ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 'பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு" என்ற ஓர் அணியின் கீழ் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற 'பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு" ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இக் கூட்டமைப்பில் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வ…
-
- 0 replies
- 523 views
-
-
நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்� என பிரதான எதிர்க்கட்சியின் கொறடா ஜோன் அமரதுங்க கூறினார். பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே ஜோன் அமரதுங்க எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டையை நவீனமயமாக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோட்டை அபிவிருத்தித் திட்டத்தை இப்போது பாதுகாப்பு செயலாளர் பூரணமாக்கி வருகின்றார். இது பாராட்டுக்குரிய விடயமாகும். நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் வினா…
-
- 0 replies
- 285 views
-
-
புலிகள் மீண்டும் தலைத்தூக்கக்கூடும் என்றும் யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறிக்கொண்டு புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடுகின்றனர். ஆனால்,புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர். என்று ஜனநாய சோசலிச கட்சியின் உறுப்பினர் தம்மிக சில்வா தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜே.வி.பியினர் மலேரியா,டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணிக்கவில்லை அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியையே மேற்கொண்டத…
-
- 1 reply
- 881 views
-
-
சம்பந்தனுக்கு கோடிகள் வழங்கப்பட்டதா? அல்லது, கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா? - Article [saturday, 2012-12-08 12:08:14] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா, சம்பந்தன் அரசிலில் அந்தர் பல்டி அடிப்பதில் கில்லாடி என்பதும், தனக்கான தேவைக்காக எதையும் கைவிடக் கூடியவர் என்பது அனைவரும் புரிந்தே வைத்துள்ளார்கள். வடக்கு - கிழக்கு என்ற பிரிவு வாதம் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலப் பகுதியில் கிழக்குடன் நெருக்கமான உறவுகளைத் தக்க வைத்துக்கொள்வது என்பது வடக்கிற்கு மிகப் பெரும் சவாலான விடயம். கருணாவினால் தூண்டப்பட்ட பிரதேசவாதம் எந்த அளவிற்குத் தமிழின அழிப்பிற்குத் துணையாக இருந்தது என்பதும், அதை நம்பிய கிழக்கு மக்கள் கிழக்கில் தம்மைத் தாமே ஆளும் மாகாண உரிமையை இழந்த வரலாறும் …
-
- 0 replies
- 419 views
-
-
பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை அங்கு தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வுகிடைக்கும் 07 டிசம்பர் 2012 அருட்தந்தை சக்திவேல் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம நீதியரசரே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை என்று கூறும் போது, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அழைக்கும் அந்த தெரிவுக்குழுவிலும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா? என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்புகின்றார். கடந்த 4ம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட யாழ் மாணவர்களை விடுவிப்பதற்கான அமைப்பினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அத்துடன் இலங்கையில் இரு…
-
- 0 replies
- 274 views
-
-
வடக்கு இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. புலி உறுப்பினர்கள் என இளைஞர் யுவதிகளை கைதுசெய்தனர். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலைச்செய்தனர். அவ்வாறானவர்களை புலியென மீண்டும் கைதுசெய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கை உலகில் எங்குமே இல்லை என்று புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிஸ கட்சியின் உறுப்பினர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்ச…
-
- 0 replies
- 420 views
-
-
(அழகன் கனகராஜ்) 'யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பங்கேற்கவில்லை. இந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிள்ள நிப்போன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், நவ சம சமாஜக் கட்சியின் சார்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன,ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் பாஸ்கரா,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,ஜனநாய சோசலிச கட்சியின் சார்பில் தம்மிக சில்வா, புதிய ஜனநாய மாக்ஸிச லெனினிஸ கட்சியின் சார்பில…
-
- 2 replies
- 759 views
-
-
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மகாநாட்டில் கனடியப் பிரதமர் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பான சுயாதீனமான ஒரு கருத்துக் கணிப்பை கனடா மிரர் இணையம் தமிழர் விவகாரத்தில் கனடாவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான செயலாற்றி வரும் அமைப்பான கனடிய மனிதவுரிமை மையத்துடன் [Canadian Human Rights Voice – CHRV ] இணைந்து நடத்துகிறது. விஞ்ஞான, தரவு பூர்வமான கணிப்பிற்காக polldaddy.com என்ற இணையத்தின் துணையுடன் நடத்தப்படும் இக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கனடியப் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு கனடாவில் ஆளும்கட்சியுடன் ஆரோக்கியமான உறவைப் பேணும் கனடிய மனிதவுரிமை அமைப்பினால் [www.chrv.ca ] சமர்ப்பிக்கப்படும். ஈழத்தமிழினம் ஒரு இக்கட்டான இராணுவ அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் இன…
-
- 1 reply
