ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இதுவரை காலமும் தென்பகுதி கடல்களில் சிங்கள அரசின் ஆதரவுடன் மீன்பிடியில் ஈடுபட்ட சீன மீன்பிடி கப்பல்கள்இப்போது வடபகுதி கடலினையும் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். சீன மீன்பிடிக் கப்பல்கள் சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வடமராட்சியில் இந்த வாரத்தில் மேற்படி சீன மீன்பிடிக் கப்பல்கள் சுதந்திரமாக மீன்பிடித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் வடமராட்சி மக்களின் மீன் வழங்கள் அழிக்கப்படுவதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்படுகின்றன. அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில், அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அது பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்றும் வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதி க…
-
- 5 replies
- 693 views
-
-
கிளிநொச்சியில் சாவு வீடு ஒன்றில் நாம் வாங்கிக் கொடுத்த சவப்பெட்டி என்று ஈபிடிபியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது மைத்துனர் கடந்த சில நாட்களின் முன்பு காலமானார். இச்செய்தியை அறிந்த ஈ.பிடி.பியைச் சேர்ந்தவர்கள் சவப்பெட்டி வாங்கிக் கொடுத்துள்ளனர். இறந்தவர் தமிழ்த் தசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு மாமன் என்ற பொழுதும் அவர் தமது கட்சி ஆதரவாளர் என்றும் அதனால் தாம் அவருக்கு சவப்பெட்டி வாங்கிக் கொடுத்தாகவும் தெரிவித்தனர். சாவு வீட்டுக்கு வந்த ஈபிடிபியினர் காலமாகியவரின் உடல் வைக்கப்பட்டிப்பது தாம் வாங்கிக் கொடுத்த சவப்பெட்டியில்தான் …
-
- 1 reply
- 280 views
-
-
எமது மொழி, காலாசாரம், விழுமியங்கள மட்டுமல்ல எமது இருப்பை பறை சாற்றும் தொன்மைச்சான்றுகளாகவும், நாம் ஆண்ட இனம் என்பதை அறிவுறுத்தும் தொன்மை சின்னங்களும் பாதுகாக்கப்படல் வேண்டும். எமது கண்முன்னாலேயே நீதிக்குப்புறம்பாக அது அபகரிக்கப்படுவதை நாம் பார்த்திருந்தோமானால் அதற்கு சரியான பெயர்தான் வரலாற்றுத்தவறு
-
- 10 replies
- 1.1k views
-
-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலய திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று நேற்று தீர்த்தத்துடன் நிறைவுக்குவந்தது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் திருவிழா பிரதமகுரு சிவஸ்ரீ பாலகுமார் குருக்கள் கிரியைகளை நடாத்திவைத்தார். ஆலய தலைவர் சு.சுரேஸ் செயலாளர் அ.செல்வராஜா வண்ணக்கர் வ.ஜெயந்தன் பொருளாளர் இ.லோகிதராஜா பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உள்ளிட்ட ஆலய நிருவாகிகள் மற்றும் பக்த கோடிகள் கலந்து சிறப்பித்தனர். பிதிர்க்கடன் செலுத்தும் பக்தர்கள் ல…
-
- 0 replies
- 399 views
-
-
தற்பாதுகாப்பு அடிப்படையினலேயே படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வெலிவேரியவில் பாதுகாப்புப் படையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். வெலிவேரியவில் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார். இந்த உரைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். படையினரின் கோரிக்கைகயை ஏற்றுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறிச் சென்ற போதிலும், சிலர் அந்த இடத்திலேயே தொடர்ந்தும் இருந்து தாக்குதல் நடத்தியதாகத் …
-
- 1 reply
- 421 views
-
-
வெலிவேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்த இராணுவத்தினரை அனுமதிக்ககூடாது என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. குடிநீருக்கு போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினர் கடந்த வியாழக்கிழமையன்று தாக்குதல் நடத்தியபோது அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதனையடுத்து உரிய விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவத்தினர் விசாரணை பிரிவு ஒன்றை அமைத்துள்ள நிலையில், இதனை கண்டித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பொலி ட்ரெஸ்கொட், தமது தவறுகள் தொடர்பில் இராணுவம் விசாரணை செய்வது என்பது முற்றிலும் தவறான விடயம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விசாரணைகள் பக்கசார்பற்ற வகையில் நடத்தப்படவேண்டும் என்று ட்ரெஸ்கொட் …
-
- 1 reply
- 610 views
