ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
5 வருடங்களை சிறையில் கழித்தவர் நிரபராதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப் பட்டு யாழ்.மேல் நீதிமன்றினால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். யாழ்.மேல் நீதிமன்றில் ஆணையாளர் ஜே.விஸ்வ நாதன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கடற்படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியமை உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. திருகோணமலையைச் சேர்ந்த மோகனசுந்தரம் சுகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் …
-
- 0 replies
- 424 views
-
-
ttn இணைய வலைத் தொலைக்காட்சி தற்போது அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் உள்ளதாகவும், அடுத்த கட்டமாக அதன் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்குடன் மக்களின் படைப்புக்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இளம் தொலைக்காட்சி கலைஞர்களை இனங்காணவும் அவர்களை வளர்த்தெடுக்கவும் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர். இணைய விரும்புவோர் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்
-
- 12 replies
- 1k views
-
-
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று புதுடெல்லி செல்லவுள்ள நிலையில், இந்தியாவின் நிலையை நாடிபிடித்துப் பார்க்க இந்தப் பயணத்தை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய - சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பிற்பகல் புதுடெல்லி செல்கிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தைச் சந்தித்துப் பேசவுள்ள அவர், வரும் புதன்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்ப்புகளின் மூலம் இந்தியாவின் நிலையை நாடி பிடித்துப் ப…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தியா - இலங்கை இடையேயான 8-வது இணைப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் இருநாடுகளின் பொருளாதார மேம்பாடு, ஏழ்மை போக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு வர்த்தகம் செய்ய இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், ’’இந்திய பொருளாதார வளர்ச்சியில் இலங்கை பங் கேற்க விரும்பு கிறது. இந்தியா-இலங்கை இடையே மின்சாரத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து துறையை மேம்படுத்துவது குறித்து பேச…
-
- 2 replies
- 628 views
-
-
சிறிலங்கா தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் எம்.ஆர். நாராயணசுவாமிக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியாவின் பாராமுகம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை எட்டுவதில் இருந்து விலகி நிற்பதற்கு கொழும்புக்கு ஊக்கமளிக்கிறது. விடுதலைப் புலிகள் இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட அதே கொள்கையைத் தான் இந்தியா இன்னமும் கடைப்பிடிக்கிறது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம…
-
- 2 replies
- 553 views
-
-
பாடுமீன் அபிவிருத்தி சங்கத்தின் அங்க்குரார்ப்பணமும் ,பொங்கல் விழாவும் முதல் முறையாக பிரான்சில் பாடுமீன் அபிவிருத்தி சங்கம் (கிழக்கு )சகோதரர்களால் நடாத்தப்பட்ட மாபெரும் தைத்திருநாள் ஒன்றுகூடலுடன் பாடுமீன் அபிவிருத்தி சங்க நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவிசெய்யப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் த.அருண்பிரதீஸ் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பெரும்பலான கிழக்கு பிரதேசமக்கள் கலந்து கொண்டதுடன் இச் சங்கமானது கிழக்கு பிரதேசத்திற்கான பெரும் தளமாக அமைவதற்கு எல்லோரும் உழைப்போம் என ஏகமனதாக உறுதியளிக்கப்பட்டு இக் கூடமானது வெகுசிறப்பாக நடந்தேறியது . இவ் விழாவில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வந்து கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் பாடுமீன் அப…
-
- 2 replies
- 601 views
-
-
Jan 22, 2013 தமிழ்நாடு - புதுவை அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இலங்கை அகதிகள் உட்பட மூவர் பலி! தமிழ்நாடு - புதுவை அனுச்சை குப்பம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 2 அகதிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புதுவை அருகே உள்ள கோட்டக்குப்பத்தை அடுத்துள்ளது அனுச்சை குப்பம். தமிழக பகுதியான இங்கு இலங்கை அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டோலூயி அஜன் (வயது 21), பாலன் சாருஷாஜன் (வயது 20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் ஏழுமலை சதீஷ் (வயது 24). இவர்கள் 3 மூவரும் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தினமும் புதுவைக்கு வந்து கட்டிட தொழில் செய்து விட்டு…
-
- 0 replies
- 331 views
-
-
சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது 22 ஜனவரி 2013 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இதனிடையே தேடுதலில் ஈடுபட்ட காவற்துறை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்ற சிறிதரனின் செயலாளர் பொன்காந்தன் தம்மால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததாக சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்த சமயம் தமது அலுவலகத்தில் தேடுதலுக்காக ஒரு அணியினர் மீண்டும் வந்திருப்பதாக அங்கிருந்த ஆதரவாளர்களால்…
-
- 0 replies
- 440 views
-
-
தவறான தகவல்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின், இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்காக செல்லவிருந்த மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவை அமெரிக்கா குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தது. இறுதிப் போரின் போது 53 வது படைப்பிரிவில் கட்டளைத் தளபதியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அவருக்கான பயிற்சி அனுமதியை அமெரிக்கா மறுத்திருந்தது. எனினும் மேஜர் ரணசிங்க இறுதிப் போரின் போது 53 வது படையணி தளபதியாக கடமையாற்றவில்லை. அந்தப் படையணியின் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவே கடமையாற்ற…
