ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து ரஷ்யா உதவும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் ஏ. கர்ச்சாவா தெரிவித்தார். இந்த பேரவையில் அடுத்த வருடம் ரஷ்யா அங்கத்துவம் பெறாவிட்டாலும் தொடர்ந்து உதவும் என அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் கொழும்பு 7, எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் உள்ள பள்ளிவாசல் புதிய ரஷ்ய தூதரக வளவை அண்மித்ததாக உள்ளதால் தூதரகத்தின் புதிய கட்டிடம் அமையும் போது ஏற்படக் கூடிய நடைமுறை பிரச்சினை பற்றியும் தூதுவர் எடுத்து கூறினார்…
-
- 2 replies
- 308 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்களில் மேலும் 10பேரை உடனடியாக ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு உத்தரவு 06 டிசம்பர் 2012 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் மேலும் பத்துப்பேரினை உடனடியாக ஒப்படைக்குமாறு இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் தலைமை துணைவேந்தருக்கு அறிவித்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரினில் மூவர் தொடர்ந்தும் வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் வசம் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பத்துப்பேரது பெயர்ப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓப்படைக்கப்பட்ட பெயர் பட்டியலின் பிரகாரம் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் ஒவ்வொரு பீடங்களினதும் தலைவர்களுடன் மருத்துவ பீடத்தை சேர்ந்த ஜவரது பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. எனினும் பெரு…
-
- 2 replies
- 576 views
-
-
இராசீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூன்று தமிழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் அனைவரது தூக்குத்தண்டனையையும் இரத்து செய்யக்கோரியும் மரண தண்டனையை ஒழிக்கக்கோரியும் போராடி வரும் மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதியரசர் கிருஷ்ணய்யர் 98 அகவை பிறந்த நாள்" நிகழ்வில் பிரபல வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி, பேராயர் சின்னப்பா, நடிகை ரோகிணி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் பல மனிதநேய ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். மரணதண்டனையை ஒழிப்போம்: நடிகை ரோகிணி உரை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாடகர் உன்னி கிருஷ்ணன் குரலில் மரண தண்டனைக்கெதிரான பாடல் "உய…
-
- 0 replies
- 439 views
-
-
மலேசியாவில் உள்ள இந்திய குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் இரத்து செய்யப்படவில்லை என கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ மலேசியாவுக்கு வருவதற்கு இந்திய குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தது உண்மை. ஆனாலும் ஜனாதிபதியின் குறித்த விஜயம் எதிர்ப்பினால் இரத்து செய்யப்படவில்லை. அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்த இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்னவை பார்க்கபோனதால் மலேஷிய விஜயத்தை இரத்து செய்ததாக மலேஷியாவுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தவிர்க்க முடியாத காரணங்களினால் மலேசியாவுக்கான அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டதாக நவம்பர் 23ஆம் திகதியே ஜனாதிபதி எங்களுக்கு அறிவ…
-
- 0 replies
- 376 views
-
-
வான்வெளி சுற்றுவட்ட பாதையில் ஏவப்பட்டுள்ள தொடர்பாடல் செய்மதிபற்றி முரண்பாடான செய்திகள் வந்துள்ள பின்புலத்தில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டள்ள செய்மதி சுற்றுவட்ட பாதையை சீனா பயன்படுத்துகின்றதா என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இலங்கை ஊடகங்கள் இந்த செய்மதியை 'சுப்ரிம் சற்-1' என குறிப்பிடுகின்றன. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இதனை சீனா ஏவிய 'சைனா சற் 12' என குறிப்பிடுகின்றன என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். சர்வதேச சட்டப்படி இலங்கையின் விண்வெளியை சகல நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த முடியும். சர்வதேச ஒழுங்கின்படி ஒவ்வொரு நாடும் தான் ஏவ…
-
- 0 replies
- 505 views
-
-
ஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2012 09:56 0 COMMENTS ஊழல் அற்ற நாடுகளின் தரவரிசை பட்டியலில் 176 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் 40 புள்ளிகளை பெற்று இலங்கை 79வது இடத்தில் உள்ளது. உலகில் ஊழல் நிறைந்த நாடுகள் தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரம் சீனா 80 ஆவது இடத்திலும் இந்தியா 94 ஆவது இடத்திலும் இருக்கின்றன. தெற்காசிய நாடுகளான இந்தியா,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்கின்றது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த பட்டியலின் பிரகாரம் டென்மார்க் ஊழல் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் கூடிய …
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை உணர்ந்தேன். யாழ் பல்கலையில் கல்வி பயிலும் ஒரு சிங்கள மாணவியின் Tweet மொழிபெயர்பு [Monday, 2012-12-03 19:49:25] நாங்கள்புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கிவிட்டிருக்கிறோம். 26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது. மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள். தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்.. மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்ம…