-
-
எதிர்வரும் செப்ரெம்பர் 21இல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் திழரசுக்கட்சி சார்பாக வவுனியா நகரசபை உப தலைவர் எம்.எம்.ரதன் அவர்கள் நியமிக்கப்படுவதற்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, வவுனியா மாவட்ட புத்திஜீவிகள், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள், வவுனியா நகர எல்லைக்குட்பட்ட மக்கள் என ஒட்டுக்குழுக்கள் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இந் நிலையில் அதனையும் மீறி கூட்டமைப்பின் தன்னிச்சையான முடிவால் அவ் வேட்பாளர் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்கள் என்னும் பெயரில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது அத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
இராமாயண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் மாமாங்யேஸ்வரர் ஆலயம் தானாக தோன்றியதன் காரணமாக சுயம்பு ஆலயமாகவும் போற்றப்பட்டுவருகின்றது. இராவணேஸ்வரனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணன் அனுமானின் வாலில் கொழுத்திய தீயை அணைத்த இடமாகவும் ஆலயம் சிறப்பு பெற்றது. இராம பிரானின் தண்டாயுதத்தால் உருவான தீர்த்தக்கேணியே மாமாங்கர் ஆலய தீர்த்தக்கேணியென கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன. இத்தனை சிறப்புகளைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த த…
-
- 0 replies
- 595 views
-
-
ஆடி அமாவாசை தினமான இன்று கீரிமலைத் தீர்த்தக்கடலில் பிதிர்க்கடன் நிறைவேற்ற பெருமளவான பக்கதர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களும் இதனைப் பயன்படுத்தி தமது ஊருக்குச் சென்றதுடன் தீர்த்தக் கடலிலும் நீராடியுள்ளனர். கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் உள்ளது வலிகாமம் வடக்கு. தமது நிலத்தில் மீள்குடியேற்றுமாறு தொடர்ந்து கோரிவரும் இப்பிரதேச மக்கள் பல்வேறு இடங்களில் இன்னமும் அகதிகளாக வாழ்கின்றனர். இப்பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை நகுலேஸ்வர் ஆலயத்தின் தீர்த்தக் கேணியில் ஆண்டுதோறும் முன்னோர்களுக்காக தீர்த்தமாடி பிதிர்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை தினமான இன்ற…
-
- 0 replies
- 405 views
-
-
திருகோணமலை காட்டுப் பகுதியில் விறகு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஐவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோமரங்கடவெல, தாவுல்வெவ பிரதேசத்தில் இக்குழுவினர் விறகு வியாபாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்விடத்திலிருந்த சுமார் 31 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மரங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோமரங்கடவெல வன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/32109/64//d,fullart.aspx
-
- 1 reply
- 327 views
-
-
-கனகராசா சரவணன் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, கண்ணகிபுரத்திலுள்ள வயல் பிரதேசத்தில் நாரை பறவையொன்றை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கியொன்றையும் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களையும் கைப்பற்றிய கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கண்ணகிபுரம், ஆணைப்பாவெளி வயல் பிரதேசத்தில் கடற்படையினர் மறைந்திருந்தபோது நாரை பறவையை துப்பாக்கியினால் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். ச…
-
- 1 reply
- 315 views
-
-
புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய கேவலமான செயல் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்க அரசாங்கம் தயங்குகிறது. குறைந்த பட்சம் கண்டிப்பதாக அறிக்கையேனும் விடவில்லை. இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது என்று நீதியமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26411
-
- 11 replies
- 687 views
-
-
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். வவனியா பிரதேச செலயாளர் பிரிவில் அதீத ஓசையுடன் ஒலிக்க விடப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எனவே இவ்விடயம் தொடர்பில் ஒவ்வொரு மத வழிபாட்டு தலங்களும் தத்தமது ஆள்புல எல்லைக்குள் அதாவது உட்பிரகார எல்லைக்குள் ஒலிக்க விடுவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார். எனினும் அச் செயற்பாடு பின்பற்றப்படாத நிலை சில மதத் தலங்களில் காணப்படுகின்றன என…