-
- 2 replies
- 624 views
-
-
'சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் தொடர்பில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தலைவர்கள்; நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்பொழுது வியப்பாகவும் அருவருப்பாகவும் உள்ளது' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ரிசானா நபீக் குறைந்த வயதிலே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சம்பந்தமாக அனுப்பி வைத்த முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசானாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை சம்பந்தமாக மனிதாபிமான முறையில் இவரது பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் க…
-
- 7 replies
- 522 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு மரணப் பொறி; தீர்மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளில் தமிழருக்குத் தீர்வு வழங்கும் எண்ணம் எதுவும் டில்லியிடம் இல்லை; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு ஜெனிவாவில் எதிர் வரும் மார்ச் மாதம் இடம் பெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைப் சபையின் கூட்டத் தொடர் இலங்கைக்கு மரணப் பொறியாக அமையும் அபாயம் அதிகமாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசுக்கு எதிராக பிரயோகிக்கப்படும். இதைத் தீர் மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளிலேயே உள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் இல்லை என் றும் அவை குற்றஞ்சாட்டின. கடந்த ஜெனிவாக் கூட்டத்தில் இலங்கைக்கு…
-
- 2 replies
- 512 views
-
-
492 பேரை உள்ளடக்கிய சன் சீ கப்பல் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி கனாடவை சென்றடைந்தது. இதில், 380 ஆண்களும் 63 பெண்களும் 49 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இந்தநிலையில், கடந்த வாரத்தில் 50 பேர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். 63 பேரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 23 பேர் தமது கோரிக்கையை மீளப்பெற்று கொண்டார்கள். 25 பேருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 16 பேருக்கு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இந்தநிலையில், சன் சீ கப்பலில் சென்றவர்களில் புகலிட கோரிக்கை அந்தஸ்து வழங்கப்பட்ட ஒருவரிமிருந்த அந்த உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 406 views
-
-
தந்தை செல்வா மற்றும் அமரர் இராசாமணிக்கம் போன்ற தலைவர்களினால் அன்று முன்வைக்கப்ட்ட கொள்கை வெறுமனே இந்த நாட்டில் மட்டுமல்லாமல் இந்த கொள்கை நியாயமான கொள்கை சர்வதேச சமூகத்தினால் நீதியான நியாயமான தீர்வு என ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்புத் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூறாவது ஜனன தின நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்: "60 வருடஙக்ளுக…
-
- 0 replies
- 338 views
-
-
கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன இடங்களையும் பதிவுசெய்யும் திட்டத்தில் தமிழர் புராதன இடங்கள் கபளீகரம் ஜன 22, 2013 கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து புராதன இடங்களையும் பதிவுசெய்யும் செயற்றிட்டமொன்றை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதனூடாக மாகாணத்திலுள்ள தமிழர்களின் புராதன பகுதிகளை கபளீகரம் செய்வதற்கு திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.... இதனூடாக மாகாணத்திலுள்ள புராதன பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டார். இறுதியாக 1970 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில் 800ற்கும் அதிகமான புராதன இடங்கள் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். இதன்…
-
- 0 replies
- 385 views
-
-
- மொஹொமட் ஆஸிக் மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 74 எலும்புக் கூடுகளும் 60 மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாணப் பணிகளின்போது மனித எலும்புக்கூடுகளும் மண்டையோடுகள் பலவும் அண்மைக்காலமாக மீட்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கடந்த மாதம் முதல் இவ் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று வரை 74 மனித எழும்புக்கூடுகளும் 60 மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/56818--74-.html
-
- 1 reply
- 299 views
-
-
SMR the farmer who first sowed Tamil Nationalism in the East of Sri Lanka Now his 100th year is commemorated - By S. Karunanandarajah As an intellectual holding the honours degree in economics which was very first for his village Mandur and almost in the Paddiruppu Electorate and his oratorical command of English with a high volume of voice gave Mr, SM Rasamanickam (SMR) a brilliant reputation to push him towards politics. As an ancestral farmer and the eldest son of an Udiyar, a landlord who was administrating the then laws and order of the area, the path for him to enter into the politics was very easy and comfortable. These circumstances brought him to the conditio…
-
- 3 replies
- 3.4k views
-
-
