Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கஞ்சா சுற்றிவளைப்பின் போது பாதாள உலக கோஷ்டித் தலைவர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் தனமன்வில பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஞ்சா சுற்றிவளைப்பின் போது ஒரு குழுவினர் ரி-56 ரக துப்பாக்கிகளின் மூலமாக விசேட அதிரடிப்படையினரை நோக்கி சுட்டுள்ளனர். இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலிலேயே பாதாள உலக கோஷ்டியின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/95654-2014-01-04-12-51-44.html

    • 3 replies
    • 549 views
  2. 9 வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் 2 ஆம் இடத்தைப் பெற்று சிறுமி ஒருவர் இலங்கையில் சாதனை படைத்துள்ளார். சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். பிரேமானந்த நடராஜ் மற்றும் லக்ஷ்ஸ்மி பிரேமானந்த் தம்பதிகளின் ஒரே ஒரு புதல்வியான வஷினியா கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலுகின்றார். வஷினியா 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித் துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்கான பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு செ…

  3. வடக்கு மாகாண ஆளுனருக்கு இனிமேல் பதவி நீடிப்பு வழங்கப்படாது என்றும், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் புதிதாக சிவில் ஆளுனரை நியமிப்பதாகவும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன், கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருந்தார். வடக்கு மாகாணசபையின் சுமுகமான செயற்பாட்டுக்கு காணப்படும் முட்டுக்கட்டைகள் குறித்து சிறிலங்கா அதிபரிடம் வடக்கு மாகாண முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார். …

  4. வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இநதச் சந்திப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், ஜனாதிபதியும் வடமாகாண சபை விவகாரத்தில் முழுமையாக அக்கறை செலுத்தி அதன் சீரான செயற்பாட்டுக்கு உதவ வேண்டுமென புளொட் இயக்கத் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான ரி. சித்தார்த்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கேசரிக்கு மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையின் செயற்பாட்டை செயற்றிறமை மிக்கதாக மாற்றுவதுடன் மக்களது சுயநிர்ணய கோரிக்கையையும் முன்னெடுக்க வேண்டும். ஆனால், இவை இரண்டினையும் வெவ்வேறாக அணுகுதல் அவசியமாகும். இவற்றினை முழுமையாக அடைந்து கொள்வதற்கு மாகாண சபையும் அரசும் இணக்கப்பாட்டுடன் செயற்பட…

  5. இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கை மற்றும் இந்தியாவில் அசாதாரண காலநிலை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன் இருநாடுகளிலும் வெள்ள அபாயம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படுவதுடன் பலமான காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலலையின் வேகம் அதிகரித்திருக்கும் என்பதுடன் திருகோணமலை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த வாரமும் பெய்யும் அடைமழை அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை வரைதொடரும் என்றும் எதிர்வுகூறியுள்ளது. வடக்கில் யாழ். மாவட்டத்தில் 150 மில்லிமீற்றர் மழைபெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து காரைநகர் வரையிலான கடல…

  6. காணொளி : இலங்கை போரில் துப்பாக்கியும் , புகழும் ‍இந்திய ஆங்கில தொலைக்காட்சியின் பெட்டகம் காணொளியை பார்க்க.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10967:2014-01-05-06-12-16&catid=1:latest-news&Itemid=18

  7. முல்லைத்தீவின் கரையோரக் கடல்கொந்தளிப்பு: கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுநத்து- மக்கள் இடம்பெயர்வு 05 ஜனவரி 2014 வடக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வளிமண்டளவியல் திணைக்களம்:- முல்லைத்தீவின் கரையோரக் கடல்கொந்தளிப்பு: கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுநத்து- மக்கள் இடம்பெயர்வு முல்லைத்தீவின் கரையோரக் கடல பகுதி கொந்தளிப்பதுடன், கடல்நீர் 3 அல்லது 4 மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கள்ளப்பாடு, அலம்பில், செம்மலை, வட்டுவாகல் உள்ளிட்ட கரையோர கிராமங்களின் கரையோரங்களைச் சேர்ந்த மக்கள் மேட்டு பிரதேசங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் காற்று…

  8. முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கருகில் மீட்கப்பட்ட எலும்புகள் பரிசோதிக்காதது ஏன்? முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கருகில் மீட்கப்பட்ட எலும்புகள் பரிசோதிக்காதது ஏன்? சிலாபம் - முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கருகில் கடந் பல மாதங்களுக்கு முன் மீட்கப்பட்ட எலும்புகளை தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையும் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தொல்பொருளியல் திணைக்களத்தைச் செர்ந்த இளைஞரான வெச்சி கயான் இந்திக என்பவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக இந்த பிரதேசத்தில் எலும்புகள் மீட்கப்பட்டன. முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கருகில் இருந்த மண் குவியலில் இருந்து இவை மீட்கப்பட்டன. 2012ஆம்…

