Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹலால் பிரச்சினை வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழலை வளர விடுவது அரசுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஹலால் விவகாரம் தொடர்பில் அவர் பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார். அந்தச் செவ்வியில் ஹக்கீம் தெரிவித்திருப்பதாவது: ஹலால் விவகாரம் தொடர்பில் இன்னும் ஓரிரு அமர்வுகளில் எமது பரிந்துரை அரசுக்கு முன்வைக்கவுள்ளோம். ஹலால் பிரச்சினை தொடர்பில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். மாறாக அந்த விடயத்தில் அரசு தயக்கம் காட்டி வருகிறது. ஹலால் பிரச்சினை தொடர்பில் அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வொன்றை…

    • 3 replies
    • 572 views
  2. யாழ்.பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவினை சங்கிலியன் பூங்கா என மாற்ற யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த பூங்காவை சங்கிலியன் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதுடன் நவீன முறையில் புனரமைப்பதற்கும் மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த புனரமைப்பு பணி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ். மாநகர சபை மண்டபத்தில் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. எனவே பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இதனை சிறந்தமுறையில் பயன்படுத்தக் கூடிய வகையில் யாழ். மாநகர சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. நவீன முறையில் அமையும் இந்த பூங்காவின் மாதிரி உத்தேச விபரணப்படம் கட்டிடக்கலை நிப…

    • 4 replies
    • 518 views
  3. தாய்மண்ணின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக சனநாயக ரீதியில் போராடிய முன்னைநாள் குர்திஸ்தான் விடுதலைப் போராளிகள் மூவரினதும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் கேணல் பர்தி மற்றும் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் கடந்த 12ம் திகதி தேசியக் கொடிகளையும், தலைவரது படங்களையும் தாங்கி பல இலட்சம் குர்திஸ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று பரிசில் பார்பஸ் எனும் இடத்திலிருந்து பிற்பகல் 2மணிக்கு நீதிகேட்டு போராட்ட பேரணி ஆரம்பமாகியது. பல நூற்றுக்கணக்கான தமிழீழ மக்களும் தமது கைகளில் தேசியக் கொடியினைத் தாங்கி போராட…

  4. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பது குறித்து அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். புகழேந்தி தங்கராசா, தமிழருவி மணியன் மற்றும் டி. ராஜா உட்பட்ட அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் குறித்த காணொளி: http://tamil24news.com/news/?p=47212

  5. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படியும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படும்படியும் இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்ததாகவே இப்புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. கடந்த ஆண்டு தீர்மானத்தில…

  6. இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு இடம்தரக்கூடாது என்று பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம், மகாராணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து முறையற்ற ரீதியில் நீக்கியதற்காகவே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க அரசாங்கத்தின் 11 பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழுவினரால் பலாத்காரமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் சிராணி பண்டாரநாயக்கவுக்கு தமது காரணங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே நீதித்துறையை அவமதிக்கும் இந்த செயலை கண்டிக்கும் வகை…

  7. வன்னியில் இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம். உள்ளக விசாரனைகள் எதனையும் இலங்கை மேற்கொள்ளும் என்று நாம் நம்பவில்லை இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபை வளாகத்தில், "மோதல் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். "மோதல் தவிர்ப்பு வலயம், திரையிடப்படுவதற்கு முன்னர், அறிமுகவுரை நிகழ்த்தினார் அவர். "நீதித்துறைச் சுதந்திரம், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூ…

    • 1 reply
    • 626 views
  8. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருகிறது. -- புஷ்பராயன் விக்டோரியா நேரம் Sunday, March 3rd 2013. பிரிவு featured, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், முதன்மைச்செய்திகள அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் People’s Movement Against Nuclear Energy இடிந்தகரை 627 104 Idinthakarai 627 104 March 3, 2013 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருகிறது. PMANE Demands Independent International Inquiry on the Genocidal Lanka அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் உலகெங்கும் போராடும் ஒத்தக் கருத்துடைய இயக்கங்களோடு சேர்ந்து ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவி…

  9. இலங்கை விவகாரம் ஜெனிவாவில் சூடு கிளப்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக் களுக்கு மறுத்தான் கொடுப்பதில், ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரச பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கூடவே நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது. இவற்றின் மத்தியில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ளது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசி வருகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை இலங்கைப் படைகள…