-
- 49 replies
- 4.7k views
-
-
முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக : 06 டிசம்பர் 2012 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக புனர்வாழ்வு பயிற்களை பெற்ற 400 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் நியமிக்கப்பட உள்ளனர். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின்; ஆலோசனையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸின் வழி நடத்தலின் கீழ் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. முன்பள்ளி ஆசிரியர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளவர்களின் குறித்த பிரதேசங்…
-
- 0 replies
- 476 views
-
-
தென்பிராந்திய வான்பரப்பில் அதிசய கோள்? வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2012 11:16 0 COMMENTS முன்னொருபோதும் காணாதளவு பிரகாசத்துடன் கூடிய கோள் ஒன்றை தென்பிராந்திய வான் பரப்பில் காண முடிந்ததாக அம்பலாந்தோட்டை பிரதேசவாசிகள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் காணக்கூடியதாக இருந்த மேற்படி கோளானது, மிகப்பெரிய நட்சத்திரம் போன்று அதிகளவு பிரகாசத்துடன் தோற்றமளித்துள்ள போதிலும் நள்ளிரவு 12 மணியளவில் அதன் பிரகாசம் சாதாரண நட்சத்திரத்தின் பிரகாசமளவுக்கு குறைவடைந்ததாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர். அத்துடன், மேற்படி கோள் இன்று அதிகாலையளவில் தொலைதூரத்துக்கு பயணமாவதை அவதானிக்க முடிந்ததெனவும் அம்மக்கள் தெரிவித்தனர். சாதாரண கண்களால் பார்க்குமிடத்து அக்கோள் மினுமினுப்பதைப…
-
- 0 replies
- 477 views
-
-
ஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கைது 06 டிசம்பர் 2012 ஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபட்டிருந்த 17 வெளிநாட்டுப் பிரஜைகளை ஸ்கொட்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86242/language…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டு நாடாகச் சீனா மாறியுள்ளது என்று சீனாவிலுள்ள இலங்கையின் தூதரகத்தின் வணிக அலுவலர் ஷிரானி அரியாராத்தன அம்மையார் 4ஆம் நாள் கூறினார். 4வது சீன வெளிநாட்டு முதலீட்டு ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையில் அவர் அன்று கலந்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளில், இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன. குறிப்பாகத் துறைமுகம், இருப்புப் பாதை, விருந்தகம் முதலிய அடிப்படை வசதிகள் கட்டுமானம், ஆடை உற்பத்தி, பதனீடு முதலிய துறைகளில் இரு நாடுகளின் முதலீடும் ஒத்துழைப்பும் இடைவிடாமல் ஆழமாகி வருகின்றன என்றும் அவர் கூறினார். மேலும், சீன முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கின்றது. சீன அரசு மற்றும் தனியர் முதலீ…
-
- 0 replies
- 444 views
-
-
சிறிலங்காவில் போரின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையை மதிப்பீடு செய்து, அதன் பரிந்துரைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழுவொன்றை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்துள்ளார். ஐ.நாவின் பிரதிச்செயலர் ஜான் எலியாசன் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும்படி கேட்கப்பட்டுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி நியுயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறிவிட்டதாக, அண்மையில் வெளியிடப்பட்ட சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. http://thaaitamil.com/?p=40008
-
- 0 replies
- 548 views
-
-
இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வியாழக்கிழமை நாடாளுமன்ற குழுக்கூட்ட மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்பகுதியைச் சேர்ந்த முற்போக்கு மற்றும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் 13ஆவது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்த…
-
- 1 reply
- 531 views
-
-
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பொலிஸ் மற்றும் படைத்தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார் எனச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாணவர்கள் மூவரினதும் விடுதலை சந்தேகத்துக்கிடமானது என்றும் அவ்வாறுவிடுவிக்கப்படுவதாயினும் அது விரைவில் இடம்பெறக் கூடியது ஒன்றல்ல என்றும் சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்றும் அந்த இணையம் மேலும் கூறியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைக் கைது ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழிநின்று நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது சிறீலங்கா இராணுவத்தினர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல் துறையினர் கூட்டாக நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் கைதான மாணவத் தலைவர்களின் உடனடி விடுதலையை வேண்டியும் ஈழத்தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வன்முறையை வெளிக்கொணர்ந்தும் கனடிய மண்ணில் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின் முன்னேற்பாட்டில் அனைத்து கனடிய பல்கலைக்கழக மாணவர்களினது சகோதர சக யாழ் மாணவர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் பரந்து பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள் செவ்வாய்கிழமை டிசம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ளன. சக சகோதர மாணவர்களைக் காக்க அணிதிரளுமாறு அனைத்து கனடிய மாணவர்களுக்கும் அழைப்ப…
