ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்! adminMarch 30, 2024 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். த…
-
-
- 10 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 03 APR, 2024 | 09:55 AM தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கும் மேலு…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 APR, 2024 | 08:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அபாயகரமான பொருட்கள் அடங்கிய சிங்கப்பூர் சரக்கு கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஷரித்த ஹேரத் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பல் தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு த…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரி…
-
- 3 replies
- 850 views
- 1 follower
-
-
ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு. சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இந்நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத பின்ன…
-
-
- 6 replies
- 544 views
-
-
எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. தொடர்ந்தும் இன்று (02) நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் எரிபொருள் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் உணவகங்…
-
-
- 1 reply
- 311 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வந்த இளைஞர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார். இதன்போதே அவர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில், கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இர…
-
- 0 replies
- 336 views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம். புங்குடுதீவு மாணவியை பாலியல் துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்த மரணதண்டனைக் குற்றவாளி ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் என்ற 37 வயதுடைய குற்றவாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண தண்டனை கைதியான குறித்த கைதி கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நிமோனியா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வைத்திய…
-
- 1 reply
- 374 views
-
-
Published By: VISHNU 02 APR, 2024 | 01:42 AM 2022/23 நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை), வரிச்சலுகைகள் மொத்தமாக 978 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) தெரிவித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 56% ஆகும். வெறிற்றே ரிசர்ச் இனால் பராமரிக்கப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார நுண்ணறிவு தளமான PublicFinance.lk ஆல் இது முன்னிலைப்படுத்தப்பட்டது. இலங்கையின் நிதி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட “வரிச் செலவின அறிக்கை” என்ற ஆவணத்தை மூலமாகக் கொண்டு இவ் ஆய்வு வெளியிடப்பட்டள்ளது. இலங்…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 APR, 2024 | 01:17 AM அண்மையில் நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவைகள் பணிமனைகள், பெரிய வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கான சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது. அதன் விளைவாக இன்று நாடு முழுவதும் உள்ள சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான வெற்றிடங்களுக்கான நியமனம் சுகாதார அமைச்சு செயலாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், வடமாகாணத்தில் வைத்திய நிர்வாகிகளுக்கான வெற்றிடங்களுக்கு பின்வரும் புதிய வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 1.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்: வீ. பீ. எஸ். டீ. பத்திரண (Dr. V. P. S. D. Pathinrana) 2.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஞாயிற்றுக்கிழமை (31) வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். …
-
- 1 reply
- 360 views
-
-
31 MAR, 2024 | 02:05 PM தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (31) காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அவரது சதுக்கத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கட்சியின் உப செயலாளர் குலநாயகம் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180063
-
-
- 6 replies
- 758 views
- 1 follower
-
-
01 APR, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம், இராஜதுரை ஹஷான்) பல்வேறு வகையான வரிகள் ஊடாக இந்த ஆண்டு மாத்திரம் 600 பில்லியன் வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் 1066 பில்லியன் ரூபா வரியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்கவில்லை. அத்துடன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது தவறான விலைபட்டியல் மூலம் ஆண்டு தோறும் 4 பில்லியன் டொலர் வருமானத்தை சுங்கத்திணைக்களம் இழக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உரிய வழிமுறை முன்வைத்துள்ள போதும் அவை செயற்படுத்தப்படவில்லை என வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை …
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
01 APR, 2024 | 01:12 PM அதிக சிறுத்தைப் புலிகள் செறிந்து வாழும் இடமாக வில்பத்து தேசிய பூங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது . 2011 ஆம் ஆண்டு முதல் விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் குறித்த பூங்காவில் சுமார் 313 சிறுத்தைகள் இருப்பதாகவும், 8 சிறுத்தை புலிக்குட்டிகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 131,690 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வில்பத்து நாட்டின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகக் கருதப்படுகிறது. வில்பத்து பூங்காவானது மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட வில்பத்து, புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங…
-
- 0 replies
- 335 views
-
-
குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க…
-
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 01 APR, 2024 | 05:12 PM இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாட்டிற்கு 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி நாட்டிற்கு 608,475 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது இலங்கைக்கு ஒரு திருப்பு முனையாகவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிகையை அண்மித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்…
-
- 0 replies
- 355 views
-
-
தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்கனவே மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோம…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இது தவிர, உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இந்த கொடுப்…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
Published By: VISHNU 31 MAR, 2024 | 11:18 PM (இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு அரசமுறை கடன்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குக்குள் மறுசீரமைக்காவிடின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். பஷிலின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதா ? அல்லது நாட்டை ஸ்திரப்படுத்துவதா ? என்பதை ஜனாதிபதியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நட…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமயவில் விரிசல்! அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஜேதவனராமயவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிடுவதற்காக விசேட குழுவொன்று நாளை அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளது. கலாசார அலுவல்கள் அமைச்சின் மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இதில் இணையவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விரிசல்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் குழுவும் இதற்காக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375949
-
- 0 replies
- 405 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு ! kugenMarch 31, 2024 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை. அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளா…
-
- 1 reply
- 371 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் ச…
-
- 4 replies
- 431 views
- 1 follower
-
-
04 MAR, 2024 | 09:43 PM இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/177912
-
- 2 replies
- 414 views
- 1 follower
-
-
31 MAR, 2024 | 03:48 PM கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 15.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்ட பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி பாலப் புனரமைப்புற்கான பணிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பாரதிபுரத்திற்கு செல்லும் ப…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம் 30 MAR, 2024 | 02:16 PM வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது. இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதி கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய…
-
- 1 reply
- 236 views
- 1 follower
-