    • 0 replies
    • 411 views
  9. ஹெரோயின் கொள்கலன் தொடர்பில் பிரதமரின் மகனிடம் தீவிர விசாரணை அண்மையில் மீட்கப்பட்ட பாரிய அளவிலான ஹெரோயின் அடங்கிய கொள்கலன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் புதல்வரும் மாகாண சபை உறுப்பினருமான அனுராத ஜயரத்னவிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பாகிஸ்தானியருக்கும் பிரதமரின் மகனுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளும் முகமாகவே அனுராத ஜயரத்னவிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் அந்த விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சா…

    • 0 replies
    • 409 views
  10. ஜனாதிபதி ஆதரவுடனேயே எமது இலக்கினை அடைய முடியும் - சித்தார்த்தன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இநதச் சந்திப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், ஜனாதிபதியும் வடமாகாண சபை விவகாரத்தில் முழுமையாக அக்கறை செலுத்தி அதன் சீரான செயற்பாட்டுக்கு உதவ வேண்டுமென புளொட் இயக்கத் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான ரி. சித்தார்த்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கேசரிக்கு மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையின் செயற்பாட்டை செயற்றிறமை மிக்கதாக மாற்றுவதுடன் மக்களது சுயநிர்ணய கோரிக்கையையும் முன்னெடுக்க வேண்டும். ஆனால், இவை இரண்டினையும் வெவ்வேறாக அணுகுதல் அவசியமாகும். இவற்றினை மு…

    • 0 replies
    • 271 views
  11. இலங்கையில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்து வருகிறது என்று மத்திய வங்கி கூறுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன. நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட்டி வீதங்களை அதிகரிக்கவில்லை என்றும், பணவீக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது பார்த்தால் அரசு கூறும் தகவல்கள் எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது தெரியவரும் என பிபிசி தமிழோசையிடம் கூறினார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி. எனினும் கடந்த சில மாதங்களில் மறக்கறி போன்ற சில பொருட்க…

  12. போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ராப் இலங்கை வருகிறார்! [saturday, 2014-01-04 09:46:47] அமெரிக்காவின் உலகளாவிய குற்றவியல் அலுவலகத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் எதிர்வரும் 6ம் திகதி முதல் 11ம் திகதி வரை இலங்கையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ராப் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.இந்த விஜயத்தின்போது ராப், இலங்கை அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் நீதித்துறையினர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார். ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ராப் இலங்கை வந்திருந்தார். எதிர்வரும் மார்ச் ஜெனீவா அமர்வை முன்னிட்டே ராப்பின் விஜயம் இடம்பெறவுள்ளது. மார்ச் ஜ…

  13. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஜோர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட சிறப்பு தூதுக்குழுவினரும் பயணித்துள்ளனர். http://virakesari.lk/?q=node/360366 ஜனாதிபதி மஹிந்தவிற்கு பலஸ்தீனத்தில் விசேட விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலஸ்தீனத்தில் விசேட விருதொன்று வழங்கப்பட உள்ளது. 'ஸ்டார் ஒப் பலஸ்தீன்' என்ற விசேட விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் பலஸ்தீனத்…

  14. தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி பெங்களூரிலிருந்து செய்மதி தொலைபேசிகள் மற்றும் அவற்றிற்கு தேவையான 200 உபகரணங்களை கொண்டு சென்ற கொழும்பைச்சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் மற்றொரு பயணப்பையிலிருந்து 50 கிலோகிராம் பயிரிடும் விதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இந்த பயிர் விதைகள் கமத்தொழில் திணைக்களத்தின்; அனுமதியின்றி கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 43 வயதான இந்த நபர்; தொடர்ந்து; இந்தியாவிற்கு சென்றுவருபவர் என்றும் இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு சென்ற விமானத்திலேயே அவர் இந்த பொருட்களை…

  15. 23வருட அகதிகள்: வலி.வடக்கு மீள்குடியமர்வை மகிந்தவே முடிவு எடுப்பார்: மீள்குடியேற்ற அமைச்சர்:- 04 ஜனவரி 2014 23 வருடங்களின் முன்னராக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே முடிவு எடுப்பார் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் மற்றும் பிரதேச செயலர்களை மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் சந்தித்துக் கலந்துரையாடினார். வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து தனியார் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும்இ நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் மீளக்குடியமர்வு தொடர்பில் அமைச்சரிடம் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டினர். …

  16. இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் சிலர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி இவ்வாறு செயற்படுவோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் பட்சத்தில் அது மனித உரிமை மீறல் என அவர்கள் கூறுவதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது, தற்போதைய சூழலில் மேற்குலக நாடுகளுக்கு, குறிப்பாக கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளது. ஆனால் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் இலங்கைக்கு வருகை தருவதற்கு நாம் பூரண சுதந…

  17. -சுமித்தி தங்கராசா யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதிமுதல் கடமையாற்றிவந்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இம்மாதம் முதலாம் திகதிமுதல் இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவருக்கு பலாலி இராணுவத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று (04) யாழ். வசாவிளானிலுள்ள இராணுவ அலுவலர்கள் கழகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த பலர் தமது நினைவுப் பரிசில்களையும், வாழ்த்து மடல்களையும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு வழங்கினர். இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், வடக்கின் இராணுவ ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராட்சி, வடமாகாண ஆளுநரின் செயலாளர்…

