ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட இலங்கை விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் இரண்டு தடவை அழைக்கப்பட்டபோதும் அவர் எழுந்திருக்காததை அவதானித்த சபை ஊழியர் ஒருவர் ஓடிவந்து பிரதியமைச்சரை தட்டி எழுப்பினார். இதனையடுத்து திடுக்கிட்டு எழுந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்னை சுதாகரித்துக்கொண்டதுடன் சில விநாடிகள் அமர்ந்திருந்தவாறே பாதணிகளை…
-
- 2 replies
- 739 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பயன்மிக்க விளை நிலங்களான மலையாள புரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சுமார் 105 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ள படையினர், அதனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருகின்றனர். பாரம்பரியமாக அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை அந்தப் பக்கமே வரக் கூடாது என்று விரட்டியடித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓ…
-
- 0 replies
- 541 views
-
-
[size=4]குடிசன மதிப்பு புள்ளி விபரத்தினைக்களம் நீண்ட காலத்தின் பின்னர் இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 - ஆய்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இதன் படி இலங்கையிலேயே விசித்திரமான வேலைப்படை கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம்! காணப்படுவது தெரிய வருகின்றது. [/size] [size=4]இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது. [/size] [size=4]இதனை மறு வார்த்தையில் சொன்னால், இலங்கையில் தங்கி வாழ்வோர் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், இங்கு ஆன்களையே (ஆன் - 59.7%, பெண் - 16.7%) அத…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=3][size=4]இந்தியாவிடம் இருக்கும் இலங்கை தொடர்பான பெரும் ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை தொடர்ந்தும் ரகசியமான நிலையில் வைத்து கொள்வதில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.[/size] [size=4]இலங்கையின் தகவல்களை போன்று, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய மற்றுட் அமெரிக்க நாடுகளின் ரகசிய தகவல்கள் அடங்கிய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்கள் இந்தியாவிடம் இருப்பதாகவும் இந்த தகவல்கள் அனைத்தையும் ரகசியமற்ற தகவல்களாக மாற்ற போவதாக இந்தியா கூறியுள்ளது.[/size] [size=4]இந்திய வெளிவிவகார அமைச்சு இதற்கு முன்னர், இவ்வாறான ரகசிய தகவல்கள் அடங்கிய 70 ஆயிரம் ஆவணங்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனையடுத்து மீதமுள்ள ஆவணங்களையும் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் இந்தி…
-
- 0 replies
- 385 views
-
-
[size=3][size=4]நாட்டின் 65ம் சுதந்திர தின நிகழ்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான குழுவினர் சுதந்திர தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]சுதந்திர தின நிகழ்வுகளை வடக்கு கிழக்கு மக்கள் கண்டு மகிழ்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என அறிவித்துள்ளது. நாட்டின் ஐக்கியத்தை வெளிப்படுத்த இது ஓர் அரிய சந்தர்ப்பமாக அமையும் என தெரிவித்துள்ளது.[/size] [size=4]சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்தத் தேவையான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்…
-
- 0 replies
- 294 views
-
-
5 ஆண்களைக் காணவில்லை: பெற்றோர்கள் முறைப்பாடு By General 2012-10-11 19:20:27 கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து ஆண்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடமாடும் மனித உரிமைகள் அலுவலகத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் சந்திப்பு பிரதி புதன்கிழமைகளில் நடைபெறுகின்றது. இந்த சந்திப்பின் 12 முறைப்பாடுகள் அன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் ஐந்து முறைப்பாடுகள் கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் பற்றியதாகும். இவர்கள் பற்றிய எந…
-
- 1 reply
- 270 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை அடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் உச்சி மாநாடு வரும் 15ம் நாள் குவைத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு வரும் 17ம் நாள் வரை இடம்பெறும். இதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 31 ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குவைத்தில் தங்கியிருக்கும் போது, பக்க நிகழ்வாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இருதரப்புப் பேச்சுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் தற்போது இடம…
-
- 1 reply
- 433 views
-
-
[size=4]இன்றைய நிலைதான் நாளையும் என்று எவரும் எண்ணக் கூடாது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-10-11 11:58:50| யாழ்ப்பாணம்][/size] [size=1] [size=4]போர் ஏற்படுத்திய வடுக்களால் தமிழ் மக்கள் நொந்து போயுள்ளனர். முப்பது ஆண்டுகால யுத்தவாழ்வு என்பது தமிழ் மக்களை பல்பரிமா ணங்களில் தாக்கியுள்ளது. அதிலும் வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த போரின் பாதிப்புகள் மெளனமாக இருப்பதுதான் ஒரே வழியயன்ற மனநிலையை தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பகரமான சூழ்நிலையை எவரும் தமக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்களின் துன்பத்தில் என்னுடைய இலாபம் என்பது, எதிர்காலத்தில் இன்னுமொரு பேரிடி காத்திருக்கிறது என்பதற்கான விதைப்பாகும். [/size][/size] [size=1] [size=4]வி…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலய காணியில் பாரிய படைமுகாமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை படைத்தரப்பு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கொழும்புத்துறை பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள படை முகாமை அங்கிருந்து அகற்றி அக்காணியை பொதுமக்களிடம் கையளிப்பதற்காகவே குறித்த சிங்கள மகா வித்தியாலயம் அமைக்கப்பட்டிருந்த காணியில் படை முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். [size=3][size=4]அத்துடன், கொழும்புத்துறை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 45 வீடுகள் காணப்படுவதாகவும் அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 285 views
