Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -எஸ்.கே.பிரசாத் '30 வருடங்களான நாட்டில் நிலவிய யுத்தம் சீரழித்த எல்லா விதமான வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்துவோம். எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம். எதிர்கட்சிகளின் கருத்தைக் கேட்டு மக்கள் தவறான பாதையில் போக வேண்டாம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ் போதனா வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தொகுதி, ஜனாதிபதியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து எல்லா மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியதே இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் …

    • 7 replies
    • 648 views
  2. சிறிலங்காவில் ஒரே ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய போதே அவர இதனைத் தெரிவித்துள்ளார். மூன்று பத்தாண்டுகளில் எல்லா சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான பொறுப்பு அனைத்து சமூகங்களுக்கும் உள்ளது. தீவிரவாதத்தினால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் உண்மையாகச் செயற்பட்டால் எப்போதும் நான் உங்களைப் பாதுகாப்பேன். அதேவேளை, சிறிலங்காவில் ஒரு ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று…

  3. நாட்டில் மதவாதத்தை தூண்டி அதன் மூலம் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று இலங்கையில் மத அடிப்படைவாதத்தின் ஊடாக, மோதல்களை வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் பதுளை பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுடன் இடம்பெற்ற முரண்பாடுகளானது, மறைமுக நோக்கங்களைக் கொண்டவர்களின் முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சூழ்ச்சித் திட்டங்களுக்கு அடிபணிந்து விடாது, அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்…

  4. 10 மில்லியன் ரூபா கொள்ளை: நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம் கொழும்பு கொம்பனித் தெரு வீதியில் 10 மில்லியன் ரூபாவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிலிருந்து மூன்று குழுக்களும் ஒரு பொலிஸ் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.பொலிஸ் சீருடையில் பச்சை மற்றும் நீள நிறத்திலான ஜீப் வாகனங்களில் வந்த இனந்தெரியாத சிலர் நேற்று மாலை தாம் குற்றவிசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் என தெரிவித்து சோதனையிடும் போர்வையில் வர்த்தகரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா பணத்தை கொள்கையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  5. யாழ்மாவட்ட இராணுவத் தளபதிக்கு தேவையானால் நான் அரசியல் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றேன். அவர் தமக்கு நேரமிருந்தால் சொல்லி அனுப்பட்டுமென சவால் விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இன்று யாழ்.நகரில் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துருசிங்கவிற்கு சவால் விடுத்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த கத்துருசிங்க நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக மான நஸ்டம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அத்துடன் முட்டாள் அரசியல்வாதிகள் கூறுவதை கேட்டு ஊடகங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டாமெனவும் கூட…

  6. By General 2013-02-13 17:41:11 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஹதுரு சிங்ஹவும் விஜயம் செய்திருந்தார். அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜனுடன் அவர் உரையாடியுள்ளார். பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுடன் அங்கு கலந்துரையாடியுள்ளார். இதன்போது Z புள்ளி அடிப்படையில் சிறிய புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பைத் தவற விட்ட மாணவர்கள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க உடன் த…

  7. பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டனர் – 13 பெப்ரவரி 2013 – கார்டியன் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.நாடு கடத்தப்பட்ட பதினைந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு யுத்த நிறைவு முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நாடு கடத்தப்பட்டவர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட 15 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மீளவும் பிரித்தானியாவிற்குள் ப…

    • 4 replies
    • 554 views
  8. உதயனுக்கு அனுமதியில்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கலந்துகொண்ட நிகழ்வுகளில் செய்திசேகரிப்பதற்கு உதயன் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அத்துடன் மூன்று நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருந்தார். முற்பகல் 10 மணியளவில் சுன்னாகத்தில் புதிய மின்நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற "உதயன்' ஊடகவியலாளர்கள் நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வுக்கு செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்ட ஊடகவியாலாளர்களின் பெயர்ப்பட்டியலில் "உதயன்' ஊடகவியலாளர்களின் பெயர்கள் இல்லை எனத் தெரிவித்து பாதுகாப்பு அத…