  18. இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வை நேரில் சென்று ரவிகரன் தடுத்து நிறுத்தினார். மேலும் குறித்த பகுதியில் மண் அகழ்வது சட்டத்திற்கு புறம்பானது என்பதை ராணுவத்தினருக்கு தெரிவித்து அப்பகுதியில் தொடர்ந்தும் நில அகழ்வு இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தினார். இராணுவத்தினரின் தகவல்களில் இருந்து , இவ் நில அகழ்வு தொடபில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலர் திரேஸ்குமார் இச்சம்பவம் பற்றி முன்கூட்டியே அறிந்திருக்கிறார் என்றும் அறியமுடிகிறது.இது குறித்து பொலிசாருக்கு அறிவித்தபோது அவர்கள் அங்கு வந்து பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். காலை பத்து மணியள…

  19. பெயர் சிகரெட். தமிழ்பெயர் வெண்குழல் வத்தி. வயது கி.பி 9ம் நூற்றாண்டு. தொழில் போதை தருவது. உப தொழில் எமனின் ஏவலன். நண்பர்கள் பீடி, கஞ்சா, எதிரிகள் புகை பிடிக்காத எல்லோரும். பிடித்த வேலை வாழ்நாளைக் குறைப்பது. பிடிக்காத வேலை புகைத்து முடியுமுன் அணைப்பது. பிடித்த உணவு இரத்தம். பிடிக்காத உணவு நுரையீரல். விரும்புவது மனிதஉயிர். விரும்பாதது சுகாதாரத் துறை. சமீபத்திய எரிச்சல் பொது இடங்களில் தடை. நீண்டகால எரிச்சல் சிகரெட் பிடிப்பது உடல்நலக்கேடு விளம்பரம். சாதனை ஆண்டுக்கு ஒருகோடி உயிர்களுக்கு விடுதலை. நீண்ட சாதனை காசநோய், புற்றுநோய். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவத…

    • 0 replies
    • 1.3k views
  20. கடும் தொனியிலான உத்தரவுகளை செவிமடுத்து திரும்பினார் விக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் வடமாகாண முதலமைச்சர் நடத்திய கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்திற்கு நெருக்கமான ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார். மாகாணங்களுக்கு அதிகாரங்களை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குரியது என்றும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றிப் பேச அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி விக்னேஸ்வரனிடம் கடுமையாக வலியுறுத்திக் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி அவருடைய பதவிக் காலம் முடிவடையும் வரை ஆளுநர் சந…

  21. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதனை ஆட்சேபித்தும் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. குறித்த நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் எதிர்ப்பதற்கான காரணம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதேயாகும். இனரீதியான காரணம் தவிர்ந்த வேறு எந்தவொரு நியாயமான க…

  22. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இந்த மாத நடுப்பகுதியில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சம்பந்தன் இதன்போது ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். சம்பந்தன் தற்போது சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பாக கட்சி பேச்சுவார்த்தை நடத்தும். அண்மையில் சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் ஜனாதிபதி கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து பேசிய போது, தேசிய இனப்பிரச்சின…

  23. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார்,திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்று சனிக்கிழமையும் மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் சிறுவர்களின் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியிலிருந்து கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இன்று சனிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ன முன்னிலையில் இன்றும் காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரைக்கும் மனித புதைகுழி தோண்டப்பட்ட போது 3மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதே வேளை கு…

  24. யாழ்ப்பாணத்தை விட்டகல்கிறார் ஹத்துருசிங்க:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கடந்த காலங்களில் இராணுவம் தமக்கு எதிரானவர்களுடன் தான் போரிட்டனர். ஆனால் தமிழ் மக்கள் இராணுவம் தமக்கெதிராக போராடியதாகவே நினைக்கின்றனர். என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழில் கடந்த 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் யாழ் கட்டளைத்தளபதியாக கடமையாற்றிவந்த ஹத்துருசிங்க தற்போது கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு மாற்றமாகி எதிர்வரும் 6ம் திகதி செல்கின்றார். அதனை முன்னிட்டு வசாவிளானில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்விலையே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர். தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் எனக்கு தெரியும் அதற்கு தீர்வு தேவை எ…

  25. வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு – செலவுத்திட்டத்தின் கொடுப்பனவு தொடர்பான பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கமாட்டோம் என நகர சபை ஐந்து அதிருப்தி உறுப்பினர்களில் ஒருவரான கோ.கருணானந்தராசா தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் முதலாவது வரவு –செலவுத் திட்டம் டிசெம்பர் 17 ஆம் திகதி தவிசாளர் என்.அனந்தராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட போது, 9 சபை உறுப்பினர்களில் 5 பேர் எதிராகவும் 2 பேர் ஆதராவாகவும் வாக்களித்தமையினால் வரவு – செலவுத்திட்டம் 3 வாக்குகளால் தோல்வியடைந்தது. தொடர்ந்து இரண்டாவது தடவையாக வரவு – செலவுத்திட்டம் கடந்த டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி சபையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, முதலாவது வரவு – செலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களித்த 5 உறுப்பினர்களும் சபை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.