-
- 2 replies
- 599 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேலும் சிங்கள ஜாதிக பெரமுன ஒரு அரசியல் கட்சி என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் ஆணையாளர் அந்தக் கட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று வழக்கு விசாரணையின் போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டினார்.இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வடமாகாண சபைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால், நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின்படி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அரச தரப்பில் வாதிடப்பட்டது. ஆகவே இந்த வழக்கை முன்னெடுத்…
-
- 0 replies
- 475 views
-
-
கற்பூரப்புல்வெளி இது வன்னி மக்களின் விடுதலை உணர்வோடு ஒன்றிக் கலந்து சங்கமித்துவிட்ட ஜீவபூமி. இது ஆயிரமாயிரம் தமிழ் வீரர்களின் குருதியால் சிவந்து கனிந்து போயுள்ள வரலாற்று மண். கிராமத் தலைவன் ஒருவரின் அனுசரணையுடன் முள்ளியவளை கமுகு மரங்களைத் தறித்து ஒல்லாந்தர் கொள்ளையிட முயன்றபோது கிளர்ந்தெழுந்த அந்த மண்ணின் மைந்தர்கள் கற்பூரப் புல்வெளியில் தான் எதிரிகளை முகம் கொண்டனர். துப்பாக்கியுடன் குமிறி வந்த டச்சுப் படைகளை வாளாலும் வேலாலும் எதிர்த்துப் போரிட்டு விரட்டியடித்து வீர வரலாறு படைத்தனர். முல்லைத்தீவுக் கோட்டையிலிருந்து முன்னேறி வன்னியை விழுங்க வந்த ஒல்லாந்தரை மாவீரன் பண்டாரவன்னியன் கற்பூரப் புல்வெளியில் வைத்தே, தோற்கடித்து விரட்டினான் அதுமட்டுமன்றி முல்லைக் கோட்டையையும் கைப்…
-
- 0 replies
- 430 views
-
-
விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து, தெற்கில் பல வருடங்களாக மேற்கொண்டு வந்த 13 கொலைகள் மற்றும் ஆயுதங்களை காட்டி மேற்கொண்ட 11 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு ஒன்றை சேர்ந்த 10 உறுப்பினர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வெளிநாட்டுக்கு சென்று, இந்தியா ஊடாக இலங்கை திரும்பிய தென்பகுதியை சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவர் ஒருவரை கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கைதுப்பாக்கி, 08 ரிவோல்வர்கள் என்பவற்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கொஸ்கொட, அம்பலாங்கொட, ஊரகஹா, ஹிக்கடுவ, பிட்டிகல, அ…
-
- 1 reply
- 285 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். 'இத்திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியமான முறையில் நிதி உதவி செய்துள்ளார் என்று வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை' என்று நடிகர் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். ' 'வியாகொம் 18 மோஷன் பிக்ஷர்ஸ்' நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த வதந்தியால் இந்நிறுவனம் கவலையடையும். இது தவிர, இரகசியமான முறையில் எவரும் என்னுடைய திரைப்படத்துக்கு முதலீடு செய்யவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1990களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இரகசிய நடிவடிக்கை தொடர்பான…
-
- 1 reply
- 403 views
-
-
வடமாகாண சபைதேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு சிறீலங்கா படையின் புலனாய் வாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுப்பதாக செல்வம் அடைக்கலநாதன் முறையிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை இராணுவத்தினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தி வருவதாக பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் கூட்டமைப்பினர் முறையிட்டுள்ளனர். தேர்தல் நேரத்திலும் அச்சுறுத்தல்கள் தொடரலாம். இதனால் சுதந்திரமாக தேர்தல் பணிகளில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படும் என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் இடம்பெற்றதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பான பிரதே…
-
- 0 replies
- 359 views
-
-
