Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. By J.Stephan தமிழர் விவகாரங்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் நீதியாகவோ நியாயமாகவோ நடந்துகொள்ளவில்லை. அதே போன்று எமது விடயங்களில் நீதித்துறை சரியான கையாளுகைகளை மேற்கொள்ளவில்லை. நாம் இவ்வாறு கூறுவதால் மேற்படி இருதரப்புக்கும் ஆதரவு என்றோ அல்லது எதிர்ப்பு என்றோ அர்த்தமில்லை. இன்றைய நிலையில் இத்தகைய கருத்தினை முன்வைக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க மீதான தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது…

  2. மஹிந்த அரசுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முண்டு கொடுக்கப்போகின்றதா? அல்லது விழித்தெழப் போகின்றதா? இந்தக் கேள்விக்கு ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதில் கூற வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றி மஹிந்த அரசுக்கு முண்டு கொடுத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நாடாளுமன்றில் நிறைவேறிய "திவிநெகும' சட்டத்துக்கு ஆதரவளித்து சிறுபான்மை இனத்தவர்களின் வயிற்றில் அடித்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: "திவிநெகும' சட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்த அடுத…

  3. நாடாளுமன்றத்தை தாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடசியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், நீதிமன்றங்களின் சுயாதீன தன்மைக்காக தமது கட்சி எப்போதும் முன்னிலைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/51240

    • 0 replies
    • 738 views
  4. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா தனது மூலோபாய மற்றும் இராணுவ நலன்களை அடைந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன் அயல்நாடுகள் தாம் அதிருப்தியடைந்ததற்கான எடுத்துக்காட்டாக 'பங்களாதேஸ் போர்' மற்றும் சிறிலங்காவில் 'இந்திய அமைதி காக்கும் படை' பணியில் ஈடுபடுத்தப்பட்டமை போன்றன அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றன. பாகிஸ்தான் போர் மூள்வதில் இந்தியா எந்தவொரு சதியிலும் ஈடுபடவில்லை என்பதை இதன் அயல்நாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. பாகிஸ்தான் விட்ட சொந்தத் தவறே பங்களாதேஸ் யுத்தம் ஆரம்பமாகக் காரணமானது. இதேபோன்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வேண்டுகோளின் பேரிலேயே சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. இந்நிலையில் …

  5. முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள் மலேசியா நாட்டினுடைய சக்தி அறவாரியம் மூலம் பெறப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதேச சபையின் தலைவர் அ.தனிநாயகம் மக்களிடம் கையளித்தார். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியிலும், கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வன்னியில் பெய்த கனமழையினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக்தி அறவாரியம் குறித்த உதவிகளை வழங்கியிருந்தது. நட்டாங்கண்டல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பத்தினருக்கும், மூன்று முறிப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினருக்கும், கரும்புள்ளியான் கிராம…

  6. யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 28 ஆயிரத்து 392 மெற்றிக் தொன் மீன் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள புள்ளி விவரங்கள் இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றன. அந்தப் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் 2 ஆயிரத்து 182.3 மெற்றிக் தொன் மீன்பிடிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 451.1 மெற்றிக் தொன் மீனும் மார்ச் மாதம் 2 ஆயிரத்து 396.4 மெற்றிக் தொன் மீனும் ஏப்ரல் மாதம் 2 ஆயிரத்து 2.293.5 மெற்றிக் தொன் மீனும் மே மாதம் 2 ஆயிரத்து 430.6 மெற்றிக் தொன் மீனும் ஜூன் மாதம் 2 ஆயிரத்து 342.1 மெற்றிக் தொன் மீனும் ஜூலை மாதம் 2 ஆயிரத்து 300.7 மெற்றிக் தொன் மீனும் ஓகஸ்ட் மாதம் 2 ஆயிரத்து 354.3 மெற்றிக…

  7. சிறிலங்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாகவும், இந்த நிலங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. "எனது சொந்த வீட்டுக்குச் செல்ல நான் விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை" என 43 வயதான இரு பிள்ளைகளின் தாயாரான, முல்லைத்தீவு மாவட்டத்தின் சீனியமோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு ஆங்காரமுத்து உதயகுமாரி தெரிவித்துள்ளார். "நாங்கள் எமது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களிலும் உறவுகளின் வீடுகளிலும் வாழ்ந்து …