-
-
[size=4]நாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். நீதித்துறை, அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மக்கள் உயிராபத்துக்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.[/size] [size=4]தமது சுயநலத்துக்காகவும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்காகவும் அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்களையும் உதாசீனம் செய்கின்றது. இப்போது மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.[/size] [size=4]நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரான மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் ஒரு …
-
- 0 replies
- 344 views
-
-
புதன்கிழமை, 10, அக்டோபர் 2012 (22:32 IST) இலங்கைத்தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு இலங்கை அகதியைப்பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’. இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது, ’’இந்த படம் ஒரு முக்கியமான விசயத்தை தொட்டுப்போகிறது. இலங்கை கடலுக்குள் படகுக்குள் சுடப்பட்டுக்கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலில் அனாதையாகிறான்.அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான். இதுதான் கதை. இப்படத்…
-
- 0 replies
- 443 views
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் இந்திய உளவுத்துறைக்குத் தொடர்பு? – ‘தினமணி’யின் நேரடி களநிலவரம் சிறீலங்கா | ADMIN | OCTOBER 11, 2012 AT 09:20 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் அடைக்கலம் தேடினர். போர் முடிந்த தற்போதைய சூழலில் அவர்களுக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவினார்களா என்பதைக் கண்டறிய முகாம்களில் தஞ்சமடைந்தவர்களிடம் விசாரணை, சோதனை என்ற பெயரில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போரின்போது வசிப்பிடங்களை விட்டு வந்த மக்களை மீண்டும் அவர்களின் சொந்தப் பகுதிகளுக்கே மீள்குடியேற்றம் செய்வது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு …
-
- 0 replies
- 334 views
-
-
கிளிநொச்சியில் 105 ஏக்கர் நிலத்தை படையினா கையகப்படுத்தியுள்ளனர் : 11 அக்டோபர் 2012 கிளிநொச்சி மலையாள புரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சுமார் 105 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ள படையினர், அதனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருவதுடன், பாரம்பரியமாக அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை அங்கு வரக் கூடாது எனக் கூறி விரட்டியடித்துள்ளதாக தெரியவருகிறது. மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் …
-
- 0 replies
- 314 views
-
-
சரணடைவது குறித்த திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை: சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் ஆட்சேபம் ! [Tuesday, 2012-10-09 22:49:44] இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது …
-
- 10 replies
- 1.6k views
-
-
DO WHAT I SAY என்ற பாணியில் வெளி நாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை தொலைபேசியூடாக மிரட்டியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ. நீதிச்சேவைகள் ஆணைக் குழுவுக்கும் மஹிந்தவிற்கும் இடையே எழுந்துள்ள பிரச்சினையில், மஷிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூற முற்பட்ட வேளையிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு அவமானப்படுத்தப் பட்டுள்ளார். நீதிச்சேவை ஆணைக் குழுவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ ஆராய்ந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பங்கேற்கவில்லை. அவர் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்தார். இந்த நிலையில், நியூ யோர்க்கில் இருந்து இந்தப் பிரச்சினை குறித்து அறிந்து கொண்ட ஜி.எல்.பீரிஸ…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டுக்கு போதிய பயணிகள் இல்லை – சேவை நடத்த தள்ளாடும் சிறிலங்கா விமான சேவைகள். சிறீலங்கா | ADMIN | OCTOBER 1, 2012 AT 10:21 தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாமல் விமான சேவைகள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வருகின்றன. போதிய பயணிகள் இன்மையால், கொழும்பில் இருந்து, திருச்சிக்கு சேவையை நடத்தி வரும் மிகின் லங்கா நிறுவனம் கடந்த இரண்டு நாட்களாக சேவையை இடைநிறுத்தியுள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் திருச்சிக்கான விமான சேவைகளை மிகின் லங்கா நிறுவனம் நிறுத்திய போதிலும், முன்பதிவு செய்த பயணிகள் சிறிலங்கன் விமானசேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் இருந்து சுற்…
-
- 3 replies
- 699 views
-
-
பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கன்னத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் அறைந்த சம்வம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபர் தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை மைதானத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் கடமையிலிருந்து பொலிஸ் அத்தியட்சர் இதனைத் தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் குறித்த பொலிஸ் அத்தியட்சருக்குக் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர் முறைப்ப…
-
