடர்பில் தற்போது இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது என ஊவா மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்தார். இதேவேளை, இந்நாட்டின் பொருளாதாரம் ஒரு குடும்பத்தின் கைகளில் காணப்படுகிறது. மேலும் மதசுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அவ்வரசின் தலையெழுத்தை தலைநகரிலிருந்து மாற்ற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். கொழும்பு வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பு பிரைட்டனில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு த…

  8. கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டனர்! – முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கூறுகிறார். [Monday, 2014-03-17 07:49:19] கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்தவர்கள் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ” வடக்கு மக்கள் அரசியல் ரீதியாக வெற்றி அடைந்திருக்கின்ற போதும், கிழக்கு வாழ் மக்கள் அரசியல் பலத்தை இழந்திருக்கின்றனர். இன்னும் பின்தங்கிய நிலையிலேயே கிழக்கு மக்கள் வாழ வேண்டிய நிலைமை காணப்படுகிறது.தந்தை செல்வாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது மாகாண சபைகள் குறித்த…

  9. தமிழ் பெண்களை ஆசைவார்த்தை கூறி படையில் இணைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் தமிழ்த் தேசியத்தில் பற்று வைத்துள்ள எமது மக்கள் அதனை புறக்கணித்து வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தில் இணைவதில் தமிழ் பெண்கள் பின்னடித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்களுக்குள் சில புல்லுருவிகள் அமைப்புகளின் பெயரைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறி இராணுவத்தினருக்கு இரகசிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் சுட்ட…

  10. நீதிமன்றில் வழங்கப்படும் தீர்ப்பை எந்த விதத்திலும் நாம் விமர்சிக்க முடியாது என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். இன்று காலை யாழ் மாநகர அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் நல்லூர் அம்மன் வீதியில் மசாஜ் நிலையம் என்னும் பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு ஊடகவியலாளர் ஒருவர் யாழ் மாநகர சபை முதல்வரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=350572754118422546

  11. 2 தமிழ் பெண் சிப்பாய்கள் கருக்கலைப்புக்கு உட்பட்டுள்ளனர் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- நீண்டகால கருத்தடை முறைமையினை தமது பெண் சிப்பாய்களிற்கு செய்யுமாறு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விடுக்கப்பட்ட பணிப்புரையினை, கடுமையான உத்தரவினை அடுத்து கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலை அதிகாரிகள் அதனை அமுல்படுத்தியதாக வடக்கு மருத்துவ வட்டாரச் செய்திகள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை வைத்தியர்கள் சோதணைக்குள்ளாக்கிய போது இருவரும் கருவுற்றிருந்தமை கண்டறியப்பட்…

  12. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? – பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் விளக்கம். [Tuesday, 2014-03-18 08:10:27] இலங்கை தொடர்பாக, சர்வதேச சுயாதீன பொறிமுறையை கோரும் பிரேரணைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டிய நான்கு காரணங்களை, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக், தி ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். பொறுப்புக்கூறல் இன்றி நீண்டகால சமாதானத்தை எட்டுவது இலங்கைக்கு மிகவும் கடினமானதொரு விடயம். பல்வேறு நாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சரியான பாதையில் பயணிப்பதற்கு உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாவதாக, சுயாதீனமான, நியாயமான உள்ள…

  13. ஹக்கீமின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது பொது பல சேனா! [Tuesday, 2014-03-18 08:07:05] ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வெளியிடப்பட்ட அறிக்கை தவறானது என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபல சேனாவின் நடவடிக்கைகளே சர்வதேச தலையீட்டுக்கு வழிகோலியதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா, இலங்கையில் மத நல்லிணக்கம் கிடையாது என்ற வகையில் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு அறிக்கை வழங்கியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் தனது பிழையை உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் மத சுதந்திரம் கிடையாது என ஹக்கீம் அறிக்கையில் குற்றம் சுமத்த…

  14. மனிதஉரிமை செயற்பாட்டாளர்களை உடன் விடுவிக்க வேண்டும்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை. [Tuesday, 2014-03-18 07:56:56] கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனிதஉரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்னான்டோ மற்றும், அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், "காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள…

  15. சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் இன்று அமெரிக்கா பகிரங்க முறைசாரா கலந்துரையாடலை நடத்தவுள்ள நிலையில், இன்றும் நாளையும் இரண்டு மேலும் இரண்டு முறைசாராக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தீர்மான வரைவு குறித்து, இன்று காலை 10 மணி தொடக்கம், 12 மணி வரை, கலந்துரையாட வருமாறு அமெரிக்க வதிவிடப் பிரதிநிதியால் உறுப்பு நாடுகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மற்றொரு முறைசாரா கலந்துரையாடல் இன்று பிற்பகல், 2 மணி தொடக்கம், 4 மணி வரை, சிறிலங்காவில் மனிதஉரிமைகள் என்ற தலைப்பில், நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை, அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் சமூகம் என்ற மனிதஉரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.…