    • 0 replies
    • 397 views
  10. ஈழத்தின் மனிதகுலத்திற்கு எதிராக சிங்கள படைகளால் நடத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பிலும் தமிழ் இன அழிப்பு தொடர்பிலும் முழுமையான வெளிப்படையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் "தமிழ் தேசிய மக்கள் முன்னணி"யின் பொதுச்செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்தோடு நாளை ஜக்கிய நாடுகள் சபையின் முன் நடைபெறவுள்ள நீதி கோரிய போராட்டத்திற்கு அனைவரும் வருகைதருமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19303:2013-03-03-11-54-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  11. ராஜபக்சேவைவிட, அமெரிக்காவைவிட, இந்தியாவைவிட, பாகிஸ்தானைவிட, சீனாவைவிட, யாரெல்லாம் இலங்கைக்கு ஆதரவாக உள்ளார்களோ அவர்களைவிட ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தானவர்கள் தமிழக அரசியல்(வியாதிகள்)வாதிகள். வேறு எந்த இனமும் இப்படியானதொரு கொடுமையை சந்தித்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு. எரிமலையாய் வெடித்திருப்பார்கள். பேருந்து ஓடியிருக்காது. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். எதிரி பயந்திருப்பான். ஆனால் எம் தமிழினத்திற்கு... தி.மு.க. மாநாடு கூட்டினால், போராட்டம் நடத்தினால்...ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் மக்கள் திரள்... அ.தி.மு.க. மாநாடு கூட்டினால், போராட்டம் நடத்தினால்...ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் மக்கள் திரள்... ம.தி.மு.க. மாநாடு கூட்டினால், போராட்டம் நடத்தினால்...ஆயிரக்கணக்க…

  12. ஜேர்மன் நாட்டு பாராளுமன்றத்தில் (Bundestag) அந்நாட்டு எதிர்க்கட்சியால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியாலேயே இப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பாரளுமன்றத்தின் 225 ஆவது தொடரின் போதே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டதாக ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவரலாயம் அறிவித்துள்ளது. "UN Human Rights of Sri Lanka and use the rule of law, Observance of human rights and call for reconciliation" என்ற தலைப்பில் சமூக ஜனநாயகக் கட்சியயின் தலைவரான பிராங்க் வோல்ட்டர் ஸ்டீன்மியராலேயே இப்பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் …

  13. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு 30 நாடுகள் ஆதரவளித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாகவும், நேரடியாக 30 நாடுகள் ஆதரவளிப்ப சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் நேரடி ஒத்துழைப்பை வழங்கத் தயார் என அறிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்திற் ஆதரவளிப்பதா இல்லை என்பது குறித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இன்னமும் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும், இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்தத் தீர்மானத்திற்கு…

    • 1 reply
    • 766 views
  14. ஜெனீவாவில் நடைபெற்ற தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டில் கணேசமூர்த்தி உரை: ஜெனிவாவில் மார்ச் 2-ஆம் தேதி தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, எம்.பி., ஆற்றிய உரையின் சுருக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ‘தாயகம்’ தலைமை நிலையம் சென்னை – 8 மறுமலர்ச்சி தி.மு.க., 03.03.2013 சுவிட்சர்லாந்து மக்கள் பேரவை, கனடிய மக்கள் பேரவை ஜெனிவாவில் மார்ச் 2-ஆம் தேதி தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டினை நடத்துகின்றது. அம்மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆற்றிய உரை வருமாறு: தமிழ் ஈழம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீர ம…

    • 1 reply
    • 536 views
  15. புதிய மகசீன் சிறையில் ஒரு கண்ணை இழந்த நிலையில் மற்றைய கண்ணையும் இழப்பதா? 02 மார்ச் 2013 உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள கைதியின் டயறி - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனுப்பி வைத்த கடிதம் இணைப்பு- புதிய மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி தன்னை விடுவிக்கவேண்டும் அல்லது புனர்வாழ்வு முகாமிற்காவது அனுப்பக்கோரி சாகும் வரையான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மையில் அரசினால் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் சம்மதிக்குமிடத்து புனாவாழ்வுக்கு செல்லமுடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அத்தகைய அறிவிப்பு வெறுமனே அறிவிப்பாகவே இருந்துவருகின்ற நிலையில் ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்…

    • 1 reply
    • 413 views
  16. ​ வடக்கு,கிழக்கில் நெல் வயல்களில் அறுவடைப் பணிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு நுழைவிசைவு வழங்கும் முடிவை சிறிலங்கா கைவிட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில், விவசாயப் பணிகளில் ஈடுபடவும், அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கும், இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க சிறிலங்கா திட்டமிட்டிருந்தது. எனினும் பாதுகாப்புக் காரணங்களால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கு அந்தப் பகுதி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் என்ற பெயரில், இந்திய உளவு அமைப்ப…