மக்களையும், சர்வதேசத்தையும் தொடர்ந்து ஏமாற்றாமல், இந்த மனித நேயமற்ற, மிலேச்சத்தனமான தாக்குதலினால் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதன் உண்மையான விபரத்தை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இரணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் காயமடைந்த பலா் அங்கவீனமடையும் நிலையில் உள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளதாக வைத்திசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று வெளியான சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ஆறு பேர் வரை உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின், ஞாயிறு மாலை உயிரிழந்த 19 வயது இளைஞடன் உ…
-
- 2 replies
- 401 views
-
-
திருகோணமலை சம்பூர் அனல் மின்சார மைய அமைப்புக்கான அனுமதியை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறும் என்று எதிர்ப்பார்ப்பதாக இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டம் பிரேரிக்கப்பட்டு 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இந்தநிலையில் சம்பூர் அனல்மின்சார மையத்தில் இருந்து கொள்வனவு செய்யப்படும் மின்சார அலகு கட்டண உடன்படிக்கை மீள்திருத்தப்படவுள்ளதாக இந்திய தேசிய மின்சார கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது சம்பூர் அனல் மின்சார மையத்திட்ட பணிகளுக்காக 500 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளன இந்த அனல் மின்சார மைத்துக்காக இறக்குமதி செய்யப்…
-
- 0 replies
- 301 views
-
-
எதிர்கட்சியில் இருந்தால் அரசின் விசாரணைகள் நியாயமற்றவை – அரசபக்கம் தாவினால் நியாயமான விசாரணைகள் இடம்பெறும் - வெலிவேரிய - ரத்துபஸ்வல பிரதேசத்தில் அண்மையில் நடந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எவராவது தவறு செய்திருந்தால், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்த சம்பவம் மிகவும் பரிதாபகத்திற்குரியது, சம்பவம் குறித்து கவலையடையவதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியில் தனியாக இருந்து கொண்டு தன்னால் மாத்திரம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவு…
-
- 0 replies
- 332 views
-
-
ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில்இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்உயிரிழந்த அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய வெலிவேரிய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 வயதுடைய இளைஞன் அகில உட்பட மூன்று பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ஒருவரான அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது உறவினர்கள், நண்பர்கள், பாடசாலை மாணவர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ...:::அச்சிடுவதற்கு::…
-
- 0 replies
- 525 views
-
-
இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94799/language/ta-IN/article.aspx
-
- 20 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். வடக்குத் தேர்தல் விடயத்தில் ஏதாவது அநீதிகள், அநியாயங்கள் நடைபெற்றால் அது தொடர்பில் கூட்டமைப்பினர் முதலில் ஜனாதிபதியிடம் கூறலாம். பொதுநலவாய அமைப்பிடம் கூறுவதற்கு முன்னர், இந்த விடயங்கள் குறித்து முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்து, அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கில் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்தால், அடுத்ததாக முதலமைச்சரை தேர்வு செ…
-
- 0 replies
- 321 views
-
-
சிறீலங்கா விமானப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கையில் அமெரிக்க விமானப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த பயிற்சி நடவடிக்கைகள் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் விமானப்படை பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இருநாட்டு விமானப்படையினரின் பயிற்சி நுட்பங்களை பரிமாறிக்கொள்ளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானபடை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் பசுபிக்ஏஞ்சல் எனும் பெயரில் இந்த பயிற்சி நடவடிக்கையினை அமெரிக்கவிமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் கூட்டாக இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுhttp://goldtamil.com/?p=4903
-
- 0 replies
- 343 views
-