Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏப்ரல் இறுதியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் சனிக்கிழமை, 16 மார்ச் 2013 20:51 எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் அமைச்சுக்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ள அதேவேளை, தற்போது வெற்றிடங்கள் நிலவும் 29 பிரதியமைச்சுப் பதவிகளில் 12 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக புதிதாக பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60850-2013-03-16-12-23-06.html

  2. புலிகள் மேற்குலக நாடுகளின் அரசியலில் தாக்கம் செலுத்துகின்றனர் –கோதபாய ராஜபக்ஷ 16 மார்ச் 2013 தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்குலக நாடுகளின் அரசியலில் தாக்கம் செலுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் தேர்தல் அரசியலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செல்வாக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கனடா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இந்த நிலைமை நீடித்து வருதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் பிரச்சார மற்றும் ஏனைய வழிகளில் தொடர்ந்தும் சில நாடுகளில் வலுவாக …

  3. இலங்கையின் உயர்ந்த மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரும் இலங்கையின் உயர்ந்த மனிதருமான குணசிங்கம் கஜேந்திரன் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுகமகேயின் வேண்டுகோளின்படி கொழும்பிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தேசிய கூடைப்பந்து குழுவில் இவரை இணைத்துக் கொள்வதற்காகவே குணசிங்கம் கஜேந்திரன் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இவரது உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 34 வயதான குணசிங்கம் கஜேந்திரன் நான்கு வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். …

    • 0 replies
    • 554 views
  4. அரசியல் தீர்வு, ஜெனிவா மாநாடு, தமிழ் - முஸ்லிம் அவலம் தொடர்பில் சந்திரிகா, ரணில், சம்பந்தன் ஒரே மேடையில் கருத்துப் பரிமாற்றம்! அரசியல் தீர்வு, ஜெனிவா மாநாடு, தமிழர்களின் தற்போதைய அவலம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயும் பல முக்கிய அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய மாநாடு ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட …

  5. இலங்கை அடிபணியாத தேசம் யாரும் எம்மை கட்டுப்படுத்த முடியாது; வன்னி கட்டளைத் தளபதி இலங்கை அடிபணியாத தேசம் யாரும் எம்மை கட்டுப்படுத்த முடியாது. எமது பிரச்சனையை ஜெனீவாவால் தீர்க்க முடியாது நாட்டை பிரிக்கமுடியாது பிரிக்கவும் இடமளியோம் என வன்னி கட்டளைத் தளபதி பெனிகஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வவுனியா இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. இறுதி மனிதபிமான நடவடிக்கை காரணமாக மூன்ற இலட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தனர். இதேவேளை யுத்தங்களின் காரணமாக நான்க இலட்சம் முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்ததடன் சிங…

  6. பிரிவு: தமிழ் நாடு இலங்கையில் , தனி ஈழமே தீர்வு அதற்க்கு இந்தியா தனியாக பொது வாக்கெடுப்பு நடத்த கோரி ஐநாவின் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முதன்மையான கோரிக்கையை வைத்து தமிழகத்தில் மூளை முடுக்கெல்லாம் மாணவர்கள் போராட்டம் , தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பத்து புது கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தை நடத்துகிறார்கள். திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகை இட்டனர். மதுரையில் என்றும் காணாதபடிக்கு பத்தாயிரம் மாணவர்கள் வீதியில் பேரணி நடத்தினர் . மத்திய அரசு அலுவலகங்களை குறி வைத்து மாணவர்கள் நகர்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் , தமது சொந்த,வியாபார , லாப நட்ட பிரச்சினைகளிற்கு வீதிக்கு வந்து போராடும் த…

  7. சட்ட விரோதமாக வெலிஓயாவுடன் கொக்கிளாய் இணைப்பு! மார் 16, 2013 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் தமிழ்க் கிராமம் அவசர அவசரமாக வெலிஓயாவுடன் இணைக்கப்பட்டு சிங்கள நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசின் சிங்களமயமாக்கும் திட்டம் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படுவதைத் தாமதமின்றித் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (15-03-2013) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ யுத்தம் ஓய்வுக்கு வந்து நான்கு வருடங்களுள் மீள்குடியேற்றம் செய்யப்படாது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உறவினர்இ நண்பர் வீடுகளில் தங்கியுள்ளனர். மீள்குடியேறியோருக்கான…

