ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று ஐ.நா மனிதஉரிமைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா மனிதஉரமை ஆணையத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் கருத்து வெளியிடுகையில், “நவநீதம்பிள்ளை விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து என்ன என்பதை, அவர் தனது அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளார். வழக்கமாக மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லும்போது, செய்வது போன்றே, சிறிலங்காவிலும் கொல்லப்பட்ட…
-
- 0 replies
- 428 views
-
-
மஹரகம, தெவ்ரம்வேர பகுதியில் அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டொன்றை வைத்திருந்தார் என்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவருக்கு 10 வருடகால கடூழியசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் 'இம்ரான் பானியன்' குழுவைச்சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன கடூழிய சிறைத்தண்டனையை நேற்று புதன்கிழமை விதித்துள்ளார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா தண்டமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஊர்காவற்றுறையைச்சேர்ந்த மரியதாஸ் ராஜ் அநேந்திரன் (வயது 34 ) என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற…
-
- 0 replies
- 574 views
-
-
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த இரதோற்சவம் இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து எம்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்காரக் கந்தனென வர்ணிக்கப்படும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தத் தேர்த் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத்,என். நவரத்தினராசா) http://tamil.dailymirror.lk/--main/81289-2013-09-04-05-51-23.html
-
- 15 replies
- 1.3k views
-
-
தனது தலையை மட்டும் மணலில் புதைத்துக்கொண்ட தீக்கோழி நினைக்குமாம்... அப்பாடா, இனித் தன்னை யாருமே கண்டுகொள்ள முடியாதென! அவ்வாறான தீக்கோழி நினைவுக் கருத்தியல் போல, நவிபிள்ளையின் வடக்குப் பயணத்தில் சிங்களத்தின் படைத்துறை நடந்துகொண்டாலும், இவ்வாறான தகிடுதத்தங்களையெல்லாம் அவதானித்தபடியே நவிபிள்ளை தனது வடக்கு நிகழ்ச்சிநிரலை முடித்துக்கொண்டு சென்றும் விட்டார். நவிபிள்ளை வடக்கிலிருந்து அகன்றதுமே பழைய குருடி கதவைத் திறவடி பாணியில் சிங்களப் படைத்துறை நடந்து கொண்டதன் மூலமாக, முள்ளிவாய்க்காலில் வைத்து நவிபிள்ளையிடம் மக்கள் கூறிய ஒரு உண்மையும் ஆதாரப்படுத்தப்பட்டுவிட்டது. நவிபிள்ளையின் வடக்கு பயணத்தின்போது அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் ஒரு உண்மை நிலைமை அவருக்குக் கூறியிருந்தனர். அதா…
-
- 1 reply
- 516 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிளவான பிரிவினைவாத கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என என தேசிய சுதந்திர முன்ணனியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மொஹமட் முஸாமில் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத அமைப்பு அல்ல. இதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பயங்கரவாதியல்ல. அவர் தமிழ் மக்களின் வீரன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்ட அதிகாரத்தை நிலைநிறுத்த செயற்பட்ட சி.வி.…
-
- 7 replies
- 754 views
-
-
சிரிய இரசாயன ஆயுதப் பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலில் 1429 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற தொழில்சார் முறையிலான விசாரணைகள் நடத்தப்பட்டு இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதனை கண்டறிய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இரசாயன ஆயுதப் பயன்பாடு தடை தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
-
- 4 replies
- 379 views
-
-
நோர்வேயின் தேசிய தின விழா கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கடந்த வாரம் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இதில் உள்நாட்டு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குதூகலித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்புப் பிரதிநிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இவருடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராசா ஆகியோரும் காணப்பட்டனர். அங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரே…
-
- 12 replies
- 890 views
-
-
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது என பரந்தன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் பரந்தன் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்தன் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் தலைமையில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00மணிக்கு நிறைவு பெற்றது. இப்பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்…
-
- 4 replies
- 464 views
-
-