  9. சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 18 தொடக்கம் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், வாரத்தில் மூன்று தடவைகள், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மத்தால வழியாக றிய…

  10. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது. இதனால் மீண்டும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தொடக்கம் மழை பெய்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் வெள்ளம் வடிந்து காணப்பட்ட தாழ் நிலப்பிரதேசங்களில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. காலை வேளையிலும் குளிரான கால நிலை நிலவுகின்றது. இதேவேளை மீண்டும் மழை பெய்து வருவதனால் நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முற்றி விளைந்த நெற்பயிரை அறுவடை செய்யும் காலத்தில் மீண்டும் மழை பெய்வதால் விவசாயிகள் அறுவடை செ…

  11. இலங்கை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளது : ஜோன் நெல்ம்ஸ் இலங்கை கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளதென இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியக்குழுவின் தலைவர் ஜோன் நெல்ம்ஸ் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் பல்வேறு வகையான துறைகளிலும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதனது வளர்ச்சிப் படிமுறையானது சீரான நிலையில் காணப்படுக…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் செயலகம் ஈடுபட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களில் இருவருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும், ஈ.சரவணபவன் ஆகிய இருவருக்குமே சிறிலங்கா அதிபரின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மட்டும் பங்கேற்று, …

  13. பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் நிச்சயமாக பங்கேற்பார் என பொதுநலவாய நர்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மஹாராணி நிச்சயமாக பங்கேற்பார் என கமலேஸ் சர்மா தன்னிடம் தெரிவித்தார் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவியாக இரண்டாம் எலிசபத் மகாராணி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=75922&category=TamilNew…

  14. இனமோதல் அழிவுகள் குறித்து கணக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முடிவு இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித அழிவு மற்றும் சொத்து சேதங்கள் குறித்து நாடு தழுவிய ரீதியில் கணக்கெடுப்பு ஒன்றை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (அத தெரண - தமிழ்)

  15. போர்குற்ற விசாரணை வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளது : ஐநா இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்படும் என வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதாக ஐக்கிய நடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளூர் அதிகாரிகளின் விசாரணை தெளிவற்று காணப்படுவதாகவும் சுயாதீனம் இல்லை எனவும் பாரபட்சமற்றதாக இல்லை எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு (UNHRC) சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு விசாரணை நம்பிக்கையற்றதாக காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதென ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பரில் இலங்கைக்கு வந்த நிபுணர் குழுவால் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நா…

  16. இலங்கையில் மாநாட்டை நடத்த நிபந்தனைகள் – அரசுக்கு பொதுநலவாய அமைப்பு அதிர்ச்சி வைத்தியம்! பொதுநலவாய நாடுகள் அமையத்தின் மாநாடு இலங்கையில் நடத்தப்படவேண்டுமானால் இலங்கை அரசு முக்கியமான நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்றவேண்டுமென பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் தங்கியுள்ள பொதுநலவாய நாடுகள் அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை அரசிடம் ஒப்படைத்திருப்பது அரசுக்கு கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது. மனித உரிமைகள், தேர்தல்கள், ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று துறைகளுக்கும் சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும், பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அ…

    • 5 replies
    • 822 views
  17. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - நவனீதம்பிள்ளை 13 பெப்ரவரி 2013 இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார். …

  18. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உறவுகளைப் பேண விரும்புவதாக இலங்கை அறிவிப்பு 13 பெப்ரவரி 2013 ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உறவுகளைப் பேண விரும்புவதாக இலங்கை அறிவித்துள்ளது. இறைமையுடைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், இலங்கையும் நல்லாட்சி, சமூக நீதி, சமத்துவம் போன்ற விடயங்களில் வௌ;வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இலக்குகளை அடைந்த போதிலும், உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். ஹம்சா தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கும் இலங்கைக்கும் 400 ஆண்டுகள் உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கலாச்சாரம், சமூகம், கல்வி, கல்வி மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார…