  8. கொக்கிளாய் பகுதியில் 253 சிங்களவருக்கு காணிகள் வழங்குமாறு அரச அதிகாரிகள் மீது அழுத்தம்! [saturday, 2013-03-16 08:40:47] முல்லைத்தீவு கொக்கிளாயின் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள 253 சிங்களக் குடும்பங்களுக்கும் காணிகளை வழங்கி அவர்களுக்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1983 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தப்பகுதி மக்கள் மீளவும் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் அதாவது 1973 ஆம் ஆண்ட…

  9. கொமன்வெல்த் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து ஆராய கனடாவின் விசேட பிரதிநிதி இலங்கை பயணம்! [saturday, 2013-03-16 09:01:56] பொதுநலவாய அமைப்புக்கான கனடாவின் விசேட பிரதிநிதி Hugh Segal இலங்கைக்கு விஜயம் செய்வதாக ஆசியன் கரஸ்போன்ட்ன்ட் என்ற இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டை வேறு நாடு ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகின்ற நிலையில் கனேடிய விசேட பிரதிநிதியின் பயணம் அமைகிறது என்று ஆசியன் கரஸ்போன்ட்ன்ட் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்திற்கொண்டு கனடாவின் பிரதமர் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் அமர்வில் பங்கேற்கப்போவதில்லை என்று…

  10. பிரபாகரனின் உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை அமெரிக்காவிடம் கொடுத்தார் கோத்தா - விக்கிலீக்ஸ் By General 2013-03-16 11:26:54 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், கிழக்கு மாகாணப் போராளிகள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை அடங்கிய காணொளிப் பேழையே அமெரிக்காவிடம் வழங்கப்பட்டது. இது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 2007 மார்ச் 14ஆ…

  11. சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது By General 2013-03-16 09:49:12 சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர். எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். http://www.virakesari.lk/article/local.php?vid=3500

  12. தஞ்சாவூர்: இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிட்சுகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிட்சுகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு 'இன்ப சுற்றுலா' வந்திருக்கின்றனர். அவர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட வந்த போது தமிழ் அமை…

    • 0 replies
    • 503 views
  13. போருக்குப்பின் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் காலால் உதைக்கிறது 15 மார்ச் 2013 போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடவேண்டும் - கரு போருக்கு பின்னர், இலங்கைக்குள் ஜனநாயகம் மற்றும் மதங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கம், இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்த இருக்கும் சந்தர்ப்பத்தை காலால் உதைப்பதை இனியாவது நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கிருளப்பனையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் சுமார் மூன்று தாசப்தங்கள் நடைபெற்ற இருண்ட பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்ப…

    • 2 replies
    • 349 views
  14. கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை 19-03-2013 மாபெரும் மாணவர் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து எம் இனத்தைக் கொன்று குவித்த கொலைகாரன் இராசபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை 19-03-2013 அன்று காலை பத்துமணிக்கு சிவனந்தகாலனியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் மாணவர் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. தொடர்புகளுக்கு தோழர் சிவா:9943799941 - முகநூல் -

  15. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இன்று ( 15-03-13) அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் மூன்று நாட்களிலேயே ஒழுங்கமைக்கபட்ட இவ் ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியுடன் மக்கள் கோசம் போட்டவண்ணம் உள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது. http://www.sankathi24.com/news/28022/64//d,fullart.aspx

  16. நாம் இந்த அவை ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்தே குறிப்பிட்ட ஒரு காலத்திற்கொரு முறை ஒவ்வொரு நாடு தொடர்பாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீளாய்வு முறையைத் (Universal Periodic Review) தொடர்ந்து அவதானித்து வந்துள்ளோம். இப்பொழுது இரண்டாவது சுழற்சியில் இருக்கும் இச் செயன்முறையில், சில நாடுகள் முதல் சுழற்சியின்போது இவ் அவையால் செய்யப்பட்ட பரிந்துரைகளை முற்றாக அமுல்ப்படுத்தாது விடுத்திருந்தமையை அவதானிக்கலாம் - குறிப்பாக இலங்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகின்றது. இம் மனித உரிமைகள் மீளாய்வு முறையானது வரலாற்று ரீதியாக சுதந்திரம், இனத்துவம், மொழி, கலாசாரம், என்பவற்றின் அடிப்படையில் தம்மை ஓர் தேசமாகக் கருதும் தமிழர்கள் போன்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு தமது பிரச்சினைகள் பற்றி எடுத்தியம்புவதற்…