சீனாவுடனான இலங்கையின் உறவு என்பது மற்ற நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். தலைநகர் கொழும்பில். இலங்கை ராணுவம் நடத்திய மூன்றாவது பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்த தவறான புரிதல்கள் காரணமாக மற்ற நாடுகளிடம் இது ஒரு பிரச்சினையாக சில சமயங்களில் மாறிவிட்டது என்று கூறினார். "இலங்கையில் சீனாவின் ஈடுபாடு என்பது ராஜிய ரீதியிலானதும், பொருளாதார ரீதியிலானதுமாகும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். சீனா இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறது. அது இலங்க…
-
- 3 replies
- 369 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை பயன்படுத்தி இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் அடிக்கடி பிரித்தானியாவிடம் கேள்வி எழுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதற்கு தாமும், பிரதமரும் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்தில் அமர்வுக…
-
- 2 replies
- 522 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால், இலங்கை அரசு மற்றும் இலங்கை அரச படையினர் மீது சுமத்தப்பட்ட, முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்குறித்த நிராகரித்துள்ளதான தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; நவநீதம்பிள்ளையால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் இலங்கையில் நடந்த சம்பவங்கள் அல்ல. அவை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அறிக்கைகளில் காணப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் பெற்றுள்ள அறிக்கைகளை செப்டம்பர் மாதம் நடைபெறவ…
-
- 6 replies
- 697 views
-
-
சிறீலங்காவின் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் (The State Intelligence Service (SIS) officers at the BIA) அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும் எனினும் அவர்கள் தங்கும் முகவரி வேறு முகவரியாக அமைவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகை…
-
- 0 replies
- 385 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெட்கத்திற்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும். பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் அதிகாரத்தை மட்டும் கோருகிற உப்புச்சப்பற்ற தேர்தல் விஞ்ஞாபனமாகும். ஒவ்வொரு கடமைகளையும், பணிகளையும் வேறு யாரிடமோ பொறுப்பு வைக்கும் சுயநலப்போக்குடையதாக காணப்படுகிறது' என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரத்தை மக்களிடம் கேட்கின்ற அளவுக்கு இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களின் துயரங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலையும் செய்யவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்…
-
- 3 replies
- 578 views
-
-
இலங்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பான் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார். வருடாந்த அறிக்கையில் இலங்கை குறித்து பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். அனர்த்த நிலைமைகளின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆற்றலை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்ட விதம் தொடர்பில், அந்த அமைப்பு மீளாய்வு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மீளாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் செயற்படத் தவறியுள்ளது என மீளாய்வு அறிக்கையில் குற்றம் ச…
-
- 2 replies
- 873 views
-
-
கொழும்பில் இலங்கை இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். போருக்குப் பின் இலங்கை- சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து கடும் போக்கு தமிழ் தேசிய எதிர்ப்பாளரான ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். புலிகளை தோற்கடித்தமைக்கு இலங்கைக்கு இந்தியா நன்றி தெரிவிப்பு – சுப்ரமணியன் சுவாமி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை யுத்ததின் மூலம் இலங்கை அரசாங்க…
-
- 5 replies
- 889 views
-
-
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தவறானது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சார்பில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தள்ளார். தனது தாயை விடவும் நவனீதம்பிள்ளை இரண்டு வயது குறைவானவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தாயாருக்கு எவரேனும் திருமண முன்மொழிவொன்றை செய்தால் எவ்வாறான உணர்வு ஏற்படும் என அவர் கே…
-
- 1 reply
- 2.6k views
-
-
கிழக்கின் அபிவிருத்திக்கு புத்துயிரூட்டும் ஒலுவில் துறை முகத்தை இன்றுமுதல் பொது மக்கள் பார்வையிடலாம். ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் நேற்ற முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 43 மில்லியன் யூரோ செலவில் இத்துறைமுகம் நிர்மாணிக் கப்பட்டுள்ளது. இங்கு மீனவ துறைமுகமும் அமைந்துள்ள து. இத்துறைமுகத்திள் ஊடாக கப்ப்ல்களுக்க தேவையான வசதிகளும் வழங்கப்படும். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரிய வேலைத் திட்டங்களுள் ஒலுவில் துறைமுகமும் ஒன்றாகும். இதனை பொது மக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பார்வையிடலாம். http://www.ilankainet.com/2013/09/blog-post_3040.html
-
- 0 replies