- 492 views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். அண்மையில் வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது ஜனாதிபதி தேநீர் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டுள்ளார். இதன் போது பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு ஜனாதிபதி, கூட்டமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி திகதி ஒன்றை வழங்கினால், பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கத் தயார் என அவர் குறிப்பிட்ட…
-
- 8 replies
- 663 views
-
-
இலங்கை அரசு தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி எடுத்தது எனவும், எனவே தற்போது கனடாவில் அகதிக் கோரிக்கை சமர்ப்பித்துள்ள இராணுவ அதிகாரி தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கூற்றுக்கள் உண்மையாக இருக்கலாம் எனவும் சிவாஜிலிங்கம் கனடிய ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். கனடாவில் அகதிநிலை கோரியுள்ள கப்டன் ரவீந்ரா வதுடுரா பண்டனகே என்ற இலங்கை இராணுவ அதிகாரி தனது உயரதிகாரியான கேணல் அத்தபத்து தன்னை சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குக் குண்டு வைக்குமாறு கேட்டதாகவும் ஆனால் தான் அவ்வாறு செய்யவில்லையென்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நசனல் போஸ்ட் என்ற இந்தப் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம், இந்த இராணுவ வீரர் சொல்வதை தன்னால் …
-
- 3 replies
- 486 views
-
-
கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 'பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு" என்ற ஓர் அணியின் கீழ் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற 'பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு" ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தினுடைய மூளை. அந்தவகையில் அரசாங்கம் ஒரு இனத்தின் மீது கைவைத்து அந்த இனத்தின் எதிர்காலத்தை அழிக்க முற்படுகின்றது என்பதை யாழ். பல்கலைக்கழக மாண…
-
- 0 replies
- 541 views
-
-
(கெலும் பண்டார, யொஹான் பெரோரா) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா விசாரணையை பகிஷ்கரித்தாலும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் விசாரணையைத் தொடர வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கூட்டமைப்பின் பங்காளிகளுக்கு கூறியுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிதரம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையிலிருந்து வெளியேற தீர்மானித்த பின் உருவாகியுள்ள நிலைமை பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்த விளக்கமளிப்பின் போது, புதிய நிலைமையை வைத்துக்கொண்டு சர்வதேச சமூகத்தில் சில பிரிவினர் இலங்கை மீது குறை காணக்கூடுமோ எ…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைத் தீவில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு நேரடியாக இலங்கையைக் கண்டிப்பதா அல்லது முற்றாகவே மாநாட்டிற்குச் செல்லாமல் விடுவதா என்ற இரண்டு முடிவுகளில் எதை எடுப்பது என்பது குறித்து கனடியப் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்த ஐம்பத்து நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகள் அவையின் முடிவெடுக்கும் திறன்வாய்ந்த நாடுகளாக நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாநது, கனடா, இந்தியா, தென்னாபிரிக்கா என ஆறு நாடுகளே தலைமைத்துவ நிலையில் இருக்கின்றன. இதில் கனடா கலந்து கொள்ளாமல் விடுமிடத்து ஒரு பாரிய "தலைமை" வெற்றிடம் ஏற்படும் என்பதோடு கனடா குறித்த ஏனைய நாடுகளின் பார…
-
- 5 replies
- 654 views
-
-
இலங்கை சென்று அங்கு நடந்தவற்றைக் கண்டிப்பதா? இலங்கை செல்லாமல் தவிர்ப்பதா? சிந்திக்கிறார் கனடியப் பிரதமர் Peter December 07, 2012 Canada இலங்கைத்தீவில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு நேரடியாக இலங்கையைக் கண்டிப்பதா அல்லது முற்றாகவே மாநாட்டிற்குச் செல்லாமல் விடுவதா என்ற இரண்டு முடிவுகளில் எதை எடுப்பது என்பது குறித்து கனடியப் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்த ஐம்பத்து நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகள் அவையின் முடிவெடுக்கும் திறன்வாய்ந்த நாடுகளாக நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாநது, கனடா, இந்தியா, தென்னாபிரிக்கா என ஆறு நாடுகளே தலைமைத்துவ நிலையில் இருக்க…
-
- 0 replies
- 564 views
-
-
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணகைள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினர் இறுதி அறிக்கையை சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பானவை எனத் தெரிவித்து பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நேற்று வெளிநடப்புச் செய்திருந்தார். இன்றைய தினம் நடைபெற்ற விசாரணைகளிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள…
-
- 0 replies
- 523 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா திடிரென வெளிநடப்பு செய்துள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூன்றாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே, தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறிய பிரதம நீதியரசர் அமர்விலிருந்து வெளியேறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54256-2012-12-06-12-48-12.html
-
- 8 replies
- 640 views
-
-
இலங்கையில் புதிய தேசிய அடையாள அட்டை ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைகள் அச்சிடப்பட உள்ளது. புதிய தேசிய அடையாள அட்டை அச்சிடுதல் தொடர்பிலான விலை மனுக் கோரல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டையொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், இதில் இரத்த மாதிரி உள்ளிட்ட சகல விடயங்களும் உள்ளடக்கப்பட உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் சகல தேசிய அடையாள அட்டைகளின் தகவல்களும் ஏற்கனவே கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச தரத்திற்கு அமைவான வகையில் இந்த புதிய தேசிய அடையாள அட்டை அம…
-
- 2 replies
- 429 views
-
-