- 1 reply
- 538 views
-
-
[size=4]நாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். நீதித்துறை, அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மக்கள் உயிராபத்துக்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமது சுயநலத்துக்காகவும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்காகவும் அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்களையும் உதாசீனம் செய்கின்றது. இப்போது மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரான மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் ஒரு தனியார் மீதான தாக்குதல் அல்ல. இது முழ…
-
- 0 replies
- 380 views
-
-
[size=4]சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உருமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருப்பதாக அக்கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான பத்மநாப குருக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.[/size] [size=4]ராஜகோபுரம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு மாதம்பை பிரதேச செயலகத்திலே கடந்த மே மாதமே தாங்கள் விண்ணப்பித்துவிட்டாலும் இன்றுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ராஜகோபுரம் அமைப்பதற்கான திட்டமிடலில் தாம் ஈடுபட்டபோது, அந்த இடத்தில் சந்தன வட்டக் கல் ஒன்று கிடைத்துள்ளது, இது பௌத்த மத சாயல் கொண்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் கூறியதாக பூசாரி தெரிவித்தார்.[/size] [size=4]கோயில் வளா…
-
- 0 replies
- 609 views
-
-
யாழ். வசந்தபுரம் கிராமத்தில் தனது மகளுக்கு நிலம் தருவதாக கூறி ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர ஒட்டுக்குழு மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். குறித்த கிராமம் கடந்த 1995ம் ஆண்டு முதல் உயர் கடல்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டின் ஆரம்பத்திலேயே மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீள்குடியமர்ந்துள்ள மக்களில் நிலமற்ற மக்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜெயமணி (வயது45) என்பவரின் மகளுக்கு மட்டும் நிலம் வழங்கப்படவி…
-
- 1 reply
- 1k views
-
-
விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் சட்டத்தரணிகள் உள்ளிட்ட கற்றோர் ஏனையோருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து நேற்று ஜாஎல பிரதேசத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நடு வீதியில் பதாகையை, சவப்பெட்டியை தூக்கிக் திரியும் இவர்கள் பௌத்த சமய வகுப்புக்குச் சென்று சமயம் கற்றவர்களேயாவர். கொடி பிடித்து பதாகை ஏந்தி சவப்பெட்டி தூக்கிச் செல்வதற்கெல்லாம் ஜனாதிபதி பயப்படமாட்டார் பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 391 views
-
-
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது. அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுக்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான. இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை ௭ழுத்து மூலம் நாம் சமர்ப்பித்திருந்தோம். அதற்கு இன்னமும் பதிலளிக்காத அரசாங்கம் ௭ம்மீது குற்றம் சாட்டி வருவது வேடிக்கையானது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ …
-
- 0 replies
- 358 views
-
-
[size=2][size=4]'நாட்டுக்கு எதிராக விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் தைரியமாக முகங்கொடுக்க இலங்கை இராணுவம் எப்போதும் தயாராக இருக்கின்றது' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். 'பயங்கரவாதத்திலிருந்து வெற்றிகொள்ளப்பட்ட நாட்டின் அனைத்து இன மக்களுக்காகவும் முக்கியமாக வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அபிவிருத்திக்காக இராணுவம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் இன்று சர்வதேச அளவில் பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன' என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார். இலங்கை இராணுவத்தின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு கொழும்பு, சி.ஆர். அன்ட் எப்.சி மைதானத்தில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்…
-
- 2 replies
- 248 views
-
-
[size=2][size=4]பங்களாதேஷில் சேதமாக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனர்நிர்மாணம் செய்வதற்காக இன்று புதன்கிழமை நிதியமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொபேகடுவவினால் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்திற்கு மல்வத்த பீடாதிபதி வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் முதலில் ஒரு இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளார். இதேவேளை, கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார 10 இலட்சம் ரூபா இந்த நிதியத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...0-10-06-09.html[/size][/size]
-
- 2 replies
- 231 views
-
-
[size=2][size=4]நிமிடத்துக்கு 4000 லீற்றர் நீரை வெளித்தள்ளும் பாரிய நீர் ஊற்று ஒன்றை புவிச்சரிதவியலாளர்கள் ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். 217 அடி ஆழத்திலிருந்து பெரியதோர் கற்பாறையை துளைத்தபோதே இந்த நிலக்கீழ் ஊற்று வெளிப்பட்டுள்ளது. இந்த ஊற்றிலிருந்து 20 அடி உயரத்துக்கு நீர் சீறியடிக்கின்றது. இவ்வாறானதொரு ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். மேற்படி நீரை பரிசோதித்ததன் பின்னரே அது குடிப்பதற்கு உகந்ததா? இல்லையா? ஏன தீர்மானிக்க முடியும் என்று சிரேஷ்ட புவிச் சரிதவியலாளரான உபுல் விக்ரமரத்ன தெரிவித்தார். தொடர்ச்சியான வறட்சியினால் உண்டான நீர்த் தட்டுப்பாட்டினால் வருந்திய மக்கள் இதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர். (காஞ்சன குமார ஆரியத…
-
- 2 replies
- 777 views
-