- 739 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகத் தெரிவித்து குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மிக நீண்ட காலமாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவுஸ்திரேலிய பாதுகாப்பு முகவர் நிறுவனமான ஆசியோவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த புகலிடக் கோரிக்கையாளர் கடந்த நான்கு ஆண்டுகளாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆசியோ ஏற்கனவே முன்வைத்திருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம், ரஞ்ச…
-
- 0 replies
- 437 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாகவோ அல்லது இலங்கைத் துறைமுகத்தினூடாகவோ அன்றி வேறு எந்த வழியாகவும் போதைவஸ்துகள் நாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது. எனவே இதன் பின்னணியில் இருக்கின்ற சூத்திரதாரியை அரசாங்கம் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். போதைவஸ்துக்களால் இளைஞர் சமுதாயத்தை விற்று சீரழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி விட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. எரான் விக்கிரமரட்ண சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமர்வின்போது இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை…
-
- 0 replies
- 244 views
-
-
ஆர்.யசி நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும் சம நீதி, சட்டங்களை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு சட்டமும், நீதியும் செயற்படாது என்ற வகையிலான கருத்தினையே பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தீவிரவா…
-
- 0 replies
- 329 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பிரித்தானிய வெளிவகார அமைச்சர் மேற்கொண்டார். அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக்கும் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வினவப்பட்ட கேள்வி பதிலளிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81329-2013-09-04-10-11-23.html
-
- 0 replies
- 307 views
-
-
சர்வாதிகாரிகள் எவரும் ஜனநாயக முறையிலான தேர்தல்களை நடத்துவதில்லை மாறாக தமது விருப்பங்களுக்கேற்பவே செயலாற்றுவர். ஆனால் எமது அரசாங்கம் வடக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மகாணசபை தேர்தலை நடத்துகின்றது. சர்வதிகார ஆட்சி நடக்கின்றது என எவரும் எம் மீது குற்றம் சுமத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 62 ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான பாதையிலோ, எதேச்சாதிக்காரப் பாதையி…
-
- 4 replies
- 772 views
-
-
கொழும்பு மகசின் சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் சகஜமாகப் பேசிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தெரிவிக்கப்பட்ட தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த தமிழ் அரசியல் கைது சாதாரணமாக இறக்க சந்தர்ப்பம் இல்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என குறித்த கைதியின் மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவரது மரணம் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தள்ளார். முல்லைத்தீவு கருநாற்றுக்கேணி பகுதியைச் சேர்ந்த 37 வயதான மாகுருவே பிரான்சிஸ் நெல்சன் என்ற கைதியே சிறையில் மரணமடைந்தவராவார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜின் நெருங்கிய உறவினராவார். இவர் 2007 ஆம் ஆண்டு ச…
-
- 0 replies
- 421 views
-
-
2009 ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் 70,000 தமிழ் மக்களை கொன்றுக் குவித்தமையினை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்ற நிலையில், ஏன் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டுமென கெலம் மெக்ரே கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் என்னுடைய வாழ்நாளிலே மிகவும் கொடுமையான புகைப்படங்களை பார்த்தேன். இவ்வனைத்து புகைப்படங்களும் இலங்கை இறுதிப்போரின் போது, இறுதி 138 நாட்களிற்குள்ளும் எடுக்கப்பட்டவை. இப்போர் நான்கு ஆண்டுகளிற்கு முன்னரே நிறைவுப்பெற்றுவிட்டதாயினும், இப்போரே எனது “நோ பயர் சோன் மற்றும் இலங்கையின் கொலைக்களங்கள்” ஆகிய ஆவணப்படங்களின் பிராதன கருப்பொருளாக இருந்தது. 40,000 மக்களே கொல்லப்பட்டனர் என இலங்கை அரசாங்கம் அறிவித்தது. காடுகள் வயல்வெளிகள் எங்கிலுமே மன…
-
- 0 replies
- 470 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவர் ஒரு பயங்கரவாதியல்ல என்று இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் கணவர் கோபி பிள்ளை ஒரு பயங்கரவாதியாவார். எனவேதான் நவநீதம்பிள்ளையும் அவரின் பாதையை பின்பற்றி விடுதலைப்புலிகளுக்கு உதவுகிறார் என்று இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியிருந்தார். இதன் அடிப்படையிலேயே அவர் திருகோணமலைக்கான விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியை சந்தித்ததாகவும் ரணவக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இலங்கையின் முன்னாள் ராஜதந்திரியும் ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க, கோபி பிள்ளை தென்னாபிரிக்காவில் வெள்ளை இன நிறவெறியா…
-
- 1 reply
- 501 views
-