வடக்கில் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து வருகின்ற அரசாங்கம் அங்கு இராணுவக் குடும்பங்களை நிரந்தரமாகக் குடியேற்றி சிங்களக் குடிப்பரம்பலை விருத்தி செய்யவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம் சாட்டினார். ஐந்து இலட்சம் தமிழ் மக்களைக் கொண்ட வடக்கில் இராணுவத்தின் 15 படைப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ஒன்றரை இரட்சம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த சம்பந்தன் எம்.பி புலிகளை அழித்து விட்டதாக யாரும் பெருமை பேசிக்கொள்ளக்கூடாது என்றும் மனித உரிமை பாதுகாக்கத் தவறியதன் காரணத்தினால் புலிகள் தமக்குத் தாமே அழிவினை ஏற்படுத்திக்கொண்டதாகவும் குற…
-
- 2 replies
- 389 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளுகளினால் சர்வதேச ரீதியில் மேலும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையே இலங்கைக்கு ஏற்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே பல்வேறு மனித உரிமைகள் பிரச்சினைகள் இலங்கைக்கு எதிராக காணப்படுகின்றன. இவற்றை எதிர் கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளாமல் சர்வதேச அழுத்தங்களையும் தலையீடுகளையும் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றமை நாட்டின் நிலையான பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த பண்டார கூறுகையில், சர்வதேச நாடுகளின் கழுகுப் பார்வையில் இலங்கை உள்ளது…
-
- 1 reply
- 358 views
-
-
யாழ்.குடாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புறந்தள்ளி அண்மைக்காலமாக ஆளும் தரப்பு முண்டியடித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் உள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன. சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள யாழ்.பல்கலைக்கழக விவகாரத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள் எவற்றிலும் அமைச்சரோ அவரது தரப்புகளோ அழைக்கப்பட்டு இருக்கவில்லை. மறுபுறத்தே அவரது அரசியல் போட்டியாளரும் சுதந்திக்கட்சி அமைப்பாளருமான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகியோரே அழைக்கப்பட்டிருந்தனர். துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு ஈடாக அவர்கள் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கத்துருசிங்காவினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் முக்கியமளிக்கப்பட்டிருந்தனர். (படம் - யாழ் பல்கலைக்கழகம் குறித்த கலந்துரையாடல்) அதே …
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக பிரித்தானிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்றை தினம் இவர்கள் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 29 பேரினுள் 25 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்று பிரித்தானியா சென்று விசா முடிவடைந்த நிலையில் அங்கு தங்கியிருந்தவர்களும், …
-
- 0 replies
- 493 views
-
-
வடக்கில் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து வருகின்ற அரசாங்கம் அங்கு இராணுவக் குடும்பங்களை நிரந்தரமாகக் குடியேற்றி சிங்களக் குடிப்பரம்பலை விருத்தி செய்யவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம் சாட்டினார். ஐந்து இலட்சம் தமிழ் மக்களைக் கொண்ட வடக்கில் இராணுவத்தின் 15 படைப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ஒன்றரை இரட்சம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த சம்பந்தன் எம்.பி புலிகளை அழித்து விட்டதாக யாரும் பெருமை பேசிக்கொள்ளக்கூடாது என்றும் மனித உரிமை பாதுகாக்கத் தவறியதன் காரணத்தினால் புலிகள் தமக்குத் தாமே அழிவினை ஏற்படுத்திக்கொண்டதாகவும் குறிப்…
-
- 0 replies
- 301 views
-
-
போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை தூதுவராக ஏற்காதீர்! - தென்னாபிரிக்காவிடம் உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!! தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தென்னாபிரிக்க அரசிடம் உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படைத்தரப்பில் முக்கிய பங்கு வகித்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது ஐக்கிய நாடு;கள் சபைக்கான சிறிலங்காவின் பிரதித்தூதுவராக கடமையாற்றி வருகின்றார். இப்போரில் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சரணடைந்த போராளிகள், பொதுமக்கள் படுகொலை செய்யப்பட…
-
- 2 replies
- 692 views
-
-
இரண்டாம் இணைப்பு 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் ஒரு மணி நேரப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். இன்று 12.00மணி தொடக்கம் 1.00மணிவரை இன்று நாடுமுழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் தாதியர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தாதியர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை, மந்திகை, சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஆகியனவும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடாத்தின. இதன்போது முன்வைக்கப்பட்ட 5 அம்சக் கோரிக்கைகளாக, …
-
- 1 reply
- 380 views
-
-
மன்னார் ஆயர் புலிகளின் சார்பில் குரல் கொடுக்கின்றார் – நிகலோஸ் செல்வராஜ் அருட்தந்தை 07 டிசம்பர் 2012 மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் குரல் கொடுத்து வருவதாக அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயர் ராயப்பு ஜோசப், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் இழப்பிற்கு படையினரே காரணம் என ஆயர் ராயப்பு ஜோசப் குற்றம் சுமத்திய போதிலும், புலிகளின் கொடுமைகள் குறித்து வாய் திறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத மடு தேவாலயம் உள்ளிட்ட புனிதப் பகுதிகளை புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கு படையினர் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என அவர் கு…
-
- 4 replies
- 555 views
-