ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒத்துழைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக தமிழர் பேரவை என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வடமாகாண சபை சிறந்த தளமாக காணப்படுகிறது. இந்த மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வு குறித்த தெளிவான பதிலை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக, அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_conte…
-
- 0 replies
- 445 views
-
-
திருகோணமலையில் வைத்து இலங்கை பாதுகாப்பு காடையர்களால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகின்றன. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நினைவஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த படுகொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும், பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/28863/85/5/d,article_full.aspx
-
- 4 replies
- 394 views
-
-
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளரும், உறுப்பினருமான ச.குலநாயகம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் முறைப்பாடு ஒன்றைச்செய்துள்ளார்.அவரது முறைப்பாட்டின் படி, கடந்த 27.12.2013 அன்று வல்வெட்டித்துறையின் நகர சபையின் அமர்வு நடைபெற்ற போது,தான் உட்பட ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கு சபைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கும், பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்தமையால்,தமது பிரசன்னமின்றி 2014 ஆம் ஆண்டு;ககான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்கள் சமுகமளித்திருந்த நிலையில் தலைவர் ந.அனந்தராஜ் அவர்களினால் ச…
-
- 0 replies
- 365 views
-
-
காணாமல் போனோர் தொடர்பினில் நேரடி சர்வதேச விசாரணைகளே தேவையன்றி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழுக்களல்ல என தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் கூட்டமைப்பு பெண் அங்கத்தவரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் காணாமல் போனோர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழு தனது பணிகளை மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய அமைப்புக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது.இவை வெறும் கண்துடைப்புக்களே …
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பொறிமுறை சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இங்கு இடம்பெற்றுவருகின்ற இன அழிப்பிற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையே அவசியமெனவும் கோரியுள்ளது. இன அழிப்பிற்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்மான பொறிமுறை பொருத்தப்பாடற்றதென நிராகரித்துள்ள மேற்படி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதனை இங்குள்ள தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமாயின், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஊடகவியியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெள…
-
- 0 replies
- 289 views
-
-
ஆரையம்பதியில் தாக்குதல் நடந்த இடத்தில் காவலர்கள் இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள மசூதியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களின் தாக்குதலுக்குள்ளானது. புஜபிட்டியா பிரதேசத்திலுள்ள முல்லேகம மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்ததாக கூறப்படும் குழுவொன்றினால் மசூதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகளும் உள்ளுர் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் இன ஐக்கியத்துடன் வாழும் இந்த பகுதியில் இடம் பெற்ற இந்த சம்பவம் உள்ளுர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு ப…
-
- 4 replies
- 610 views
-
-
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நேரடியாகப் பங்கேற்ற லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக், இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார். அப்போது இந்திய இராணுவத்தின் 53வது காலாற்படைப்பிரிவின் கீழ் செயற்பட்ட கூர்க்கா படைப்பிரிவு ஒன்றின் கொம்பனி கட்டளை அதிகாரியாக லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் போரில் பங்கெடுத்திருந்தார். புலனாய்வு உள்ளிட்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் நிபுணரான இவர், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், ஆயுதப்போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைக…
-
- 0 replies
- 328 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டனர். http://www.onli…
-
- 0 replies
- 298 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிடுவேன் என வழங்கிய செவ்வியில் சனல் 4இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். மற்றும் இலங்கையின் கடந்த கால நிகழ் கால இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்துவதற்கு தயாரான நிலையில் இல்லை விசாரணை நடைபெற்றால் அங்கு நடந்த போர்குற்றம் தெரியவந்து விடும் என அஞ்சுகின்றது இலங்கை அரசாங்கம் எனவும் அத்தோடு பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100402&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 809 views
-
-