  17. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில், ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலையிட்டு சில திருத்தங்களை செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பான விசேட விவாதம் மனித உரிமை பேரவையின் அடுத்த கூட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை நீக்க வேண்டும் என இந்த நாடுகள் கோரியுள்ளதுடன், நல்லிணக்க செயற்பாடுகளை எடுக்க இலங்கை தவறியுள்ளது என்ற வார்த்தையும், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம் என்ற வார்த்தையும் திருத்தப்பட்டுள்ளன. இலங்கை மீதான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்தவேளை இலங்கை திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவன் ஒருவரது தந்தையாரான டாக்டர் மனோகரன் கண்கலங்கிய படி த…

  18. யுத்தத்தால் சேதமடைந்து தற்போது கல்விச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க. பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 14.03.2013 அன்று இடம் பெற்றது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் உதவியில் இப்பாடசாலைக்கு புத்தகப்பை அப்பியாசப் புத்தகங்கள் வரை கருவிகள் உட்பட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் வினோரோகநாதலிங்கம; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் திரு. பவான் எழுத்தாளர் சண் மாஸ்ரர் சேருவாவில பிரதேசசபை உறுப்பினர் திரு. சிவலோகேஸ்வரன் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் த…

  19. இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், இந்திய மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டால், தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு நலனுக்கு ஆதரவாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் 2வது நாளாக இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு கலை கல்லூரி மாணவர்களை நேரில் சென்று, அந்த மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பழ.நெடுமாறன் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை விவகாரத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடலூர் அரசு கல்லூரி மாணவர்களை பாராட்டுகிறேன்.இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. …

  20. எதிர்வரும் 2017ஆம் ஆண்டளவில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியுமென அவர் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான அகில கால மீளாய்வு அமர்வுகளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மேம்பாடு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் தேசிய பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த அகில கால மீளாய்வு அமர்வுகளில் பாரியளவில் முன்னேற்றத்த…

  21. ‎1988ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் கொழும்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் சக மாணவன் ஒருவனது உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். பின்னிரவு. சற்றுச் சில்லென்ற காற்று. "பத்மசிறி த்ரிமாவிதனாவின்" உயிரற்ற உடல் ஒரு பெஞ்சின் மிது கிடத்தப்பட்டிருந்தது. இருபது வயதான அவ்விளைஞன் கடுமையாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்று நன்றாகவே தெரிந்தது. ஏகப்பட்ட காயங்கள். பார்க்கப் பார்க்க வேதனைதான் கூடியது. மிகக் கவனமாக மென்மையாக அவனது வயிற்றைத் தடவிப் பார்த்தனர். வேதனைதான் கூடியது. மிகக் கவனமாக மென்மையாக அவனது வயிற்றைத் தடவிப் பார்த்தனர். விலாவெலும்பெல்லாம் நொறுங்கிப் போயிருந்தன. உடலின் பல இணைப்புக்கள் முறிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிகரெட்டை வைத்துத் தீய்த்திருந்தார்கள். தலையி…

    • 0 replies
    • 612 views
  22. இலங்கையின் நிலைவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள 38 பக்க அறிக்கை! (காணொளி) இந்தியச் செய்திகள், காணொளி & ஒலி, தாயக, இலங்கைச் செய்திகள்| 15. 03. 2013, வெள்ளிக்கிழமை, தமிழீழ நேரம் 6:14 கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 38 பக்கங்களையுடைய இவ்வறிக்கையில் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல்கள், பேச்சு சுதந்திரம் பறிப்பு, தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம் இந்த இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளை கண்டித்திருக்கிறது…

    • 3 replies
    • 871 views
  23. வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்: ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி; உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்சே நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா; உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான்; அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே; ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் நெஞ்சம்; ஈழத்தமிழனுக்கு செஞ்சதடா வஞ்சம்! - லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்

    • 4 replies
    • 607 views
  24. தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள். தொடர்புக்கு: வடிவேல் - 9052624014 - முகநூல் -

    • 1 reply
    • 239 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.