Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- வடமாகாண சபைக்கு நேரடியாக நிதி வழங்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவித்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. அரசிலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு நிதி வழங்குவதானால் இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் மாகாணங்களுக்கான நிதியை மத்திய வங்கிதான் தீர்மானிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருக்கக்கூடிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசணைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்…

  2. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி ஏழாவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்டபோது மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 36 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தெரிவித்தார். கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் கடந்த 7ஆம் திகதி வரை ஆறு தடவைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்பட்டன. அவற்றில் சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று நீதவான் ஆனந்தி கனகரட்ணம…

  3. -சுமித்தி தங்கராசா வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தான் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண உள்ளூராட்சி அமைச்சில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிர்வாகம் சார்ந்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நான் பதவியேற்ற பின்னர் உங்கள் யாவரையும் அழைத்து ஒருமித்துவைத்துக் கூட்டம் கூடுவது இதுவே முதற்தடவையாகும். சிலருக்கு எதுவுமே நேரம் சென்று தான் நடக்கும். ஜே.ஆர்.ஜயவர்த்தன சுமார் நாற்பது வருட அரசியலின் பின்னர் தான் பிரதம மந்திரியாகி பின்னர் தான் ஜனாதிபதியானார். அதேபோல்தான் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது. என் நடவடிக்கைகளும் தாமதம…

  4. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ரெப்பிடமே மேற்படி இரு ஆயர்களும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 'இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டீபர் ரெப் வெளியிட்ட கருத்தை நாம் மிகவும் கடுமையாகக் கண…

  5. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லை:- உள்ளுராட்சி அமைச்சினால் வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான அலுவலகம் யாழ். செயலகத்தினை அண்மித்த சோமசுந்தரம் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். வடக்கு மாகாண சபை பதவியேற்று நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களை ஒரேநேரத்தில் முதலமைச்சர் முதல் தடவையாக இன்று சந்தித்து நிர்வாக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். சர்ச்சைக்குரிய பிரதம செயலாளர் மற்றும் அமைச்சு செயலாளர்களும் இச்சந்திப்பில் பிரசன்ன…

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- 2013 பருவ மழை பொய்த்துப் போனதால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களின் நீர் மட்டம் மிக மிக தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த வருடம் இதேகாலப்பகுதியில் கிளிநொச்சியில் உள்ள பிரதான குளங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பி இரண்டு தடவைகள் வான் பாய்ந்தது. குறிப்பாக இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் வான் பாய்ந்தது. இது 12 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வு. ஆனால், தற்போது இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 17 அடி 06 அங்குலமாக காணப்படுகிறது. இந்த நிலைமை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் எதிர்காலத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் குறித்…

  7. இந்து சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ளவும் வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கடற் புலிகளை தோற்கடித்து அழித்தொழித்த இலங்கையின் அனுபவங்கள் பெரும் பயன்தரக்கூடியவை என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா ஓமான் ட்றிபியூன் பத்திரிகைக்கு தெரிவித்தார். பிரதி அமைச்சர் பெரேரா, கடந்த ஜனவரி 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மஸ்கற் சென்றிருந்தார். சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்யவுள்ள இலங்கை, அரபு நாடுகளுக்கான தென் கிழக்காசிய நுழைவாயிலாக வரவுள்ளது. தென் கிழக்காசிய நாடுகளுக்கான கடல் பாதையில் உள்ள கொழும்பு துறைமுகம், பெரிய தாய்க் கப்பல்களையும் உள்வாங்கும் தகுதியுள்ளது. எனவே இலங்கை, வளைகுடா…

  8. ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார சிற்றூழியர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரை இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது இவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகளாக, 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்துமாறும்,சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்குமாறும்,08மணித்தியால காலவரையறைக்கு மேலதிகப் பெற்றுக் கொள்ளப்படும் கடமைக்கான உரிய மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறும்,சீருடைக் கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குமாறும்,05நாட்களைக் கொண்ட வேலை வாரத்தை…

  9. (ஆர்.யசி) சர்வதேசம் இலங்கையை கைவிடும் பட்சத்தில் தமிழர்களுக்கே அதிக பாதிப்பு ஏனெனில், உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லக்கூடதென விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் முரண்படுவதனால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. அரசாங்கத்துடனான இணக்கப்பாடே தமிழர் பிரச்சினைகளின் ஒரே தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/?q=node/360640

  10. வடக்கு மீனவர்களைத் தொடர்ந்தும் சோதிக்கும் அழவைக்கும் அரசு எமக்குத் தேவையில்லை. எங்களுடைய வாழ்வாதாரம் இப்போது கேள்விக் குறியான நிலையிலேயே உள்ளது என்று வடமாகாணக் கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி எப். ஜோசப் கண்ணீருடன் தெரிவித்தார். இந்திய இழுவைப் படகுகளினால் வட புலத்து மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பான ஊடக மாநாடு ஒன்று நேற்று மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது பிரதேசத்தில் போர் முடிந்துவிட்டது. ஆனாலும், இன்னும் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றோம். …

  11. தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நீரூபித்து காட்டினர். இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சி மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