அண்மையில் வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேடுகளில்;; சிறந்த பெறுபேடுகளை பெற்று வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றதையிட்டு தான் பெறுமையடைவதாகவும் இப்பரீட்சையில் வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்து பெறுமைசேர்த்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்க மாகாணத்திலிருந்து 16,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில், 63.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்று, இலங்கையின் 9 மாகாணங்களிலும் வடக்கு மாகாணத்தை முதலிடத்துக்கு உயர்த்தியுள்ளனர் என்பi நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்' எனவும் அவ…
-
- 2 replies
- 696 views
-
-
கீரிமலை பிரதேசத்தில் J/ 226 கிராமசேவையாளர் பிரிவில் கிருஷ்ணன் கோவிலடியில் உள்ள மக்கள் காணியிலேயே குறித்த தங்குமிடம் கட்டப்பட்டு வருகின்றது. வடக்குக்கு ஜனாதிபதி செல்லும் போது தங்கி செல்வதற்காகவே குறித்த இந்த தங்குமிடம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நவீன வசதிகளுடன் கட்டப்படும் தங்குமிடத்தில் நடுவினில் அதிநவீன வசதிகளுடனான பெரிய வீடு ஒன்றும் அதனை சுற்றி நவீன வசதிகளுடனான 7 சிறிய வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தங்குமிடத்தை சுற்றி அதிவேக நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தப்படும் தரம் உயர்ந்த காப்பற் மூலம் வீதிகள் போடப்பட்டுள்ளன. இந்த தங்குமிடத்தை சுற்றி உள்ள காணிகளில் இருந்து கல் அகழ்ந்ததினால் பாரிய குழிகள் காணப்படுகின்றன. அக் குழிகளுக்குள் கடல் நீரை உட்புகு…
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. அதற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01.01.14) மாலை நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை அவசியம். யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அரசியல் தீர்வு எட்டப்படவில்லை. ஆயுத ரீதியான போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு இங்க…
-
- 0 replies
- 568 views
-
-
பங்குத் தந்தை ஜெபமாலையுடன் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள் கனடா அரசு மற்றும் இதர சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள். மன்னார்ப் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை ராதிகா சந்தித்து பேசவும் தாங்கள் ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக பிபிசி தமிழோசையிடம் கூறினார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத் தந்தை இமானுவேல் ஜெபமாலை. இலங்கையில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் எந்தத் தீர்வும் கிட்டவில்லை, உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாக்க முடியாது என…
-
- 3 replies
- 790 views
-
-
எந்தவொரு சக்தியும் நாட்டைப் பிரிப்பதற்கோ, பிரிவினைக்கு வழிவகுக்கும் வகையில் எவரிடமும் அதிகாரங்களைக் கையளிக்கவோ தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில், 575 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட, ஏழு மாடிகளைக் கொண்ட தென் மாகாணசபையின் நிர்வாக கட்டத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் நலன்களுக்காக சிறந்த சேவையாற்றுவதற்கு, மாகாணசபைகளும், மத்திய அரசாங்கமும் இணைந்து பணியாற்ற வேண்டும். கடுமையான நெருக்கடிகள், தியாகங்களின் மூலம் சுதந்திரத்தை அடைந்துள்ள நாம் அனைவரும், ஒரே நாடு என்ற வகையில் செயற்பட வேண்டும். மாகாணசபை முறைமைகள் குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அரசின…
-
- 3 replies
- 644 views
-
-
கனேடிய அரசினது உயர்மட்ட அதிகாரிகளது தலையீட்டையடுத்து யாழைில் நடைபெற்ற ராதிகா சிற்சபேசன் மீதான நெருக்குதல்கள் விசாரணைகள் குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது. முன்னதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தினில் வைத்து அவரை கைது செய்யும் முயற்சிகள் நடந்திருந்த நிலையில் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. அதை தொடர்ந்து யாழ்.நகரில் அவர் தங்கியுள்ள விடுதியில் வைத்து அவர் இரவிரவாக விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நேற்றிரவு நீண்டநேரம் அங்கு தங்கியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துஐவி துருவி ராதிகாவிடம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் உடனடியாகவே நேரடியாக கனேடிய அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு ராதிகா கொண்டு சென்றிர…
-
- 0 replies
- 873 views
-
-
இலங்கை முஸ்லிம் சமூகம் ஆயுத போராட்டங்களில் பங்கேற்றதில்லை என முஸ்லிம் பேரவை அறிவித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இலங்கை வாழ் முஸ்லிம்கள் கடும்போக்காளர்களுடன் தொடர்புகளைப் பேணியதில்லை என தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளின் போதும் தூண்டுதல்களின் போதும் முஸ்லிம்கள் மௌனம் காத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து துரித கதியில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டுமென முஸ்லிம் பேரவை கோரியுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத…
-
- 4 replies
- 874 views
-
-
கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந்த மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் …
-
- 6 replies
- 703 views
-
-