  17. பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தளை நாவுல பகுதியிலுள்ள பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்ட துப்பாக்கியே இவ்வாறு களவெடுக்கப்பட்டுள்ளது. மலசலக்கூடத்திலுள்ள இறாக்கையில் துப்பாக்கியை தொங்கவைத்துவிட்டு மலசலக்கூடம் சென்று திருப்புவதற்குள் அந்த துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59907-2013-03-03-06-08-13.html

  18. கூடங்குளத்தில் கதிரியக்க கசிவு: இலங்கையும் குற்றச்சாட்டு ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 01:14 கூடங்குளம் அணு மின்நிலையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கையும் சாட்டியுள்ளது. கூடங்குளம் மின் நிலையத்துக்கு எதிரான இலங்கையை சேர்ந்த மக்கள் குழுவே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ளதாகவே இந்த குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு அபாயகரமான பொருள் தீப்பற்றி எரிந்தமையினால் பலர் பலியாகிவிட்டதாக கடந்த இரு நாட்களாக குறுஞ்செய்திகள் மூலம் வதந்திகள…

  19. ஊர்காவற்துறைப் பகுதியில் குண்டு வெடிப்பு : 6 படையினர் காயம் By General 2013-03-03 14:52:07 ஊர்காவற்துறைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் படையினர் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்து ஆறு பேரும் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=3294

  20. கச்சதீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைச் சிங்கள கடற்படை மீண்டும் வெறித் தாக்குதலை நடத்தி உள்ளது. அத்துடன், இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தி வருவது கடந்த சில நாட்களாக தொடர் கதையாக உள்ளது. கச்சதீவு அருகே நடைபெறும் இந்த தாக்குதலின் போது மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 200 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சதீவு அருகே இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்கள கடற்படை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மீனவர்களின் வலைகளையு…

    • 0 replies
    • 284 views
  21. தலதா மாளிகை படம் மீட்பு; முஸ்லிம் ஒருவர் கைது ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 12:51 கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் தொன்மை வாய்ந்த படமொன்றை ஓய்வு விடுதியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு செய்த முறைபாடு பொலிஸார் குறித்த விடுதியை சோதனைக்கு உட்படுத்தி அந்த படத்தை கைப்பற்றியுள்ளனர். விடுதியின் உரிமையாளர் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை மீவத்துர எனும் பகுதியில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகளுக்கான ஓய்வு விடுதியிலிருந்தே சுமார் 26 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்ரீதலதா மாளிகையின் படத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த விடுதியின்…

  22. இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் ; ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை தேசிய அடையாள அட்டையை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பித்துக் கொள்வதற்கான நடைமுறை ஒன்றை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்திவருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்காலத்தில் இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக பத்து வருடங்களுக்கு ஒரு முறை அடையாள அட்டையை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் தற்போது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 03 மார்ச் 2013, ஞாயிறு 9:50 மு.ப - See more at: h…

  23. பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என கூறி சிறுவர் துஷ்பிரயோகம், பண மோசடி By General 2013-03-03 10:18:02 பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என தன்னை கூறிக்கொள்ளும் பௌத்த பிக்கு ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிறுவர் துஷ்பிரயோகம் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'சிறுவர் உலகம் நீயும் நானும்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்த பௌத்த தேரர் செயற்பட்டு வந்தார். இவர் தங்கியிருந்த மாடிக் கட்டடத்தை எமது பொதுபல ச…

  24. இலங்கைக்கு எதிரான தீர்மானம்: விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் முக்கிய விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறினார்.மேலும் இந்த தீர்மானம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் திடமான பரிந்துரைகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். சமரசத்தை உருவாக்குவதற்காக கடந்தாண்டு கொண்டுவந்த தீர்மானத்தின் அடுத்தக்கட்டமாக, தற்போது புதிய தீர்மானத்தை தாக்கல் செய்ய இருப்பதாக அமெ…

  25. பலாலியில் எஞ்சியுள்ள காணிககை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாது: யாழ். இராணுவ கட்டளைத்தளபதி By General 2013-03-03 09:47:07 பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை உரியர்களிடம் ஒப்படைக்க முடியாது. அந்த காணிகளுக்கு இன்றைய சந்தை விலைப்படி நஷ்டஈடு வழங்கப்படும். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 6000 ஏக்கர் காணிகள் மீண்டும் விரைவில் உரிவர்களிடம் ஒப்படைக்கப்படுமென நான் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என யாழ். இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இப்போது இல்லை. 6000 ஏக்கர் காணி எனக் கூறும் போது அதில் இலங்கை சீமெந்துக் கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான 1000 ஏக்கர் காணி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.