    • 3 replies
    • 602 views
  19. ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QBR5s08ASrc

  20. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். 'யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன? அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்' என அவர் கூறினார். முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட…

    • 7 replies
    • 631 views
  21. வவுனியா கொக்காச்சான்குளத்தில் மேலும் 700 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! பிப் 11, 2013 வவுனியா மாவட்டத்திலுள்ள தமிழ்க் கிராமமான கொக்காச்சான்குளத்தில் மேலும் 700 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கொக்சாச்சான்குள கிராமத்தின் பெயரும் சிங்களப் பெயராக மாற்றப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார். வவுனியா மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மிகவும் மோசமாக மாற்றியமைக்கும் வகையில் நன்கு திட்டமிட்ட முறையில் இராணுவத்தின் ஆதரவுடன், இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். வவுனியா பிரதேச…

  22. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரும் வழிபாட்டில் ஈடுபட்டனர். படங்கள் :-எஸ்.கே.பிரசாத் http://tamil.dailymirror.lk/--main/58805-2013-02-12-17-27-21.html

    • 5 replies
    • 886 views
  23. புலம்பெயர்ந்தவர்களால் புதிய அரசியல் கட்சி 2013 ஃபெப்ரவரி மாதம் 11 திங்கட் கிழமை- பி.ப 07:52 அவுஸ்திரேலியாவிற்கு குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளனர். 'அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி" என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பிராந்திய தேர்தலில் 65 வேட்பாளர்களை நிறுத்த இந்த கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட டெனியல் நல்லையா என்பவரினால் இந்த அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் அந்த நாட்டிற்கு விஸ்வாசமான முறையில் தம்மை மேம்படுத்துவதுடன் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்…

    • 7 replies
    • 854 views
  24. படையினரின் எறிகணைத்தாக்குதலில் பெற்றோரை இழந்து சிதறிய சிறுமி தாத்தாவுடன் இணைவு! பிப் 13, 2013 சிறீலங்காப்படையிரின் தாக்குதலில் பதுக்கு குழிக்கு மேல் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் சிறுமியின் தாய் தந்தை,சகோதரர்கள் உட்பட 8பேர் உடல்சிதறி பலியானார்கள் இச்சம்பவத்தில் தப்பிய சிறுமி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தாத்தாவுடன் இணைந்துள்ளது. வன்னியின் சிறீலங்காப்படையினர் நடத்திய போர் நடவடிக்கையின் போது தனது சகோதரங்கள் உள்ளிட்ட 8பேரை ஒரே இடத்தில் பலிஎடுத்த எறிகணைக்கு அஞ்சி சிதறிஓடிய சிறுமி ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் பின்னர் வவுனியா வதைமுகாமிற்கு சென்று அங்கும் வாழ்ந்து தற்போது மீள்குடியேறிய நிலையில் தனது தாத்தாவினை கண்டு தாத்தா..தாத்தா.. என்று கூப்பிட்டு தாத்…

  25. யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டு வரும் கார்கில்ஸ் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 80 பேர்ச் நிலத்தில் 4 மாடிக் கட்டிடமாக இந்தக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடத் தொகுதியில் வங்கி, உணவுச்சாலை, 3 திரை அரங்குகளுடன் கூடிய சினிபிளெக்ஸ் மற்றும் கார் நிறுத்துமிடம் என்பன அமையவுள்ளன. இந்த 500 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கார்கில்ஸானது பாரிய தனியார் பிரிவு முதலீட்டாளர்களில் ஒன்றாக இலங்கையின் வட மாகாணத்தில் திகழவுள்ளதாக கார்கில்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரான இம்தியாஸ் வஹீட் தெரிவித்துள்ளார். http://www.thinakkural.com/index.php?o…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.