காணாமற்போனோர் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க இந்தமாத நடுப்பகுதியில் விசேட இணையத்தளம் ஒன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது என காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தார். அத்தோடு, இம்மாத இறுதிக்குள் வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பயணத்தை மேற்கொண்டு தகவல் திரட்டப்படவுள்ளதாகவும், காணாமற்போனோரது உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துக் கொண்டு வருகின்றன. முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றுடன் (நேற்றுடன்) முடிவடைந்த…
-
- 1 reply
- 341 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது. சிங்கள நாளிதழான திவயின இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். இதற்குத் தேவையான போதிய பலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கில் இனவாதத்தை தூண்டுவது மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. வடக்கில் பிரச்சினைகள…
-
- 1 reply
- 352 views
-
-
இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்போ, அன்றி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமோ கிடையாதென தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த தனது வருடாந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள மேற்படி சங்கம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர மீறல்களுக்குப் பேர் பெற்றுள்ளதுடன், ஊடக சுதந்திரம் பேணப்பட்டுவருவது குறித்து 2013ஆம் ஆண்டின் தனது சுட்டியில் அடங்கும் 179 நாடுகளுள் 162ஆம் இடத்தையும் இலங்கை பெற்றுள்ளதனால் "எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு அதனை "தீவிர கண்காணிப்பின் கீழ்" உள்ள நாடொன்றாக வகைப்படுத்தியிருந்ததை நினைவுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கான அச்ச…
-
- 1 reply
- 428 views
-
-
இந்த நொடியில் என் மனதில் (31/12/13) >>>> இனிய வாழ்த்துகளுக்கு அப்புறம், மன்னிக்க முடியா இரண்டு சமூக குற்றங்களும், புதிய 2014 ம் ஆண்டிற்கான என் இரண்டு எதிர்பார்ப்புகளும்.... ஒன்று, ஜனநாயக வரம்பில் நின்று ஒரு சிறு எதிர்ப்பைகூட காட்டாது, "முழுமையான சரணாகதி வணக்க அரசியல்" செய்து, அதையும் "இணக்க அரசியல்" என நியாயப்படுத்தி, தம் சொந்த வயிற்று பிழைப்புக்காக ஆளுவோரின் இனவாத இழுப்புக்கெல்லாம் இடம் கொடுத்து, இன்னமும் எஞ்சி மிஞ்சி இருக்கும் தமிழ் சமூக மிச்ச சொச்சங்களையும் விலை கூவி பேசி விற்பது; இரண்டு, புலம் பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருந்தபடி வீர வசனம் பேசி, தாயகத்தின் உள்ளூர் தரைமட்ட யதார்த்தம் புரியாமல், அங்கிருந்தபடி தாயக மக்களையும், அரசியல் தலைமைகளையும…
-
- 2 replies
- 792 views
-
-
2014 ஆம் ஆண்டில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச விசாரணை மூலம் அரச படைகளின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமற்போனோரின் உறவுகளுக்கும், சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் நீதி கிடைக்கும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் நேற்று மாலை உதயனிடம் தெரிவித்தவை வருமாறு: முப்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த தமிழரின் ஆயுதப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலுடன் மெளனித்தது. இதன் பின்னர் ஈழத்தமிழர்கள் அநாதைகள் என…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது. என வடமாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.எனினும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக அமையாது என கருதப்படும் மாகாண சபை முறைமை ஒன்று வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கட்டமைப்பையும் முறைமையையும் எங்களுடைய அரசியல் தீர்வு நோக்கிய நகர்வின் ஜனநாயக தளமாக கொண்டு செயல்படும் எண்ணப்பாடு வலுப்பெற்று வருகி…
-
- 0 replies
- 245 views
-
-
சிறீலங்காவில் ஆழமாகக் தனது கால்களைப் பதித்துவரும் சீனாவின் இன்னொரு பாய்ச்சலாக, தெற்காசியாவிலேயே முதல்முறையாக சீன நிறுவனம் ஒன்று சிறிலங்காவில் புத்தக விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. கன்மிங் சின்ஷி குழுமம் என்ற நிறுவனமே கொழும்பில் சுமார் 450 சதுர மீற்றர் பரப்பளவில் சீன புத்தக விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய தனியார் சில்லறை புத்தக விற்பனை நிறுவனமான இது, கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் தமது விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இது இந்த நிறுவனம் சீனாவுக்கு வெளியே திறந்துள்ள ஐந்தாவது கிளையாகும். ஏற்கனவே இந்த நிறுவனம் நொம் பென், வியன்ரியன், கோலாலம்பூர், மியான்மரின் மண்டலே ஆகிய இடங்களில் தமது கிளைகளை அமைத்துள்ளது. திறப்பு விழா மற்றும் முதல் பத்து நாட்கள…
-
- 5 replies
- 602 views
-
-
இலங்கையின் வடக்கிற்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை படையினரும் புலனாய்வாரள்;களும் தேடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மதிய வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரனையை நடத்தி உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் பொலிசார்கள் உள்ளிட்டவர்கள் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் றணவீர என்ற பொலிஸ் அதிகாரி ராதிகாவினுடைய இலங்கைப் பயணம் குறித்த கேள்விகளை சிறீதரனிடம் கேட்டதாகவும் அது குறித்து எதுவும் தமக்கு தமக…
-
- 7 replies
- 787 views
-