  16. அமைச்சர் ஹக்கீம் கொள்கையில்லாதவர். தனது சமூகத்திற்கே எதனையும் செய்யாத அவர் இன்று அரசுக்குள் நெருக்கடியென்றதும் அரசு எதிர்ப்பு கோஷத்தை கையிலெடுத்துள்ளாரே தவிர தான் சார்ந்த சமூக நலத்துக்காக அல்ல என குற்றம் சாட்டும் ஜே.வி.பி. நாட்டுக்குள் மதநல்லிணக்கம் கிடையாது. அதன் பின்னணியில் அரசாங்கத்துடன் இயங்கும் சக்திகளே உள்ளன என்றும் அக்கட்சி தெரிவித்தது. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிந்து விட்டது என பொது நிகழ்வொன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். …

  17. இலங்கை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது! – நவநீதம்பிள்ளை தெரிவிப்பு. [Tuesday, 2014-03-18 08:08:11] அனைத்துலக மனிதஉரிமை விவகாரங்களில் ஐ.நா மனிதஉரிமை சபையின் ஒப்புதலுக்கு அமைய, அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, ஐ.நா மனிதஉரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வில் மனிதஉரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்களிடம், கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களால் வினவப்பட்டது. நீங்கள் குறிப்பிடும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கைது குறித்து நான் அறிவேன். அது தொடர்பில் நடவடிக்க…

    • 1 reply
    • 457 views
  18. இலங்கையை தண்டிக்க வேண்டும் என்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல – சம்பந்தன் 17 மார்ச் 2014 இலங்கையை தண்டிக்க வேண்டும் என்பது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் கிடையாது என அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையை தண்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில முக்கியமாக ஆற்றப்படவிருந்த கடமைகளை இலங்கை அரசாங்கம் இதுவரையில் முன்னெடுக்கத் தவறியுள்ளமையை சுட்டிக்காட்டுவதே நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் வலுவான, ஸ்திரமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக கருதப்பட்ட போதிலும், பிழையான பாதையில் செல்வதே வருத்தமளிக்கின…

  19. புதுக்குடியிருப்பில் இரு சகோதரர்கள் பொலிசாரால் கைது! – புகைப்படத்தைக் காட்டி பிடித்துச் சென்றனர். [Monday, 2014-03-17 08:08:46] News Service புதுக்குடியிருப்புப் பகுதியில் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். டிரக்டர் சாரதியான ஜோசப் கலாதரன் (வயது - 35), அவரது தம்பியான ஜோசப் சுதாகரன் (வயது - 31) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதிய உணவுக்காக இவர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது அங்கு திடீரென்று வந்த பொலிஸார் புகைப்படம் ஒன்றை கலாதரனுக்குக் காண்பித்து அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில் தனது சகோதரனை பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச் சென்றபோது அவரது தம்பி அதனை புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் அவரும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்…

    • 2 replies
    • 488 views
  20. இந்தியாவின் மலையாள ஆபாசப்படங்களை யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்பனைசெய்துவந்த சமூகவிரோத கும்பலைச்சேர்ந்த இருவரை பொலிஸார் இன்று கைதுசெய்தள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 100 இற்கும் மேற்பட்ட சீ.டி.களை பறிமுதல் செய்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் றொகன் டயஸ் தெரிவித்தார். ஆபாசபடங்களை விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு ஆபாசப்பட சீ.டி.க்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.நகரில் இரண்டு சீ.டி கடைகள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு இர…

    • 0 replies
    • 657 views
  21. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் இரத்தின சபாபதி பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டுவிழா பேராசிரியர் சபாஜயராஜா தலைமையில் நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் …

    • 14 replies
    • 1.3k views
  22. தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம்: [Monday, 2014-03-17 21:28:55] பிரித்தானியாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் இவ்விடையம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால் இது தான் உண்மை. நாம் ஜெனீவா ஐ.நா முன்னர் நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ! ஆனால் உள்ளே செல்லவில்லை. பிரித்தானிய பாராளுமன்றம் முன்னதாக நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ஆனால் உள்ளே எமது தமிழ் பிரதிநிதியாக எம்.பி எவரையும் அனுப்பியது இல்லை ! ஆகவே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நாங்கள் குரல்கொடுப்போம் என்று, நஷனல் லிபரல் பார்டி(என்.எல்.பி) National Liberal Party தெரிவித்துள்ளது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு தண்டனை வாங்…

  23. கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு:- மன்னாரில் இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள்-கண்டுபிடிக்க உதவுமாறும் கோரிக்கை! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மன்னார்:- படங்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும் அப்பன் என அழைக்கப்படும் நவனீதன் என்பவர்களே தேடப்படுவதாக சுவரொட்டிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மேற்குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தருவோருக்கு ஐந்து இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்…

    • 0 replies
    • 383 views
  24. -கனகராசா சரவணன் நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக்கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டுவிட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை வாகரை, புல்லாவி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத இரு சந்தேகநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். வாகரை, காயங்கேணி பாலத்திற்கு அருகில் மலசலம் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பற்றைக்கு சென்றபோதே அங்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் இவர்கள் இருவருக்கும் துப்பாக்கியை …

  25. மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது குறித்து அமெரிக்கா அறிக்கை! [Monday, 2014-03-17 17:15:36] கிளிநொச்சியில் வைத்து இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மனிதஉரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிதா பிரவீண் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுரகம், குறித்த இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் பூரண சட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள ஆவண செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருவருக்கும் எதிரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.