    • 17 replies
    • 4.5k views
  12. புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் கோரப்பட உள்ளது 15 ஜனவரி 2014 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம், பிரான்ஸிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது குறித்த கோரிக்கையை முன்வைக்க உள்ளது. பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரையே இவ்வாறு நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸில் வாழ்ந்து வருகின்றமை தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாம் தொழில் புரியும் இடத்தில் உரிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதனை முறைப்பாடு செய்ய காவல் நிலையத்திற்கு சென்றிருந்த போது குறித்த …

  13. -சுமித்தி தங்கராசா நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன்.இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்றார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து …

  14. ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்னதாக ராஜதந்திரவட்டாரங்கள் பலவும் வட- கிழக்கிற்கு தொடர்ந்தும் படையெடுத்து வந்தவண்ணமேயுள்ளன. அவ்வகையில் யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த கனேடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கனேடிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஜே.எஸ்.நிகார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இரு நாள் பயணமாக நேற்றுக் காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினை சந்தித்த அவர்கள் நண்பகலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்துள்ளனர். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலேயே இவர்கள் அதிகளவு க…

  15. "இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம், கனேடிய பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். அவ்வாறான நிலையிலும், ஜனாதிபதி, எதற்கும் அஞ்சாமல் தீர்மானம் எடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அன்று ஜனாதிபதி தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து தளர்ந்திருப்பாரானால் அமெரிக்கர்கள் பிரபாகரனை மீட்டுக் கொண்டு சென்றிருப்பர்" - இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரகசியத் தகவலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், அமைச்சருமான டியூ குணசேகர வெளிப்படுத்தியுள்ளார். காலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டப…

  16. இலங்கையில் இறுதியான மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நான்கு படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சீ.என்.என். பரிந்துரைத்துள்ளது. நியூயோர்க்கின், அரசியல் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வாளர், மஹா ஹூசேன் ஹசீஸ் என்பவர் இந்த படிமுறைகளை வரைந்துள்ளதாக சிஎன்என் செய்திச் சேவை கூறுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட புது வருட செய்தியின் அடிப்படையில், தமது கருத்துக்களை மஹாஹூசேன் ஹசீஸ் வெளியிட்டுள்ளார். தேசத்தை கட்டி எழுப்பும் போது, அனைத்து வித்தியாசங்களையும், பிரிவினைகளையும் புறந்தள்ள வேண்டும்.நாட்டிற்கு தற்போதைய தருணத்தில் புதிய அரசியலையும், அபிவிருத்தி கலாச்சாரத்தையும் கொண்டு வரும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்ப…

  17. தம்மைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த முயற்சியையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக, உள்ளூர் ஊடகங்களுக்கு அனந்தி சசிதரன் தெரிவித்ததாக, பிரிஐ தகவல் வெளியிடுகையில், “என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்து…

  18. பல தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான உடன்பாட்டுக்கான வரைவைத் தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஈபிடிபி பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க, “புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விரைவில், உடன்பாடு கையெழுத்திடப்படும். இந்தக் கூட்டணியின் பிரதானமான நோக்கம், நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்தீர்வு காண்பதேயாகும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள நிலையில், ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்ளடக்கிய …

  19. வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் காணாமற்போன ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப்பெண்கள் ஆகியோரை மீட்டுத் தருமாறு கோரியும், காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் இம்மாத இறுதியில் கொழும்பில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் ஜனநாயக ரீதியில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் நேற்று மாலை "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் ஊடகவியலாளர…

  20. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப், தனது விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதைத் தெரிவித்துள்ளார். நம்பகத்தன்மையுடன் கூடிய சுயாதீனமான விசாரணைகள் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா ஊக்குவிக்கிறது எனவும் அவர் வெளியிட்டுள்ள அற…

  21. தலைமன்னார் பியர் மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984 ம் ஆண்டிலிருந்து இச் சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது. அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பி…

  22. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தைப்பொங்கல் நிகழ்வு நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சீ.பி.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/96802-2014-01-15-09-40-41.html

  23. Started by Athavan CH,

    யாழ் நகரில் அண்மையில் கே.எவ்.சி உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ் உணவகம் திறக்கப்பட்டதும் மக்கள் மத்தியல் அமோக வரவேற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளையவர்கள் பெருவாரியா அணிதிரள்கின்றனர். கார்க்கிஸ் பூட் சிற்றி அடுக்கு மாடித் தொடரில் மேல்தளத்தில் அமைந்துள்ளது.

    • 13 replies
    • 1.7k views
  24. உழவர் திருநாளாம் தைத்திருநாளை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பானை ஏற்றி பொங்கல் பொங்கியமையை இன்று பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது. விவசாயிகள் அனைவரும் வயலில் விளைந்த அரிசியில் இன்றைய தினம் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி செலுத்துவர். அதன்படி வீடுகள், ஆலயங்கள்,வியாபார நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள் பொங்கல் செய்வது வழக்கம். அதற்கமைய இன்றைய தைத்திருநாளிலும் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. இதேவேளை, ஆலயங்களிலும் விசேடவழிபாடுகளும் ரதோற்சவமும் இடம்பெற்றன. மேலும் வழமைக்கு மாறாக இம்முறை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. …

  25. ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலியாசனை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியுயோர்க்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் விபரம் குறித்து நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரிடம், இன்னர்சிற்றி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு, ஐ.நா பிரதி பொதுச்செயலருக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பான விபரங்கள் இல்லை என்றும், இது உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான கலந்துரையாடலின் ஒரு பகுதியே என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரினால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20131217109642

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.