  8. -எம்.சுக்ரி கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 62,240 குடும்பங்களைச் சேர்ந்த 220,525 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டகளப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலைவரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 135 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,451 குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரம்படித்தீவு பலநோக்கு மண்டபம், பூவாக்காடு பாடசாலை மண்டபம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந…

  9. நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையை ரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பேணிப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினால் அதற்கு முழுமையான ஆதரவளிக்கப்படும். நாட்டில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அச்சுறுத்தப்படுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைச்சர் ஒருவரின் தேவைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸார் இந்த விசாரணைகளை வேறு திசைக்கு திருப்பியுள்ளனர். ஆளும் கட்சி அமைச்சர்கள் தேங்காய் ஒன்றுக்கும் கொலை செய்து கொள்ளும் ஓர் யுக…

  10. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, உறுதி செய்திருந்தார் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கையுடன் கனடா பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகளை எட்ட முடியும் என அவுஸ்திரேலியா பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையாக அமையும் என தெரிவித்துள்ளது. இதேவேளை, மனித உரிமை நிலைமைகளில் மாற்…

  11. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை உடனடியாகக் கிராம சேவையாளர்கள் மூலம் தமக்குச் சமர்ப்பிக்குமாறு இராணுவத்தினர் பிரதேச செயலகங்களைக் கேட்டுள்ளனர். ஒரு சில பிரதேச செயலகங்களுக்கு நேற்றுச் சென்ற இராணுவ அதிகாரிகள் மாணவர்களின் விவரங்களை இன்று காலை தமக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மாவீரர் தினத்தையொட்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து 4 பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவர்களை விடுவிக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அழுத…

    • 2 replies
    • 756 views
  12. சிறீலங்காப் படையினை சேர்ந்த சிப்பாய் ஒருவர் புலிகளுக்கு தகவல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் ஜன 11, 2013 புலிகளுக்கும் படையினருக்குமிடையே யுத்தம் நடைபெற்ற 2007ம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காப் படையினை சேர்ந்த சிப்பாய் ஒருவர் புலிகளுக்கு தகவல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றார். பனாகொடை படை முகாமில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எம்.சமன் சுஜீவ என்ற படைச் சிப்பாயே மேற்படி குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றார். புலிகளின் பணத்திற்காக படையின் பல்வேறு தகவல்களையும் சிறீலங்காவின் கேந்திரங்கள் தொடர்பான தகவல்களையும் இவர் புலிகளுக்கு வழங்கியமை புலன்விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. ரயில் ஒன்றிலிருந்து வீழ்ந்து நிரந்தர அங்கவீனனாக உள்ள இவர் மீது க…

  13. பதவி விலகுவாரா மேர்வின்: களனி தொகுதி அமைப்பாளாராக பஷில்? By General 2013-01-11 12:30:20 களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவி விலகும்படி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலை மீதான விசாரணைகள் முடியும் வரை மேர்வினின் தொகுதி அமைப்பாளர் பதவியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்பதவிக்கு பஷில் ராஜபக்ஷவை தற்காலிகமாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹசித்த மடவலவின் கொலையுடன் மேர்வின் சில்வாவே த…

  14. தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கத்தோலிக்க ஆயர் குழுவிடம் வேண்டுகோள் 11 ஜனவரி 2013 வன்னியில் இறுதிப்போரின் போது காணாமல்போன எமது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து எமக்குத் தெரியப்படுத்துங்கள் என நேற்று வன்னிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் குழுவிடம் கண்ணீர் மல்கியவாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர் முல்லைத்தீவுப் பகுதி பெற்றோர். ஆயர்களை சூழ்ந்துகொண்ட அவர்கள் கதறி அழுதவாறு கைகளை ஏந்திவிடுத்த இந்தக் கோரிக்கை அங்கு சென்றிருந்த ஆயர்களின் மனங்களையும் நெகிழவைத்தது. வன்னி மக்களின் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக இலங்கை ஆயர் மன்றத்தின் தலைவர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 10 ஆயர்களைக் கொண்ட குழு அங்கு பயணத்தை ம…

  15. யாழ் பல்கலை மாணவர்களை எச்சரித்து வீடுகளுக்கு கடிதங்கள்; அச்சத்தில் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குட…

  16. 26 ஆம் 27 ஆம் திகதிகளில் யாழில் 'டெலோ' வின் எட்டாவது தேசிய மகாநாடு! [Friday, 2013-01-11 09:25:38] தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த மகா நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தலைவர்கள், செயலாளர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காண சாத்வீக ரீதியான உரி…