விவசாயிகள் போர்வையில் 2000 சிங்களவர்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திட்டம் ஜன 22, 2013 வடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2000 சிங்கள குடும்பங்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திரைமறைவில் திட்டம். இதற்கான வேலைகள் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குடி யேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மனிதாபிமான விவசாய உற்பத்தி நடவடிக்கைச் செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்…
-
- 0 replies
- 317 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலர் பொன்காந்தன் கட்டுநாயக்கவில் கைது [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 04:33 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தனிப்பட்ட செயலரான பொன்காந்தன் எனப்படும் பொன்னம்பலம் லக்ஸ்மிகாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா செல்ல முயன்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிளிநொச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, விசாரிக்கவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிட…
-
- 4 replies
- 861 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கண்டித்து, மீள்குடியமர்ந்த மக்கள் வவுனியா செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்கள். எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை காலை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்வார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தில் 70 சதவீதமான வீடுகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும் மீளக்குடியமர்ந்த மக்கள் குற்றம் சுமத்தினார்கள். ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் த…
-
- 0 replies
- 479 views
-
-
பௌத்தர்கள் இயல்பாக தானம் செய்யும் குணம் கொண்டவர்கள். இதனால் இன்று பௌத்த மதத்தை சாராத மற்றைய மதத்தவர்கள் பௌத்த விகாரைகளின் நிலத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளுகிறார்கள் என மகிந்தா தெரிவித்தார். பௌத்த மகா சங்கத்தை சேர்த்த புத்த துறவிகள் எந்த இன, மத பாகுபாடும் இல்லாமல் நிலங்களை மற்றைய மத வழிபாடுகளுக்கு வழங்கினர் என மகிந்த மேலும் தெரிவித்தார். Most non-Buddhists use Buddhist temple land-MR President Mahinda Rajapaksa said that most non-Buddhists were conducting their religious activities in places, which belonged to Buddhist temples or sacred lands. “The Venerable Buddhist priests have given these lands to non-Buddhists because Buddhism teaches us to give donations…
-
- 2 replies
- 672 views
-
-
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரியளவிலான முன்னேற்றத்தைக் காண்பிக்காததன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரிக்கப்பட வேண்டியவை என்று நல்லிணக்க ஆணைக்குழுவால், இனங்காணப்பட்ட குறிப்பிட்ட சில சம்பவங்களில், சனல் 4 காணொளி உள்ளிட்ட ஏழு அல்லது எட்டு சம்பவங்கள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான …
-
- 4 replies
- 625 views
-
-
பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை பூரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டுமென கனேடிய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் அமான்டா ரெய்ட் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக பெறுமதிகள், அரசியல் நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்…
-
- 27 replies
- 1.5k views
-
-
இருபது வருடங்கள் கடந்தும் புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடிப்பதாக படைத்தரப்பு கூறுகின்றது: 21 ஜனவரி 2013 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இருபது வருடங்கள் கடந்தும் புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடிப்பதாக படைத்தரப்பு கூறுகின்றது. இன்று பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு வலயமென பேணப்படும் இப்பகுதிகளில் ஏனைய மனிதநேய கண்ணிவெடியகற்றல் அமைப்புக்கள் கண்ணி வெடிகளை அகற்ற தடை விதிக்கப்பட்டே உள்ளது. இந்நிலையில் இராணுவ கண்ணி வெடியகற்றல் பிரிவே கண்ணி வெடியகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. …
-
- 1 reply
- 895 views
-
-
மகிந்த ராஜபக்ச வடக்கு மீனவர்களை சந்திக்கவுள்ளார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- 21 ஜனவரி 2013 இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் பேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு மீனவர்களை நாளை சந்திக்கவுள்ளார். இதற்கென தெரிவு செய்யப்பட்ட அரச ஆதரவு மீனவாகள் 200 பேர் யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்பு சென்றடைந்துள்ளனர். இதனிடயே போருக்கு பின்னரான வட மாகாண கடற்றொழில் சமூகங்கள் தொடர்பாகவும் இந்திய இழுவைப் படகுகளினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பல்கலைக்கழகங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இலங்கையின் வடபிராந்தியத்தில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவக்குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் ரு{ஹணு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயலமர்வு ஒன்றை யாழ்பல்கலைக்கழ…
-
- 1 reply
- 483 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தினையடுத்து 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 80 ஆயிரம் விவசாயிகளுக்கு கடனுதவிகளும் அவர்களது தேவைகளுக்காக 500 உழவு இயந்திரங்களும் இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது என யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் இரண்டாவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள யாழ். கிளை வளாகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு 175 படகுகள் இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 350 குடும்பங்கள் பயனடைகின்றனர். அதுபோல குருநகர் மீன் வலை உற்பத்…
-
- 1 reply
- 267 views
-