-
- 6 replies
- 735 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் பின்னணியில் அரசு செயற்படுகிறதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ளன. முஸ்லிம்களை இலக்குவைத்து நாடு 100 வருடங்கள் பின்னால் செல்ல முயற்சிக்கின்றது. முஸ்லிம்களை இலக்கு வைப்பதற்காகவே ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றது. இது ஆபத்தான விடயமாகும் என்பதனால் இது தொடர்பில் அரசாங்…
-
- 4 replies
- 596 views
-
-
[size=4]தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் குறித்த தகவல்களை, கனேடிய அதிகாரிகளிடம் வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவ கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே ஒரு மோசடிப் பேர்வழி என்றும், அவர் பொய் சொல்வதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீட்டில் குண்டு வைக்குமாறு தான் மேலதிகாரியால் பணிக்கப்பட்டதாகவும், கப்டன் வடுதுர பண்டாரகே கனேடிய அதிகாரிகளிடம் கூறியிருந்தார். இதுபற்றிய தகவல்கள் நேற்று கனடாவின் நசனல் போஸ்ட் நாளிதழில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்பு…
-
- 3 replies
- 695 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த 1ம் திகதி நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் துன்புறுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை என மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்…
-
- 2 replies
- 704 views
-
-
தென்னாபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று சபையில் தெரிவித்தார். நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கரந்தடிப் படைத்தலைவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீர்வழங்கல், வடிகாலமைப்பு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ மற்றும் …
-
- 39 replies
- 2.8k views
-
-
எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உணர்வுகளை ஜனநாயக ரீதியில் தமது வளாகத்துக்குள் வெளிக்காட்ட முன்வந்தனர். இதனைத் தடுத்த இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக உள்ளே புகுந்து பல்கலைக்கழக மாணர்களைத் தாக்கி…
-
- 2 replies
- 432 views
-
-
வடக்கில் நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்பதுடன் ஆயுதத்தை தூக்குமாறு இந்த அரசாங்கமே இளைஞர்களிடம் கோருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கிளிநொச்சியில் முடிவடைந்த பிரபாகரனின் போராட்டம் தற்போது அளுத்கடை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவளித்துவருவதாகவும் இந்த அரசாங்கம் தெரிவிக்கின்றது. பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் மரணமடைந்தவர்களை நினைவு கூர்வதற்கும் இடமளிப்பதில்லை. நாடாளுமன்றத…
-
- 0 replies
- 686 views
-
-
இந்த அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு ஏன் பயப்பிடுகிறது எனத்தெரியவில்லை என்பதுடன் வட-கிழக்கை பிரித்த நீதிமன்றம் தேசத் துரோகியா? என ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் உறுப்பினர் தம்மிக்க சில்வா கேள்வியெழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்றத்தை அரசாங்கம் தேசத் துரோகி எனக்கூறுகின்றது. அப்படியாயின் வட., கிழக்கை பிரித்த நீதிமன்றம் தேசத் துரோகியா? புலிகளின் தலைவர்களை தம்முடன் வைத்துக்கொண்டு அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது..? மரணமடைந்தவர்களுக்காக தென்னிலங்கையிலுள்ள சிங்கள மாணவர்கள் நினைவு கூர்ந்தால் அதுபற்றி எவ்விதமான பிரச்சினையும் இல்லை எனி…
-
- 1 reply
- 505 views
-
-
லிந்துலையில் கண்ணீர் வடிக்கும் கடவுள் சிலை! [Wednesday, 2012-12-05 18:58:32] லிந்துலை மட்டுகெல தோட்டத்திலுள்ள கடவுள் சிலை ஒன்றிலிருந்து திடீரென கண்ணீர் வடிந்த அதிசய சம்பவமொன்று நேற்று 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுகெல 7 ஆம் இலக்க கொலனியிலுள்ள கடவுள் சிலையிலிருந்தே இந்த அதிசய சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டுகெல தோட்ட மக்கள் கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து திருவிழாக்காலங்களில் கரகம் பாலித்தலுக்காகப் பயன்படுத்துகின்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு நேற்று நண்பகல் வேளையில் ஒருவர் விளக்கேற்றுவதற்கு சென்றபோது சிலையிலிருந்து நீர் வடிந்தோடுவதைக் அவதானித்துள்ளார். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக…
-
- 6 replies
- 889 views
-
-
காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது By Priyarasa 2012-12-05 11:29:34 எவ்வித காரணமும், அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுகளுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள…
-
- 2 replies
- 677 views
-
-
நாம் ஆயுதம் தூக்க வேண்டுமா என்பதை எங்களை எதிர்ப்பவர்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும். அமைதிவழியில் போனவர்களைச் செல்லவிடாது அடிதடிகளைப் பிரயோகித்து மாணவர்களின் ஆவேசத்தைத் தூண்டி இருக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கைத் தீவில் சிறு பான்மையினத்தின் மீதான அடக்குமுறை காட்டப்படுவதை மீண்டுமொருமுறை சர்வதேசத்துக்கு அரசானது மெய்ப்பித்துக்காட்டியுள்ளது. இளைஞர்களின் சக்தியென்பது பலம்மிக்கது. அதனை அழிக்க நினைப்பது அல்லத…
-
- 1 reply
- 541 views
-