  17. நீதியின் போராட்டம்... வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 15:36 சிங்களவருக்கே இந்த நிலையாயின் தமிழன் 1956 முதல் எவ்வளவை அனுபவித்திருப்பான் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குறைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களையும் அதனை தடுப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண)

  18. ரிசானாவின் சடலம் சவூதியில் அடக்கம் வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 15:20 0 COMMENTS -றிப்தி அலி மரண தண்டனைக்கு உள்ளான இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் சடலத்தை கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது என வெளிநாட்டு அமைச்சின் ஊடக பேச்சாளராக சரத் திசாநாயக்க தெரிவித்தார். எனினும் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார். குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிற்கு நேற்று புதன்கிழமை மரண த…

  19. யாழ் குடாநாட்டில் மழை வெள்ளத்தினால் சுமார் 1648 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைந்த தகவல்களின் அடிப்படையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் குடாநாட்டில் தொடந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஊர்காவற்றுறையில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 318 பேரும், பருத்தித்துறையில் 277 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 3 பேரும், வேலணையில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், சண்டிலிப்பாயில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், கரவெட்டியில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 571பேரும் பாதிப்படைந்…

  20. "ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது" மேர்வின் சொன்னார்? சிங்கள இணையம் கூறுகிறது களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையானது தன்னை சிக்கவைக்க ராஜபக்ஷவினர் மேற்கொண்ட கொலை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், ராஜபக்ஷவினர் செய்த அனைத்தையும் வெளியிட போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியுள்ளார். தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன், ஆனால் ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன். கொலை செய்யப்பட்…

    • 4 replies
    • 610 views
  21. அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரை வார்த்துள்ளார் – சுமந்திரன் அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரைவார்த்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாசுதேவ நாணயக்கார தனது சிறு பிராய ஹீரோக்களில் ஒருவர் எனவும், வாசுதேவவை பாராளுமன்றில் சந்தித்தமை பெருமையளிப்பதாக வீட்டு உறவினர்களிடம் கூறி பெருமிதம் அடைந்ததுண்டு என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அந்த நடவடிக்கைகளுக்காக வெட்கமடைவதாக சுமந்திரன் …

  22. சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ரஞ்சன் நாமநாயக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள் பெற்றோர்கள் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார். புத்தர் சிலையை வைத்து தொழுதார் என்று ஒருவரும், பைபிளை வைத்திருந்தாக மற்றொருவரும் சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ் புக்கில் பெற்றதான குற்றச்சாட்டில் மற்றொருவரும், மந்திரம் ஓதி மண…

  23. -அழகன் கனகராஜ் நல்லதற்கும் சிதறு தேங்காய் அடிப்பார்கள், சாபத்திற்கும் சிதறு தேங்காய் அடிப்பார்கள், ஆனால் நீதிமன்ற வளாகத்தில் சிதறு தேங்காய் அடித்து, பிரீத் நூல் கட்டிக்கொண்டு தெரிவுக்குழுவுக்கு பிரதம நீதியரசர் சென்றது சரியா? தவறா? போன்ற வாதப்பிரதிவாதங்கள் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இடம்பெற்றன. அமைச்சருக்கும் ஊடாகவியலாளர்களுக்கும் இடையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. முன்னதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, நாடாளுமன்ற தெரிவுக்குழு, உயர்நீதிமன்…

  24. -அழகன் கனகராஜ் உயர்நீதிமன்றத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது அரசியலமைப்பு வியாக்கியானம் அல்ல. அரசியலமைப்பு திருத்தமாகும். அதனை சபாநாயகர் உட்பட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனையடுத்தே அது தொடர்பிலான விவாதம் முன்னெடுக்கப்பட்டது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், நாடாளுமன்றம் அரசியலமைப்பை பலமானதாக ஏற்றுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே அரசியல…

  25. -ஒலிந்தி ஜயசுந்தர பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் இன்றுடன் முடியப்போவதில்லை. இது தொடக்கமே தவிர முடிவல்ல என்று கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சட்டத்தரணிகள் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் தெரிவித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கருத்து தெரிவிக்கையில், எமது கருத்தை இந்த அரசாங்கம் கவனத்தில் எடுத்து இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.சர்வாதிகாரத்திற்கு முடிவுக்கட்டவேண்டும். பொல்பொட், இடி அமின் போன்றோரின் சர்வாதிகாரம் போன்று இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.