ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நடத்தப்படும் தினமுரசு பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் ஒருவர் நேற்று இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரது புகைப்படக் கருவியும் சேதமாக்கப்பட்டு உள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுமுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வலிகாமம் கிழக்கின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட அச்சுவேலி இடைக்காடு பகுதியில் படையினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததென நம்பப்படும் கண்ணிவெடி ஒன்று பொதுமக்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பற்றி செய்தி அறிக்கையிடச சென்றிருந்த …
-
- 1 reply
- 340 views
-
-
இலங்கையில் மெய்யான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரியுள்ளது. இலங்கையின் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 65ம் குடியரசு தின நிகழ்வுகளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறைவின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிகச் சிறந்த உறவு காணப்படுவதாகத…
-
- 1 reply
- 241 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிசுக்கும், மனிதஉரிமை விவகாரங்களுக்கான தூதுவராக செயற்படும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளன. கடந்த காலங்களில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுகளில் சிறிலங்காவின் பிரதிநிதியாகச் செயற்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும், வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இந்தநிலையில், வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலேயே சிறிலங்கா பிரதிநிதிகள் குழு அனுப்பிவைக்கப்படல…
-
- 1 reply
- 287 views
-
-
சில ராஜதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதுடன், தங்களது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துமாறு இலங்கையை பலவந்தப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறைவி;ன் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஏனைய முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நன்மை ஏற்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக சரியான நடவடிக்கை எடுக்கப…
-
- 0 replies
- 126 views
-
-
65ஆவது குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல் - வே.மகாலிங்கம் 'வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள், இந்திய வீட்டுத்திட்டம், வவுனியா வைத்தியசாலைப் பணிகள் என்பவற்றை குறிப்பிடலாம்' என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் இன்று (26.01.14) தெரிவித்தார். இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.01.14) காலை நடைபெற்றது. இதன்போது,.. தொடர்ந்து கருத்து தெரிவித்த வே.மகாலிங்கம், 'வட பகுதிக்கான புகையிரதப் பாதை…
-
- 0 replies
- 266 views
-
-
காணாமற்போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு இதுவரை 13,700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில், போரின் போது காணாமற்போனவர்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழுவிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 9,300 முறைப்பாடுகள் பொதுமக்கள் தொடர்பானவையாகும். ஏனைய 4300 முறைப்பாடுகள் சிறிலங்கா படையினர் தொடர்பானவை. கிளிநொச்சியில் கடந்த 18ம் நாள் தொடக்கம் 21ம் நாள் வரை நடத்தப்பட்ட ஆணைக்குழுவின் முதல் விசாரணை அமர்வை அடுத்து, அந்தப் பகுதியில் காணாமற்போன 162 பேர் தொடர்பான சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமரப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் குணதாச தெரிவித்துள்ளார். இந்த அமர்வில் காணாமற்போனவர்கள…
-
- 0 replies
- 186 views
-
-
போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர் கொள்ளத் தவறின் பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். வலி தென்மேற்கு பிரதேசசபை கடந்த வெள்ளிக்கிழமை (20.01.2014) மானிப்பாய் கலாசார மண்டபத்தில் தேசிய வாசிப்புமாத மற்றும் உள்ளுராட்சிவார நிறைவு விழாவைக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். இந் நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் நாடுகளை அடிமைப்படுத்…
-
- 0 replies
- 261 views
-
-
தமிழ் பேசும் மக்களுக்கு இந்த இனவாத அரசை வீழ்த்துவது மட்டும் போதாது. இதற்கு மாற்றாக உருவாகும் புதிய அரசு இனவாதம் அற்ற அரசாக இருக்க வேண்டும். இதற்கு அந்த அரசில் நமது கட்சி, பலம் வாய்ந்த கட்சியாக இடம் பெற வேண்டும். நாங்கள் ஆளுமையுடன் பலமாக இருந்தால்தான் எமது இனத்துக்கு எதிரான எந்த ஒரு அநீதியையும் தடுத்து நிறுத்தலாம். அதுபோல் எங்கள் மக்களுக்கு அனைத்து அரச வளங்களையும் கேட்டு வாங்கி வழங்கலாம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலை வர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிக்கடை 95 ஆம் இலக்க தோட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்ர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: இந்த அரசை வீழ்த்த வேண்டிய வேளை வந்…
-
- 0 replies
- 208 views
-
-
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த முஸ்லிம் மக்கள் தொடர்பில் அறிக்கை தயாரித்து அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த வாரமளவில் அறிக்கை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததன் பின்னர் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற …
-
- 0 replies
- 319 views
-
-
இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது. துணைத்தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் சம்பிரதாய பூர்வமாக இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் குடியரசு தின வாழ்த்து செய்தி உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இதேவேளை, உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெற்றது. மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 4ஆவது தடவையாக 2014 ஆண்டு இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See…
-
- 0 replies
- 339 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதை நாம் அதிகம் விரும்புகின்றோம் எனவே சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெற விரும்பினால் வழக்கறிஞர் ஊடாக சம்மதத்தை தெரிவிக்கவும் என மட்டக்களப்பில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பிற்கு சென்றிருந்த கோத்தபாய மட்டு ஆயர் யோசப் பொன்னையாவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார். அதன்போது சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்கு ஆவன செய்யுமாறு மட்டு. ஆயர் இவரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் போதே பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேல…
-
- 0 replies
- 201 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் 14ஆவது கொலனி என உருவாக்கப்பட்ட சிங்களக்குடியேற்றப் பகுதியில் மீண்டும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் இந்தப் பகுதியில் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அரச அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில் இந்த சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. காடுகளை அழித்து தற்காலிக வீடுகளை பெரும்பான்மையினர் அமைத்து வருகின்றனர். அதேவேளை அதனை அண்டிய பகுதியில் ஏற்கனவே குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்தரவீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜனகபுர, சிங்கபுர என்ற பெயரில் சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை அங்கிருந்து தென்னைமரவாடி நோக்கும் செல்லும் முல்லை…
-
- 0 replies
- 180 views
-
-
காணாமற்போனவர்கள் தொடர்பில் தொடர் போராட்டத்தின் ஆரம்பமாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, காணாமற் போனவர்களின் உறவுகளால் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'காணாமற்போனோர் பிரச்சினைக்குச் சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்திச் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடன், ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக இந்தத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்று போராட்ட ஒருங்கிணைப்பாளரான சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார். கேலிச் சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்கலிகொட காணமற்போய் 4 வருடங்களாவதை முன்னிட்டும், காணமற்போனோரின் உறவுகளை விடுவிக்குமாறு கோரியும் காணாமற்போனோரைக் தேடிக் கண்டறியும் குழுவினால் மஹரகமவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியிலிருந்…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க கொழும்பு நம்பகமான உள்ளகப் பொறிமுறை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் உருவாக்கத் தவறினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளருடன் சேர்ந்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கொண்டுவரப் பிரிட்டன் பாடுபடும். இவ்வாறு நேற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அயலுறவு மற்றும் பொதுநலவாய உதவி அமைச்சர் மார்க் சைமன்ஸ். நடவடிக்கை ஆரம்பம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை, நம்பத் தகுந்த உள்ளக பொறிமுறையினூடான விசாரணைகளை ஆரம்பிக்கவில்லையாயின், ஐ.நா மனித உரிமைகள் சபையில் எங்களுக்கு இருக்கக் கூடிய நிலையை வைத்து ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் சேர்ந்து ச…
-
- 0 replies
- 311 views
-
-
திருக்கேதீஸ்வர மனித புதை குழி அரச படைகளுடன் தொடர்பற்றது என்பதனை நிறுவும் சி.ஐ.டி விசாரனை ஆரம்பம்:- மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான விசாரனை நடவடிக்கைகள் குற்றப்புலனர்ய்வுப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனர்ய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொண்று இன்று வெள்ளிக்கிழமை (24-01-2014) மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் அனுராத புர சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 13 ஆவது தடவையாக இன்று வெள்ள…
-
- 4 replies
- 475 views
-
-
பிரிவினைவாதத்தை போஷிக்கும் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில் இருக்கும்வரை நாங்கள் ஜெனிவா செல்லவேண்டியேற்படும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் போருக்குப் பின்னரான எமது நாட்டைக் கட்டியெழுப்பவும் ஒற்றுமையை பலப்படுத்தவும் மேற்கு நாடுகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மாறாக உதவி கோரி நாங்கள் நீட்டும் கரங்களில் சர்வதேச சமூகம் துப்பிவிடக்கூடாது. ஜெனிவா விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்துக்கு எமது அமைச்சர்கள் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந…
-
- 3 replies
- 391 views
-
-
அறுபதாயிரம் படையினர் படைகளை விட்டு தப்பியோட்டம்! – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல். [saturday, 2014-01-25 09:34:35] இலங்கையில் 239 அதிகாரிகள் உட்பட 59,267 முப்படையினர் தமது படைப்பிரிவுகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்களின் பின்னணியில் படைகளில் இருந்து தப்பிச்சென்றோரே இருந்து வருவது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=102169&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 315 views
-
-
இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. யாழ் சென்றுள்ள குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.இரவு 8 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் நீடித்திருந்தது. ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா தொடர்பான பிரேரணைகளை கொண்டுவரப்படவுள்ள நிலையில் சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அதிகாரி ஸ்ரீபன் ரப் இலங்கை சென்று இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவுஸ்ரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று இலங்கைக்கு குறுகிய நெரப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று முற்பகல் 11.47 அளவில் இலங்கை வந்த அவர் மீண்டும் 2.00 மணியளவில் அவுஸ்ரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிசர்லாந்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு டொனி அபோட் சென்று கொண்டிருந்போது, அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரியவருகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவுஸ்ரேலிய பிரதமரை வரவேற்க, இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்ன அங்கு சென்றிருந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் முட் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்…
-
- 4 replies
- 469 views
-
-
அண்மையில் கம்பளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் டி.எம். ஜயரத்ன, சிங்கப்பிட்டியில் இருக்கும் காவி உடை அணிந்த பிக்கு ஒருவர் திருமணம் செய்து 5 பிள்ளைகளின் தந்தை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த பிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரே என பிரதமரின் அலுவலகத்தின் உட்தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கம்பஹா மாவட்டம் சிங்கப்பிட்டியில் அத்துரலியே ரத்ன தேரரின் குடும்பமே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மாலை நேரங்களில் தனது வீட்டுக்கு டெனிம் காற்சட்டை அணிந்து செல்வது வழக்கம் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. பிரதமர் வெளியிட்ட இந்த …
-
- 3 replies
- 327 views
-
-
கனடா ஒன்ராறியோ மாநில பிரதமர் கத்லீன் வென்னே அண்மையில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு பேச்சாளருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக கனடாவின் நஷனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் நேரு குணரட்ணத்துடன் தாம் சந்திப்பு நடத்தியமையை ஒன்ராறியோ பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 14 ம் திகதியன்று தைப்பொங்கல் அன்று டொரன்டோவின் கந்தசாமி கோயிலுக்கு ஒன்றுக்கு சென்றிருந்த போதே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. உலக தமிழர் இயக்கம் கனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாக உள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஒன்ராறிரியோ பிரதமரின் பேச்சாளர் பிரதமர் இந்த நிகழ்வின் போது பலரையும் சந்தித்து உரையாடியதா…
-
- 1 reply
- 254 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வியட்னாமின் ஆதரவை கோருவதற்காக சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் டியூ.குணசேகரவை ஹனோய்க்கு அனுப்பியுள்ளது. சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் டியூ குணசேகர வியட்னாம் அதிபர் ட்ரூங் ரான் சங்கின்னை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, வியட்னாமுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ள அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தோற்கடிக்க வியட்னாம் ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் டியூ. குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு வியட்னாம் அதிபர், சிறிலங்காவின் தேசிய அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்…
-
- 0 replies
- 168 views
-
-
போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணசபையின் ஐந்தாவது அமர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த அமர்வில் ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களால் பிரேரணை கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பொங்கல் விழா வடக்கு மாகாண சபையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்தப் பொங்கல் விழா நாளை மறுதினம் அமர்வு இடம்பெறு…
-
- 0 replies
- 259 views
-
-
வடக்கு மாகாண சபையை அமைத்து, அங்குள்ள மக்கள் தமது விருப்பப்படி முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்வதற்கு முடிந்தமை முக்கியமான வரலாற்றுத் திருப்பு முனை என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சொல்வேனியா குடியரசின் அரசமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக் குடன் நேற்று வெள்ளிக்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில், நாட்டில் அதிகாரப் பகிர்வைச் சில இனவாத - தீவிரவாத சக்திகளும், கட்சிகளும் பலமாக எதிர்த்து வருகின்ற போதிலும், அதனை வரவேற்கும் மிதவாத மற்றும் நடுநிலை பேணும் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் உள்ளதென்பதை ரவூப் ஹக்…
-
- 0 replies
- 303 views
-
-
சிங்களவர்களின் சனத்தொகையை உயர்த்தும் நோக்கில், சிறிலங்கா படையினர் மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் ஒரே ஆண்டில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மூன்றாவது குழந்தையைப் பெறும் சிறிலங்கா படையினருக்கு ஒரு இலட்சம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டம் 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் இடம்பெற்றிருந்தது. இதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்ததை அடுத்து, கடந்த ஆண்டு உடனடியாகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் மூன்றாவது குழந்தையைப் பெற்றுக் கொண்ட 7029 சிறிலங்கா படையினருக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 702.9 மி…
-
- 0 replies
- 601 views
-